Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை பிசாசு என வர்ணித்து உரையாற்றிய சம்பவம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று தேர்தல் பரப்புரைக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தன்னைப் பிசாசு என உரையாற்றினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நான் சிறுவயதிலிருந்தே யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்பவன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் ஜனாதிபதியாகிய பின்னருமாக 11 தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றேன். உங்களில் எத்தனை பேருக்கு எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைத் தெரியும்? தேர்தலுக்கு முன்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கவில்லை. எனினும் என்னை நன்றாக உங்களுக்குத் தெரியும். எனவே த…

    • 10 replies
    • 849 views
  2. யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி துரையப்பா விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுகாதாரமும், கல்வியும் தனியார் துறையின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் துறை எனின் கல்லூரிகளுக்கு பணம் செலுத்தியே எதிர்காலத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் அதிகளவான பணத்தை நாம் செலவழிக்க வேண்டும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி தற்போதைய நடைமுறையில…

  3. ஜனவரி-08 அன்று சிறீலங்காவின் 08வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் சிறீலங்காவின் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சிகளின் சார்பில் மைத்திரிபால சிறிசேன உள்பட 19 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். புல்டோசர் போல எதிரில் வரும் எல்லாவற்றையும் ஏறி மிதித்து நசுக்கிக்கொண்டு செல்லும் மஹிந்த ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. எனவே ஆட்சி மாற்றம் பற்றி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், சாதாரண பொதுஜனங்கள் ‘சரத் மனமேந்திர’வின் அம்பு வில்லு சின்னத்துக்கு குத்தி ‘மைத்திரிபால சிறிசேன’வின் அன்னப்பறவையை கொன்று விடக்கூடாது. வாக்குச்சாவடிக்கு போகும் வழியில் பெட்டிக்கடையி…

  4. யாழ்ப்பாணத்தில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களிடையே இன்று முரண்பாடு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைக்காக இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார். தேலுக்கான பிரசாரக் கூட்டம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது. ஜனாதிபதி மேடைக்கு வருவதற்கு சற்று முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்களுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஈ.பி.டி.பி கட்சியினரே மேற்கொண்டிருந்தனர். கிராமங்கள் தோறும் கூட்டங்கள்…

  5. ஈழத்தமிழினத்தின் மீதான இனஅழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும் ஒருவரென எக்கனோமிஸ்ற் The Economist சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில், 2009-மே17ம் திகதி வரையிலான கடைசி இரண்டு வாரங்கள், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு வகித்தார் என எக்கனோமிஸ்ற் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் சிறிலங்காவின் அரசுத்தலைவராக இருக்கின்ற மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த நிலையில்அவர் வகித்திருந்த பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பினை மைத்திரிபால சிறிசேனவிடமே ஒப்படைந்திருந்தார். சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தொட…

  6. அபிவிருத்தியை விட மக்களின் அபிலாஷைகளே முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - அம்பிளாந்துறையில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பணிகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது. http://www.pathivu.com/news/36548/57//d,article_full.aspx

    • 0 replies
    • 246 views
  7. அமைதியானதும் வெளிப்படையானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின் நம்பகத் தன்மைக்கு அமைதியான சூழ்நிலை மிகவும் அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைப் பிரஜைகள் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இன்றி சுதந்திரமாக தங்களது தலைவர்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனநாயக மரபினை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு அனைத்து தரப்பினரையும் சாரும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/news/36547/57//d,article_full.aspx

    • 0 replies
    • 498 views
  8. பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த பிரசாரக்கூட்டமொன்று பொரளையில் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பின்வரும் கருத்துக்களைக் கூறினார், ஜனாதிபதி ஒருவர் 6 வருடங்கள் மாத்திரமே ஆட்சியில் இருக்க முடியும். மேலும் இரண்டு வருடங்கள் ஆட்சி புரியக்கூடிய காலம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், தற்போது தேர்தலை நடாத்துகின்றார். வெற்றி பெற முடிந்தால் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்து விட்டு, பின்னர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு அதிலிருந்து 6 வருடங்கள் ஆட்சி செய்யவே முயற்சிக்கின்றார். முன்னெடுக்கவுள்ள அரசியல்சீரழிவு நன்றா…

    • 0 replies
    • 414 views
  9. இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அங்கு சென்ற அவர், யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். இதன்போது வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பு, ஆளணி விடயங்கள், பணிக்கு அமர்த்தப்படும் ஆளணிக்கு வழங்கப்படும் பயிற்சிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்பு தொடர்பாக அரசாங்க அதிபரிடம் விளக்கமாக கேட்டறிந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். http://www.pathivu.com/news/36546/57…

    • 0 replies
    • 276 views
  10. அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம், புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் எழுந்திருக்கும் கேள்விகளுக்கான எமது நிலைப்பாட்டை முழுமையான தமிழ்த் தேசியத்தின் விடுதலை நோக்கிய நிலையில் இருந்து அறிவிக்கின்றோம். எமது நிலைப்பாடு என்பது நீண்டகால நோக்கின் அடிப்படையில், எமக்கு எமது மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில், அவர்களின் அரசியல் வேணவாவை பிரதிபலிக்கும் வகையில், நாடுகள் வாரியான மக்கள் அவைகளுக்கு இடையேயும் மற்றும் பல்வேறு தரப்புகளுடனும் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக…

  11. யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி துறையப்பா விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுகாதாரமும்இ கல்வியும் தனியார் துறையின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் துறை எனின் கல்லூரிகளுக்கு பணம் செலத்தியே எதிர்காலத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் அதிகளவான பணத்தை நாம் செலவழிக்க வேண்டும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி தற்போதைய நடைமுறையிலும் இல…

  12. காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையினை பெருமளவான பொதுமக்கள் பார்வையிட்டனர். http://onlineuthayan.com/News_More.php?id=591263772402705047

  13. வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தியின் இந்தக் கருத்து வந்துள்ளது. வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார். இந்நிலையில் அந்த நிலைப்பாட…

  14. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் முகவராக செயற்பட்டு வருவதோடு தற்போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலையங்களை மூடுவதாகவும், அபிவிருத்திகளை தடை செய்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அரசாங்க அதிபர் அரச அதிகாரிகளையும், மக்களையும் பயமுறுத்தி வருவதாகவும், மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்யுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் சிலிட்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 57 தையல் பயிற்சி நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தையல் பயிற்சிகள் மேற்கொள…

    • 0 replies
    • 542 views
  15. எமது நாட்டின் அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அலகே எமது வட மாகாண சபை. 1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவாக வெளியானதே இந்த 13 ஆவது திருத்தச் சட்டம். தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுப்பதாகக் கூறியே இந்தத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எங்கே அந்தச் சட்டத்தை தமிழ்ப் பேசும் மக்கள் சார்பாகக் கொண்டு வந்தால் சிங்கள மக்கள் தன்னைத் துரோகியாகக் கணிப்பார்களோ என்ற பயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடு முழுவதற்குத் தான் அதிகாரப் பரவலாக்கத்தைத் தரப்போவதாகக் கூறி 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் அதன் வழிவந்த 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கச் சட்டமான மாகாண சபைகள் சட்டத்தையும் கொண்டு…

  16. இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் காரணமாக நீங்கள் எல்லோரும் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளீர்கள் என்பதனை நான் அறிகின்றேன்.இந்த வேளையில் எதிர்வரும் 8 ஆம் திகதி எங்களுடைய அன்னச்சின்னம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ; இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் ஏன் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர் என்ற விடயத்தை நான் சுருக்கமாக உங…

  17. தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து கூட்டமைப்பு நடாத்தும் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்துகிறார் ஊடகவியலாளர் யதீந்திரா

    • 2 replies
    • 406 views
  18. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ‘நாம் இலங்கையர்கள்’ என்று சொன்னால் மஹிந்த அரசோ, ‘இல்லை, நீங்கள் வேற்று நாட்டவர்’ என்று கூறி கொச்சைப்படுத்துகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள தேர்தல், நம் நாட்டு ஜனாதிபதி தேர்தல், நாம் இந்த நாட்டு குடிமக்கள், நாம் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள், தேர்தலில் பங்குபற்றி, வாக்களித்து நமது தேசிய கடமையை நாம் செய்வோம் என வடக்கு, கிழக்க…

  19. வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 01, 2015) முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குகின்ற நடைமுறையை இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது. ஆரம்பத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும், அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கும் வசதியாக, ஐந்தாண்டுகால காத்திருப்பின்றி நேரடியாக இரட்டைக் குடியுரிமையை வழங்கிவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ரா…

  20. மகிந்தவின் பரப்புரைக்காக கைக்குழந்தைகள் உட்பட மக்களும் வெயிலில் காய்ந்து கருவாடாகிப் போய் யாழ் துரையப்பா மைதானத்தில் கூடியுள்ளனர். இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந் நிலையில் மகிந்தவின் பரப்புரைக்கு வந்தால் சமுர்த்தி கொடுப்பனவு என்றவுடன் கைக்குழந்தைகளுடன் சமுர்த்திப் பயனாளிகளும் பொது மக்களும் கைக் குழந்தைகளுடன் வெயில் காய்ந்து கருவாடாகிப் போய் உட்கார்ந்துள்ளனர். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கலந்துக்கொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு 450 இ.போ.ச பேரூந்துக்கள் மூலம் மக்கள் இக்கூட்டத்திற்று வரவழைக்கப்பட்டனர். பேரூந்த…

    • 0 replies
    • 569 views
  21. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் 27-12-2014 09:04 AM அநுராதபுரம் பிரதேசத்தில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று சனிக்கிழமை(27) பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆய்வுசெய்துள்ளார். இதேவேளை பொலன்னறுவைக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/136491#sthash.WZXHN1gl.dpuf

  22. சிறிலங்கா அதிபர் தேர்தல்: அவுஸ்ரேலியாவுக்கு குழப்பம் – சிட்னி மோர்னிங் ஹெரால்ட் JAN 02, 2015 | 0:19by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “ஆட்சி மாற்றத்தினால், அகதிகள் படகுகள் வருகையைத் தடுக்கும் கூட்டு நடவடிக்கை பாதிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கும், கேள்விக்கிடமற்ற ஆதரவை கைவிடுமாறு, அவுஸ்ரேலியாவின் அபோட் அரசாங்கத்திடம், மனித உரிமை சட்டவாளர்கள், கோரியுள்ளனர். உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறும், அவர்கள்,…

  23. கிளிநொச்சி பொறியியலாளர் வெளியிட்டுள்ள தமிழர் நாட்காட்டி! [Wednesday 2014-12-31 18:00] கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த நா.வை.மகேந்திராசா என்ற மின் பொறியியலாளர் 2015ஆம் ஆண்டுக்கான தமிழர் எழுத்துக்களுடன் கூடிய நாட்காட்டியை (கலண்டர்) வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் ஆண்டு 2046 எதிர்வரும் தைத்திருநாளில் பிறக்கின்றது. இதனையே தமிழ்ப் புதுவருடமாகக் கொள்வோரும் உள்ளனர். தமிழ் மாதங்களான சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை (ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதங்கள்) என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர்களின் படங்களைத் தாங்கியும் இந்நாட்காட்டியை வெளியிட்டுள்ளார். தமிழ் மீதான ஆர்வத்தால்,…

    • 16 replies
    • 3.5k views
  24. January 1, 2015 09:18 pm பொது எதிர்கட்சியில் குறைந்தளவு ஜனநாயகத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய அவர், கொழும்பில் மாலை நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பதிலாக மைத்திரிபாலவின் அரசாங்கத்தை கொண்டு வருவது என்பது, இலங்கையின் எரிந்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தற்காலிக நிவாரணமாகவே இருக்கும். மஹிந்தவுக்கு பதிலாக மைத்திரி என்பது ஒரு இடைவெளியை போன்றது. இது இலங்கையின் பிரச்சினைக்கு இறுதித்தீர்வை தராது. எனது இலங்கை வருகை தாமதமானதற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.