ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் 50000 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்னர் 07 செப்டம்பர் 2013 இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் 50,000 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள், வெளியுறவுச் செயலாளர்கள் மற்றும் ராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. அரச தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள், வெளியுறவுச் செயலாளர்கள் ஆகியோருக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அவர்களது செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…
-
- 0 replies
- 616 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்திய சாலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது வைத்தியசாலை தற்போதைய நிலவரத்தின்படி வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களுக்குரிய மிகக் குறைந்த வளங்களுடன் எமது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மிகுந்த நெருக்கடியை இதனால் சந்தித்து வருகின்றனர். …
-
- 2 replies
- 305 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்பாட்டு அரசியலை ஊக்குவிக்கின்றது – சஜித் 12 செப்டம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் முரண்பாட்டு அரசியலை ஊக்குவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். சூரியவௌ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் பிரிவினைவாத கோட்பாடுகளை கொள்கைகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் வெற்றியீட்டினால் நேரடியாக வடக்கிற்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்வதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தன…
-
- 1 reply
- 387 views
-
-
பசில் எம்.பி. சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரா?: ஜே.வி.பி. கேள்வி சிறிலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரா, அப்படியாயின் எப்பொழுது நீக்கப்பட்டார் என்பது தொடர்பில் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று என ஜே வி பி கேள்வி எழுப்பியுள்ளது. பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே..லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதே ஜே.வி.பி. எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க சபையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெவிக்கையில், சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தொடர்பில் எமது கட்சியின் உறுப்பினர் கே…
-
- 0 replies
- 560 views
-
-
தொண்டமானாறு பாலம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 200 மில்லயின் ரூபா செலவில் தொண்டமானாறு பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர். 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த பாலம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இடம்பெற்று வந்தது. இந்த நில…
-
- 0 replies
- 369 views
-
-
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளை சிறிலங்கா அரசு இன்னும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கையின் பதில் குறித்து அம்பிகா சற்குணநாதன் கடும் விசனம் September 13, 2021 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரிற்கு இலங்கை அரசாங்கம் அளித்துள்ள பதிலளிப்பு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் முற்றிலும் முரணானதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்த வாய்மூலமான அறிக்கையை இன்று ஆரம்பமாகும் ஐ.ந.கூட்டத்தொடரில் வெளியிடவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த 27ஆம் திகதி அ…
-
- 0 replies
- 434 views
-
-
கடலூரில் அரிசிக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக் அரிசி குறித்த தயாரிப்புக் காட்சிகள் பரவி வருகின்றன. இந்தக் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத உணவுப்பொருளான அரிசியில் கலப்படம் என்பதால், கடைகளில் அரிசி வாங்குவதற்கே மக்கள் தயங்குகின்றனர். மேலும் அதே சமூக வலைதளங்களில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. இந்தச் சூழலில் கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லத்தம்பி, நந்தகும…
-
- 0 replies
- 455 views
-
-
Published by T. Saranya on 2021-09-21 16:40:40 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) முகாபே சிம்பாபேவை நாசமாக்கி வீழ்ச்சியின் பாதையில் கொண்டு சென்றதை போன்று கோட்டாபய ராஜபக் ஷவின் அரசாங்கமும் செயற்பட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் 65ஆயிரம் கோடி ரூபாவும், இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் 20ஆயிரத்து 800 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் 50ஆயிரம் கோடி ரூபா அச்சடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சின்பாபேவின் நிலைமையை நினைவு படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் சபையில் குற்றம் சுமத்தினார். அரசாங்கத்தினால் இனியும் ஆட்சியை கொண்டு செல்ல முடியவில்லை என்றால் மக்கள் கருத்தை …
-
- 0 replies
- 223 views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர். இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அ…
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எந்தவொரு பிரஜைக் கும் நாட்டில் எப்பகுதியிலும் வசிப்பதற்கான உரிமை இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த பலர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வசிக்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் சகல பகுதி களிலும் வசிப்பதை நாம் ஒரு போதும் தவறு என்று கூறிய தில்லை. அதேபோன்றுஇ வடக் கில் சிங்களவர்கள் குடியேறுவதை அவர்களால் தடுக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் உறு ப்பினரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். வடமாகாணத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் இணைந்து செயல்படுவதற்கு முன்வர வே…
-
- 2 replies
- 673 views
-
-
தீவிரவாதத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இலைமறை காயாக இன்னும் இருப்பதாக தெரிவித்துள்ள அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச, அதனைச் சரி செய்வதற்கு இன்னும் சில காலங்கள் செல்லலாம் எனக் கூறி உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 845 views
-
-
http://uthayandaily.com/story/7348.html http://uthayandaily.com/story/7348.html
-
- 0 replies
- 337 views
-
-
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை(வியாழக்கிழமை) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1243178
-
- 1 reply
- 272 views
-
-
வவுனியாவில் இன்று மாலையிலிருந்து கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது. கடந்த ஓகஸ்ட்டில் பொழிந்தது போன்ற கடும் மழை இது என வவுனியாவிலிருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வவுனியாவின் முகாம்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. முகாம்களின் கூடாரங்கள் ஏற்கெனவே கடும் சேதத்திற்குள்ளானதால் 1500க்கு மேற்பட்டோர் முகாம்களுக்குள் இருக்க முடியாதவாறு பெரும் அவதியுற்றுள்ளனர். அவதியுறும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். இதன்காரணமாக வலயம் 6இன் இராணுவ அதிகாரிக்கும் மக்களுக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு நள்ளிரவு நேரமாகையால் மேலதிக தகவல்களை ஜீரீஎன்னால் பெற முடியவில்லை. http://www.globaltamilnews.net/tamil_news1.…
-
- 0 replies
- 533 views
-
-
கிளினொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். கிளினொச்சி நகர், பூனகரி, முழங்காவில், மான்குளம், முள்ளீயவளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை தற்காலிக தடுப்பு முகாம்களாக்கி அங்கு வவுனியாவில் இருந்து மீழ் குடியேற்றம் என மக்களை அழைத்து வந்து தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார் அந்த அதிகாரி. இந்த பிரதேசங்களில் பாடசாலை, வைத்திய சாலைகள்,கூட்டுறவு கடைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் பொலிஸ் நிலையங்கள் மட்டும் ஒரு சில இடங்களில் திறக்கபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் இங…
-
- 4 replies
- 1k views
-
-
வடக்கு கிழக்கு விரும்பி இணைவதை அரசு நிறைவேற்ற வேண்டும்: விக்கினேஸ்வரன் 16 அக்டோபர் 2013 "அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதில்லை முரண்டுபிடிக்கப் போவதும் இல்லை" வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அதற்கு அரசாங்கம் அதை கட்டாயமாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இதை பிரிவினைவாதம் தூண்டுவதாகவோ போராட்டம் செய்வதாகவோ நினைத்து வட கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களை துன்பத்தில் விழுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவச…
-
- 7 replies
- 661 views
-
-
புதிய அரசியலமைப்பு சந்தேகமே? (ஆர்.யசி) புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை. இந்த ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது என தேசிய சமாதான பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். நல்லிணக்கத்தை உருவாக்கும் பயணத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை. மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகளை பரப்பும் சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலான நகர்வுகள் குறித்து வினவியபோதே அவர் …
-
- 0 replies
- 232 views
-
-
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அழகு தமிழில் அவர் வாதங்களை சரவெடிபோல எடுத்துவைக்கும் விதமே அலாதியானது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐவர் குழு இலங்கை போய் வந்தது அவரை மிகவும் கொதிப்பேற்றியுள்ளது அவரது அனல் வார்த்தைகளில் புரிந்தது! kumudam04112009001 நாடாளுமன்றக் குழு இலங…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசாங்கத்துடன் முரண்பட்டு கொண்டு வடக்கு மாகாணசபையை கொண்டு செல்லமுடியாது - டக்ளஸ் 21 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டிவிடுகிறது. இதன்காரணமாகவே அந்தக்கூட்டமைப்பால் அதிக ஆசனங்களை பெறமுடிந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என குறிப்பிட்ட அவர் வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிறந்த அரசியல்வாதியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போதே அதனை பற்றிக்கூறுவது பொருந்தாது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் …
-
- 1 reply
- 546 views
-
-
சுவிஸ் வங்கியில் இலங்யைர்களின் 307 மில்லியன் பிராங் வைப்பில் இலங்கையர்களால் கடந்த ஆண்டில் சுவிஸ் வங்கியில் 307 மில்லியன் சுவிஸ் பிராங்க் சேமிக் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின் றது. சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. உலகெங்கிலுள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தின் தொகையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் 1.41 ட்ரில்லியன் சுவிஸ் பிராங்கில் இலிருந்து 1.42 ட்ரில்லி யன் வரை அதிகரித்துள்ளத…
-
- 0 replies
- 346 views
-
-
-
ஆவா குழுவினர் இருவர் கைது - பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த மாதங்களில், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொண்…
-
- 1 reply
- 399 views
-
-
புதிய 1000 ரூபா நாணயத்தாள் நேற்று முதல் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழிபிறந்துள்ளதை நினைவுகூரும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் புதிய நாணயத்தாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புழக்கத்திற்கு விடப்பட்டது. …
-
- 4 replies
- 853 views
-
-
எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம். ஆனால் இப்போது நிலமை எல்லை மீற…
-
- 6 replies
- 885 views
-