ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
மலையக எழுச்சி நடைபயணத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் நாளை மாத்தளையில் ஏற்பாடு! 11 Aug, 2023 | 11:23 AM 'மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்வு மாத்தளையில் நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பில் அருட்திரு செங்கன் தேவதாசன் தெரிவிக்கையில், 'மலையகம் 200' எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளை ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆகஸ்ட் 12ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமா…
-
- 0 replies
- 499 views
-
-
தமிழர் கேட்க வேண்டியது " அதிகாரப் பகிர்வு" அல்ல "அரசாங்கத்திலே பங்கு ". அரசாங்கத்திலே பங்கு இல்லை என்றால் நாங்கள் தனி அரசாகப் போக வேண்டியது தான் . இதே மாதிரித்தான் , சிங்களவன் முழுத் தீவையும் ஸ்ரீலங்கா என்று உரிமை கோரியபோது , நாங்கள் வடக்கையும் கிழக்கையும் மட்டும் கேட்டோம் . உண்மையில் நாங்களும் முழுத் தீவையும் தமிழீழம் என்று கேட்டிருந்தால் ( அவனது கோரிக்கைக்கு சமமான கோரிக்கை ) இன்றைக்கு இந்த பிரச்சினை தீர்ந்திருக்கும் . எனவே , இஸ்ரேலியர்கள் போல அதிகமாகக் கேளுங்கள் அப்போது தான் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது கிடைக்கும் . முழு இலங்கையையும் தமிழீழம் என்று உரிமை கோருங்கள், ஸ்ரீலங்கா சட்டவிரோதமான நாடு என்று கூறுங்கள் , உலகம் இந்த பிரச்சினையை திரும்பி பார்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு; குற்றம் புரிந்தவர்கள் தப்பிக்க வழி செய்யும்: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாணையின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிடுவதை தாமதப்படுத்தினால், அது குற்றவாளிகளை தப்பிக்க வழி செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான முடிவுக்கு இலங்கை இடமளிக்கக் கூடாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உரிமைகள் ஆணையாளர் ச…
-
- 0 replies
- 362 views
-
-
மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பம் இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் இன்று (20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ ஒன்லைன் முன்பதிவு முறையில், ஆகஸ்ட் 20 முதல் வாரந்தோறும் ஆறு முறை மதுரை – கொழும்பு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது. இதன்படி, பட்ஜெட் கேரியர் இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே வாரத்தில் ஆறு நாட்கள் (புதன்கிழமை தவிர) விமான சேவைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 195 views
-
-
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் பாதுகாப்பு அமைச்சர் அன்ரனி திருவனந்தபுரம், மே 2 தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்திய மண்ணை தளமாக பாவிக்க எந்த பயங்கர அமைப்புக்கும் இடமளிக்கமாட்டோம். இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி கூறினார். விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் பின் இலங்கை நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறோம். கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளக் கரையோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். கரையோரங்களில் பொலிஸ் நிலையங்களை அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரையோரப்பகுதியில் கூடுதலான …
-
- 23 replies
- 4.4k views
-
-
புதிய அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவைக் காட்டும் பாரிய கூட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்த புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை (05) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ள சகல கட்சிகளின் ஆதரவாளர்களும் இதன்போது ஒன்றுகூடவுள்ளனர். ஐந்தாயிரம் பஸ்களில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆதரவாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. கட்சி என்பவற்றின் ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுக…
-
- 0 replies
- 203 views
-
-
முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார் : மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சிறந்த முறையில் நாட்டில் ஆட்சியை கொண்டு சென்றது நல்லாட்சி அரசாங்கமே என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள், மீனவர்களோ, பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடசாலைகளில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாகி உள்ளது என்றும் இதனை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியுள்ளார். ஒருமுறை ஜன…
-
- 22 replies
- 1.3k views
-
-
நீங்கள் தமிழோ சிங்களமோ [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-15 10:03:56| யாழ்ப்பாணம்] சன நெருசல், வாகனங்களின் அதீத அதிகரிப்பு, வேகமான காற்றின் புழுதி அபிஷேகம், டைனோசர் போன்ற கனரக வாகனங்களின் அத்துமீறல், வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் படப்பிடிப்புகள், அரைச்சட்டை, கால்சட்டை அணிந்தவர்களின் ஊர்வலங்கள், தெரு வியாபாரங்களின் ஆக்கிரமிப்புகள் என எல்லாம் சேர்ந்து வட பகுதியை எங்கோ கொண்டு சென்று விட்டது. அதிலும் யாழ்ப்பாண நகரில் இவற்றின் நிலைமை சொல்லவும் பெரிதே. யாழ்ப்பாணத்தில் இப்போது யாருடன் கதைப்பதாக இருந்தாலும் நீங்கள் தமிழோ சிங்களமோ என்று கேட்டு கதைக்க வேண்டிய நிலைமை. யாழ் செயலகம் உட்பட திணைக்களங்கள் பலவற்றில் சிங்களப் பணியாளர்கள் கடமை யாற்றுவதால்,…
-
- 1 reply
- 819 views
-
-
மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாட்டில் முழக்கம்:- மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாட்டில் முழக்கம்:- சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரு நாடு என்ற எமது கொள்கையை அடைய போராடுவோம்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. மேற்படி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார செயலாளரும், காரைநகர், வேரப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருமான திரு சிவகுரு இளங்கோ அவர்களது தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கட்சிகளின் கொடிகள் ஏற்றப்பட்டது. தமிழ்த் தே…
-
- 0 replies
- 215 views
-
-
November 8, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரிகள், பிழைகள் இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருவதனை ஏற்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சித…
-
- 4 replies
- 1.2k views
-
-
புலிகள் மீதான தடை சரியா? தவறா? -சோ.ஜெயமுரளி- இலங்கைத் தீவின் இனக்குழும முரண்பாட்டை சமாதான முறை வழியில் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரை அழைத்து அவர்களின் வாதத்தை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குரல்கள் பலமாக ஒலித்துள்ளதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த மே 02 ஆம் திகதி வெளியான இவ் விவகாரத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் 3 மணி நேரமாக இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதமே காரணம். `இலங்கைத் தம…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை அரசு மீது ஐசிஜி கடும் விமர்சனம் பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் இண்டர்னேஷனல் க்ரைஸிஸ் குரூப் என்ற சர்வதேச நெருக்கடிகள் குறித்த அமைப்பு இலங்கை அரசின் மூர்க்கத்தனம் மற்றும் கருத்து மாறுபடுபவர்களை சகித்துக்கொள்ளாத தன்மை காரணமாக அங்கு மீண்டும் மோதல் எழக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறுகிறது. இலங்கை அரசு தமிழ்ப் புலிகளை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோற்கடித்ததிலிருந்து,சிறுபான்மை தமிழர்களின் குறைகளை அங்கீகரிக்கவோ அல்லது தீர்க்கவோ தவறிவிட்டது என்று அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஒரு புதிய அறிக்கையில் கூறியிருக்கிறது. இலங்கையில் போர் முடிந்துள்ளதன் பின்னணியில் அங்கு பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழுவான ஐசிஜி ச…
-
- 3 replies
- 518 views
-
-
இராணுவத்தினரை புலிகள் சுட்ட காட்சிகளே சனல் 4 வீடியோவில் காட்டப்படவை! இந்துவிடம் ஜனாதிபதி மஹிந்த மறுப்பு. [saturday, 2011-07-23 22:21:16] பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவில் இராணுவத்தினரை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்கின்ற காட்சிகள்தான் காட்டப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்து உள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவின் இந்திய பிரபல பத்திரிகைகளில் ஒன்றான இந்துவுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறி இருக்கின்றார். அக்காணொளி குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் கொலைக்களம் ஒரு திரைப்படம் மாத்திரம், உண்மையான ஆவணம் அல்ல, உண்மையில் இதில் உள்ள வீடியோவின்…
-
- 5 replies
- 955 views
-
-
November 20, 2018 யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் – புகையிரத விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் விபத்துக்குள்ளானது. மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்ற யாழில் உள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த வர்த்தகர் ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். http://globaltamilnews.net/2018/103987/
-
- 13 replies
- 1.5k views
-
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25-11-2018) பிற்பகல் -02.30 மணி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த கால உள்நாட்டுப் போரில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது கனடியத் தமிழர் தேசிய பேரவையின் மண்வாசனை அமைப்பின் நிதிப் பங்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சே…
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னையில் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாம் தமிழர் இயக்க உறுப்பினர் மூவர் கைது! சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களவர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா சென்று சேர்ந்தனர். ஓகஸ்ட் 5ஆம் திகதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கியிருந்தனர். அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி…
-
- 0 replies
- 900 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் சற்றுமுன்னர் நடைபெற்றது. கூட்டமைப்பின் நா…
-
- 13 replies
- 1.2k views
-
-
மஹிந்தவை நீக்கமாட்டார், ரணிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் -அரசாங்க பேச்சாளர் (எம்.மனோசித்ரா) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார். காரணம் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார் என அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டு நி…
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கையின் உண்மையான வரலாறு புரியாது பிதற்றிக்கொண்டிருக்கிறது ஜாதிக ஹெலஉறுமய' இலங்கையின் உண்மையான வரலாறு தெரியாது பிதற்றுகின்றார் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கண்டியிலிருந்து ஆட்சி புரிந்த தமிழகம் இருந்து வந்த தமிழர்கள் யார் என்பது சம்பிக்க ரணவக்க அறியாதது ஏன்? ஹெல உறுமய இந்நாடு பௌத்தர்களுக்குரிய நாடாக மட்டும் இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும் எனப்பகற்கனவு காண்கின்றது. வடக்கு கிழக்கு இந்நாட்டு தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியென்பது வரலாற்று சான்று கொண்டது போல மேலகம் வாழ் தமிழர்களுக்கும் இங்கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசு கண்டிக்க வேண்டும்: பேரவையில் முதல்வர் வலியுறுத்தல் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததுதான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபக்ஷேவுக…
-
- 1 reply
- 555 views
-
-
சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பான போராட்டம் சர்ச்சைக்குரிய வகையினில் முடிவுறுத்தப்பட்டமை பல்வேறு தரப்புக்களிடையேயும் சந்தேகங்களினை தோற்றுவித்தேயுள்ளது. கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக்கொண்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் 72மணித்தியாலத்தினுள் தீர்வெனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் வெறும் 30மணித்தியாலத்துடன் அதனை முடித்துக்கொண்டனர்.அதன் போது மயக்கமுற்று சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர…
-
- 0 replies
- 583 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையில் சமகாலத்தில் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெருமளவு இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுறுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து இன்று இணையம் யாழ்.ஊடகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இணையத்தின் சார்பில் கருத்து தெரிவித்த மொஹமட் ஆலம் மற்றும் பிறான்சிஸ் ஜோசப் ஆகியோர் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், இன்று காலை வடமாகாண கடற்றொழ…
-
- 1 reply
- 496 views
-
-
அச்சத்தில் சிக்கியுள்ள ஆட்சியாளர்கள்; எவரது கண்டனமும் பொருட்டல்ல-வேலவன்- கொழும்பிலுள்ள தங்ககங்களில் தங்கியிருந்த 500 இற்கும் மேலான தமிழ்மக்களை ஒரேயிரவில் வெளியேற்றி அவர்களை அவல நிலைக்குள் தள்ளிவிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனால் ஏற்பட்ட எதிர்ப்பு அலைகளைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக நாடகமாடி வருகின்றது. இந்த விடயம் சனாதிபதி உட்பட உயர்மட்டத்திற்குத் தெரியாது நடைபெற்ற ஓர் தவறு என்பது போலவும், சிறிலங்காவின் காவல்துறையின் உயர் பொறுப்பிலுள்ள காவல்துறை மா அதிபர் உட்பட சில அதிகாரிகளின் செயற்பாடு இது என்பது போலவும் காட்டிக்கொள்ள மகிந்த ராஜபக்ச அரசு முயல்கிறது. இது அதிகாரிகளின் தவறாக இருந்தாலும் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது போல நாடகமாடி நிலைமையைச் சமாள…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதே நியாயாதிக்க சபையில் முறையீடு ஒன்றைச் செய்யும் வகையிலேயே இந்தத் தவகல்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாமென் ஏசியன் ரியூ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியிலான குற்றச் செயல்கள் குறித்தே இந்த முறைப்பாட்டினை இலங்கை செய்யலாம் என எதிர்பார்க்கிறது. இது இவாறிருக்க, நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்;மனி, டென்மார…
-
- 2 replies
- 753 views
-
-
December 21, 2018 Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையின் ஊடகங்கள் தன்னுடைய உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்யுமா? எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் கறுப்பு ஊடகங்கள் இருந்தன. அவ்வாறான ஊடகங்கள் தொடர்பில், ஜனவரி மாதம் விவாதம் நடத்தப…
-
- 0 replies
- 183 views
-