ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
2 கிலோ ஹெரோயினுடன் நபர் கைது வவுனியா பஸ் நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குளி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 2கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26843
-
- 0 replies
- 149 views
-
-
2 குண்டுகள் மீட்கப்பட்ட விவகாரம்: வீட்டுரிமையாளரின் சடலம் மீட்பு ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், துஷாரா ஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை (07) மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று (09) மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய அருள்ராஜ் ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும…
-
- 1 reply
- 298 views
-
-
வவுணதீவு பிதேச செயலகப் பிரிவில் உள்ள பங்குடாவெளி கிராமத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதரவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் இந்த நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில், ஐந்து குடும்பங்களுக்கு இவ்வாறு பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர், சமூக ஆர்வலர்கள், கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.jaf…
-
- 1 reply
- 533 views
-
-
இன்று தாஜ் சமுத்திராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான செய்தியாளர் மாநாடு இரண்டு கேள்விகளுடன் முடிவடைந்தமை ஊடகவியலாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த செய்தியாளர் மாநாட்டிற்காக 4 மணிமுதல் ஊடகவியலாளர்கள் காத்திருந்த நிலையில் 6.30 மணியளவிலேயே செய்தியாளர் மாநாடு ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஆரம்பமான செய்தியாளர் மாநாடும் இரண்டு கேள்விகளுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் இரு கேள்விகளைன மாத்திரம் கேட்டிருந்த நிலையில் கெரி செய்தியாளர் மாநாட்டை முடித்துக் கொண்டு வெளியேறினார் கெரியிடம் எழுப்பட்ட வினாக்களில் இரண்டில் ஓன்று மாத்திரம் இலங்கை குறித்ததாக அமைந…
-
- 1 reply
- 508 views
-
-
2 கோடி ரூபா நகை கடத்தலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி கைது இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வர முற்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவர் இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். ஜெத்தாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பணிபுரிந்த ஐம்பது வயதுடைய இவர், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்தார். எனினும், வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனைகளின்போது இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத் துறையினர் அவரை முழுமையாகப் பரிசோதனை செய்தனர். அப்போது, இவரது உடலிலும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அங்கியிலும், காலில் அணிந்திருந்த விசேட பட்டியிலுமாக மொத்தமாகச் சுமார் ஐந்தரைக் கிலோ தங்க நகைகளை இவர் மறைத்து வ…
-
- 1 reply
- 232 views
-
-
2 கோடி ரூபா பெறுமதியான அபின் மீட்பு! யாழ்ப்பாணம் வடரமாட்சி, தொண்டமனாறு பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. “வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இருவர் நடமாடியபோது, அவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து குறித்த பொதியினை மீட்டெடுத்த பொலிஸார் அதிலிருந்து ஒன்றரைக் கிலோ கிரேம் அபின் போதைப்பொருளை மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/55068
-
- 0 replies
- 613 views
-
-
2 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது By T. SARANYA 27 SEP, 2022 | 05:22 PM கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று (27) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகாரி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றுள்ளார். சுங்க ப…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
2 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதிரியார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியே குறித்த பாதிரியார். அப்பாவி மக்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவுக்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றிவந்த நிலையிலேயே பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாதிரியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இருபாலை,நல்லூர் மற்றும் கோப்பாய் போன்ற பகுதிகளிளைச்சேர்ந்தவர்களையே இவ்வாறு ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றிய பாதிரியார் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தா பொலிஸார். அவர் தொடர…
-
- 1 reply
- 515 views
-
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் குடாநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான வலைகளை முற்றாகச் சேதமாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குடாநாட்டுக் கடற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் அத்துமீறல்கள் தொடர்பில் கடற்படையினர் கண்ணை மூடிக்கொண்டிருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை பகுதியில் கரையிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலையில் இந்திய இழுவைப் படகுகள் வந்து மீன்பிடித்துள்ளதுடன் குடாநாட்டு…
-
- 2 replies
- 436 views
-
-
2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ உறுதிப்படுத்திய செய்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா நிதி அபிவிருத்திக்காகவே வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசியத் திட்டமும் கொள்கையும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கை அரசின் ஆர்.டி.ஐ ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் வடக்கு, கிழக்கின் நாடாளுமன்ற…
-
- 8 replies
- 693 views
-
-
2 தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன் : இன்று தீர்ப்பு வவுனியா - மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய தந்தைக்கு 20 வருட கடூழியச்சிறைத் தண்டனையை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு மறவன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தாயின் இரண்டாவது கணவனான 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம் இரண்டு தடவைகள் பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார். இதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம…
-
- 2 replies
- 462 views
-
-
இலங்கையின் இரண்டு நீதிமன்றங்களினால் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல், பதுங்கி இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் அவரை அழைத்து வந்துள்ளனர். அவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாழ்.மாவட்டத்தின் காங்கேசன்முறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களால் விமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்திருந்தது. இருந்த போதிலும், செவ்வாய்க்கிழமை (29) இரவு 11.45 மணியளவில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான…
-
- 0 replies
- 306 views
-
-
2 தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது ஒலுமுதீன் கியாஸ் இரண்டு தேசிய அடையாள அட்டைகளையும் இரண்டும் வாகன அனுமதிப்பத்திரத்தையும் வைத்திருந்த ஒருவரை திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸார் இன்று (11) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். குறித்த நபர், மற்றுமொரு நபருடன்; திருகோணமலையில் இருந்து குச்சவெளிக்கு வந்துகொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த வானை நிறுத்தி சோதனையிட்ட போதே அதிலொருவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். ஒரு தேசிய அடையாள அட்டை குருநாகல் முகவரியையும் மற்றைய தேசிய அடையாள அட்டை பொல்கஹவெல முகவரியையும் கொண்டிருந்ததோடு அதிலொரு தேசிய …
-
- 0 replies
- 202 views
-
-
2 தேரர்களுக்கு அழைப்பு நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் பேரில், வாக்குமூலம் அளிப்பதற்காக, தேரர்கள் இருவருக்கு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. அக்மீமன தயாரத்ன மற்றும் அருமேபொல ரத்னசார ஆகிய இருவரையுமே, இன்று (02) காலைவேளையில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில், பெண்ணொருவர் உட்பட, அறுவர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களில் நால்வர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுக…
-
- 1 reply
- 360 views
-
-
2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில் (எம்.நியூட்டன்) யாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டை குறித்த சங்கத்தின் புதிய தலைவர் முன்வத்ததையடுத்தே இந்த மோதல் சம்வம் ஏற்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற் சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த மூவரும் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது தரப்பில் மூவர் என 8 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் …
-
- 0 replies
- 1.4k views
-
-
2 நாள்களாகக் கடுஞ்சமர்;தொடர்ச்சியாக நடக்கிறதுகனரக ஆயுதங்கள் கொண்டு புலிகள் தாக்குதல். புதன், வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் முல்லைத்தீவுக் கள முனைகளில் இராணுவத் தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும்சமர் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை அதிகாலை வரை கடுஞ்சமர் நீண்டநேரம் நடைபெற்றதாகவும் அதற்கு முதல்நாள் செவ் வாய்க்கிழமை 12 மணிநேரம் சண்டை தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை விடுதலைப்புலிகள் கனரக ஆயுதங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி தாக்குதல்களை உத்வேகத்துடன் நடத்துவ தாகவும் அதன்காரணமாக படையினர் பெரும் எண்ணிக்கையில் காயமுறுவதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பிலும் அதிக இழப்பு முல்லைத்த…
-
- 2 replies
- 3.4k views
-
-
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314131
-
-
- 27 replies
- 1.7k views
- 3 followers
-
-
2 படகு மற்றும் 10 மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 2 படகு மற்றும் 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இன்று காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 6 நாட்களாக நெடுந்தீவு வடக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நேற்று அத்துமீறி மீன் பிடியில் குறித்த மீனவர்கள் ஈடுப்பட்டிருந்த வேளையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு காலை 9 மணியளவில் மலேரியா பரிசோதனை செய்த பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். http://www.virakesari.lk/…
-
- 0 replies
- 135 views
-
-
25 Feb, 2025 | 07:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்றத்தில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையை ஏற்படுத்துகின்றது.ஆகவே இரண்டு பாதுகாப்பு உத்தியோஸ்த்தர்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நான் எதிர்கொண்ட சம்பவமொன்று எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறது.இம்மாதம்( பெப்ரவரி) 12ஆம் திகதி இரவு யாழ். வலம்புரி ஹோட்டலில் என் ம…
-
- 0 replies
- 135 views
-
-
சிறிலங்காவில் உள்ள சீன அன்பளிப்பில் கட்டப்பட்ட ஒரே ஒரு சிவில் தேவைக்கான மாநாட்டு மண்டபமான பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் தற்போது இராணுவ தளபாடக் கண்காட்சியின் மையமாக மாறியுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ வெற்றிப் பிரதாபத்தை எடுத்துச் சொல்லவும் சிங்கள இளைஞர் யுவதிகளை இராணுவத்தின் பால் கவரவும் சுமார் 2 பில்லியன் செலவு செய்து இக்கண்காட்சியை மகிந்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. சிறீலங்காவின் 60வது சுதந்திர தினம் சிங்களவர்களால் தமிழர்களை அழிக்கப் பயன்படும் பேராயுதங்களின் கண்காட்சியின் மூலம் கொண்டாடப்படுகிறது..! இவைதான் பன்னாட்டு அரசுகளால் சமாதானம் என்ற போர்வையில் சிறீலங்காவுக்கு செய்யப்பட்ட உதவிகளின் வெளிப்பாடுகள்..! நீங்களும் உங்கள் சகோதர…
-
- 26 replies
- 4.4k views
-
-
2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன – சுகாதார அமைச்சு நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் சுவாச நோய்களுக்காக வாங்கப்பட்ட சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கை கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டதென்றும் அதன் காரணமாக அனைத்து சுவாச நோய்களும் குறைந்துவிட்டன என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/…
-
- 0 replies
- 149 views
-
-
2 பிள்ளைகளின் தாய் கொலை : 7 மாதங்களின் பின் கைதான ஹோட்டல் உரிமையாளர்! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 10:51 AM இரண்டு பிள்ளைகளின் தாயான துஷாரி தில்ஹானி என்பவர் 7 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் மலசலகூட குழியில் வீசப்பட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிரிஇப்பன்ஆர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் என தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்துக்குத் தப்பிச் சென்ற சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
2 புலிகளின் கோரிக்கை ஆராய்வு இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் அன்றையதினமே, தீர்மானிக்கப்படும் என்று, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மகேஷ் வீரமன், நேற்று (14) கட்டளையிட்டார். கஜபா படையணியின் முன்னாள் கமாண்டர் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட எட்டு பேர் கெப்ரக வாகனமொன்றில், வில்பத்து சரணாலயத்தில் பயணித்துகொண்டிருந்…
-
- 0 replies
- 261 views
-
-
இந்தியா, இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு, 2017அல்லது 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த கப்பல்கள் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது என்றும் அந்த செய்திகளில் தெரிவிகப்படுகின்றது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள 4 தென்மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து வரும் சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவாக அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இ…
-
- 0 replies
- 675 views
-
-
2 மாத கைக்குழந்தையுடன்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்! வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாகச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மேலும் 5 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர். வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரே ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர். தகவல் அறிந்து …
-
- 0 replies
- 251 views
-