ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் …
-
- 14 replies
- 7.7k views
-
-
2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது:- UK குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் அநத அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளிலிருந்து வித்தியாசமானது. அதேவேளை இந்த தீர்ப்பு உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான ஒன்றல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனினும் நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு இது என…
-
- 0 replies
- 444 views
-
-
தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 2000 ஆம் ஆண்டு எட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த இடத்தைப் பார்வையிடவுள்ளது. இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று இரண்டாவது தடவையாகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வழக்கில் 17 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபரால் 5 இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் 90 சாட்சிகளும் 47 சாட்சியப் பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 19 ஆம் திகதியன்று இடம்பெயர்ந்த நி…
-
- 0 replies
- 778 views
-
-
இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை? கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக சிறிலங்கா தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக இலங்கை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும…
-
- 5 replies
- 1.1k views
-
-
கிண்ணியா முத்தூர் தரைப்பகுதிகளை இணைக்கும் இலங்கையிலேயே மிக நீளமான பாலத்தினை மகிந்த நாளை திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர், 1500 பொலிசார் பாதுகாப்புக்காகவும் நிகழ்வுக்கு வரும் மக்களை பரிசோதனை செய்வதற்காகவும் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. ஏ 15 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பாலம் 2004 ம் ஆண்டு சீன கட்டுமான நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இந்த பாலம் 1.5 மீற்றர் அகலமான இரு வழிகளை கொண்டது.796 மில்லியன் ரூபா செலவில் இந்த பாலத்தினை அமைப்பதற்கான முழு செலவினையும் சவூதி அரேபியா பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 1 reply
- 496 views
-
-
[size=3][size=4]2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ள விவகாரம் தொடர்பில் தமிழ் அமைப்புக்களும், சுவிஸ் குடிவரவு குடியகழ்வுதிணைக்களமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.[/size][/size] …
-
- 1 reply
- 848 views
-
-
2000 தமிழர்களின் நிலங்களில் ஆக்ரமிப்பு இலங்கை ராணுவத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் கொழும்பு ; "யாழ்பாணத்தில் தமிழர்களின் நிலங்களை ஆக்ரமித்துள்ள ராணுவம்இ அதற்குரிய நிவாரணத்தை ஏன் தராமல் உள்ளது' எனஇ நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில்இ 2009ல்இ ராணுவத்துக்கும்இ விடுதலை புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட சண்டை நடந்தது. இதனால்இ தமிழர்கள் பலர் தங்கள் இருப்பிடங்களை விட்டுஇ மறுவாழ்வு முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். விடுதலை புலிகளுடனான சண்டை முடிந்த பிறகுஇ தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவம் புகுந்தது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் ராணுவத்தினர்இ தமிழர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். ஐ.நா.இ வற்புறுத்தலுக்கிணங்கஇ தமிழர்களின் சிலரது வீடுகளை ராணுவம் காலி செய்து கொடுத்து விட்டத…
-
- 2 replies
- 909 views
-
-
(நா.தனுஜா) வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஆரம்பித்த கவனயீர்ப்புப்போராட்டம் நாளையுடன் 2000 நாட்களை எட்டவுள்ளது. அதனை முன்னிட்டு கிளிநொச்சி…
-
- 0 replies
- 245 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன. கடந்த யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி வடகிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது இரத்த உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியை தொடர்ந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலமையில் இன்று (09) காலை இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இடம் பெற்றதுடன் பிரதான வீதி வழியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு திருக்கோவில் மணிகூண்டு கோபுரத்தினை வந்தடைத்ததுடன்…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை இன்று வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெற்றது. “ வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும் நல்லிணக்கத் திட்டம் ” என்ற தொனிப்பொருளில் இவ்வாறு 2000 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் இதுவரையில் 40 000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம…
-
- 0 replies
- 389 views
-
-
அரசாங்கம் 2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நவின்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எமக்கு பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க 2000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 90 வீதமானோர் சிங்களவர்களும், 10 வீதமானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் அடங்குவர். இதில் அநேகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இரட்டை பிராஜவுரி…
-
- 0 replies
- 566 views
-
-
ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். 01.02.2009ல் நடந்த முதல் கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.09) பாராளுமன்றத்துக்கு முன் பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள். அதன்படி ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று டெல்லி புறப்பட்டு விட்டனர். ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணி…
-
- 1 reply
- 588 views
-
-
2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதுதொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் ‘மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதே…
-
- 0 replies
- 440 views
-
-
2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்! தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவையும் இதுவரை பெறாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே இந்த கொடுப்பனவு வழஙக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்…
-
- 6 replies
- 870 views
- 1 follower
-
-
குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு பிள்ளையுடன் குறித்த பெண், திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர் ஒருவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார். இரண்டாவது திருமணம் ஊடாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்த குறித்த பெண்ணின் அந்தத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் குறித்த கணவர் மீகலாவே பகுதியைச் சேர்ந்த தமது நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். பிள்ளைகளை விட்டு விட்டு குறித்த பெண் அந்த நபருடன் விருப்பத்து…
-
- 11 replies
- 1k views
-
-
2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுக்கின்றனர்…. சுகாதார சேவையில் பெரும் சவாலையை எதிர்கொண்டுள்ளது அரசு … ”நாடு பூராகவும் உள்ள 2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்ற விரும்பாது கொழும்பு, கண்டி, காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்ற விரும்புவதால் இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது”. -இவ்வாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி ஆராய்வததற்காக அங்கு சென்றார்.இந்த விஜயத்தின் இறுதியில் வைத்தியசாலையின் ஊழியர்களின் மத்தியி…
-
- 0 replies
- 434 views
-
-
200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை – UNHCR 03 ஜூலை 2011 வடக்கில் சுமார் 200000 இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பகரமான தரவு மூலங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அதிகாரி எலினா பெர்ட்டெரி தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் இந்த எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் 102000 பேரும், புத்தளத்தில…
-
- 0 replies
- 496 views
-
-
2000 மாம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மைகொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்செய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2000மாம் ஆண்டு மே மாம் 22ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கபண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அப்டீன்போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்குஅளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படுகொல…
-
- 8 replies
- 1.3k views
-
-
2004ஆம் ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்....... 2004 ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள்... இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் தற்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியில் போட்டியிடும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்... சமாதானப் பேச்சுவார்த்தை காலம் முதல் அது முறிந்து யுத்தம் ஆரம்பித்தது, இனப்படு கொலையின் ஊடாக புலிகள் அழிக்கப்படும் வரை இவர்கள், கூட்டமைப்பு + தற்போதையை…
-
- 4 replies
- 402 views
-
-
2005 ஆம் ஆண்டு... சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால், ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் “ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் சொல்லி விட்டனர். 2005 ஆம் …
-
- 0 replies
- 125 views
-
-
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார். இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் க…
-
- 0 replies
- 813 views
-
-
கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னி வான்பரப்பில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று வான்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறீலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த பொழுது கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னியில் தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி வீழ்ந்து நொருங்கியதாக முன்னர் சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. எனினும், 2005ஆம் ஆண்டில் இரணைமடுவை அண்டிய பகுதிகளில் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றை, பிறிதொரு விமானம் ஒன்றின் சகிதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் சுட்டு வீழ்த்தியதாக தற்பொழுது சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் உயரதிகாரி…
-
- 1 reply
- 1.6k views
-
-
'பொதுநலவாய அமைப்பின் ஆரம்ப நாடாக இலங்கை விளங்குகின்றது' என்று பொதுநலவாய அமைப்பின் தலைவி இரண்டாம் எலிசபெத் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்தார். 'தமது மக்களின் நலனுக்காக சேவையாற்றி நீதி, சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதும் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதும் அமைப்பின் உறுப்பினர்களது கடமையும் பொறுப்பும் ஆகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எலிசபெத் மகாராணியால் கடந்த 60 வருட காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை ஞாபகப்படுத்திய இளவரசர் சார்ள்ஸ், மகாராணியின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். சுனாமி அனர்த்தத்தின் பின் 2005ஆம் ஆண்டில் தான் இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இக்கால …
-
- 0 replies
- 426 views
-
-
2005ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா செய்ததனைப் போன்றே தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்வதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்ரீலங்கா மிரருக்கு தெரிவித்துள்ளார். ''மைத்திரி இதுபோன்று கருத்து வெளியிடுவார் என்பதனை நான் எதிர்பார்த்திருந்தேன். இது குறித்து பதற்றம் அடைய வேண்டியத் தேவையில்லை. 2005ஆம் ஆண்டு மகிந்த வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் சந்திரிக்கா இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்டிருந்தார். யார் மீதும் குரோம் கொள்ளக் கூடாது எனக் வந்த மைத்திரியின் குரோதம் எவ்வளவு கடுமையானது என்பதனை மக்கள் நேற்று புரிந்து கொண்டார்கள். கட்சித் தலைவர் என்ற ரீதியில் மைத்திரி பலவீனமடைந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. …
-
- 0 replies
- 254 views
-
-
2005ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை ரத்துசெய்யுமாறு ஐனாதிபதி உத்தரவு. 2005 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் பகுதி ஒன்று பல்தேர்வு வினாத்தாள்களின் முடிவுகளை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கனணி மயப்படுத்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக தமது பரீட்சை முடிவுகள் தொடர்பில் மீள் திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்தே இந்த உத்தரவு ஜனாதியினால் பரீட்சை ஆணையாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கண்டி மற்றும் தங்காலை பகுதி மாணவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் இந்த பிரச்சினை குறித்து விளக்கமளித்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்தார். இதேவேளை இந்தப்பிரச்சினை தீர்க…
-
- 0 replies
- 1.8k views
-