Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிலுள்ள பல இராணுவ முகாம்களின் மீது கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தை மறுத்து இராணுவப் பேச்சாளர் விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சமாதானமானதொரு சூழல்நிலை காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியும் உண்மைக்குப் புறம்பானது எனவும் இராணுவப் பிரிவு மேலும் அறி…

  2. மகிந்தராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நடவடிக்கைஎடுத்து வருவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செய்தி இணைத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது. போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை கைது செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த இணைத்தளம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மகிந்தவின் இளைய மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றம் அமைக்கவும் முயற்சி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36815/57//d,article_full.aspx

    • 1 reply
    • 732 views
  3. நாட்டின் ஏழாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். அந்த பதவிப்பிரமாண வைபவத்துக்காக 6,000ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/137379

  4. கொடிய யுத்தத்தை முடித்து வைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் மக்கள் அமைதியாக செயற்பட வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை ஜனாதிபதியாக்கிய அனைவருக்கும் எமது நன்றிகள். மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் நிச்சயமாக ஏற்படும்.மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்தேன். அப்போது அவர், மக்களின் முடிவை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.30 வருடகாலமாக நாட்டை சீரழித்த யுத்தத்தை இல்லாதொழித்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு என்றுமே எமது கெளரவ…

  5. ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடையவில்லை.சிங்கள பௌத்தர்களே தோல்வியைத் தழுவியுள்ளனர்.இந்த தோல்வி வேதனையளிக்கின்றது. அதிக காலம் செல்லும் முன் மக்களுக்கு இந்த உண்மை புலப்படும். ஏனைய இன சமூகங்கள் தங்களது இனம் பற்றி சிந்தித்து செயற்பட்ட போது, சிங்கள பௌத்தர்கள் இனம் பற்றி கரிசனை காட்டவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோற்றாலும் பௌத்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையை பொதுபல சேனா தொடர்ந்தும் ஆற்றும் என அவ…

  6. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது: ’’இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் தகுதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது. அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச் சொல்லி இனவெறிக் கொடூரனாக எந்த அதிபர் மாளிகையில் இருந்து ராஜபக்சே கொக்கரித்துச் சிரித்தாரோ... அந்த அதிபர் மாளிகையில…

  7. புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை 10 ஜனவரி 2015 புதிய அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த கால அரசாங்கங்களின் மனித உரிமை பிரச்சினைகள் குற்றச்சாட்டு;க்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகளை நிலைநாட்ட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பம் விரயமாக்கப்படக் கூடாது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியாவிற்கான பிரதம அதிகாரி ஆனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார். 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல், நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை…

  8. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை பாராட்டி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். நான் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த வேளை அந்த நாட்டில் பாரிய சக்தி உள்ளதை உணர்ந்தேன். நான் அவர் இந்த சக்தியை பயன்படுத்தி ஐக்கியப்பட்ட வளமான. ஸ்திரதன்மை வாய்ந்த நாட்டை அவர் தலைமைதாங்குவதற்கு நான் வாழ்த்துகிறேன். அமைதியான,ஜனநாயக தேர்தல் என்பதுஅதில் தொடர்புபட்டுள்ள அனைத்த…

  9. மனித உரிமை பிரச்சினைகளுக்கு மைத்திரி அரசிடம் தீர்வை எதிர்பார்க்கும் மேற்கு நாடுகள் JAN 10, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக் கூறியுள்ள, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள், மனித உரிமைகள் விவகாரத்தில் புதிய அரசாங்கம் தொடர்பான தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளன. சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொள்ளும், விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுள்ளார். “நான் சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, மிகப் பெரிய வாய்ப்புகள்…

  10. தப்பியோடலைத் தடுக்க விழிப்பு நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் JAN 10, 2015 | 0:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் விழப்பு நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் சலுகைகளைப் அனுபவித்த சிலர் நாட்டை விட்டுத் தப்பியோடலாம் என்பதாலேயே, கட்டுநாயக்க விமான நிலையம் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு முக்கிய அரசியல் புள்ளிகளும், முன்னாள் போராளித் தலைவர் ஒருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லலாம் என்பதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள…

  11. தேர்தல் பெறுபேறுகளை இடைநிறுத்தி, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மகிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்தபடி முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் சில பகுதிகளில் குழப்ப நிலையை உருவாக்கி, அதன் மூலம் நாட்டில் அவசரகால நிலமையை பிரகடனப்படுத்தி தேர்தல் பெறுபேறுகளை இடை நிறுத்த மகிந்தராஜபக்ஷ முயற்சித்துள்ளார். இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அவர் சட்ட மா அதிபரை கோரிய போதும், அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதனை அடுத்தே அவர் தமது தோல்வியை ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இறுதி நேரத்தில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் எதிர்கட்சித் தலைவராக இருந்த ரணில்விக்ரமசிங்கவை அழைத்து பாது…

  12. டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து 49 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேன போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்துள்ளார். தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்கு பகுதியிலும் ஸ்ரீசேனவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல. இரண்டாம் உலகப் போரில…

    • 1 reply
    • 659 views
  13. நள்ளிரவு வேளையில் அலரி மாளிகையை தக்க வைப்பதற்காக பாதுகாப்புப் படையினரின் உதவியை நாடிய முன்னால் ஜனாதிபதி மகிந்தவிற்கு எதிர்பாராத விளைவுகளே பதில்கள் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார் தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் நள்ளிரவில் நடந்த திடக்கிடும் சம்பவங்கள் வெளிவராத நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இந்தியப் பிரதமர் மோடியின் பங்குகளும் உண்டு. இன்னும் பல அதிரடி மாற்றகள் இலங்கையில் இடம் பெறலாம் என லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtyBTdKbhr6.html

  14. யாழ் நல்லூர்ப்பகுதியில் நிறுவப்பட்டு இருந்த ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானத்தவின் விளம்பரத் தட்டியை அங்கிருந்து அகற்றியுள்ளனர். http://www.pathivu.com/news/36805/57//d,article_full.aspx

  15. மைத்திரிக்கு சீனாவும் கை நீட்டுகிறது JAN 09, 2015 | 11:33by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசாங்கம் சீனாவுடன் நட்புரீதியான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ, “சிறிலங்காவில் சீனா முன்னெடுத்து வரும் திட்டங்களை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் சீனா பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் இருதரப்பு ஒத்துழைப்புடனான அபிவிருத்தி திட்டங்கள், இருநாட்டு மக்களுக்குமே நன்மை த…

  16. யுத்தத்தை ஒழித்த மஹிந்தவுக்கு என்றும் கௌரவம் இருக்குமாம்! பிரதமர் ரணில் சொல்கிறார்!! "முப்பது வருட காலமாக நாட்டிலிருந்த கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும்'' என்று புதிய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் மக்கள் அமைதியாக செயற்பட வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 6 ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக நேற்று தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் …

    • 1 reply
    • 1.5k views
  17. வியாழக்கிழமை இரவு ஆரம்பகட்ட முடிவுகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு சாதகமாக வெளியானதும் என்ன நடைபெற்றது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச தான் தோல்வியடையும் நிலை உருவாகலாம் என உணர்ந்ததும் அவசரகால நிலையை பிரகடனம் செய்து வாக்களிப்பை இரத்துச்செய்ய முயன்றார். அதற்காக தனக்கு நெருக்கமான சிரேஸ்ட அமைச்சர்களுடன் அவசரமாக உரையாடலை நடத்தினார்.. அதற்கு சிரேஸ்ட அமைச்சர்கள் இணங்கவில்லை. தொடர்ந்த இராணுவத் தளபதியுடனும் அராணுவ அதிகாரிகளுடனும் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். அவர்களும் மக்களின் தீர்ப்பை மீறி பலாத்காரமாக ஆட்சியை தொடர இடமளிக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளார்கள்... பொலிஸ்தரப்பின் பெரும்பான்மை ஏற்கனவே எதிரணியுடன் நெருக்கமாக இருந்தது... கடற்படை…

  18. யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிங்கபூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர் விமல் வீரவன்சவும் தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் நாட்டில் இருந்துவெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/news/36799/57//d,article_full.aspx

  19. மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக போட்டியிடமாட்டேன்! - புதிய ஜனாதிபதி மைத்திரி உறுதி. [Friday 2015-01-09 18:00] மீண்டுமொருமுறை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று மாலை பதவியேற்ற பின்னர் உரையாற்றிய அவர், அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லப்படும். என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் ந…

  20. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார் மைத்திரி! - பிரதமராக ரணில் சத்தியப்பிரமாணம் [Friday 2015-01-09 18:00] இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் ரணில் விக்ரமசிங்கவும் புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=124313&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 544 views
  21. புதிய அமைச்சரவையின் பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை நிறுவ உள்ளதாகவும் தற்போதைய அமைச்சரவை கலைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இன்று அல்லது நாளை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளக் கூடுமென எதிர்பார்க்கப…

    • 22 replies
    • 1.3k views
  22. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சீனாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு அவசியமான முக்கியமான, விடயமொன்றைஅழித்துவிட்டதாக சர்வதேச சஞ்சிகையொன்று கருத்து வெளியிட்டுள்ளது. குவார்ட்ஸ் எனும் அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் நடைபெற்றுள்ள இந்த தேர்தலுடன் சீனாவின் புதியபட்டுப்பாதை திட்டம், வரைபடத்திலிருந்தே அகற்றப்பட்டு விட்டது. சிறிசேனா சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் போர்ட் சிட்டி திட்டத்தை இரத்துச்செய்யப்பபோவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவை குறித்து எதனையும் குறிப்பிடாவிட்டாலும் வெளிநாட்டு கடன்களினால் உண்டாக கூடிய தீமை குறித்து தெரிவித்திருந்தார். சிறிசேனா ஆசியாவின் ஏனைய அயல்நாடுகளுடனு…

  23. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது. எனவே இந்தத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகி…

    • 47 replies
    • 2.5k views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்களிக்கவில்லை. அவர், சுகயீனமடைந்துள்ளதாகவும் அதனால் திருகோணமலைக்கு செல்லாமல் கொழும்பிலேயே தங்கிவிட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.tamilmirror.lk/137269

    • 16 replies
    • 936 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.