ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: தே.அ.ஒ _ வீரகேசரி இணையம் 7/13/2011 11:20:48 AM Share ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்க பலத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் முயற்சிக்கு அரசுடன் இணைந்துள்ள சில அமைச்சர்கள் துணைபோவதாகவும் அவ் ஒன்றியம் குற்றஞ்சாட்டியது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயா கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இதனை தெரிவித்தது…
-
- 0 replies
- 380 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அது தொடர்பான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கட்டுமான மற்றும் பொறியியல் சேவை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை – அங்கஜன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை என யாழ். மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் சார்பில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், 13 ஆவது திருத்த சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் வந்தால் ஒழிய, அதனை முழுமையாக மாற்றுவதற்கு எந்த தரப்பினரும் பேசவில்லை. 13 ஆவது திருத்தத்தை அமுல…
-
- 3 replies
- 539 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தவேண்டும்; வட,கிழக்கை இணைக்கக்கூடாது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கூடாது; சுதந்திரக் கட்சி தீர்மானம் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையானது தற்போது இருக்கின்ற வகையிலேயே தொடரவேண்டுமென்றும், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டுமென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற சுதந் திரக் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே கட்சியின் பொதுச்செயலாளர் துமிந…
-
- 0 replies
- 317 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடைமுறைப்படுத்துவதே தனது நோக்கம் என்று இந்தியாவுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 08:46 PM பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும், நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மகா சங்க…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது. இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்…
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தச் சட்டம், முழுமையாக... அமுல்படுத்தப்பட வேண்டும் – ரணிலிடம் தெரிவித்தார் டக்ளஸ்! நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 141 views
-
-
13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வு நோக்கி பயணிப்போம் – கர்தினால் பேராயர் மல்கம் இனப்பிரச்சினை தீர்வாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டம் இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். இல்லாததைப் பற்றி பேசுவதை விட இருக்கின்ற …
-
- 2 replies
- 431 views
-
-
அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டதொன்றாகும். இந்த தீர்வினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்கிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொட் ஓ பிளேக்கை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போதே தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பு ஒன்றரை மணிநேர…
-
- 1 reply
- 1.4k views
-
-
13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை – விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சஜித் இந்த உறுதிமொழியை வழங்கினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமாக அணுகும் அதேவேளை, சட்டத்திற்கும் கொள்கைக்கும் அமைவாகவே நாடொன்றை நிர்வகிக்க வேண்டும். அதுமாத்திர…
-
- 0 replies
- 263 views
-
-
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கத்தை கோருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அறிவுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ். கிருஷ்ணா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேற்படி அறிவுறுத்தலை வழங்கியதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா டெய்லி மிரரிடம் தெரிவித்தார். எனினும் பொலிஸ் அதிகாரம் எந்தச் சூழ்நிலையிலும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்தாகவும் மாவை சேனாதிராஜா கூறினார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்காக தமிழ் தேசியக் கூ…
-
- 1 reply
- 1.1k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்க போட்ட முடிச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவிழ்க்க முயற்சிக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகனா என்பதை அவரது குடும்பத்தினர் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய தனியார் பிரேரணையை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை ஒன்றாக இயற்றப்பட்டதால் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு வெளயீட்டு சட்டமூலத்தை கொண்டு வந்…
-
- 2 replies
- 257 views
-
-
13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் செப்டெம்பருக்குள் திருத்தப்படும் 13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் செப்டெம்பர் மாதத்திற்குள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களித்தின் ஆலோசனைகளைப் பெற்றே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது 13 ஆவது திருத்தமும் வடக்க…
-
- 0 replies
- 518 views
-
-
13 ஆவது திருத்தத்தில் கை வைக்காமைக்கு இந்தியா, ஜப்பானின் அழுத்தங்களே காரணம்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எம் மீது சுமத்திய இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை …
-
- 3 replies
- 702 views
-
-
13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனம் என்கின்றார் சம்பந்தன் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார். இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது என்றாலும் இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் என கூறினார். இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனமான செயற்பாடு என்றும் இது இருப்பதை இழக்க செய்யும் நடவடிக்கை என…
-
- 2 replies
- 246 views
-
-
13 ஆவது திருத்தத்தை அடியோடு அகற்ற முயற்சிக்கிறது ராஜபக்ஷ அரசாங்கம் - சம்பந்தன் (ஆர்.ராம்) பதவியில் உள்ள ராஜபக்ஷக்களின் அரசாங்கமானது அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை புதிய அரசியலமைப்பின் பேரில் அடியோடு அகற்றுவதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அதிகாரப்பகிர்வின் முதற்படியாகவுள்ள 13ஐ பாதுகாத்து தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அர்த்தபுஷ்டியான தீர்வினை நோக்கி நகர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துவதை அடிப்படையாகக் கொண்டு …
-
- 2 replies
- 366 views
-
-
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த கோருவது சமஷ்டியையோ, பொறுப்புக்கூறல் பொறிமுறையையோ கைவிடுவதாக அர்த்தப்படாது: விக்னேஸ்வரன் விளக்கம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவை கோருவது சமஷ்டியையோ, பொறுப்புக்கூறல் பொறிமுறையையோ கைவிடுவதாகவோ அர்த்தப்படாது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவிடம் கோரிக்கை விடுவது தொடர்பில் அண்மையில் தமிழ் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டம் தொடர்பில் தனது நிலைப்பாடு குறித்து ஊடக…
-
- 1 reply
- 355 views
-
-
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் நேரடியாகவும் மற…
-
- 0 replies
- 202 views
-
-
29 JUL, 2023 | 05:36 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வுகாண அரசாங்கம் முயற்சிப்பதை கடுமையாக எதிர்ப்போம். முதலில் 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டில் மு…
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
01 MAY, 2024 | 08:17 PM அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி, சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எமது ஆட்சியில் நிறுவப்படும் என்றும் எதிர்க…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்- இந்தியா சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி ரஜீவ் கே சந்தர், ‘நெருக்கமான அண்டை நாடான சிறிலங்காவின் நிலைமைகளில் இருந்து இந்தியா விலகியிருக்க முடியாது. ஒன்றுபட்ட சிறிலங்காவில் சமத்துவமான, நீதியான, அமைதியான, கௌரவமாக வாழும் வகையில், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரதும், அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, பல இன, பல மொழி, பல சமய, சமூக சிறிலங்காவின் குணவியல்பை பாதுகாக்கும்…
-
- 0 replies
- 500 views
-
-
Published By: VISHNU 10 SEP, 2024 | 02:29 AM (நா.தனுஜா) அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரவையின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்…
-
-
- 2 replies
- 532 views
- 1 follower
-
-
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அரசாங்ககத்தில் இருந்து விலகப்போவதாக சிறிலங்காவில் உள்ள சிங்கள பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்று திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 335 views
-
-
13 ஆவது திருத்தத்தை நீக்கக் கூடாது, அதனடிப்படையில் தீர்வு வேண்டும்: இந்தியா வலியுறுத்தல் By General 2012-11-03 09:39:30 அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இந்தியாவின் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற இந்து சமுத்திர வலய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என பாதுக…
-
- 0 replies
- 427 views
-