ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு (கிறீன் கார்ட் லொத்தர்) நிகழ்ச்சித்திட்டத்துக்காக, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) இரவு 9.30 மணிமுதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி இரவு 9.30 மணிவரை விண்ணப்பிக்க முடியுமென, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பதில் கவுன்சிலர் டேவிட் வாக்னர் தெரிவித்தார். இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில், நேற்று (04) இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “இந்த வருடம், இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளிலிருந்து எழுந்தமானமாகத் தெரிவுசெய்யப்படுவோர், 2017ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 2018ஆம் ஆண்டிலேயே கிறீன் கார்ட் வழங்கப்ப…
-
- 0 replies
- 418 views
-
-
பா.ருத்ரகுமார்) எதிர்பாலின மீளுற்பத்தி செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு போதிய அறிவில்லாமலுள்ளது என ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயளாளர் அனுர ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கில் தேசிய இளைஞர் சுகாதார தரவு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் . சுகாதார அமைச்சின் செயளாளர் அனுர ஜெயவிக்கிரம தெரிவிக்கையில் பொதுவாக 15 தொடக்கம் 24 வரையிலான சனத்தொகை பரம்பலே இளைஞர்களாக கருதப்படுகின்றனர். அதனடிப்படையில் 15.6 சதவீதமானோர் இலங்கையில் இளையோர்களாக காணப்படுவதோடு நூற்றுக்கு பதினாறு பேர் குறித்த வயதெல்லையில் உள்ளனர். எ…
-
- 1 reply
- 272 views
-
-
ரவிராஜ் அன்றைய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார். லசந்த விக்ரமதுங்க நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். வெகு விரைவில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம்.என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,இளைஞர்களே எழுந்து வாருங்கள், தலைமை தாங்குங்கள், தாய் பூமியை, தாய் நாட்டை, தாய் மொழியை, தாய் இனத்தை காப்பாற்றுவோமானால் அத்தகைய இளைஞர்களுக்கு நாம் உரிய இடத்தை வழங்க வேண்டும். இடத்தை பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பை வழங்க வேண்டும். தமிழர்கள் ஆட்சி அமைக்…
-
- 3 replies
- 579 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செயற்பாடுகளை பார்த்துகொண்டு இருந்தது. அரசியல் ரீதியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளோடு தான் அதனைச் செய்து வந்தோம். இன்று எமது பலம் மௌனிக்கப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் தேசிய இனங்கள் அரசியல் செல்வாக்கு இல்லாமல் தென்னிலங்கை ஆட்சி பீடத்தை அமைக்க முடியும் என கருதி வந்தார்கள்…
-
- 1 reply
- 356 views
-
-
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து , 102 கிலோ கஞ்சா வவுனியா பொலிசாரினால் கைப்பற்றப்பட்டு உள்ளது. யாழில் இருந்து இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனத்தை வவுனியா பொலிசார் , வவுனியா பகுதியில் இடைமறித்து சோதனையிட்ட வேளை குறித்த வாகனத்தில் பயண பைகளில் , மறைத்து வைக்கப்பட்டு இருந்த 102 கிலோ கஞ்சா போதை பொருளை பொலிசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடியே ஐம்பது…
-
- 1 reply
- 280 views
-
-
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி சரத் வீரசேகர மற்றும் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர் சிசிரடி ஆப்ரூ மற்றும் நீதியரசர் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்தே உருவாக்கியுள்ளது ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒரு தேசிய அரசாங்கமாக இருக்க முடியாது என மனுதாரர்கள் விவாதித்திருந்த…
-
- 1 reply
- 382 views
-
-
மண்டையோடுகளை கண்டு வியாபாரிகள் அச்சத்திற்கு உள்ளாகிய சம்பவம் இன்று காலை 09 மணியளவில் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பிரதான நகரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பாக இந்த மனித மண்டையோடு களை பொலிஸார் மீட்டுள்ளனர். வழமையைபோல வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை நேற்று இரவு 09 மணியளவில் முடித்துவிட்டு கடைகளை மூடிய பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று காலை 09 மணியளவில் கடைகளை திறக்கும் போது கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகள் கிடந்ததை கண்ட இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியு ள்ளனர்.இதனையடுத்து பொலிஸ் அ…
-
- 0 replies
- 2.9k views
-
-
நியூஸிலாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தி யாவை சென்றடைந்துள்ளார். சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்கவே அவர் அங்கு சென்றுள்ளார். மேலும், இன்று பகல் புது டெல்லி விமான நிலையத்தை அடைந்த அவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தா னிகர் சந்திரானி வாகிஸ்வர ஆகியோர் வரவேற்றனர்.. இதன்படி, நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகி யோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வுள்ளார்…
-
- 0 replies
- 274 views
-
-
மைத்திரி-ரணில்தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை களால் நாடு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் உச்சி மாநாட்டை அவசரப்பட்டு புறக்கணித்தன் மூலம் அரசாங்கம் பாரிய தவறை இழைத்து விட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய – பாகிஸ்தான் நாடுகள் இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் அவ்விரு நாடுகளிடையேயும் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே ஒழிய, விரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈ…
-
- 0 replies
- 194 views
-
-
தனது தேவைக்கு பணம் தர மறுத்ததால் தாய் தந்தையை மகன் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணம் கே.கே.ஸ் வீதியில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றினுள் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது தனது தேவைக்கென மகனார் தனது பெற்றாரிடம் ஒரு லட்சம் ருபாய் வரையில் கேட்டுள்ளார். எனினும் குடும்ப சூழ்நிலை காரணமாக தந்தையார் பணம் தர மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமுற்ற மகiன் தாய் தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலையடுத்து மற்றொரு மகன் பொலிஸாரிற்கு தகவல் கொடுத்துள்ளார் . தகவலையடுத்து பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர். எனினும் தனது மகன் மீது முறைப்பாடு மேற்கொள்ளவோ, மகனை…
-
- 1 reply
- 468 views
-
-
உலக நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக மைத்திரி – ரணில் அரசாங்கம் பெருமை பாராட்டிக்கொண்டாலும், சர்வதேச சமூகம் இந்த அரசாங்கத்தை பொருட்படுத்துவதே இல்லை என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார் இதுகுறித்து பந்துல குணவர்த்தன மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் சிகரெட்டிற்கு 20 ரூபா விசேட வரி விதிப்பை மேற்கொண்டு 82 பில்லியன் ரூபாவினை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும். அதனை செய்யாமல், மிகப்பாரிய நிறுவ…
-
- 0 replies
- 219 views
-
-
கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இன்று 04-10-2016 குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முதலாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் எனவும் அவர் தன்வசம் வைத்திருந்த பொருட்களை பார்க்கும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர் குற…
-
- 0 replies
- 247 views
-
-
‘உயிரைக் காப்பாற்றுங்கள்’: சம்பந்தனுக்கு மாவை கடிதம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு, கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தனது உயிருக்கு ஆபத்து என்றும் தன்னைக் கொலை செய்துவிட்டு, அதனை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றும் கூறியிருந்தார். இந…
-
- 5 replies
- 602 views
-
-
புதிய பொலிஸ்நிலைய கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லை யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ்நிலைய கட்டடம் போதிய தங்குமிட வசதிகளின்றி அமைக்க ப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாக யாழ் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் தங்குவதற்கு சரியான முறையில் அறைகள் கட்டப்படவில்லை. அனேக பொலிஸாருக்கு உறங்குவதற்கு கட்டில்கள் கூட இன்றி தரையிலேயே படுத்துறங்கும் சூழ்நிலையுள்ளது. அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் கூட சரியான திட்டமிடலின்றியே அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கான அறைகள் சரியான இடங்களில் அமைக்கப்படாததால் சில நேர…
-
- 0 replies
- 335 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் பதவி விலக்கவேண்டும் அல்லது வடக்கு மாகாணசபையைக் கலைக்கவேண்டுமென சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அரசாங்க உள்ளவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்திய பேரணி இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது என்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே மைத்திரிபால சிறிசேனவுக்கு தொடர்ச்சியாக இவ்வாறான அழுத்தத்தை வழங்கிவருவதாகவும், தற்போது அவர்கள் ரணிலுக்கும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. யாழ்பபாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ ப…
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான நிலை குறித்து நோர்வே மக்களும் ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளின் மக்களும் முழுமையாக உணரவில்லை, இதன் காரணமாகவே அந்த நாடுகளில் இருந்து முதலீடுகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. மூன்று தசாப்தபால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என அவர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாக இலங்கையில் நிலவும் சமாதானம் குறித்து அந்த மக்களுக்கு எடுத்துச்சொல்வதற்கான நடவட…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையின் வெளிப்பாடே இந்த எழுக தமிழ் போராட்டம் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எழுக தமிழ் போராட்டத்தின் பின்னணியில் காலணித்துவ சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கட்சியின் தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விக்னேஸ்வரன் இவ்வாறு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். h…
-
- 0 replies
- 331 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையில் ஆளுநர் நிதியத்திற்கு அனுமதி வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் இதுவரை முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்க பின்னடித்து வருகின்றது. இருப்பினும் முதலமைச்சர் நிதியத்துக்கான அனுமதியை விரைவில் அரசாங்கம் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் நிதி திரட்டும் நோக்கிலேயே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறித்த நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் முதலமைச்சர் அலுவலகம் இந்தச் செய்தியினை இதுவரை வெளியிடவில்லை. மேலும், பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்பு…
-
- 0 replies
- 447 views
-
-
கல சமயங்களினதும் வணக்கஸ்தலங்களையும் சமய அடையாளங்களையும் நிறுவுவதை ஒழுங்குபடுத்துவதற்கெனக் கொண்டுவரப்படவுள்ள விகாரைகள், தேவாலயங்கள் சட்டமூலம் தொடர்பில், அனைத்து மகாநாயக்கத் தேரர்களின் ஒன்றிணைந்த கருத்தொன்று முன்வைக்கப்படும் வரையில், அச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லை என்று நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கோரிக்கையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார். முன்னதாக, கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை (04), விகாரைகள் மற்றும் தே…
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் வழங்கும் சேவைகள், செய்திகள் உள்ளிட்ட தகவல்களை இந்த புதிய இணையத்தளத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். lk.usembassy.gov என்ற இணைய முகவரியில் இணையத்தளத்தை பார்வையிடலாம். http://www.tamilmirror.lk/183178/அம-ர-க-க-த-தரகத-த-ன-ப-த-ய-இண-யத-தளம-
-
- 0 replies
- 295 views
-
-
டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ் கந்தர்மடம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்ட நிலையில் அங்குள்ள வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிமனையால் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளாகிய இன்று யாழ் பொலிஸ் பிரிவிக்கு்ட்பட்ட கந்தர்மடம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது . இதன் போது குறித்த வீடு ஒன்றை பார்வையிட்ட அதிகாரிகள் வீட்டினுள் ஒரு அறையினுள் கிடந்த போத்தல்கள் , கழிவுப் பொருட்கள் , குப்பைகளைக் கண்டு வியந்தனர…
-
- 6 replies
- 452 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்துகொண்டே தேர்தலுக்காக வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியில் கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். புதிய கட்சி உருவாக்க மாட்டோம். அவ்வாறு உருவாக்குவதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள எமது அங்கத்தவர்களின் வாக்கு வங்கி பறிபோகும். இதனால், வழிமுறையாக மாத்திரம் புதிய சின்னமொன்றில் போட்டியிடுவோம். புதிய கட்சி உருவாக்காமல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளை பறித்தெடுப்பதே எமது நோக்கம் என்றும் தேர்தல் வெற்றியின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உரிமை யாருக…
-
- 1 reply
- 234 views
-
-
கூட்டு எதிர்க் கட்சி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும். 90 வீதமானோரின் கருத்தே இதுவாகும். இது கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள என்னுடைய கருத்து மாத்திரமல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவி த்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று (03) நள்ளிரவு இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.அந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில் 2020 ஆகும் போது நாட்டின் ஜனாதிபதி முறைமையை மாற்றாது போனால், கூட்டு எதிர்க் கட்சியின் சார்பில் கோட்டாபயவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்.…
-
- 1 reply
- 355 views
-
-
இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததின நினைவு நாளை முன்னிட்டும் சர்வதேச அகிம்சா தின நிகழ்வை முன்னிட்டும் சிறப்பு நிகழ்வு ஒன்று நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகமானது அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினருடன் இணைந்து நடாத்தியது. இந்நிகழ்வில் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வியியலாளரும் எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த பேச்சாளருமாகிய பேராசிரியர் கலாநிதி திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ;ணன் அவர்களுடைய பேருரையும் இடம்பெற்றது. 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்' எனும் தலைப்பிலான அவரு…
-
- 7 replies
- 790 views
-
-
மனித உரிமை ஆர்வலர் ருக்கிபெர்ணாண்டோ விசாரிக்கப்பட்டமைக்கு கபே கண்டனம் மனித உரிமை ஆர்வலர் ருக்கிபெர்ணாண்டோ கடந்த வாரம் இலங்கை விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது குறித்து கபே அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகின்றோம் என்ற போர்வையில் மனித உரிமை பணியாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும் கோரியுள்ளது. இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க நியுசிலாந்தில் பயங்கரவாத தடைச்சட்டம் அகற்றப்படும் என தெரிவித்து சில மணிநேரங்களில் இலங்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரசாங்கம் சாவதேச சமூகத்திற்கு இலங்கையில் மனித உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கான தனது நடவடிக்கைகள் குறித்து வாக்குறுதிகளை அளித்து வரு…
-
- 0 replies
- 236 views
-