ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
இலங்கை இராணுவ விவகாரத்திற்குள் சர்வதேசத்தின் திடீர் தலையீடு காரணமாக புதிய நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் ஏற்படுமா என்னும் கேள்வி அரசியல் வட்டாரங்களில் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாதுகாப்பு படைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவீனங்களை குறைப்பதற்கான கட்டாயத்தை ஜெனீவா முதலில் இருந்தே வலியுறுத்தியுள்ளது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் குறிப்பிட்டுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்களை குறைப்பதன் பின்புலத்தில் சர்வதேசங்களின் அழுத்தங்கள் உள்ளன. இலங்கையின் பாதுகாப்பு செலவீன குறைப்பையும், மறுசீரமைப்புக்களையும் அவர்கள் வேண்டி நிற்கின்றார்கள். இ…
-
- 1 reply
- 414 views
-
-
இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#
-
-
- 23 replies
- 1.2k views
- 1 follower
-
-
வாசுகி சிவகுமார்- மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவலுகள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது. 26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திக…
-
-
- 6 replies
- 695 views
-
-
20 NOV, 2024 | 07:16 PM தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட…
-
-
- 7 replies
- 624 views
- 1 follower
-
-
22 NOV, 2024 | 04:24 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் மற்றும் 12 இலட்ச ரூபாய் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்ப…
-
-
- 2 replies
- 544 views
- 1 follower
-
-
“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்! கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை தயாரிக்கும் முறைகளும் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், …
-
- 0 replies
- 360 views
-
-
22 NOV, 2024 | 04:16 PM வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெணிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தது…
-
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது. பெற்றோர்களே அவதானம்.. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும். இவ்வ…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
22 NOV, 2024 | 11:01 AM இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிகழ்ந்த ஊழல்கள் குறித்த விபரங்கள் வேறு நியாயாதிக்கங்களில் அம்பலமாவதை பார்த்திருக்கின்றோம் என கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்று பணிப்பாளர் நிசான் டி மெல் தெரிவித்துள்ளார். சிலவருடங்களிற்கு முன்னர் பிரிட்டனில் இடம்பெற்ற விசாரணையின்போது எயர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கான எயர்பஸ் கொள்வனவில் மோசடிகள் ஊழல்கள் …
-
- 1 reply
- 197 views
- 1 follower
-
-
தாய்லாந்தினால் இலங்கைக்கு இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை சக்சுரின் நோய்வாய்ப்பட்டுள்ளதாலும் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாலும் அதனை மீள தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கு தாய்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையுடனான தொடர் சந்திப்புகளின் பின்னரும் மிருகவைத்தியர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்தும் சக்சுரினை எப்போது தாய்லாந்திற்கு மீள கொண்டுவருவது என தீர்மானித்துள்ளதாக தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சக்சுரின் தாய்லாந்திற்கு மீள வரக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக மிருகவைத்தியர்கள் குழுவொன்று இலங்கை சென்…
-
-
- 30 replies
- 2.9k views
- 1 follower
-
-
22 NOV, 2024 | 08:10 AM வடக்கு மற்றும் கிழக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு ஆளுனர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் சீன அரசின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைகளையும் வழங்கியுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இவ்வாண்டில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் வீடமைப்பு, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரிசி ஆகியவ…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (21) பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுக்களுக்கான பதவி நிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், பாராளுமன்றக்குழுவின் செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஊடகப்பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன் தெரிவாகியுள்ளதோடு, கொரடாவாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர்.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்…
-
- 0 replies
- 535 views
- 1 follower
-
-
திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல்; அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என்கிறார் சகாதேவன் திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனைஅபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்திபொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. …
-
- 2 replies
- 462 views
-
-
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால மற்றும் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்கு மூலங்களைப் பெறுவது அவசியம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜர…
-
- 4 replies
- 308 views
- 1 follower
-
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்…
-
-
- 18 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும் - முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்!
-
- 0 replies
- 431 views
-
-
21 NOV, 2024 | 05:45 PM மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் இரண்டு மீனவர்களும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரு மீனவர்களே படுகாயமடைந்துள்ளனர். இந்த மீனவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேசத்தில் மீன்பி…
-
-
- 1 reply
- 817 views
- 1 follower
-
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல Sri Lanka.4 hours ago தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல. “இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும். ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டம…
-
-
- 9 replies
- 678 views
-
-
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை இன்று புதன்கிழமை (20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த நபர்கள், பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள், 1 1/4 பவுண் தங்க சங்கிலி மற்றும் 29,000 ரூபா இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் . இது பற்றி தெரியவருவதாவது கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோ…
-
-
- 18 replies
- 901 views
- 1 follower
-
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது. தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதீயில் போட்ட…
-
-
- 26 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு! பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala) நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409273
-
-
- 2 replies
- 646 views
-
-
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/199138
-
-
- 5 replies
- 290 views
- 1 follower
-
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (15) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதோடு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். …
-
- 4 replies
- 390 views
- 1 follower
-
-
21 NOV, 2024 | 10:25 AM புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு வைபவரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல சபாநாயகராக வாக்கெடுப்பின்றி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, புதிய சபாந…
-
- 3 replies
- 174 views
- 1 follower
-