ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
https://www.youtube.com/watch?v=8piXgc2fws0&t=20
-
- 16 replies
- 1.3k views
-
-
தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளித்தாலும் நானே எதிர்க்கட்சித் தலைவர். நான் அந்தப் பதவியை விட்டு விலகமாட்டேன். எனது மனச்சாட்சியின் படி நானே எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பேன் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை பலப்படுத்தவே சுதந்திரக் கட்சியின் 26 பேர் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளனர். நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவில்லை. இறைச்சுக்கும் முல்லுக்கும் நாங்கள் அரசாங்கத்தில் இணையவில்லை. மாறாக 100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வரலாற்று விடயத்தை முன்னெடுக்கவே ஆதரவு வழங்குக…
-
- 2 replies
- 392 views
-
-
எங்களுக்கு மேலே ஒரு குண்டைப் போட்டு கொன்று விடுங்கள்: கிளிநொச்சியில் கதறியழுத தாய் காணாமல் போனோரின் உறவுகளால் கிளிநொச்சியில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தாயொருவர், எங்களுக்கு மேலே ஒரு குண்டைப் போட்டு கொன்று விடுங்கள் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளைத் தேடி வரமாட்டோம் முன்னர் குண்டு போட்டு எல்லாரையும் கொன்றது போல் எங்களையும் கொன்று விடுங்கள் என கதறி அழுதுள்ளார். ராஜபக்ச இருந்தார் அவரும் ஒரு முடிவு சொல்லேல்ல. இப்ப மைத்திரிபால வந்திருக்கிறார். அவரும் கூட எங்களுக்க ஒரு முடிவும் சொல்லேல்ல. பிள்ளையள் எங்க இருக்கின்றார்கள் என்று காட்டுங்கோ. நாங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கோ, கூட்டங்களுக்கோ வரமாட்டோம். ஆறு வருடமாக நாங…
-
- 2 replies
- 510 views
-
-
19 ஆவது திருத்தச் சட்டத்தில் முரண்பாடுகள்! சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும்: நிமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அத்துடன் 19 வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறைமை மாற்றத்திற்கான திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக சமர்ப்பித்தால், இரண்டுக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவதாகவே அறிவித்திருந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ப…
-
- 0 replies
- 330 views
-
-
மீனவர் பிரச்சினை: 9 மணி நேரம் நீடித்த பேச்சு! மே மாதத்தில் இறுதி முடிவு தமிழக, இலங்கை மீனவர்களிடையே சென்னையில் நேற்று நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 கோரிக்கைகள் குறித்து மே மாதத்தில் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே ஏற்கெனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இதில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. பின்னர், தமிழக மீனவர்கள் சார்பில்…
-
- 1 reply
- 316 views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மூலவிக்கிரகம் உள்ளிட்ட விக்கிரகங்கள் மாயம்! [Tuesday 2015-03-24 19:00] மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பழமைவாய்ந்த மூலவிக்கிரகம் உட்பட பல விக்கிரகங்கள், நேற்று இரவு மாயமாகியுள்ளதாக ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மருதடி விநாயகர் ஆலயம், கடந்த 2004ஆம் ஆண்டு உடைக்கப்பட்டு 250 மில்லியன் ரூபாய் செலவில் கருங்கல் ஆலயமாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. பழைய விக்கிரகங்களை பாலஸ்…
-
- 5 replies
- 707 views
-
-
நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்புத் திருத்தம்! [Tuesday 2015-03-24 19:00] இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை-பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன ஆணைக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அ…
-
- 0 replies
- 512 views
-
-
தனது அரசிலும் தவறுகள் நடந்துள்ளதாம்! - ஒப்புக்கொள்கிறார் மகிந்த [Tuesday 2015-03-24 19:00] அன்று 'அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றம்சுமத்திய மக்கள் இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் அதிகரித்து விட்டனர்' என்று குற்றம் சுமத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று மஹாநாயக்க தேரர்களையும், சிங்கள திரைப்பட கலைஞர்களையும் சந்தித்த அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பு, அவருடைய அரசியல் பிரவேசம், குறித்து ஊடகவியலாகர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிதத அவர், இன்றைய பேச்சுவார்த்தையானது சுமூகமான முறையில் நடைபெற்றது. இதன்போது நான் மீண்…
-
- 0 replies
- 707 views
-
-
புதிய அரசாங்கத்தில் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம்! - மகிந்தவின் பக்கம் பாயும் மகாநாயக்க தேரர்கள் [Tuesday 2015-03-24 19:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் ஆட்சியில், நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பில்லை என மஹாநாயக்க தேரர்களும் சிங்கள கலைஞர்களும் தெரிவித்துள்ளார். கொழும்பு நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் போராடி வென்றெடுத்த நாட்டை, புதிய அரசாங்கம் அடகு வைக்கின்றதெனவும் கூறியுள்ளனர். இந்நிலையில், பிரிவினைவாதிகளின் கைகளி…
-
- 0 replies
- 433 views
-
-
இறால்கள் பிடிபடும் பருவகாலம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், கல்லடிப்பாலத்துக்கு அருகிலுள்ள வாவியினுள் மேடை அமைத்து, ஒளிரும் இலாம்புகளை தொங்கவிட்டு இறால்கள் பிடிக்கும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரகாலத்திலிருந்து இறால்கள் அதிகளவில் பிடிபடுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சேம்பு இறால், மணல் இறால்கள் ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் வெள் இறால்கள் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும் மட்டு இறால்கள் ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும் வரையும், கால்கள் பருத்த கோம்பை இறால்கள் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் மீனவர்கள் கூறினர். - http://www.tamilmirror.lk/142112#sthash.bk3gaR26.dpuf
-
- 31 replies
- 6.5k views
-
-
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான அரசியலமைப்பின் 19வது திருத்த யோசனை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரங்களில் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 19வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த அரசியலமைப்பு திருத்த யோசனை கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்புத் திருத்த யோசனைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இன்று பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்புத் த…
-
- 0 replies
- 441 views
-
-
‘மோடியும் நானும் என்ன கதைத்தோம் என்று எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்’ இவ்வாறு தான் மகிந்த மோடியுடான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ‘உண்மையில் மோடி மகிந்தவிற்கு சொன்னதென்ன? மகிந்த மோடியிடம் சொன்னதென்ன..?’ இதை பற்றி அறிந்துக் கொள்ள அனைவரும் ஓர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இவ்வாறானதொரு ஆர்வம் ஏற்படுத்தற்கான காரணமாக அமைந்தது ‘என்னை இந்திய ரோ இரகசியபுலனாய்வு அமைப்பு அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்புடன் சேர்ந்து தன்னை தோற்கடித்தது’ என்ற கருத்தை மோடி இலங்கை வரும் போது இந்திய ஊடகமொன்றிக்கு மகிந்த தெரிவித்திருந்தார். மோடி இது பற்றி அறிந்திருக்கவில்லை என்றும், இந்த இரகசிய அமைப்புக்கள் ஒரு வருட காலமாக இது பற்றி திட்டம் அமைத்து தன்னை தோற்கடித்தாக அந்த இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
தற்போதைக்கு தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டம் வழங்கப்படுகின்றது என்பதனை ஆராய்ந்து பார்க்காமல் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் தீர்வின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என எதிர்பார்க்க முட…
-
- 4 replies
- 450 views
-
-
கிளிநொச்சி, புதுமுறிப்பு குளத்தின் கீழ் இந்தாண்டு 800 ஏக்கரில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுமுறிப்புக் குளம் புனரமைக்கப்பட்டு அணைக்கட்டு உயர்த்தப்பட்டமையால் நீர் சேகரிக்கும் அளவு அதிகரித்துள்ளது. குளத்தில் தற்போது உள்ள நீரின் மூலம் 800 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும். 276 விவசாயிகள் இக்குளத்தினால் பயனடைவார்கள் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/142506#sthash.9HrxiJGy.dpuf
-
- 1 reply
- 329 views
-
-
நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கு ஜே.விபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி என்றவொன்றில்லாமல் போயுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் செயற்கையான ஜனநாயகத்தை கருத்தில்கொண்டு, சபாநாயகர் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு உதவிய சிவில் அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னர் தேசிய நிறைவேற்று சபையிலிருந்து விலகுவது குறித்த மு…
-
- 0 replies
- 273 views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுவிட்டன. அமைச்சரவை எண்ணிக்கையினை அதிகரித்து, தேசிய அரசாங்கத்தை அமைத்தமை கண்டனத்திற்குரியது என்று விசனம் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, அரசின் தேசிய நிறைவேற்று சபையில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறிப்பிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலர் அரசாங்கத்துடன் கைகோர்த்தபின் நிமல் சிறிபாலடி சில்வா எதிர்க்கட்சி தலைவராவாரா எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியது. மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மேற…
-
- 1 reply
- 1.1k views
-
-
மக்கள் வாழ முடியாத அளவுக்கு ஓர் காட்டுப்பகுதி என்று அரசாங்கம் சம்பூர் மக்களின் நிலங்களுக்கு முத்திரை குத்தியது. இது தனது சுயலாபம் கருதி செய்த ஓர் திட்டமாகும். அதாவது, அந்நிய செலவாணியைப் பெற வெளிநாட்டவர்களையும், வெளிநாட்டுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதையும் ஊக்குவிக்கும் இவ் அரசாங்கம், தனது கடனையும் சீன ஆதிக்கத்தில் நாம் கட்டுப்படவில்லை என்ற காரணத்துக்காகவும், இலங்கையின் கிழக்கு கரையோரத்தை இந்தியாவுக்கு வழங்கியது. இந்தியாவுக்கு கிழக்கு கரையோரத்தை வழங்காமல் இருந்திருந்தால் இன்று கிழக்கை சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இந்த அரசாங்கம் தாரை வார்த்திருக்கும். இன்றுள்ள நிலைமையை விட விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்பதையும் உணரவேண்டும். கடல் நீரில் விவசாயம் செ…
-
- 7 replies
- 2.8k views
-
-
எமது ஆட்சிக்காலத்தின் போதே மக்களின் உள்ளங்களில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உறுதியளித்தார். இன்று காலை 10 மணியளவில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகள் சில விடுவிக்கப்பட்டு 60 பேருக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .குறித்த நிகழ்விலே கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கடந்த மூன்று மாத காலப்பகுதியிலே 3 தடவை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன்.முதலாவது வருகை தேர்தல் காலத்தின் போது உங்களிடம் வாக்கு கேட்பதற்காக வந்தேன் , இரண்டாவது அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் ஒன்றிற்கு வந்தேன் .இன்று மூன்றாவது தடவையே மக்களுக்கான காணிகள…
-
- 2 replies
- 402 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு மேலதிகமாக மேலும் சில அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் அரசியலமைப்பு திருத்தம், அரசியலமைப்பின் புதிய திருத்தத்தை அமுல்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்;கட்சி உறுப்பினர்கள் 11 பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள, ஐவருக்கு பிரதி ,10 பேருக்கு இராஜாங்க அமைச்சுப்…
-
- 0 replies
- 206 views
-
-
கொட்டியாரக்குடாவின் சம்பூரில் அமைய இருக்கும் அனல் மின் நிலையத்தினால், திருகோணமலை மாவட்டத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் 'கிறீன் றிங்கோமலே' அமைப்பினால் இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கழமை(22) விநியோகிக்கப்பட்டன. இவ்வாறான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள், கடற்கரை, சந்தை, மதஸ்தலங்கள் மற்றும் சுற்றாடல்களிலும் அதன் அங்கத்தவர்களினால் வழங்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. அனல் மின்நிலையத்தினால் நீர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது. இரசாயன கலவை கலப்பதால் நிலத்தடி நீர், கடல் நீர் நஞ்சாக மாற்றமடையும். கடல் நீரில் இரசாயனம் கலக்கப்படுவதனாலும் அனல் உலைகளை குளிர்வித்தலுக்காக கடல் நீர் பயன்படுதப்படுவதாலும் கடல் வாழ் உயிரினங்களி…
-
- 0 replies
- 377 views
-
-
தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என சிங்கள தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சொற்ப அளவான பிரதிநிதிகள் சமூகமளித்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சிங்கள தேசிய முன்னணியினரால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. அதில், இந்தியாவில் 200 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், பெங்காளி மொழியிலேயே அவர்களின் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது. இலங்கையின் பிரதான மொழியான சிங்களத்திலேயே பாடவேண்டும். இன்று தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், நாள…
-
- 7 replies
- 624 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதுபற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நோக்கிலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ள வடக்கு முதல்வர், …
-
- 24 replies
- 1.6k views
-
-
இலங்கையில் யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டன. காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமக்கு நம்பிக்கையில்லை என தெரிவிக்கும் காணாமல் போனோரின் உறவினர்கள், உள்ளக விசாரணையை நிறுத்தி ஐ.நாவின் அனுசரணையுடன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியறுத்தினர். யாழ்ப்பாணம் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் யாழ்.மாவட்ட செயல…
-
- 0 replies
- 383 views
-
-
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் குறித்த மோட்டார் சைக்கிளில் கட்டி வந்த நீண்ட பலகை வீதியில் ஓரத்தில் நின்ற சிறுவனை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்த பரிதாப சம்பவம் பரமங்கிராய் சந்தி பூநகரியில் இடம்பெற்றது. மரணமானவர் வசந்தகுமார் சங்கீத்தனன் (வயது 10) என்பவராவார். இவரது மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். மரணமான சிறுவன் சாவகச்சேரியை சேர்ந்தவர். பரமன்கிராயில் உள்ள பேத்தியார் வீட்டிற்கு வந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://virakesari.lk/articles/2015/03/22/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF…
-
- 2 replies
- 576 views
-
-
திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பேட் நோயல் செல்லப்பிள்ளை கம்பஹா ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மைதானத்தில் நடந்த நான்கு போட்டி நிகழ்வுகளில் முதல் இடங்களைப் பெற்று தனது 90 வயதில் சாதனை படைத்துள்ளார். கடந்த 28.02.2015 மற்றும் 01.03.2015 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட முதுநிலை மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 4வது திறந்த முதுநிலை மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2015ல் 85 � 90 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான பல்வேறு போட்டிகளில் இவர் பங்குபற்றியிருந்தார். அதற்கிணங்க 5000 மீற்றர் வேகநடைப்போட்டி, 100 மீற்றர் ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப் போட்டி, மற்றும் ஈட்டி எறிதல் போன்றவற்றிலும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார் 5.09.1924 ல் பிறந்த இவர் ஓய்வுபெற்ற கணக்காய்வு உத…
-
- 7 replies
- 767 views
-