ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய விமானி! பொங்கல் தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம்(14.01.2018) வல்வெட்டித்துறையின் பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த, அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த விமானமானது, விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய நிலையில் தரையிறங்கும் போது, விமானத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவமானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த விமான இலங்கை விமானப்படை விமானத்தின் விமானிக்கு, …
-
- 9 replies
- 988 views
-
-
படம் காட்டிய சுமந்திரன், சாணக்கியன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். அதற்கு என்ன நடந்ததென தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் கேள்வியெழுப்பினார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இதனை தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்காக போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கும் போது பெருமளவான மக்கள் இளைஞர்கள் வராமல் இருப்பதற்கு காரணம் பயங்கரவாத தடை சட்டமாகும். பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாமல் போனால் எமது சிறுவர்கள் கூட களத்தில் நிற்பார்கள். நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக…
-
- 3 replies
- 600 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசை சிதைக்க சிறிலங்கா திட்டம்: கைக் கூலிகளாக கனடா உலகத்தமிழர் இயக்க ஊழியர்கள் சிலர்! திகதி: 10.10.2010 “நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன? ஏன் வெளியேறினோம்?” என்னும் தலைப்பில் “மக்கள் பிரதிநிதிகளின் மனம் திறந்த அறிக்கை” எனக் குறிப்பிடும் ஒரு அறிக்கை ரொறன்ரோவில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகளில் இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய அதிசயத்தை எமது உடன்பிறப்புகளாகிய தமிழ் மக்கள் யாவரும் அறிவர். குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ் மக்களுக்குத் தற்போது இருக்கும் ஒரேயொரு வழியாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு யாப்பு எழுதியவர்களே இந்த அமைப்பிலும் தங்களுடைய ஆதிக்கத்தைத் தொடர்ந்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த வெற்றி விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத சுவிட்சர்லாந்து நாட்டுக்கு தமிழ் மக்கள் சார்பாக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னர் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்குடன் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் காலை 11மணிக்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினர். அதன்போதே தூதுவருக்கு நன்றி தெரிவித்தார். அதன்படி 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் சுதந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசினால் அறிவிக்கப்பட்டு 5ஆம் ஆண்டு யுத்த வெற்றியினை கொண்டாடும் நிகழ்வு…
-
- 0 replies
- 472 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு, யாழ்ப்பாண வரலாறு தெரிவதில்லை! இனத்தின் அடையாளங்களுக்காக பலர் உயிர் நீத்துள்ள இந்த மண்ணில் தற்போது அடையாளங்களை அடகு வைக்கின்ற பண்பாடு எமது சமுதாயத்தில் உருவாகியுள்ளது என தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு யாழ்ப்பாண வரலாறு தெரிவதில்லை அதை அறிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிரேஷ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் எழுதிய 'இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு' மற்றும் 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று தொல்லியல் ஆய்வு வட்டத்தலைவர் கந்தசாமி கிரிகரன் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்க…
-
- 1 reply
- 611 views
-
-
போலி வாக்குச் சீட்டுடன் பெண் வேட்பாளர் கைது போலி வாக்குச் சீட்டுகளுடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவரே சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் நேற்று தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நிலையம் ஒன்றை அலுவலகமாக பயன்படுத்தியமை மற்றும…
-
- 0 replies
- 196 views
-
-
மைத்திரிபால சிறிசேனவிடம்... குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(வியாழக்கிழமை) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாகவே மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து ம…
-
- 4 replies
- 385 views
-
-
-பாறுக் ஷிஹான்- யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால் மீள் குடியேற்றத்துக்கான விஷேட செயலணி ஊடாக 1200 மீட்டர் நீளம் கொண்ட குறித்த வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 48 லட்சம் ரூபா செலவில் அமைச்சரின் மீள் குடியேற்ற இணைப்பாளர் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீதியுடன் வடக்கு செயலணி நிதி ஒதுக்கீட்டில் 24 வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதி அமைச்சர…
-
- 0 replies
- 283 views
-
-
வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு" வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன. சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆழ ஊடுருவும் படையைப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையின் இறுதி நேர யுத்த விவகாரங்களை அறிவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது வீரகேசரி வாரவெளியீடு 10/31/2010 9:04:55 AM இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே. குரோவ்லியே தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கா…
-
- 0 replies
- 716 views
-
-
மேலும் 198 ஏக்கர் நிலத்தை விழுங்குகிறது சீனா! [Monday 2014-07-14 09:00] இலங்கையின் மேலும் பல ஏக்கர் அரச காணிகள் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளன. புதிய ஏற்பாட்டின்படி கம்பஹாவில் உள்ள 198 ஏக்கர் நிலம் சீன நிறுவனம் ஒன்றுக்கு உரித்தாகவுள்ளது. கண்டி - கொழும்பு வீதி அமைப்புக்காகவே இந்த நிலம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலம் தொடர்பில் ஏற்கனவே இலங்கை அரசாங்கமும் சீன தனியார் நிறுவனமும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஏற்கனவே சீன நிறுவனத்துக்கு கொழும்பு காலிமுகத்திடலில் வழங்கப்பட்ட நிலப் பகுதியில் தற்போது கட்டிட அமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.http://www.seithy.com/breifNews.php?newsID=113100&category=TamilNews&l…
-
- 0 replies
- 265 views
-
-
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த அறிவித்தல்! அமைதி வழி போராட்டக்காரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் ஜூலை 21 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாக மனித உ…
-
- 0 replies
- 172 views
-
-
ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் மிஸ்ஸிசாகா வளாகம் தனது முதலாவது தமிழ் அடையாள பரப்புரைப் போராட்டத்தை கடந்த வியாழன் கார்த்திகை 4ம் நாள் முன்னெடுத்தது. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த எமது மாவீரர்களை கௌரவிக்கும்முகமாகவும் அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்க்கும்முகமாகவும் கார்த்திகை மாதத்தை நினைவுகூரும் மாதமாக அறிவித்துள்ளது. தேசியக்கொடி வாரமான முதலாவது வாரத்தில், பல்கலைக்கழகத்தின் தெற்குக் கட்டிடத்தில் உள்ள நடைபாதையில் தகவல்சாவடி ஒன்று அமைத்து அந்த வழியே செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் வேற்றினத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கும் தமிழீழத் தேசியக்கொடியின் அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப்பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்தோடு பல்வேறுவகையான காட்சிப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சுமந்திரன் அழைப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் யாழ் மாவட்டத்தில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி 56 சபைகளில் போட்டியிட்டதாகவும் அதில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாய…
-
- 9 replies
- 841 views
-
-
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை, தேசிய ரீதியில்... நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்து. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் தேசிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான நிறுவன சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் மனித உரிமைகளை கடுமையாகப் பாதித்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. ஆழமான சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில…
-
- 0 replies
- 126 views
-
-
ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை உண்டு: வி.உருத்திரகுமாரன் திங்கட்கிழமைஇ 10 யூலை 2006 19:56 ஈழம் ஜச.விமலராஜா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. தீர்மானத்தின் கீழ் ஆயுத இறக்குமதிக்கான உரிமை உண்டு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரலில் சூரிச் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் "தற்போதைய அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுப் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம்: இலங்கையில் உள்ள தற்போதைய யுத்த நிறுத்தமானது கடந்த 2000 ஆம் ஆண்…
-
- 2 replies
- 1.5k views
-
-
மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கும் வைபவம் நவம்பர் மாதம் 20ம் நாள் சனிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 16 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாவீர்களின் பெற்றோர்கள், சகோதரர்களையும், மற்றும் உறவினர்களையும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.http://www.tharavu.com/2010/11/blog-post_6772.html
-
- 1 reply
- 557 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 23 இணைப்பாளர்கள்! [Wednesday 2014-07-23 09:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இணைப்புச் செயலாளர் ஒருவருக்கு மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மாதமொன்றுக்கு 170 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகின்றது. பெற்றோல் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 30, 000 ரூபா கொடுப்பனவும், 5000 ரூபா தொலைபேசி கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. இதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் …
-
- 1 reply
- 380 views
-
-
கடனை மறுசீரமைக்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பம் இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசக நிறுவனமான லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உடன்பாட்டை எட்டுவதே அதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தேவையான நிதி நிவாரணங்களை பெறுவதற்கு இந்த நாட்டில் கடன் மறுசீரமைப்பு அவசியம் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=165593
-
- 0 replies
- 141 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் மோதல்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 மாணவர்கள் உட்பட 14 பேருக்கு ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழக பாட நடவடிக்கையில் இணைந்துகொள்ள நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். நேற்று முன்தினம் வர்த்த பீட மாணவி ஒருவரை பகுடி வதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 5 மாணவர்களுக்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் இருவருக்குமாக 7 மாணவர்களுக்கும் ஒரு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா நுண்கலைக் கல்லூரியில் கடந்த மாதம் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 மாணவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 456 views
-
-
அமெரிக்காவை வளைத்துப்போட ஒபாமாவின் நண்பர் இமாட் யுபேரியை நாடுகின்றது அரசு! [Monday 2014-07-28 08:00] இலங்கை தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக ஜனாதிபதி ஒபாமாவின் நெருங்கிய நண்பர் ஒரு வரை அரசு பயன்படுத்த முனைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் நண்பரான இமாட் யுபேரி ஒரு பாகிஸ்தானியர் எனவும் ஒபாமாவுக்கான தேர்தல் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் எனவும், அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக இலங்கை அரசு அவரை அணுகி உள்ளது எனவும் தெரியவருகிறது. சர்வதேச அரங்கில் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் அரசு பெருமளவு பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது.. இலங்கை அரசு நான்கு ந…
-
- 1 reply
- 734 views
-
-
யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே. நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர். ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்…
-
- 35 replies
- 2.1k views
-
-
சின்னக்குட்டிகளின் மரதனோட்டம்...! முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மிரட்ச்சியுமாக நம்பிக்கையுடன் ஓடும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....! சலோம் சிறுவர் முன்பள்ளியின் மாணவர்களுக்கிடயேயான குறுந்தூர மரதனோட்டப்போட்டி தென்னிந்திய திருச்சபை குரு ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது..! 4 வயதுக்குட்பட்ட ஆண் பெண் சின்னகுட்டான்களின் ஓட்டம் தாயகத்தில் நடப்பது இதுதான் முதற்தடவை...! நண்றி சங்கதி
-
- 2 replies
- 1.3k views
-
-
கடந்த 26ம் நாள் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை என்று கூறி முல்லைத் தீவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன் போது சிறிலங்காப் படைகளால் வழங்கப்பட்ட கொப்பிகளையும் எழுது பொருட்களையும் பெற்றுக் கொள்ள போர்க்குற்றவாளி மேஐர் ஜென்ரல் ஜெகத் டயசின் காலில் விழுந்து வணங்க நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளனர். இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசுடன் சேர்தியங்குகின்ற முன்னாள் எம்.பி. கனகரத்தினம் முல்லைத் தீவு கல்வி பணிப்பாளர் உதயராணி ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/44781/64//d,fullart.aspx
-
- 5 replies
- 504 views
-
-
புலிகளின் குரல் வானொலி மீதான எதிரிகளின் புதிய தாக்குதல் விழிப்பாக இருங்கள் மக்களே! தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை துரோகிகளின் துணைகொண்டு ஒடுக்கிய சிறீலங்கா அரசின் அடுத்த நடவடிக்கையாக புலம்பெயர் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை குழப்ப ஊடகங்கள் மீதான தாக்குதலை எடுத்துவருகிறது. இப்பொழுது எவ்வித குழப்பத்துக்கும் கருத்துமோதல்களுக்கும் சிக்காமல் செயல்பட்டு வந்த “புலிகளின் குரல்” வானொலியை உடைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள் ஈடுபட்டுள்ளதாக “புலிகளின் குரல்” ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அன்பான தமிழ் மக்களே, தாயகத்தில் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு நிகழ்த்திய இனப்படுகொலையின் உச்சமான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து எமது தே…
-
- 0 replies
- 1.1k views
-