Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 158 கிலோகிராம் கஞ்சா சிக்கியது -செல்வநாயகம் கபிலன் காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா, கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 31.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடல் ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், பாறைகளுக்கு நடுவில் பொதிகள் இருப்பதை அவதானித்து அருகில் சென்று பார்த்த போது பொதிகளுக்குள் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. இந்தியா…

  2. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று 15ம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி 18ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்.அத்துடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார். இதேவேளை, பெளத்தர்களின் புனித தலமான புத்தகயாவுக்குச் செல்லவுள்ள அவர், அங்கி…

  3. 15ம் நூற்றாண்டில் சிறிலங்காவினை ஐக்கியப் படுத்துவதற்கு சீனர்கள் உதவியது எவ்வாறு? [ திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010, 13:47 GMT புதினப்பலகை] [ தி.வண்ணமதி ] சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் அனுராதபுரக் காலதிலிருந்து இருக்கும் ஒன்று. அனுரதபுரம் மற்றும் சிகிரியா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது. 15ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சீன 'அட்மிறல் செங் கீ'யினது [Admiral Zang He] சிறிலங்காவிற்கான பயணம் தவிர்ந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தீவினது அரசியலில் சீனா தலையீட்டினை மேற்கொள்ளவில்லை. Sri Lanka Guardian என்னும் இணையத்தளத்தில் Dr. Janaka Goonetilleke என்பவரால் எழுதப்பட்ட வரலாற்றுக் கட்டுரையை புதி…

    • 2 replies
    • 1.2k views
  4. 15வது சார்க் மாநாட்டை முன்னிட்டு தலைநகரிலுள்ள முக்கிய வீதிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்திருப்பதுடன், தலைநகரிலுள்ள அலுவலகங்களின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 30ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றையதினம் வீதிப் போக்குவரத்து ஒத்திகை நடத்தப்பட்டிருந்தது. இதனால் கொழும்பின் பல்வேறு வீதிகளில் நீண்ட தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், வீதிகள் மூடப்பட்டமையால் வாகனங்களில் பயணித்தவர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. …

    • 0 replies
    • 614 views
  5. [size=5]பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடாத்திய 15வது தமிழர் விளையாட்டு விழா 01-07-2012, லு புர்ஜேயில் அமைந்துள்ள Parc Départemental de La Courneuve - L’Air des Vents Dugnyமைதானத்தில் நடைபெற்றது. தாயகத்தில் போரினாலும் இயற்கை அனர்த்தத்தாலும் கொல்லப்பட்ட பொதுமக்களையும், விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட நினைவுத் தூபி முன்பாக பொதுச் சுடரினை கழகத்தின் பொருளாளர் திரு. வல்லிபுரம் கிருபாகரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர். கழகத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் புடைச…

    • 0 replies
    • 586 views
  6. 15வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சியில் ஆரம்பம் IMAGE கிளிநொச்சி தமிழ்சங்கம் நடார்த்தும் 15வது திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வாகிய இன்று மாலை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக பங்கு கொள்ளவிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து திருவள்ளுவரின் உருவப்படம் ஊர்வலமாக கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டது. இலங்கை…

  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 15வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தனது நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ளார். Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று இத்தாலியில் இருந்து இணைந்துகொண்ட 7 பேர் இன்று இரண்டாவது நாளாகவும் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துள்ளனர். பிரான்சில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர். Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக…

    • 0 replies
    • 685 views
  8. 15வது பாராளுமன்ற பொதுத் தேர்தல்.., புது முகங்கள் களத்தில் நடைபெறபோகும் 15வது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பல புது முகங்கள் களத்தில் குதிக்கவுள்ளனர். இதற்குரிய விண்ணப்பங்களை போட்டியாளர்கள் தமிழ் கட்சியினருக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் அரசியலுக்கு வர விருப்பம் கொண்டிருந்த போதிலும் சில முட்டுகட்டைகள் காரணமாக பின் நின்றவர்கள் இப்போது அரசியலுக்கு நுழையமுன்வந்துள்ளார்கள். எங்களுடைய உரிமைகளைவிட்டு கொடுக்கமுடியாது எமது அரசியல் சுதந்திரத்தினை நாங்கள் அனுபவிக்கவேண்டும் என இவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ் புத்திஜீவிகள் பலர் இந்ததேர்தலின் களத்தில் குதிக்கவுள்ளனர். 'எங்களிடம் பல சட்டத்தரணிகள் தமக்கு வாய்ப்பு தருமா…

    • 1 reply
    • 1.1k views
  9. 15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை இராணுவத்தின் வழமையான மற்றும் தொண்டர் படையணியின் 114 அதிகாரிகள் மற்றும் 1,395 இதர நிலை சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு உயர்வு பெற்றுள்ளனர். போர் வீரர்களின் நினைவு தினமான இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து படைப்பிரிவு உறுப்பினர்களுக்கும் இந்த தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301989

  10. 15வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் கைது! – திருநெல்வேலியில் சம்பவம். [sunday, 2014-03-02 17:18:24] யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே நேற்றிரவு கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினமான கடந்த வியாழக்கிழமை திருநெல்வேலியின் பாற்பண்ணை என்ற பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் இருந்தவேளை, யாரும் இல்லாத …

  11. 13 APR, 2025 | 07:36 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுநர் ஞாயிற்றுக்கிழமை (13) பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்டநடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். https://www.virakesari.lk/article/211965

  12. 16 – 23 ஆக பிளவுபட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால. இவர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த போது, கூட்டு …

  13. 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. 30 Dec, 2024 மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை ஞாயிற்றுகிழமை (29) மாலை கரைக்கு வந்தது. இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர். https://www.virakesari.lk/article/202505

  14. 16 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது 16 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சினால் இது பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம் முதல் இந்த புதிய விலை நிர்ணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் தோலுடன் 410 ரூபா, தோல் உரித்து 495 ரூபா சிகப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 169 ரூபா நெத்தலி ஒரு கிலோ கிராம் 495 கடலை ஒரு கிலோ கிராம் 260 பயறு ஒரு கிலோ கிராம் 220 டின் மீன் 480 கிராம் 140 ரூபா வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 95 ரூபா மாவு ஒரு கிலோ கிராம் 87 ரூபா இறக்குமதி செய்யப்ப…

  15. வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 21ம் நாளிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன், இவற்றுடன் தொடர்புடைய, 424 நபர்களும் தடைவிதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தடைவிதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளிலும், இந்தியா மற்றும் சிறிலங்காவிலும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்டவர்களினது தற்போதைய முகவரி, சிறிலங்…

  16. 24 MAY, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு…

  17. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை கடந்தவாரம் வெளியிடப்பட்டது. அதில், 2017ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 3.6 வீத பொருளாதார வளர்ச்சியை சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்த்திருந்தது. எனினும், கடுமையான வரட்சி, இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால், பொருளாதார வளர்ச்சி மந்தமானது. …

  18. 16 ஆம் திகதி கேள்­வி­ எ­ழுப்பவுள்ள நாடுகள் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37ஆவது கூட்­டத்­தொடர் ஜெனி­ வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் எதிர்­வரும் 16 ஆம் திகதி இலங்கை மனித உரிமை நில­வரம் குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு குறித்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமு­லாக்­கத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே இந்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஏற்­க­னவே இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் நடை­பெற்­றது. அதன்­போது இலங்கை குறித்த பல்­வேறு பரிந்­து…

  19. ஜனாதிபதி இரு வாராங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்த நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக் காரணமாக எதிர்வரும் இரு வராங்களுக்கு (16 ஆம் திகதி வரை) பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி உத்திரவிட்டார். இந்நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரிய 16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து இன்று சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சபாநாயகர் மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்தார். பாராளுமன்றத்தை 16 ஆம் திகதிக்கு முன் கூட்டு…

  20. 16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார். 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு…

    • 7 replies
    • 822 views
  21. இலங்கையில் 16 இடங்களில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகளை தமிழக வி.ஜி.பி தமிழ் ஒன்றியத்தின் நிறுவனர் வி.ஜி. பி.சந்தோசம் வழங்கியுள்ளார். இந்த சிலைகள் நல்லெண்ண நோக்கத்துடன் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=159880&category=TamilNews&language=tamil

  22. 16 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு வியாழக்கிழமை(23) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (ச) 16 இந்திய மீனவர்கள் கைது!

  23. 16 இலட்சம் அரச ஊழியர்களில்... சுமார் 10 இலட்சம் பேர், வினைத்திறனான சேவையை செய்வதில்லை என குற்றச்சாட்டு! 16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும். அதேபோல பொது சேவை ஊழியர்களும் பணியாற்ற வ…

  24. ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 10 இராணுவத்தினரும் 16 ஈ.பி.டி.பியினரும் பலி [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 13:50 ஈழம்] [க.திருக்குமார்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பெண் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட 10 இராணுவத்தினரும், 16 ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியதாக சிறிலங்கா படை…

  25. 16 எம்.பி.க்களில் சிலர் மட்டுமே பங்கேற்பு சு.க.வின் மேடையில் ஏறிய வரதராஜப்பெருமாள் (ஆர்.யசி) பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவும் ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் பங்கேற்றிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் பங்கேற்பதாக வாக்குறுதியளித்தும் பலரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இருந்தபோதிலும் ரணில் எதிர்ப்பு குழுவின் முக்கியஸ்தர் எஸ்.பி. திசாநாயக்க இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.