ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142791 topics in this forum
-
ஊழல் மோசடிக்காரர்கள் பட்டியலில் பிரதமர் ரணிலின் பெயர்.! நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு விலைமனுக்கோரலினூடாக அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம், குறித்த விலைமனுகோரல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலாளர் சுரேன் பட்டகொட ஆகியோர்களுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது. அம்முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க செய்திருந்தார். http://www.virakesari.lk/article/17892
-
- 0 replies
- 244 views
-
-
"அஸ்ட்ராஜெனெகா" தடுப்பூசிகளை... வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம் இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக் காரணமாக சீரம் நிறுவனத்தால் கோஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்க…
-
- 0 replies
- 336 views
-
-
ஐ.நா. பணியாளர்களை கைது செய்தமையை பிரான்ஸ் கண்டித்துள்ளது திகதி: 23.06.2009 // தமிழீழம் சிறிலங்காவில், ஐ.நா.வுக்கு பணிபுரிந்து வந்த 2 பணியாளர்களை அரசு கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை, ஐ.நா.பாதுகாப்பு குழுவின் நிரந்தர அங்கத்துவர்களில் ஒன்றான, பிரான்ஸ் நேற்று திங்கட்கிழமை கண்டித்துள்ளது. "ஐ.நா. அறிவித்த, அதன் பணியாளர்கள் 2 பேர் சிறிலங்கா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமையை, நாங்கள் கண்டிக்கிறோம்", என்று பிரான்சின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. "கைதுகள் தொடர்பான சகல தேவையான தகவல்களையும் பெறுதலுக்கான ஐ.நா.வினது கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம்", என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அக…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை: ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி,…
-
- 0 replies
- 2.5k views
-
-
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கும் முயற்சியில் முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் அவருக்கு துணையாக உதயன் பத்திரிகை நிர்வாகம் களத்தில் இறங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் தர்சானந் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது. இந்த முயற்சியின் தொடராக, உதயன் ஆசிரியர் பீ…
-
- 12 replies
- 810 views
-
-
ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மே தினத்தன்று முற்றுகையிடப்படும் : கூட்டு எதிரணி அறிவிப்பு (க.கமலநாதன்) மே மாதம் முதலாம் திகதி கூட்டு எதிரணியின் தொழிலாளர் தின நிகழ்விற்காக ஒன்றுகூடும் பெருந்தொகையிலான மக்களின் உதவியுடன் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களை முற்றுகையிடப் போவதாக கூட்டு எதிரணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எமது மேதின கூட்டத்திற்கு மக்கள் குறைவாகவே வருவார்கள் என்ற எண்ணத்தில் அதனை பார்த்து சிரிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். எனவே அவர்களை அழவைக்கும் அளவிற்கு பாரிய ஆதரவாளர்கள் தொகையினை ஒன்றுதிரட்டி வரலாறு காணாத மே தினக் க…
-
- 0 replies
- 274 views
-
-
ஒபாமா அரச தலைவராகியதனைப் போன்று இலங்கையில் தமிழர் ஒருவர் அரச தலைவராக முடியுமா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
அவசர அறிவித்தல் – பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தகர்கள் சங்கம் பாரிஸ், லாச்சப்பல் கடைத் தெருவில் உள்ள கடை ஒன்றில் ஆயுத முனையில் கப்பம் பெறப்பட்ட விடயம் தொடர்பாக, லாச்சப்பல் வர்த்தகர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கான அவசர பொதுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (20.07.2009) மாலை 3 மணிக்கு பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வர்த்தகர்கள் அனைவரையும் கலந்து கொண்டு நல்ல தீர்வொன்றை காண்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: 06 63 07 22 43 http://www.meenagam.org/?p=6059
-
- 0 replies
- 1.4k views
-
-
முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் சைவ கோவல்களை உடைத்து கொள்ளையிட்டு வரும் அதேவேளை தென்னிலங்கையில் பள்ளிவாசல்களை புத்த பிக்குகளும் சிங்களவர்களும் உடைத்து வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக கொழும்பு கிறாண்பாஸ் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களில் எழுப்படும் சத்தத்தால் ஆத்திரம் அடைந்த சிங்கள மக்கள் புத்த பிக்குகளிடம் முறையிட்டதை அடுத்தே புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை உடைத்து வருகின்றனர் என சிங்கள தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பள்ளிவாசல் உடைப்பு மகிந்த மற்றும் கோத்தாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டு வருகிறது. - http://www.thinakkathir.com/?p=51705#sthash.bn777zsB.dpuf
-
- 3 replies
- 632 views
-
-
‘குற்றம் சாட்டுகிறேன்’ - இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் வைகோவின் ஆவணம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் – வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது. • ஜன் 4, 2005 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த வைகோ, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையே இராணுவ ஒப்பந்தம் ஒன்று உருவாக நடக்கும் முயற்சிகளைக் கூறி, அப்படி ஒரு ஒப்பந்தம் வருமானால் அது பெரும் கேடு என்று கூறினார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கோண்டாவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்த ஆட்டோவும், யாழ்ப்பாணத்தில் இருந்து சுன்னாகம் நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்த சிறியரக வடி வாகனமும் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மோத்திக் கொண்டுள்ளன. இச் சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்தவரும், ஆட்டோ சாரதியும் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டள்ளனர். அங்கு நின்ற பொது மக்களால் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட…
-
- 1 reply
- 439 views
-
-
யாழ். இந்தியத் துணைத்தூதருக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு (சி.எல்.சிசில்) யாழில் இந்தியத்துணைத் தூதராக தற்போது பணியில் இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் தென்னமெரிக்காவின் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் சூரினாம் நாட்டுக்கு இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டமைக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த மூன்று ஆண்டுகள் யாழில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வரும் இவர், சூரினாம் நாட்டிற்கு தூதராக மட்டுமின்றி கரீபியன் நாடுகளான பார்படோஸ், செயின்ட…
-
- 0 replies
- 245 views
-
-
பிறரின் காணியில் விகாரை அமைக்குமாறு புத்தபெருமான் கூறவில்லை! - போத்திவெல சந்தானெந்த தேரர் [Monday 2017-05-01 08:00] மற்றொருவரின் காணியில் அத்துமீறி விகாரை நிர்மாணிக்குமாறு புத்தபெருமான் ஒருபோதும் கூறவில்லை என தீகவாபி பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் பிரதம பௌத்த பிக்கு வணக்கத்திற்குரிய போத்திவெல சந்தானந்த தேரர் தெரிவித்தார். இறக்காமம் மாயக்கல்லி விடயம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீண்ட காலமாக மாயக்கல்லி முஸ்லிம்களின் அவர்களது பூர்வீக காணிகளில் வசித்தோரை அவர்களின் விருப்பமின்றி அப்புறப்படுத்தி விகாரையை அமைக்கவேண்டிய அவசியமில்லை. மாணிக்கமடுவிக்கு அருகிலேயே தீகவாபி உள்ளதால் இங்கும் ஒரு விகாரை அவசியமில்லை. த…
-
- 0 replies
- 204 views
-
-
யாழில்... மீள் குடியமர்த்தப் படவுள்ள, மக்களின் விபரங்களை திரட்டும் பணி ஆரம்பம் உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில், மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “யாழில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களின் விபரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீள்குடியமராத குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் அவர்கள், தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களின…
-
- 0 replies
- 207 views
-
-
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் விளையாட்டு விழாவில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்ற மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய மாணவி அமிர்தலிங்கம் யசோதாவுக்கு கௌரவிப்பு கிருஷ்ணா விளையாட்டுக் கழக உறுப்பினரான இம்மாணவி 1000 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் மரதன் ஓட்டம் ஆகிய போட்டிகளில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தனது கிராமத்திலோ பாடசாலையிலோ விளையாட்டு மைதானம் இல்லாத போதிலும் வீதியில் ஓடியே இதற்கான பயிற்சியை தான் பெற்றதாக மாணவி அமிர்தலிங்கம் யசோதா தனது உரையில் கூறினார். பாடசாலை அதிபர் தி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போல், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் க.விமலநாதன், மண்முனைப்பற்று பிரதேச சபைத் தலைவர் …
-
- 3 replies
- 622 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான முதலாவது மாபெரும் பிரச்சாரக்கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27-08-2013) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இதன் போது சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், இது ஒரு முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் என்ன? எதிர்பார்ப்புக்கள் என்ன? எதனை அவர்கள் தம்முடைய குறிக்கோளாக வைத்திருக்கின்றார்கள் என்பதையெல்லம் பிரதிபலிக்கும் ஒரு விதமாக எங்களுடைய இந்த தேர்தல் அமைகின்றது. அகவே உங்களுடைய வாக்கு மிக மிக முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் எமக்கு எதிர்க்கட்சியாகிய அரசாங்கத்துடன் சேர்ந்த கட்சிகள் சம்பந்தமாகவும் கூறவேண்டியுள்ளது. காரணம் அவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளுக…
-
- 2 replies
- 406 views
-
-
பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை:திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். [sunday, 2009-08-23 07:18:20] வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு விநாயகர் சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமி…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. Pics By:Joy jaya kumar யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்கினேஸ்வரன், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். வடமாகாண சபைத் த…
-
- 6 replies
- 767 views
-
-
அதிர்ச்சியூட்டும் இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும் விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப் புகைப்படங்களில் சில வெளிவராதவை என்பதால் நாம் இதனைப் பிரசுரிக்கிறோம். போரில் இறந்தவர் என்று கூடப்பாராமல், பெண்களையும் இளைஞர்களையும் இலங்கை இராணுவம் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் ஆடைகள் இலங்கை இராணுவத்தால் களையப்பட்டுள்ளது. பிறிதொரு படத்தில் இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது. திறந்தவெளியில்…
-
- 3 replies
- 6.4k views
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலை வன்முறை குறித்த அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது 08 செப்டம்பர் 2013 வெலிக்கடைச் சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்கள் குறித்த அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தேவை என்றால் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் சமர்ப்பிக்கத் தயார் என அமைச்சா கஜதீர தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த அறிக்கை ஓர் உள்ளக அறிக்கை எனவும் இதனை அம்பலப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த போது நவனீதம்பிள்ளை வெலிக்கடைச்…
-
- 0 replies
- 362 views
-
-
ஒரே தலைவர் என்ற நிலையை ஒழித்து, தமிழீழ விடுதலை இயக்கத்தினை (ரெலோ) வழிநடத்துவதற்கு என 12 பேர் கொண்ட நடவடிக்கைத் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 513 views
-
-
பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலம் மெக்ரே இலங்கை வரவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவே அவர் இலங்கை வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கெலம் மெக்ரே ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தார். இதனால் இலங்கையிலும் உலகம் முழுவதும் பாரிய சர்ச்சை கிளம்பியது. இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்த செனல் 4 ஆவணப்படங்களே உந்துதலாக இருந்தன என்றும் கூறலாம். ‘‘யுத்த சூனிய வலயம்‘‘, ‘‘இலங்கை கொலைக்களங்கள்‘‘, ‘‘இலங்கை கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத குற்றங்கள…
-
- 0 replies
- 274 views
-
-
வழிநடத்தல் குழு உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு! ஊடகங்களுக்கு தகவல் வழங்கத் தடா புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவில் நேற்றுக் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன என்று தெரிய வருகின்றது. அத்துடன் கூட்டத்தில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் மூச்சும் காட்டக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வழிநடத்தல் குழுவின் மரதன் அமர்வு நேற்று மூன்றாவது நாளாகவும், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வழிநடத்தல் குழுவின் ஒவ்வொரு அமர்விலும் பேசப்படும் விடயங்கள் தமிழ் – சிங்கள பத்திரிகைகளில் வெளிவருவது தொடர்பில் நேற்றைய அமர்வில் ப…
-
- 0 replies
- 296 views
-
-
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மரணம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும். https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-மங்கள-சமரவீர-மரணம்/175-279509
-
- 25 replies
- 2.2k views
-
-
அகதி நிலைத் தகுதி கோரும் 80 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கும் எதிராக அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 242 views
-