Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுணதீவில் குழந்தை விற்பனை: உண்மை நிலை என்ன? Tuesday, December 6, 2011, 4:08 மட்டக்களப்பு வவுணதீவு பொலிசாரால் இரண்டு வயது ஆண் குழந்தையை விற்பனை செய்தமை அதனை வாங்கியமை போன்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்களில் குழந்தையின் தாய், குழந்தையை வாங்கியவர், விற்பனையில் இடைத்தரகராக செயற்பட்டவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். கடந்த புதன் கிழமை 30ம் திகதி வவுணதீவு பிரதேசத்திலுள்ள சந்தேக நபர் குழந்தையொன்றை ரூபாய் 12 ஆயிரத்திற்கு வாங்கியிருப்பதாக கிராமிய குழந்தைகள் பாதுகாப்பு குழுவினால் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரியினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டைய…

  2. 17 MAY, 2024 | 08:56 PM அமெரிக்காவிலிருந்து தபால் விமானச் சேவை மூலம் சீதுவையில் உள்ள களஞ்சியசாலை வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (17) கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்களானது பொதிகளாக்கப்பட்ட வாகன உதிரிப்பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள 25 வயது இளைஞரொருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேக நபரான இளைஞர் இந்த பொதிகளை எடுப்பதற்காக சென்றிருந்த போது அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பொதிகளில் இருந்த வாகன உதிரிப்பாகங்களிலிருந்து 3 கி…

  3. இலங்கையை சர்வதேசத்தின் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்த ஐ.நா.உட்பட பல சர்வதேச நாடுகளின் முயன்று வருகின்றதுடன், நவநீதம்பிள்ளை என்பவர்களை நாட்டுக்குள்ளும் அனுமதிக்கக் கூடாது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எத்தகைய தன்மையினை கொண்டிருந்தாலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதே ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக சக்திகளின் நோக்கமாகும். எனவே நவநீதம்பிள்ளை போன்றவர்களை நாட்டுக்குள் அரசு அனுமதிக்கக் கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டார். நாட்டிற்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் தீவிரம் கண்டுள்ளன. இன்று இலங்கையை …

  4. மஹிந்த தலைமையில் நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நிமால் சிறிபால டி சில்வா பங்கேற்கவில்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் ,முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பங்கேற்கவில்லை. கொழும்பு மார்கஸ் பெர்னாண்டோ மைதானத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. “நாட்டுக்கு உயிரூட்டி, புதிதாக தொடங்குவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் பங்கேற்கவில்லை. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Articl…

  5. மட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு 359 சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த உயிர்த்த ஞாயிறு திகத்தன்று இலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் மரணமடைந்த 359 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பிடத்தில் இந்த 359 ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு இன்று (புதன்கிழமை) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கல்முனை விகாராதிபதி சங்கரத்தினதேரர், களுவாஞ்சிகுடி சிவ ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவான சண்முக மயூரவதன குருக்கள், ஓந்தாச்சிமடம் சிமர்னா தேவாலயத்தின் அருட்தந்தை சு…

  6. 26 MAY, 2024 | 07:49 AM வவுனியா கனகராயன்குளம் காட்டு பகுதியில் யானையுடன் மோதி ரயிலொன்று தடம்புரண்டுன்டுள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற ரயில் கனகராயன்குளம் காட்டு பகுதியில் புகையிரத பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் குட்டியுடன் மோதுண்டுள்ளது. இதன் காரணமாக யானை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதுடன், யானை குட்டி காயங்களுடன் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் குறித்த விபத்து காரணமாக நான்கு மணி நேரத்தின் பின்னர் சம்பவ இடத்துக்கு பி…

  7. “TNA”…ஆல் மகிந்தவிற்கு மின்சார நாற்காலியாம் பதறுகிறார் டிலான் பெரேரா போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், மின்சார நாற்காலிக் கதைகளும் பொய்யான கூற்றுக்கள் என்றே நாம் நினைத்தோம். ஆனால் இப்போதிருக்கும் நிலைமைகளை பார்க்கும்போது மின்சார நாற்காலிக் கதைகள் பொய்யானது அல்ல என்று தோன்றுகின்றது. போர்க்குற்றச்சாட்டுகளுக்கா…

    • 0 replies
    • 455 views
  8. நல்லிணக்க பொறிமுறைக்கு நீதி அதிகாரம் வழங்கப்படுமா? - விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படுமா? உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பது என்ன? Published By: RAJEEBAN 03 JUN, 2024 | 03:24 PM உண்மை ஐக்கியம் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான சட்டத்தின் நகல்வரைபில் ஆணைக்குழுவிற்கு வழக்குரைஞர் அல்லது நீதித்துறை அதிகாரங்களை வழங்கும் விதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி அசங்க குணவன்ச தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் தேவைகளிற்கு தீர்வை காண்பதற்காக விசேட நீதிமன்றத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  9. சிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கைAUG 08, 2015 | 13:25by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவுக்குச் செல்லும், சிறிலங்காவில் வதியும் தமது நாட்டுக் குடிமக்கள் இத்தகைய தேர்தல் வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் ஊடகங்களை அமெரிக்க குடிமக்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடக்கின்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக திரும்பமான என்பதால், இத்தகைய பேரணிகள், போராட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாற…

  10. நீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் முப்படையினர் உள்ளபோதும், அவர்கள் முன்நிலையிலேயே முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டதாக அங்குள்ள ஊர் மக்கள் jaffna muslim இணையத்திடம் வேதனை தெரிவித்தனர். உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்தில் காணப்படுகின்ற போதிலும், முஸ்லிம்களைத்தான் வீடுகளுக்கு செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்துகின்றனரே தவிர, வன்முறை நிகழ்த்தக்கூடிய நிலையில் காணப்படும் பௌத்த கிறிஸ்த்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கவோ அல்லது அவர்களை கைது செய்யவோ, எத்தகைய நடவடிக்கையு…

  11. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும், அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வை நடைமுறைப்படுத்து, அதிபர் ஆசிரியர்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை வழங்கு, மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நாடாளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட…

  12. நோயை விடுத்து நோவுக்கு மருந்து செய்யும் மருத்துவர்கள் 09.11.2007 நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டு மானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முற்றாக பூண்டோடு ஒழித்துக்கட்ட வேண்டும் எனச் சூளுரைத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதைத் தவிர தமது அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். தமது அரசின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் நேற்று முன்தினம் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக் கூறியிருக்கின்றார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கால் நூற்றாண் டாக இந்தப் பயங்கரவாதம் நாட்டைச் சீரழித்து வருகின் றது என்றும் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி என்ப வற்றில் பலத்த பின்னடைவு…

  13. • தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை? நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது. தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை? இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை? 2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் …

    • 23 replies
    • 2.2k views
  14. "தமிழ், சிங்கள இனங்களை அழித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம்": த.வி.பு.கட்சி தமிழ் சிங்கள இனங்களை அழித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களில் இன்று மிகவும் கூடுதலான வகையில் பாதிக்கப்பட்டு வருவது தமிழ் மக்களே!. தமிழ் மக்கள் அன்றிலிருந்து இன்று வரையும் இந் நாட்டின் அடிமைகள் என்னும் சொற்பதத்தினுள் திணிக்கப்பட்டுவிட்டார்கள். அத்தோடு, கடந்த 30வருடகாலமாக விடுதலைப் புலிகளின் யுத்தத்தின் போது அரசபடையால் மிகவும் கொடூரமான…

  15. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தமைக்கு பல நாட்களுக்குப் பின்னர் "திடீரென" கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணியில் இருப்பது சென்னையில் உள்ள சிறிலங்கா கிளைத் தூதுவர் அம்சாதான் என்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, இலங்கை வருவதாகவும் அவரது வருகை இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் அழுத்தங்களை கொடுக்கும்படி இருக்காது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய அமைச்சர் தனது விஜயத்தின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இதுவரை இந்தியாவிடம் இருந்து பாதகமான கருத்துக்களை இந்தியா வெளியிடவில்லை எனவும் வீரதுங்க மேலும் கூறியுள்ளார். http://www.globaltam...IN/article.aspx

    • 3 replies
    • 514 views
  17. இலங்கையில் போர்க் குற்றங்கள் - அய். நா. அவையின் வல்லுநர் குழு அறிக்கை குறித்த உரையாடல் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப் போர், 2009 மே 18 அன்று முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த ஒரு வாரத்திற்குள் 2009 மே 23 அன்று, அய். நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குச் சென்றார். இலங்கை அரசு விமானத்தில் போர்ப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் இலங்கை அரசு அழைத்துச் சென்ற ஒரு 'மாதிரி முகாமை’ எட்டிப் பார்த்தார். கொழும்பு திரும்பி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், இலங்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளைப் பான் கி மூன் வலியுறுத்தினார். இலங்கை அரசு அதற்கான முயற்சிகளை…

  18. காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் என பொலிஸார் அடையாளம் கண்டு பிடித்ததையடுத்து. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிஸார், மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஒரு மாத காலத்தில் 63 பேரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைத…

    • 1 reply
    • 622 views
  19. இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன் இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கத…

    • 30 replies
    • 3k views
  20. நல்லூர் திருவிழாவின் போது, கலாச்சார சீரழிவு குற்றங்கள், மற்றும் குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இவ்வாறு எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லூர் ஆலயத்தில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்தத்திருவிழாக்கள் மி…

  21. Published By: DIGITAL DESK 7 31 JUL, 2024 | 10:36 AM வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்களுடன் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக இரு துப்பாக்கிகள், ஒரு வாள், துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் ஆயுதங்களையும் வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில்…

  22. லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் விழிப்புலன் மாற்று வலுவுடைய போராளி அகமொழி எழுதிய மேஜர் பூவழகனின் வரலாற்றுப் பதிவான "மேஜர் பூவழகன் ஒரு வீர வரலாறு" நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 965 views
  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் முக்கிய கடிதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா விரைந்துள்ளது. இக்குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளனர். இது தொடர்பில் ஜெனீவா சென்றுள்ள தமி…

  24. 16.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....d371c3e9ed31609

  25. வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பழையவாடி எனும் பழம் பெரும் தமிழ் கிராமத்தில் சிங்கள பாராம்பரிய நடனத்தை பெண்கைள கொண்டு ஆடவைத்து வட மாகாண ஆளுனரை மகிழ்வித்துள்ளார் வவுனியாவை சேர்ந்த பிரபல வர்த்தகர். இந்திய தூதரகத்தின் அனுசரணையுடன் பழையவாடி கிராமத்தில் மதுரை மல்லிகையினை தோட்டமாக செய்ய முயற்சிகள் மேற்கொண்டு நேற்று மாதிரி பண்ணை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண விவசாய அமைச்சிற்கு தெரிவிக்கப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இவ் விவசாய பண்ணையில் வட மாகாண ஆளுனர், இந்திய துணைத்தூதர் நடராஜ், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ரோகண கமகே ஆகியோர் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் அங்கு வந்தவர்களை மகிழ்விப்பதற்காக நாதஸ்வர இசையுடன் சிங்கள பெண்களை வரவழைத்து நடனமாடி மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.