ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த இளம் பெண் தனது காதலனுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் தனது காதலனை தொலைபேசி மூலம் அழைத்து அவருடன் வாகனத்தில் ஏறிச் சென்று மன்னாரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த மேற்படி பெண் தனது கணவனுடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து தாங்கள் சட்டபூர்வமாக பதிவுத் திருமணம் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த இளைஞனைத் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தனர் ஆனால் பெண் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய பின்னர் அந்த இளைஞனை…
-
- 16 replies
- 2.2k views
-
-
இனப் பதட்டத்தின் மூலம் வவுனியாவில் இருந்து தமிழர்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு நடத்துவது திட்டமா? வடமாகாணத்தின் தலைநகராமாக மாற்றப்பட்டுள்ள வவுனியாவில் தமிழர் விகிதாசாரம் குறைக்கப்பட்டு ஒரு பொம்மை மாகாணசபை ஆட்சி?
-
- 4 replies
- 2.2k views
-
-
பிரபாகரனே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகக் கூறுவது வேடிக்கையானது :பொன்சேகா நாட்டின் இன்றைய சர்வாதிகார போக்குடனான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்லும் அதேவேளை ராஜபக் ஷ குடும்பத்தினர் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இந்நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்றதாக கூறுவது வேடிக்கைக்குரிய விடயமாகும் என முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டினார். நாட்டின் இன்றைய சர்வாதிகார போக்குடனான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங…
-
- 27 replies
- 2.2k views
-
-
கணவன் கைவிட்டதால் தெருவில் கையேந்தும் தமிழ்ச்செல்வி! ஆண்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வாழ்க்கையினை தொலைத்த பெண்கள் பற்றி தினம் தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. ஆனாலும் ஏமாறும் பெண்கள் ஏமாந்து கொணடுதான் இருக்கிறார்கள். கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் என்றால் மிகப் பிரபலம். பிச்சைக்காரர்களும் இங்கு பிரபலம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் பிச்சையெடுக்கிறார் சிங்களத்தில் தான் பேசுவார் பெயரோ தமிழ்செல்வி. அம்மா அப்பா கிடையாது. தமிழ் பெண்ணாக பிறந்தாலும் இவர் வளர்ந்தது கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் சிங்கள குடும்பத்தில். தனது பெற்றோர் தன்னை ஒரு சிங்கள குடும்பத்திற்கு காசுக்காக விற்றுவிட்ட…
-
- 2 replies
- 2.2k views
-
-
தேசத்துரோகி கருணா தொடர்பாகவும் அவர் பல பெண்களோடு வைத்துள்ள கள்ளத்தொடர்புகள் தொடர்பாகவும் பல முறை பல ஊடகங்களும் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் 2012 ஆண்டு வரவேற்பு நிகழ்வின் போது கொழும்பில் உள்ள நச்சத்திர விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கருணா மது அருந்திவிட்டு பெண்களுடன் போடும் ஆட்டத்தை பாருங்கள். தன் இனத்தையே காட்டிக்கொடுத்து சிங்களவனின் எச்சி எலும்புக்காக வால் ஆட்டும் கருணா இது போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே தன் இனத்தையே காட்டிக்கொடுத்தார் என்பது இப்போது தெளிவாகிறது. இனத்தைக் காட்டிக் கொடுத்த கருணாவின் இன்றைய முகம் - இதுதான் சிங்களம் தந்த பரிசா!? தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலமாக தன்…
-
- 11 replies
- 2.2k views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை 29 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாள ர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர். 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலில் இந்த 68 பேரும் உயிரிழந்தனர். இன்றையதினம் இடம்பெற் நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா உயிரிழந…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும் : இராணுவ தளபதி தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 6/1/2009 9:17:49 AM - தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலிதேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையப்போவதான விடயம் அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னரே தெரியவந்தது. அவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடையப் போவது குறித்த விடயம் சுமார் 7, 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிரோடு கைது செய்திருப்போம் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உயிரோடு பிடிப்பதன் அவசியம் குறித்து நாமும் அறிவ…
-
- 12 replies
- 2.2k views
-
-
வாகரை கட்டுமுறிவு பகுதியில் இருந்து சிறீலங்கா படைகள் பின்வாங்கல்? 2002 ம் ஆண்டு போர்நிறுத்த எல்லைகளை அத்துமீறி கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி கட்டுமுறிவு, மதுரங்குளம், கிரிமிச்சை, குஞ்சன்குளம் ஆகிய பகுதிகளுக்கு ஊடுருவி சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்தமை தெரிந்ததே இதனையடுத்து கடந்த ஒன்றரை மாதமாக விடுதலைப்புலிகளுக்கு சிறீலங்கா இராணுவத்துக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வந்தன. இதனால் ஆக்கிரமக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து நிலைகொள்ள முடியாத படையினர் பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இதுகுறித்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/in…
-
- 4 replies
- 2.2k views
-
-
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பாரஊர்திகளை பெற்றுக்கொண்டுள்ள விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் 20 கிலோ மீட்டர் நீளமான யுத்த அகழிகளை வெட்டியிருப்பதாக வவுனியாவுக்குச் சென்றுள்ள நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. இந்த வாகனங்களைப் பயன்டுத்தி விடுதலைப்புலிகள் புதிய பாதுகாப்பு வேலிகளை அமைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வன்னியில் இருந்து கடந்த13 ஆம் திகதி இறுதியாக அரசசார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். வன்னியில் உள்ள ஏனைய நிறுவனங்கள் வவுனியாவுக்கு வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் இது குறித்து அந்த நிறுவனங்கள் தமது தலைமை பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக…
-
- 6 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதுவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 13 replies
- 2.2k views
-
-
வணக்கம், தலைவரின் கடந்த (2008ம் ஆண்டு) மாவீரர்நாள் உரை தற்போதைய காலத்தின் தேவை கருதி மீண்டும இங்கு பிரதி செய்யப்பட்டு உள்ளது. நம்மவர்கள் தற்போது கேட்கின்ற பல கேள்விகளிற்கு பதில்கள் இங்கே ஏற்கனவே இதில் சொல்லப்பட்டு இருக்கின்றது. வாசித்து நீங்களும் தெளிவடைந்து கொள்ளுங்கள். நன்றி! தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!! வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பிலிருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சி்க்கினர். அதில் தாயும் மகளும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கயஸ் வாக…
-
- 17 replies
- 2.2k views
-
-
சிறீலங்கா - அமெரிக்கா இரகசிய ஆய்வின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர், அதே ஆண்டு ஒக்டோபரில் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஆழமான ஆய்வொன்றை மேற்கொண்டதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஆபத்துக…
-
- 7 replies
- 2.2k views
-
-
நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்‐ நெல்லியடியில் இருந்து GTN னின் விசேட செய்தியாளர்‐ 02 May 10 05:08 pm (BST) நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு இலங்கை நேரம் 7.30ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் 26 வயதுடைய சிவலிங்கம் சபசேன் என்ற இளைஞரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். வன்னியின் இறுதி யுத்தத்தில் அகப்பட்டு முகாமில்; இருந்து விடுபட்டு சென்ற இவர் நாளை பெயின்ற் கடை ஒன்றைத் திறப்பதற்கு தயாரான நிலையில் படைப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக நெல்லியடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரம் விரைவில்…
-
- 22 replies
- 2.2k views
-
-
பிள்ளையான் ஆயுததாரி தலைமையிலான ஒட்டுக்குழுவினுள் உட்கட்சி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ள முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கருணாவின் தீவிர விசுவாசியுமான மௌனகுருசாமி பிள்ளையான் குழு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். மௌனகுருசாமிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு காரணமாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று பிள்ளையான் குழுவின் ஒரு சாரார் விருப்பம் வெளியிட்டுள்ளனர். எனினும் முதலமைச்சர் பதவியை எவருக்கும் வழங்க முடியாது என்று பிள்ளையான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவர் நேற்று ச…
-
- 5 replies
- 2.2k views
-
-
திருகோணமலை கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தி விட்டு சென்ற விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்கள் இரணைமடு விமான ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டதாக விமானப் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தின் மீது, உடனடியாக தாக்குதல் ஜெட் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளங்களை விமானப்படையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் இவற்றைத் தவிர புதிய ஓடுதளம் எதுவும் வன்னியில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 7 replies
- 2.2k views
- 1 follower
-
-
"விடுதலைமூச்சு" திரைப்படம் திரையிடத் தடை விதிக்குமாறு சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுதலைமூச்சு திரைப்படத்தைத் திரையிடுவதற்கு அனைத்துலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அனைத்துலக ரீதியில் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை செய்யுமாறு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், ஆகிய நாடுகளிடம் இந்தக் கோரிக்கையை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. நோர்வேயில் விடுதலைப் புலிகளை தடை செய்யாதபோது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் திரைப்படத்தை தடை செய்…
-
- 3 replies
- 2.2k views
-
-
தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : 12 டிசம்பர் 2010 Bookmark and Share தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : எதிர்வரும் காலங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மட்டும் இசைப்பதென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரச நிகழ்வுகள் மற்றும் வைபவங்களில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா மாதா என்ற இலங்கையின் தேசிய கீதம் சகல பிரதேசங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மூலம் தேசிய க…
-
- 28 replies
- 2.2k views
-
-
200 முகமூடிகள் வட்டுவாகல் பக்கமாக படையினர் கொண்டுசென்றனர்.படையினர் பாரிய தாக்குதலுக்கான தயார்.இராசயன ஆயுத தாக்குதலுக்கு தயார். மக்கள் பீதியில். Source Link: 200 gas masks were transported by the SLA to Vadduvaikal Courtesy:TamilNational.Com
-
- 1 reply
- 2.2k views
-
-
இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா! தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம் - தமிழர் தலைவர் அறிக்கை. இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாத தீமையாகும் என்றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிபராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெ…
-
- 10 replies
- 2.2k views
-
-
யாழ் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் யாழ் குடாநட்டின் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளும் படையினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மேற்கொள்ளப்படும் எறிகணைகள் பளை எசன் எழுதுமட்டுவாள் மற்றும் மிருசுவில் போன்ற பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாகவும் இந்த பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் செறிவாக குவிக்கப்பட்டுள்ளதால் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா இரா…
-
- 1 reply
- 2.2k views
-
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறிலங்காவில் தமிழ் ஈழம் மலரும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. சார்பில் சென்னை வியாசர்பாடியில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எங்களை போல் எந்த கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை. தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். வன்முறை கலாசாரம், கட் அவுட் கலாசாரம், காலில் விழும் கலாச…
-
- 8 replies
- 2.2k views
-
-
2011 நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு கூடாத காலம்! தென்னிலங்கையின் ஆஸ்தான ஜோதிடர் ஆரூடம் ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 22:09 எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரை பொதுவாக நாட்டுக்கு நல்ல காலம் கிடையாது என்று எதிர்வு கூறி உள்ளார் தென்னிலங்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சோதிட மேதைகளில் ஒருவரான பியசேன ரத்துவிதான (வயது 80). இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலருக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகின்றார். இவர் கிரக மாற்றம் எப்படிப்பட்ட பல்ன்களை இலங்கைக்கு கொடுக்க இருக்கின்றது? என்பது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சோதிட ரீதியாக விளக்கம் கொடுத்து உள்ளார். இவர் தெரிவித்தவை வருமாறு:- "2011 ஆம் ஆண்டு நவம்பர…
-
- 6 replies
- 2.2k views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதா? [09 - February - 2007] [Font Size - A - A - A] புலிகள் இயக்க கெரில்லாக்கள் கடந்த வாரம் கொழும்புத் துறைமுகம் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றியும் அது சம்பந்தப்பட்ட தகவல்கள் பற்றியும் பல சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாக்குதல் முயற்சிக்காக புலிகளால் ஓட்டிவரப்பட்ட இரண்டு டிங்கிப் படகுகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டதாக கடற்படையினர் கூறியிருந்தனர். மேலும், புலிகள் செலுத்தி வந்த மூன்றாவது டிங்கிப்படகே "செலொன்பொனேசியா பிரைட்" எனப்படும் தாய்வான் கொள்கலன் கப்பல் மீது மோதியதாகவும் கடற்படையினர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்காக புலிகள் ஓட்டிவந்த முதலாவது டிங்கிப் படகை துறைமுகத்த…
-
- 6 replies
- 2.2k views
-
-
தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.2k views
-