ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என ‘நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு’என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்பில் ‘இறுதி எச்சரிக்கை’என்ற தலைப்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழகம் என்பது வெறும் கல்வி கற்கும் இடமல்ல. அது யாழ் சமூகம். அதில் உள்ள சிலர் அழிவடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாத நாசகார புலிகள் அமைப்பை பாதுகாத்து நாட்டையும் தமிழ் மக்களையும் அழிவடைய செய்து வருகின்றார்கள். இது தொடர்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் விபரம்…
-
- 5 replies
- 2.3k views
-
-
மகிந்த ராஜபக்ஸவின் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயார் - சீசல்ஸ்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயார் என சீசல்ஸ் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களது நாட்டின் நிதிச்சேவை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களால் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையுடன் சிற…
-
- 2 replies
- 2.3k views
-
-
முள்ளிக்குளம் சமரில் புலிகளின் தாக்குதலில் 820 ஆட்டிலெறி எறிகணைகள் அழிப்பு: கொழும்பு ஆங்கில ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான முள்ளிக்குளம் சமரில் சிறிலங்கா இராணுவத்தின் 820 (130 மி.மீ.) ஆட்டிலெறி எறிகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: வன்னியில் கடந்த ஜூன் 2 ஆம் நாள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இராணுவத்தின் 130 மி.மீ. ஆட்டிலெறி சேமிப்புக் களஞ்சியம் தாக்குதலுக்குள்ளானது. விடுதலைப் புலிகள் 130 மி.மீ. ஆட்டிலெறி எறிகணைகள் கொண்டு நடத்திய இத்தாக்குதலில் பம்பைமடு அருகே அமைக்கப்பட்டு இருந்த ஆட்டிலெறித் தளம் அழிக்கப்பட்டது. அத்தளத்தில் 820 எறிகணைகள் அழ…
-
- 1 reply
- 2.3k views
-
-
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய வேம்படி மாணவிகள் 232 பேரும் சித்தி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்இஏப்.18 கடந்த வருடம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சையில் சித்தியடைந்த யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று முற் பகல் 10 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரியின் அபிவிருத்திச் சங் கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்தப் பரீட்சைக்குத் தோற்றிய 232 மாணவிகளும் சித்தி அடைந் துள்ளனர். அவர்கள் அனைவரும் உயர்தர வகுப்பில் கல்வியைக் தொடரக் கூடிய தகுதியைப் பெற் றுள்ளனர். கணிதப்பாடத்தில் 154 மாண விகள் "ஏ' விசேட சித்தி பெற்றுள் ளனர். விஞ்ஞான பாடத்தில் 228 மாணவிகள் சித்திபெற்றுள்ளனர். அ…
-
- 17 replies
- 2.3k views
-
-
ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ் [Thursday 2014-07-31 18:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்காமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் ஒரு காரணம் என்று இன்சைட் கேம்ஸ் என்ற ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலருக்கும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டமைப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த இருகடிதங்களின் சாரத்தினை கோடிட்டுக் காட்டியே இச்செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. மக்களாட்சி, சுதந்திரம், சமாதானம், சட்டமுறையிலான ஆட்சி, அனைவர்க்கும் சமவாய்ப…
-
- 43 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கார், பிக்கப் வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே மேற்படி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சாஜன் ஒருவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மேலும் இருவர் தற்சமயம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.saritham.com/?p=44201
-
- 0 replies
- 2.3k views
-
-
கேந்திர முக்கியத்துவம் பெற்று வரும் பரந்தன். - வன்னியன், ஞாயிறு, 23 நவம்பர் 2008, 06:21 மணி தமிழீழம் [] படைத்தரப்பின் மிகப்பெரும் இலக்காகக் கொள்ளப்பட்டிருந்த பூநகரி படைகளிடம் வீழ்ச்சி கண்டதோடு யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்பு தென்பகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இவ்வெற்றியினை அடுத்து சிங்கள தேசத்தில் மிகப்பெருமெடுப்பிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடந்தேறிவிட்ட நிலையில் வட போர்முனையில் பூநகரியிலிருந்து பரந்தன் நோக்கி படைகள் நகர்ந்த போது உக்கிரச் சமர் வெடித்தது. இச்சமரினால்; ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் செய்தித் தணிக்கைகளின் மூலம் மறைக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் தென்னிலங்கையில் மெல்ல மெல்ல உணரப்படத் தொடங்கி விட்டது. பொதுவாக மனித சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற…
-
- 11 replies
- 2.3k views
-
-
இங்கையின் வான் பாதுகாப்பு மற்றும் விமானத் தளங்களின் பாதுகாப்புக் குறித்து சந்தேகம் தோன்றியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சிறிய ரக விமானமொன்றை வைத்துக்கொண்டு இதுவரை 7 தடவைகள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார். ஆனால், அரசாங்கத்திடம் கிபீர், மிக் உள்ளிட்ட நவீனரக விமானங்கள் இருக்கின்போதும் விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களை அழிக்கமுடியாதிருப்பதாகவும், ஒவ்வொரு முறை விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தும்போதும் அவற்றை அழித்துவிட்டதாக பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுவதில் உண்மை இல்…
-
- 6 replies
- 2.3k views
-
-
Posted on : Sun Jul 8 7:45:31 EEST 2007 அரசு, புலிகளின் இப்போதைய போக்குத் தொடரின் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேமாட்டாது கண்காணிப்பு குழு எச்சரிக்கிறது இப்படி அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் இப் போதைய போக்கும் அணுகு முறையும் தொடருமானால் இலங் கையில் போருக்கு முடிவே வரமாட்டாது. அதனைப் என்றைக் கும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. இவ்வாறு எச்சரித்துள்ளது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு. எமக்கு மீண்டும் மீண்டும் அளிக்கப்படும் வாக்குறுதிகளுக்கு மாறாக இரண்டு தரப்புகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறிவரு கின்றன ஆகையால் இலங்கையில் 30 வருடங்களாக நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தி யம் அருகிவருகிறது இரண்டு தரப்புகளுக்கும் இட…
-
- 10 replies
- 2.3k views
-
-
புலிகளின் பகுதியை நோக்கி மட்டக்களப்பில் பாரிய படை நகர்வு [10 - March - 2007] * உக்கிரமான தாக்குதலால் ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்வு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேநேரம், இடம்பெற்ற உக்கிரமான தாக்குதலில் பொதுமகனொருவர் கொல்லப்பட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளனர். …
-
- 5 replies
- 2.3k views
-
-
வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா... தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி க…
-
- 0 replies
- 2.3k views
-
-
விற்பனைக்கு வந்த இருக்கிறம் சஞ்சிகையின் பிரதிகள் உடன் மீளப் பெறப்பட்டன! ஏன் என்று தெரியாமல் வாசகர்கள் ஏமாற்றம்!! Posted by admin2 On May 3rd, 2011 at 5:16 pm / மாற்றுக் கருத்துக்கள் அடங்கிய சஞ்சிகை என கருதப்படுகின்ற “இருக்கிறம் – ஒரு பொல்லாப்புமில்லை” என்ற சஞ்சிகை திங்களன்று வழமைபோல விற்பனைக்காக வெளியிடப்பட்டதன் பின்னர் சில மணித்தியாலங்களிலேயே விற்பனை நிலையங்களில் இருந்து அதன் அனைத்துப் பிரதிகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இது நடைபெற்றுள்ளது. இந்த சஞ்சிகையை வாங்குவதற்காகச் சென்ற வாசகர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்ட இதன் பிரதிகளை விநியோகஸ்தர்களே விற்பனை ஏஜென்டுகளிடமிருந்து மீளப் பெற்றுச் சென்றதாக பத்திரிகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 3 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் பொது மக்களை திருக்கை வால் கொண்டு தாக்கி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் உட்பட ஆட்டோச்சாரதிகள் மற்றும் வழிப்போக்கர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் தமது பாதுகாப்புக் காரணங்களுக்காக நகரப் பகுதியில் வாகணங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்தியுள்ளார்கள் அதனைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதியோரங்களில் வாகணங்கள் உந்துருளிகள் ஈருருளிகள் போன்றவற்றை நிரிபவர்கள் தரித்து நிற்பவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக திருக்கை வால் கொண்டு தாக்குவதுடன் வர்தகர்களையும் தாக்கியும் மற்றும் கடுமையாக எச்சரித்தும் வருகின்றார்கள். உந்துருளிளியல் இராணுவத…
-
- 1 reply
- 2.3k views
-
-
13 ஆவது திருத்தத்தை, ரத்துச்செய்ய முயன்றால் இந்தியப்படை பிரவேசிக்கும்; விக்கிரமபாகு. அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மக்களின் காணிகளை அபிவிருத்தி ௭ன்ற பெயரால் அரசாங்கம் கொள்ளையடிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொது ௭திர்க்கட்சி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில்…
-
- 7 replies
- 2.3k views
-
-
Posted on : 2007-07-21 அம்பலமாகிறது அணுகுமுறை தொப்பிகலவைக் கைப்பற்றி, கிழக்கை முழுதாக மீட்டுவிட்டோம் என்ற வீரச் செருக்கோடு நேற்று முன் தினம் நாட்டு மக்களின் முன் மார்தட்டிப் பேசினார் இலங் கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினை விடயத் தில் தமது அரசு என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள் ளது என்பதைத் துலாம்பரமாக அவர் வெளிப்படுத்தி யிருக்கின்றார். அவரது வார்த்தைகளுக்கு இடையில் வாசகங் களுக்கு மத்தியில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அவரது கருத்தியல் நிலைப்பாட் டையும் சிந்தனைப் போக்கையும் துல்லியமாக உணர்ந்து அறிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண…
-
- 2 replies
- 2.3k views
-
-
படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம் [18 - June - 2007] * அநுராதபுரத்தில் ரணில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசின் செயற்பாடுகளே படையினரின் மனோதிடத்தை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளதாகவும் வேறு எவரையும் இது தொடர்பில் குற்றம்சாட்ட முடியாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நுவரவெல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்விப் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பிரமுகர்கள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இன்ற…
-
- 5 replies
- 2.3k views
-
-
தமிழக கல்லூரி மாணவர்களிடையே பிரபாகரன் ஒரு மாவீரனே: குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 08:36 பி.ப ஈழம்] [ப.தயாளினி] தமிழக கல்லூரி மாணவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகின்றார் என்பது உண்மை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குமுதம் குழுமத்தின் வெளியிடான குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த கருத்துக்கணிப்பு விவரம்: 1. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது சரியா? தவறா? சரி - 53.1% (1000 பேர்) தவறு - 46.9% (833 பேர்) 2. ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? மன்னிக்கலாம் - 35.46%…
-
- 15 replies
- 2.3k views
-
-
பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ். யுவதி! Top News [Monday, 2011-07-04 05:19:36] வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்வரை பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது அம்பலமாகியுள்ளது. ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார். இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் ப…
-
- 13 replies
- 2.3k views
-
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை! adminMay 12, 2024 பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.05.24) காலை சிவசேனையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களுடன் சிவசேனை அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2024/202755/
-
-
- 33 replies
- 2.3k views
-
-
புதிய மகசின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜையான, புலோலி பருத்தித்துறை யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற குடும்பஸ்தர் இன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளானதான அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள இவர் கடந்த 03.04.2007 இல் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். மேற்படி கைதி நாள்தோறும் சிறைச்சாலையில் உள்ள கோவிலுக்கு வழிபடுவதற்காக செல்வது வழக்கம். வழமைபோல் இன்றும் அவர் கோவிலுக்கு சென்…
-
- 0 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 13:26 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உள்விவகாரங்களுக்குத் தீர்வு காண வெளிநாடுகள் தலையிட முடியாது என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சகாத் ஏ சௌத்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: உள்நாட்டு பிரச்சினையை சிறிலங்காவே தீர்ப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் என்றாலும் அவர்களின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது. தற்போது சிறிலங்காவுக்கு உலகில் முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை போன்ற தோற்றப்பாட்டையே நாம் அவதானித்துள்ளோம். நடைபெற்று …
-
- 13 replies
- 2.3k views
-
-
பிரபாகரன் பட முன்னோட்டம்....
-
- 3 replies
- 2.3k views
-
-
""தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல், இராணுவ சூழ்நிலைகளை வைத்தே, நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்'' என அண்மைய நேர்காணலொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலர் பா.நடேசன் தெரிவித்திருந்தார். இதில் குறிப்பிடப்பட்ட விடயம், வன்னி மேற்கு மீதான இராணுவ நடவடிக்கைக்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள், ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே, அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்கிற அரசின் பிரகடனத்திற்குப் பதில் அறிக்கையாகவும் இதனைக் கொள்ளலாம்.அதேவேளை புலிகளுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும் அரச தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. வடக்கிற்கு வசந்தத்தை அழைத்து வர, புலி அழிப்புப் பாதையில் ப…
-
- 1 reply
- 2.3k views
-
-
படைதரப்பின் தாக்குதல் முனைப்புகளை நெருக்கமாக கண்காணித்து வந்த புலிகள் மாற்ரு தந்திரோபாயங்களுக்கூடன் படயினருக்கு பொறிவைத்து காத்திருந்த விடையம் அவர்களுக்கு தெரியவில்லை............. பெரும்பாலும் வெட்ட வெளியாக இருந்த பகுதியில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடித்த செல்களிலிருந்து பாத்காப்பு தேட புலிகளின் அகழிகள்,பதுங்கு குழிகளை நோக்கி ஓடினர் படையினர் அங்கேதான் பேரளிவு காத்திருந்தது..................................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_616.html
-
- 0 replies
- 2.3k views
-
-
இது குளோபல் தமிழ் நியூசில வந்த படம். இதப்பாக்கைக கல்யாணவீட்டி குறுப்படம் எடுத்தமாதிரியல்லோ கிடக்குது. இது ஆற்ற கல்யாணமோ தெரியல்ல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55355/language/ta-IN/article.aspx#comments
-
- 17 replies
- 2.3k views
-