ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
21 அகதிகள் நாடு வந்தடைந்தனர் -கனகராசா சரவண இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 21 பேர் யு. என். எச். சி. ஆர் அமைப்பினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணிக்கு, விமான மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்துவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/186672/-அகத-கள-ந-ட-வந-தட-ந-தனர-#sthash.ghxVxn0c.dpuf
-
- 2 replies
- 394 views
-
-
அனுமதிப்பத்திரமின்றிய சிறிய லொறியொன்றில் கொண்டுசெல்லப்பட்ட 21 ஆடுகளை அலவத்துகொடை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை அக்குறணை, பங்கொல்லாமட பிரதேசத்திலிருந்து கம்பளை பிரதேசத்திற்கு லொறியொன்றில் இந்த ஆடுகளை கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, அக்குறணை நகரில் இந்த ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர். ஆடுகளை கொண்டு செல்லுவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/72285-21-.html
-
- 0 replies
- 617 views
-
-
21 ஆண்டுகளின் பின்னர் கிருஷாந்தியின் நினைவேந்தல் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமியின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் செம்மணியில் நாளைமறு தினம் இடம்பெறவுள்ளது. மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் காலை 8 மணிக்கு இந்த நினை வேந்தல் நடைபெறவுள்ளது. 1996 ஆம் ஆண்டு இதே மாதம் 7 ஆம் திகதி, ஜி.சி.ஈ. உயர் தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்த மாணவி கிருஷாந்தி குமாரசாமி நாவற்குழியில் சிப்பாய்களால் மறிக்கப்பட்ட பின்னர் காணாமற்போனோர். அவரைத் தேடிச் சென்ற அவரது தாய் குமாரசாமி இராசம்மாள், சகோதரன் -பிரணவன் குமாரசாமி மற்றும் அயல் வீட்ட…
-
- 3 replies
- 548 views
-
-
21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் இன்று! நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு, தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. பெரும்பாலும் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படலாம் எனவும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239650
-
- 2 replies
- 254 views
-
-
(ஆர்.யசி ) 21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களில் எட்டுப்பேர் தம்மை தற்கொலை தரிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர் எனவும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார். வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதன…
-
- 2 replies
- 870 views
-
-
21 ஆம் திகதி மீண்டும் மாற்று வழியை வலியுறுத்தவுள்ள செயிட் அல் ஹுசைன் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை குறித்த விவாதத்தின்போது உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக் களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் மாற்று வழிகளை ஆராயுமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்க லாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணை இதுவரை முழுமையாக அமுல்படுத்தப்படாமையின் காரணமாக இந்த மாற்றுவழி குறித்து ஆராயுமாறு சர்வதேச நாடுகளிடம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் கோரிக்கை …
-
- 0 replies
- 215 views
-
-
21 ஆம் திகதிமுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை! மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டி, மாத்தறை, பெலியத்த, காலி, மற்றும் சிலாபம் ஆகிய பகுதி களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1245357
-
- 0 replies
- 199 views
-
-
21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. …
-
- 0 replies
- 318 views
-
-
21 ஆவது திருத்த வரைவு இன்று இறுதியாகிறது : நாளை அமைச்சரவையில் : இரட்டைக்குடியுரிமை நீக்கத்தில் மாற்றமில்லை - நீதி அமைச்சர் விஜயதாச (ஆர்.ராம்) நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வீரகேசரிக்குத் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறு செய்யப்படும் வரைவானது நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் ஏற்பாடு உள்வாங்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 477 views
-
-
21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு? அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாடு உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும், ஏற்பாட்டை பஸில் ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான…
-
- 0 replies
- 218 views
-
-
21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் - சம்பிக்க (இராஜதுரை ஹஷான்) காலிமுகத்திடல் சம்பவத்தை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் குடும்பம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையே ஏற்படும். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 43 ஆவது படையணியின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகை…
-
- 1 reply
- 365 views
-
-
21 ஆவது திருத்தத்தை... சீர்குலைக்கும் நடவடிக்கையில், பசில் தரப்பு! 21 ஆவது திருத்தத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நாடாளுமன்றில் வலியுறுத்த பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர். பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ள அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். 21ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இதுவரை ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிந்தக மாயதுன்ன, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் பேசியுள்ளனர். அத்தோடு பொருளாதார குறைகளை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம…
-
- 0 replies
- 327 views
-
-
21 இந்திய மீனவர்களுக்கும் மன்னார் நீதிமன்றில் விடுதலை.! இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் இந்திய நாட்டுப்படகுகளில் அத்துமீறி நுழைந்து இங்கு மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டிருந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் விளக்க மறியலிலும் வைக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட 21 இந்திய மீனவர்களுக்கும் மன்னார் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. கடந்த 26.04.2016 இரவு மூன்று இந்திய நாட்டுப் படகுகளில் (வத்தைகளில்) ஒரு சிறுவன் உட்பட 21 இந்திய மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபொழுது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட கடற்தொழி…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 26 மீனவர்களில் 04 பேர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 08 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர் 2022 ஆம் ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்தமைக்க…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
கைதுசெய்யப்பட்டவர்களில் ஏழு ஆண்களும், ஆறு பெண்களும், எட்டு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://tamilworldtoday.com/?p=12263
-
- 0 replies
- 474 views
-
-
15 Dec, 2025 | 03:52 PM 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 489,948 ஆகும். மேலும், ஜெர்மனியிலிருந்து 137,012 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 166,626 சுற்றுலாப் பய…
-
- 0 replies
- 85 views
-
-
21 இலட்சம் ரூபா கொள்ளை ; இருவர் கைது - மொரட்டுவ பகுதியில் சம்பவம் By VISHNU 23 OCT, 2022 | 03:54 PM (எம்.வை.எம்.சியாம்) மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரியும் ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்து 21 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 4 ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரட்டுவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஊழியர் ஒருவர் வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான சுமார் 21 இலட்சம் ரூபாய் பணத்தினை வங்கியில் வை…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
21 எம்.பிக்களின் முடிவு - மைத்திரி அதிர்ச்சி! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தம்மால் எதிரணியில் அமரமுடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் தனியாக பேசுவதற்காக கூட்டம் முடிவடைந்த பின்னரும் காத்திருந்தனர். எதிரணியில் அமர்வதால் எந்த அரசியல் எதிர்காலமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை என சிறிசேனவிடம் தெரிவித்த அவர்கள் எதிரணியில் அமர்வதன் மூலம் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்களையே பிரதிபலிக்க முடியும்…
-
- 0 replies
- 385 views
-
-
21 குறித்து... அரசாங்கத்தின் நிலைப்பாடு – பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... ஜனாதிபதியுடன் சந்திப்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேநேரம், 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் இன்று வினவுவதற்கு அரசாங்கக் குழுவொன்று தயாராகி வ…
-
- 0 replies
- 228 views
-
-
21 பிள்ளைகளை பெற்ற தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விருது வழங்கிக் கௌரவித்து உள்ளார். பலாங்கொடயைச் சேர்ந்த எச். எம். பொடி நோனா என்பவருக்கே அபிமன் மாதா என்கிற ஜனாதிபதி விருது கிடைக்கப் பெற்று உள்ளது. இவ்விருது வழங்கல் வைபவத்தில் அமச்சர்களான ஜோன் செனவிரட்ண மற்றும் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவா மாகாண ஆளுனர் லொக்கு பண்டார ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். http://www.lankasri.com/ta/link-3Oc3Y2SaeEe608SdW3v4.html
-
- 7 replies
- 1.3k views
-
-
21 பீரங்கி வேட்டு மரியாதைகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் மைத்திரி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுகளும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதுமாத்திரமின்றி உத்தியோகபூர்வ சபை அமர்வை ஆரம்பித்து விட்டு ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையையும் ஆற்றினார். அரசியலமைப்பின் 70 ஆவது ஷரத்துக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவ…
-
- 0 replies
- 281 views
-
-
பொகவந்தலாவ கொக்கஸ்வோல்ட் மேற்பிரிவு மற்றும் கெம்பியன் தோட்ட பகுதியில் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த எட்டுப் பெண் தொழிலாளர்களும் 13 பெண் தொழிலாளர்களும் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலை 10.00 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட 21 பேரில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, ஏனையவர்கள் தொடர்ந்தும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/112102
-
- 0 replies
- 405 views
-
-
21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை... வெறும் 226 பேர், அழித்துவிட்டனர் – குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது : சங்கக்கார சாடல் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களுக்கு உடனடி தீர்வுகள் அவசியம் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இடம்பெற்ற நேர்காணலில் பேசிய சங்கக்கார, 21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் மட்டுமே அழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். நாம் அனைவரும் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வைத்துள்ளதாகவும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதைவிட மோசமாக அவர்கள் தங்கள் சொந்த மக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு…
-
- 2 replies
- 444 views
-
-
13/06/2009, 15:15 மணி தமிழீழம் ] 21 வன்னித் தமிழர்கள் பூசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், புல் மோட்டையிலிருந்து 3 பேரைக் காணவில்லை முல்லைத்தீவிலிருந்து 2 மாதங்களுக்கு முன்பு புல்மோட்டைக்கு படகில் வந்த 8 பெண்கள் உட்பட்ட 21 தமிழ் பொது மக்கள் தற்போது பூசா தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பு அவர்கள் புல்மோட்டை, பதவியா மற்றும் கெப்பிற்றிகொல்லவா காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள், என காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. இதேசமயம், முள்ளிவாய்க்காலில் இருந்து புல்மோட்டைக்கு படகில் வந்து அங்கே வைத்தியசாலையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து காணவில்லை என்று தெரியவருகிறது. காணாமல் போனவர்கள…
-
- 0 replies
- 379 views
-
-
அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக அவரது தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் பொலிசார் தெரிவித்தனர். மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதனை உயிரிழந்தவரின் தாயார் கேள்விப்பட்டுள்ளார் சம்பவ தினமான கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்க…
-
- 0 replies
- 391 views
-