Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது நாட்டில் மலர்ந்திருக்கும் புதிய அரசின் தொடர்ச்சியான கடந்த கால செயற்பாடுகளானது சர்வதேச ரீதியில் செயற்படும் பயங்கரவாத சக்திகளுக்கும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மன ரீதியாக தம்மை தயார்படுத்தி கொள்ளவும் தடையின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒரு சூழ்நிலை புதிய அரசினால் தோற்றம் பெற்றுள்ளது என பொது பல சேனாவின் பொது செயலாளர் கல­கொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைப்பின் பொது …

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'போலி தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளே' எனக்குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையில் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டதைக் கண்டித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=112833865610337652

  3. ஈரானின் 33வது கடற்படை கப்பல் தொடரணி கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. சர்வதேச கடற்பரப்பில் தமது பிரசன்னத்தை விஸ்தரிக்கும் நோக்கத்திலேயே இந்த கப்பல்தொடரணி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரணியில், பண்டார் அப்பாஸ் என்ற உதவுக்கப்பலும் நக்டி என்ற நாசகாரி கப்பலும் உள்ளடங்குகின்றன. இந்த கப்பல் தொடரணி சுமார் 5000 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டே இலங்கை வந்துள்ளன. இந்த தொடரணியில் 120 இராணுவ மற்றும் இராணுவமற்ற பிரிவுகள் உள்ளன. அத்துடன், பல நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. ஈரானின் கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக ஈரான் அண்மைக் காலங்களில் சர்வதேச கடல் பிரசன்னத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. tamilwin,com

  4. கிழக்கு மாகாணசபையில் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று 34 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஹபீஸ் நசீர் முகமட் சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக, சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 34 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட மாகாணசபையில், சபை முதல்வர் வாக்களிக்கவில்லை. அதேவேளை, இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய இந்த வரவுசெலவுத் திட்டம், ஆட்சிமாற்ற இழுபறிகளால் சுமார் இரண்டு மாத ம் கழித்து இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, கிழக்கு மாகாணசபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய…

  5. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் மட்டக்குழு அல்லது அதிகாரிகள் மட்ட தூதுக்குழு கலந்து கொள்ளும் என வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை இம்முறை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதால் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவேளை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாவிடினும் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் உயர்மட்ட பங்கேற்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர…

  6. கடந்த 26.04.2010 இல் கைதுசெய்யப்பட்டு, முதல் தீர்ப்பின் முழுத்தண்டனையையும் அனுபவித்து விடுதலைபெற்ற 5 முக்கிய தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களிற்கும் எதிரான வழக்கானது உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் இறுதிவாதாட்டமும் செயற்பாட்டாளர்களின் இறுதிவார்த்தைகளும் எதிர்வரும் 16.02.2015 திங்கள் காலை 9.30 மணிக்கு டென் காக் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டவரானவர் தான் தமிழீழவிடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக்கிளைப் பொறுப்பாளர் என்பதை அப்போதைய தனது சட்டத்தரணிகளின் எதிர்ப்பின் மத்தியில் தானாக முன்வந்து நீதிமன்றில் கூறியிரு…

  7. https://app.box.com/s/1wnh8ugduv3uko8o2tw9ln82qtsa271d குரவை தழிஇ யாம் மரபுளி பாடி தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும் மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல்நிலம் ஆளும் கிழமையோடு புணர்ந்த எம்கோ வாழியர் இம் மலர் தலை உலகே (முல்லைக் கலி 103:74-78) பொருள்:- உரிய நாள், அதற்கு உரிய கிழமையில் பொருந்துமாறு இவ்வுலக உருண்டையின் ஆட்டை நிமிர்வை மலரச் செய்கிற ஆளுமையோடு எமது அரசன் வாழ்க! என்று வாழ்த்திக் குரவை பாடுவது 'தொழூ உப் புகுத்தல்' நிகழ்வின் மாற்றமில்லாத மரபு. கோத்தொழில் செய்து, வேந்து வினை முடித்து, ஆண்டு நாட்களை முறையாகக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்று, வெள்ளிக் கிழமைகளில் முழு நிலவையும், செவ்வாய்க்கிழமைகளில் மறை நிலவையும் பொருந்தச் செய்தா…

    • 0 replies
    • 645 views
  8. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் ஏழு கோடி ரூபா பெறுமதியான கைக் கடிகாரங்கள் உள்ளதாக இணையத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தன்னிடம் அவ்வாற கைக் கடிகாரங்கள் இல்லையென நாமல் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தன்னிடம் விலைமதிப்பு கூடிய கைக் கடிகாரங்கள் ஒன்றும் இல்லை. எனக்கு பரிசாக கிடைத்து இரண்டு மூன்று கடிகாரங்களே உள்ளன என மறுப்பு வெளியிட்டுள்ளார். எனினும் கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ஷ கட்டியிருந்த கடிகாரங்களும் அவற்றின் விலைப் பட்டியலும் தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.l…

  9. தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜொவ் டொட்ஜ் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தென்னாபிரிக்கத் துணை அதிபரின் சிறிலங்கா பயணம் இன்னமும் திட்டமிடல் கட்டத்திலேயே இருப்பதாகவும், அதனால் அவரது சரியான பயண நாள் குறித்து உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக அவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுக்களை நடத்தக் கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், தென்னாபிரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சிறில் ரமபோசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் …

  10. கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாருங்கள் -(வீடியோ) தமிழ்க்கூட்டமைப்பு, ஐ.தே.க.வுக்கு ஹக்கீம் அழைப்பு; முதலமைச்சர் விவகாரத்தில் மட்டும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லையாம் கிழக்கு மாகாண சபையில் சர்­வ­கட்சி தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்கிய தேசிய கட்­சிக்கும் அழைப்பு விடுக்­கின்றோம். கூட்­ட­மைப்பும் ஐ.தே.க.வும் கிழக்கு மாகாண சபை அமைச்­ச­ர­வை­யிலும் பங்­கேற்­க­வேண்டும் என்று அமைச்­சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒன்­றித்து பய­ணிக்­க­வேண்டும். எங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை களைந்து­கொள்­ள­வேண்டும். அர­சியல் ரீத…

  11. யாழ்.பல்கலைகழகத்தில் போலி அரசியல்வாதிகளே! என்று தலைப்பில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/37647/57//d,article_full.aspx

  12. காணாமல் போன எங்கள் உறவுகள் எங்கே; யாழில் போராட்டம் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று யாழ்.நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டு வருகின்றது. புதிய அரசு உருவாகிய பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று முல்லைத்தீவிலும் கடந்த வாரங்களில் மன்னார்,கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடம்பெற்றன. இந்த நிலையில் இன்று யாழ்.நகரில் குறித்த போராட்டம் நடாத்தப்படுகின்றது. குறித்த போராட்டத்தை மன்னார் மற்றும் வவுனியா பிரஜைகள்…

  13. நியூ யோர்க் - பெப்ரவரி 5,2015 சம்பந்தனின் நீண்ட நாள் போற்றக் கூடிய அரசியல் சேவையிலிருந்து ஓய்வுபெற்று, அடுத்த இளம் தலைமுறைக்கு தம்மையை விட்டுக் கொடுப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும், சம்பந்தர் தமிழ்ச் சரித்திரத்தில் வாழ்நாள் தலைவராக இல்லாது, தமிழ் இனத்திற்காக தன்னை அர்ப்பணித்தார் என்று தமிழ்ச் சரித்திரம் கூறும். சரித்திரத்தை அமைத்துவிட்ட அமெரிக்காவின் முதல் தலைவர் ஜோர்ச் வாசிங்டன் 5 வருடம் அரசியலில் பணியாற்றிவிட்டு மீண்டும் 65 வயதில் தனது விவாசாயத்தினை செய்வதற்கு வேர்யினியாவுக்கு சென்றுவிட்டார். தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா 5வருடம் தலைவராய் பணியாற்றிவிட்டு மீண்டும் தனது வீடு சென்று ஓய்வு பெற்றார். சம்பந்தர் அவர்கள் 81 …

  14. வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நேற்று கண்டியில் தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர், அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும், ராமங்ன்ன நிக்காயவின் பீடாதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இதன்போது கருத்து வெளியிட்ட மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், “முன்னர் போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதி மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார். அதே…

  15. விசேட தமிழக்கம்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இந்திய ஊடகமொன்றுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அளித்த செவ்வியின் விசேட தமிழக்கம்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையை கடுமையாக இராணுவமயப்படுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் இலங்கையின் பௌதீக அளவிற்கு பொருத்தமற்ற வகையில் இராணுவத்தை விஸ்தரித்து உள்ளதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி உங்களது கருத்து? இராணுவமயப் படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை இராணுவம் விரிவாக்கப்பட்டது. பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக இவ்வாறு இராணுவத்தை விஸ்தரிக்க நேரிட்டது. அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவு கூட இலங்கையின் தமிழீழ விடுதலைப்…

  16. மேலைத்தேய மோகத்தில் விடுபட்டு தமிழரின் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை சிறப்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் குறித்தெதுக்கப்பட்ட நிதியிலிருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு இன்னிய (பாரம்பரிய இசைக்கருவிகள்) உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. தமிழரின் பாரம்பரிய கலையை பிரதிபலிக்கும் உடுக்கை, தவில், நாதஸ்வரம், பறை, புல்லாங்குழல், கொம்பு போன்ற உபகரணங்கள் அமைச்சரினால் பாடசாலை அதிபரிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், இன்று நம்மில் பலர் எமது பாரம்பரிய கலையை மறந்து ஆங்கிலேய கலாசாரத்தில் மோகம் கொண்டுள்ளோம். இ…

  17. பருத்தித்துறைமுனை கடற்கரைப் பகுதியிலிருந்து 20 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பொதியொன்று ஞாயிற்றுக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் பி.தந்தநாராயண தெரிவித்தார். கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஞ்சா மீட்கப்பட்டது. மேற்படி பகுதியில் கஞ்சா பொதியிருப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டன. எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொறுப்பதிகாரி கூறினார். : http://www.tamilmirror.lk/139308#sthash.EPL6yLzU.dpuf

  18. வலி.வடக்கு, வலி.தெற்கு மற்றும் வலி.தென்மேற்கு போன்ற பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ள நிலையில் வலி.வடக்கு பிரதேச சபை இன்றும் தனது பிரதேச சபைக் கிணறுகளில் இருந்து மக்களுக்கு குடிதண்ணீரை விநியோகித்து வந்திருந்தமை தொடர்பினில் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனை நீதிமன்றினில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதேச சபை தவிசாளரின் பணிப்பினிலேயே குடிநீரை தாம் விநியோகித்ததாக சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், வடக்கு மாகாண சபையின் தூய நீருக்கான செயலணி நடத்திய கலந்துரையாடலில் குறித்த கிணறுகளில் இருந்து நீரை மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறது. வலி.வடக்கில் மல்லாகம் சந்தை, பிரதேச சபை வளாகம், கீரிமலை கூவில்,…

  19. இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் நல்ல நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்திய - ஈழத்தமிழர் நட்புறவு மையத்தில் ஏற்பாட்டில் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது. இதில் பெருமளவான ஊடகங்கள் பங்கெடுத்துள்ளன. http://www.pathivu.com/news/37631/57//d,article_full.aspx

  20. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை களமிறக்க நான்கு அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸவை களமிறக்க வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய இடதுசாரி முன்னணி, மஹஜன கட்சி, ஜே.என்.பி. மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க மிகவும் பொருத்தமானவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக…

    • 2 replies
    • 745 views
  21. அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர். இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான வைபவ், கடந்த மாதம் 28ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டிந்தது. வைபவ் கப்பல் திருகோணமலையில், தரித்து நின்ற போது, இந்திய கடலோரக் காவல்படையினர், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். இதன்போது, கடற்புலிகளிடம் இருந்து சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்களைப் பார்வையிட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர். ஆச்சரியமடைந்தனர். கடற்புலிகள் உருவாக்கிய கடற்கலங்கள் தொடர்பாக சிறிலங்கா கடற்படை …

  22. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவம் தேவையில்லை ஏனைய மாகாணங்களில் உள்ளவாறு அமைய வேண்டும் என ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு , கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து டக்ளஸ் தேவானந்தா விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் சில பாதுகாப்புத் தேவைகளுக்கென கைப்பற்றப்பட்டன. எனினும் 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அப்போதைய அரசுடன் நான் தொடர்ந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக கணிசமான அ…

  23. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்கள் குறித்து அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். காணாமற்போனவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று நடாத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது, மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு ஆட்சிபீடம் ஏறிய புதிய அரசு தங்களுடைய வாழ்விலும் மாற்றத்தைத் தரும் என்று தமிழ் மக்கள் நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்…

  24. வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவத்தினர் குறைக்கப்படமாட்டாது என அரசு கூறுவது அவர்களின் மமதையைக் காட்டுகின்றது என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இன்று காணாமற்போன உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=495493862709422741

  25. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் நாடு முழுவதுமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்காலை, மெதமுலனவில் நேற்று கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, தாம் எக்காரணத்தை கொண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் போவதில்லை எனவும் அவர் தமக்கு நெருங்கிய கட்சி முக்கியஸ்தர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. tamilwin.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.