ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கடற்படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்கள், இராணுவத்தைச் சேர்ந்த 7 சிப்பாய்கள் மற்றும் இந்த சட்டத்தின் வேறு பிரிவுகளின் கீழ் 4 பொலிஸ் அதிகாரிகளும், 4 இராணுவ சிப்பாய்களுமாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். http://www.seithy…
-
- 0 replies
- 506 views
-
-
18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் பக்கம் தாவியது கட்சிக்கு பெரும் பின்னடைவல்ல - தொடர்ந்து போராடுவோம்: ரணில். மில்லியன் கணக்கான வாக்காளர்கள் ஐ.தே.காவின் பின்னால் நிற்கிறார்கள் எனவே கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் பக்கம் தாவியது கட்சிக்கு பெரும் பின்னடைவல்ல என நேபாளம் மற்றும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று நாடு திரும்பியதும் பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது: எமது கட்சி பல நெருக்கடிகளை முன்னைய காலங்களில் சந்தித்துள்ளது. கட்சியின் 18 மூத்த உறுப்பினர்கள் அரசின் பக்கம் தாவினாலும் ஆதரவாளர்கள் எமது பக்கமே உள்ளனர். கட்…
-
- 1 reply
- 954 views
-
-
18 பில். டொலர் முதலீடு: ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட்? தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பர்பேங்குக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் டிஸ்னிலேண்ட் பூங்கா ஒன்றை அமைப்…
-
- 3 replies
- 326 views
-
-
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறிய மங்கள சமரவீர, அதனடிப்படையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சொத்துக்…
-
- 0 replies
- 722 views
-
-
18 பில்லியன் டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட் வணிக பூங்கா தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவித்துள்ளார். இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. மேலும் நவம்பர் மாத இறுதியில் ஆய்வுகளை நடத்துவதற்கு டிஸ்னி நிறுவன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் உள்ள பா…
-
- 0 replies
- 213 views
-
-
[size=2][/size] [size=2][size=4]பசுபிக் தீவு நாடான நவுறுவிற்கு இடமாற்றம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இலங்கையைச் சேர்ந்த 18 புகலிடகோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் கிரிஸ் போவ்ன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம்கோரி படகு மூலம் கிறிஸ்மஸ்தீவிற்கு பயணிப்பவர்களை நவுறு நாட்டில் வைத்து பரிசீலனை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. இந்நிலையில், தம்மை நவுறு நாட்டிற்கு அனுப்பாமல் மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரிய இலங்கையர்கள் 18 பேர் இன்று சனிக்கிழமை கிறிஸ்மஸ் தீவிலிருந்து கொழும்புக்கு புறப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரதுறை அமைச்சர் போவ்ன் மேலும் கூறினார்.[/size][/size] [size=2][size…
-
- 1 reply
- 416 views
-
-
18 மணிநேர ரயில் பயண களைப்புக்கு மத்தியில் தளராது மனவுறுதியுடன் போட்டியிட்டு 2 தங்கங்களை வென்றெடுத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் 18 மணித்தியாலங்கள் ஓய்வின்றி விழித்திருந்து ரயில் வண்டியில் பயணம் செய்து கொழும்பை வந்தடைந்த சில மணிநேரங்களில் மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றெடுப்பது ஓர் அரிய சாதனை என்றே கூறவேண்டும் இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 26 ஆவது மகளிர் மெய்வல்லுநர் போட்டிகளில் மனவுறுதியுடன் கலந்துகொண்டு இரண்டு நாட்களில் இரண்டு தங்கப்பதக்கங்களை சுவீகரித்த பெருமை வவுனியா சைவப் பிரகாசர் மகளிர் வித்தியாலய மாணவி தனபாலசிங்கம் அனுஷாவைச் சாருகின்றது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இப்போட்டிகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
18 மாதங்கள் தேசிய அரசாங்கம் எவ்வாறு பயணிக்கவேண்டும்?: வரைபை தயாரித்தது சு.க.வின் குழு (ரொபட் அன்டனி) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா, இல்லையா? என்பது குறித்து ஆராயவும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அடுத்த 18 மாதங்களில் தேசிய அரசாங்கத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து ஒரு வரைபை தயாரித்திருக்கின்றது. அந்த வரைபு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் ஆராயப்படவுள்ளதுடன் அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.…
-
- 0 replies
- 156 views
-
-
கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் 18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரமும், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வருடம் தோறும் நெற்செய்கை 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. காலபோகத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், சிறுபோகத்தில் 20 ஆயிரம் ஏக்கபர் பரப்பளவுமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் போது ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு அடி உரம், வீ1, யூரியா, ரிஎஸ்பி, ரிடிஎம் போன்ற இரசாயன உரங்கள் சுமார் 200 கிலோ கிராம் பயன்படுத்தப்படல் தேவை எனவும், சில சந்தர்ப்பங்களில் இது 225 கிலோ கிராம் அல்லது 175 கிலோகிராம் என கூடி குறையும் எனவும் தெரிவிக்கும் விவசாயிகள் சராசரியாக ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 200 க…
-
- 0 replies
- 411 views
-
-
இளம்யுவதிகள் 18 பேரை காதலித்து ஏமாற்றியமை மட்டுமன்றி அந்த இளம்யுவதிகளின் தங்க நகைகளையும் கொள்ளையடித்த 35 வயது ரோமியோவை மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இவரால் பாதிக்கப்பட்ட இளம்யுவதிகளில் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. 18 இளம்யுவதிகளின் காதலனாக இருந்து வந்த இந்நபர் அந்த இளம்யுவதிகளில் நால்வரை திருமணம் செய்து கொண்டார் என்றும் மிகுதியான 14 பேரில் நால்வருடன் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார் என்றும் பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இக்கைது நடவடிக்கையை தொடர்ந்து பல இளம்யுவதிகளின் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன என்று இரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவிக்கின…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடா தமிழ் மக்களினால் நடாத்தப்படும் ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் எனும் அமைப்பினால் 18 லட்சம் ரூபா பெறுமதியான வாகனம் நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களினால் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நா.வை. குகராசா மற்றும் உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலை செல்பவர்கள் சிகிச்சை பலனின்றி இறக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பூத உடல்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு வறிய ஏழை மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். இதனை நிவர்த்த செய்ய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் வேண்…
-
- 3 replies
- 650 views
-
-
ஸ்ரீலங்காவின் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்த்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகள் கிடைத்த அதேவேளை எதிராக 17 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு சார்பாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.பியசேனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க, லக்ஸ்மன் செனவிரட்ண, அப்துல் காதர், மனுஸ நாணயக்கார ஏர்ல் குணசேகர, பீ திகாம்பரம், பிரபா கணேசன், ஜே ஸ்ரீ ரங்கா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். …
-
- 11 replies
- 5k views
-
-
18 வயதிற்கு குறைந்தோருக்கு மரண தண்டனை கூடாது : இளைஞனின் தண்டனையை மாற்றிய மேன் முறையீட்டு நீதிமன்றம் By T. SARANYA 27 OCT, 2022 | 04:47 PM (எம்.எப்.எம்.பஸீர்) இளைஞர் ஒருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையாக மாற்றி மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களை மையப்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. 'குற்றஞ்சாட்…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ முகாமில் பயிற்சி – சரத் வீரசேகர இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். இராணுவ முகாம்களில் குறித்த தலைமைப் பயிற்சி வழங்கப்படும் என்றும் இது போன்ற பயிற்சிக்கு சிறந்த இடம் அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமைப் பயிற்சி என்பது இளைஞர்களை இராணுவதிற்குள் இணைக்கும் முயற்சி அல்ல என்றும் அது நாட்டில் சிறந்த ஒழுக்கம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2021/1229107
-
- 3 replies
- 323 views
-
-
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Keheliya.jpg 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் அரசியல் பின்னணி, நிர்வாகம் மற்றும் அத்தகைய நடவடிக்கையின் அவசியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னர் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளும் இ…
-
- 0 replies
- 336 views
-
-
பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15.10.18) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடி…
-
- 0 replies
- 264 views
-
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி -கோட்டாபய அரசின் திட்டம் வெளியானது நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து கோட்டாபய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை தான் நாடாளுமன்றில் முன் வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகில் உள்ள சில நாடுகள் இவ்வாறான திட்டத்தை அமுல்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 4 replies
- 729 views
-
-
18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமை! நாடளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர், டொக்டர் சமந்த கிதலவாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸாரினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கே இவர்கள் அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நாடளா…
-
- 0 replies
- 193 views
-
-
-செல்வநாயகம் கபிலன் 18 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளின் பாவனைக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்க வேண்டாம் என்று பெற்றோர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கொன்று யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் உரையாற்றிய காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் சிந்து பாமினி, மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார். அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது த…
-
- 0 replies
- 370 views
-
-
18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி * Thursday, January 13, 2011, 4:52 1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற இந்தச் சந்தேக நபர் 1993 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் அன்று முதல் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் .தற்போது மகேந்திரனுக்கு தற்போது 34 வயதாகிறது. கடந்த 18 வருடங்களாக இவர் பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதும், பாதுகாப்பு தரப்பினரால் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது போனது. அதிகாரிகளும் இந்த சந்தேக நபர் குறித்து எ…
-
- 0 replies
- 665 views
-
-
18 வருடங்களின் பின் அரசியற் கைதி விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி! பதினெட்டு வருடங்களின்பின்னர் தமிழ் அரசியற்கைதி ஒருவர் சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://newuthayan.com/story/40760.html
-
- 1 reply
- 458 views
-
-
18 வருடங்களின் பின் முகமாலை ஆரோக்கிய மாதா திருவிழா முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின் வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று எதிர்வரும் 17ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருநாள் திருப்பலியுடன் அன்னையின் ஆசீர்வாதம் இடம் பெறவுள்ளது. யுத்தகாலத்தில் சூனியப் பிரதேசமாக காணப்பட்டது. முகமாலையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத பிரதேசமாகவும் காணப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதோடு தற்போதும் கண்ணிவெடி அகற்ற…
-
- 0 replies
- 270 views
-
-
18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி 18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பொப்பி என்ற இந்த 18 வயதான யுவதி, 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பெருந்தோட்டம் ஒன்றில் இருந்து பிரித்தானிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டனர். இதன்பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்தநிலையில் தமது பெற்றோர் இலங்கையில் இருப்பதை தெரிந்து கொண்ட அவர் அவர்களை தேடி இலங்கைக்கு வந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தமது பெற்றோரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் விஜயம் செய்த பொப்பிக்கு தமது பெற்றோர் இருப்பது போர் இடம்பெற…
-
- 2 replies
- 838 views
-
-
இலங்கையில் இருந்து அமைதி காக்கும் படையினர் 1990 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், 18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் விமர்சித்துள்ளது. வவுனியாவில் உள்ள இலங்கை விமானப்படை ராடர் தளத்தை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படைத் தொழில்நுட்பவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர். இந்திய விமானப் படையின் சார்ஜண்ட் தர நிலையைச் சேர்ந்த சிந்தாமணி ரவூத் மற்றும் ஏ.கே.தாக்கூர் ஆகியோரே இத்தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட இந்திரா II ரக ராடரை இந்தியாவே இலங்கைக…
-
- 0 replies
- 1.9k views
-
-
18 வருடங்களின் பின்னர் வரையப்படும் இலங்கையின் பூலோக வரைப்படம்!!! இலங்கையில் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய இலங்கை வரைபடம் 1:50 000, 92 ஸ்கோப்பிங் வரைபடமாக அமைந்துள்ளதாகவும். இதில் 65 ஸகோப்பிங் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 25 ஸ்கோப்பிங் வரைபடங்கள் எதிர்வரும் சில மாதங்களில் பூரணப்படுத்தப்படவுள்ளதாகவும் அரச நில அளவையாளர் பி.எம்.பி உதய காந்த தெரிவித்தார். 18 வருடங்களிற்கு பிறகு வரையப்படும் வரைபடத்தில் இக்காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. புதிய வரைபடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு நகரமும் உள்வாங…
-
- 0 replies
- 414 views
-