Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம், தொடர் மழை ஆகியவற்றின் காரணமாக கடந்த மூன்று தினங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நேற்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருந்த போதிலும் 53 பாடசாலைகள் இயங்கவில்லை என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள 1020 பாடசாலைகளுள் 967 பாடசாலைகளில் மட்டுமே நேற்று கல்வி நடவடிக்கை இடம்பெற்றது. நலன்புரி நிலையங்களாக செயற்பட்டு வந்த பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கும் படி கோரியிருந்த போதிலும், 24 பாடசாலைகளில் இன்னும் மக்கள் தங்க வைக்கப்பட்டு நலன்புரி நிலையங்களாகவே செயற்பட்டு வருன்றன. திருகோணமலை மாவட்டத்தில் 21 பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பாடசாலைகளும், அம்பாறை மாவட்டத்தில் ஒ…

  2. 3 மணி நேரம் காற்றுடன் பயங்கர மழை – புதுக்­கு­டி­யி­ருப்­பில் வீடு­கள் பல சேதம்!! புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்­றுக் காற்­று­டன் பெய்த மழை­கா­ர­ண­மாக தற்­கா­லிக வீடு­கள் பல சேத­ம­டைந்­தன. பயன்­தரு மரங்­கள் பல முறிந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. பிற்­ப­கல் 3.30 தொடக்­கம் 6 மணி­வரை புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வளை போன்ற பகு­தி­க­ளில் கடும் காற்­று­டன் மழை பெய்­தது. இடை­யிடை மின்­னல்­கள் பதி­வா­கின. பல இடங்­க­ளில் மின்­னல் தாக்கியுள்ளது. அத­னால் பல­ரது வீட்­டில் உள்ள இலத்­தி­ர­னி­யல் பொருள்­கள் பழு­த­டைந்­துள்­ளன என்று தெரி­விக்…

  3. ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் நிச்சயம் வெற்றிபெறும் - விஜய காந்த். ஈழத்தில் எங்கள் தமிழ் உறவுகள் தமது சொந்த மண்ணுக்காக ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப்போராடுகின்றனர். அவர்கள் போராட்டம் தற்போது தாமதமாக இருப்பது போன்று தோன்றினாலும் விரைவில் அவர்கள் தமது இலட்சியங்களை அடைந்தே தீர்வார்கள். அதில் எந்த தடைகளும் இருக்கப்போவதில்லை என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரும் நடிகருமான திரு.விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீண்டுகொண்டே போகின்றதே என ஊடக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே விஜயகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ச…

  4. டெங்கு நோயின் தாக்கத்தால் யாழில் மாணவன் மரணம்! வியாழன், 17 பெப்ரவரி 2011 03:02 யாழ். வடமராட்சியில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த 18 வயது மாணவன் ஒருவர் டெங்கு நோயின் தாக்கத்தல் இன்று யாழ்.போதனா வைத்தியசலையில் இறந்து உள்ளார். தர்மரட்ணம் துஷாந்தன் என்பவரே இறந்தவர் ஆவார். இவர் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம்- கலைப் பிரிவு பயின்று வந்தவர். நெல்லியடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று படிக்க சென்றவர் அங்கு மயக்கம் போட்டு விழுந்து இருக்கின்றார். உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின் மாலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் கொடுக்காமல் காலையில் இறந்து வ…

  5. வட பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே அதிகூடுதலான முதலீடான 300 முதல் 350 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டம் இதுவாகும். வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாகவும் இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒரு மணித்தியாலம் 15 நிமிடத்தில் பயணிக்க முடியும் என பெருந்தெருக்கள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். வடக்கு அதிவேகப்பாதை திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு பெருந்தெருக்கள் அமைச்சில் நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பல வருட த…

  6. தமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி தமிழ் மக்கள் பேரவைக்குரிய யாப்பு விரைவில் தயாரிக்கப்படவுள்ளதுடன், இளைஞர் மற்றும் யுவதிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வடக்க மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவரான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நடவடிக்கைகளுக்குத் தீர்வாக இளைஞர்களையும் யுவதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கரு…

  7. இலங்கையர்களின் நலனுக்கே இந்தியா அதிமுக்கியத்துவம் வழங்குகிறது - இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் By NANTHINI 16 JAN, 2023 | 04:19 PM (நா.தனுஜா) 'அயலகத்துக்கு முதலிடம்' என்ற கொள்கையின் பிரகாரம், இலங்கை மக்களின் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. கடந்த ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் அதனையே வெளிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் பொருட்டு இலங்கையிலுள்ள இந்திய கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பணிய…

  8. மட்டக்களப்பு மக்கள் குடியிருப்பு பகுதியில் கிபிர் குண்டுத் தாக்குதல். இன்று காலை 10 மணியளவில் மக்கள் குடியிருப்பு பகுதியான கட்டுமுறிவு, கதிரவெளி, பலாச்சேனை பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தின் வான்படைக்கலங்கள் குணடுத் தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன. இவ் வான்கலங்கள் நான்கு தடவைகளில் 8 குண்டுகளை வீசியுள்ளன. இத்தாக்குதலில் நான்கு வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த மூன்று நாட்களாக இப்பிரதேசங்களில் சிறீலங்கா இராணுத்தின் எறிகணைத் தாக்குதலால் மக்கள் வாகரை வைத்தியாசாலை பகுதில் இடம்பெயர்ந்தமையால் பெருமளவில் மக்கள் உயிரிளப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.pathivu.com

  9. வெள்ளி விழாவுக்கு படைத் தரப்பை அழைத்தது ஏன்? உதயன் பத்திரிகை விளக்கம்! வியாழன், 24 பெப்ரவரி 2011 22:38 .உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாவுக்கு படைத் தரப்பை அழைத்தமைக்கு புலம்பெயர் தமிழ் ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து உள்ளது அப்பத்திரிகை. இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. அறிக்கையை அப்படியே பிரசுரிக்கின்றோம். "உதயன் அதன் இருபத்தைந்தாவது நிறைவு விழாவைக் கொண்டாடி பூரிப்புடன் ஊடகப் பயணத்தில் முன்னோக்கி செல்லும் நேரிய பணியில் நிமிர்ந்து நிற்கிறது. நெருக்கடிகள் மேல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும் உதயன் தொடர்ந்தும் தேசியத்தின் குரலாக திடசங்கற்பத்துடன் நடை பயின்று வந்தது. இன்னும் நடை பயிலும். எனினும் இ…

  10. உண்மையை சிலர் மறந்து விட்டனர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரை நாமே ஜனாதிபதியாக்கினோம்; சத்தியத்துடன் களமிறங்குவோம் என்கிறார் ஹரீன் (எம்.எம்.மின்ஹாஜ்) சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­களை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். எனினும் தற்­போது அதனை ஒரு சிலர் மறந்­து­விட்­டனர். அதனை நாம் மீண்டும் நினை­வூட்­டு­வ­தற்கு உண்­மை­க­ளுடன் கள மி­றங்­க­வுள்ளோம் என ஐக்­கிய தேசி யக் கட்­சியின் ஊடக மற்றும் தொடர்­பாடல்துறை பிரதா­னியும் அமைச்­ச­ரு­மான ஹரீன்பெர்னா ண்டோ தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்சி சார்ந்த உண் மைகள் மூடி மறைக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே, அதனை வெளிப்­ப­டுத்த வேண்டும். எமது பிர­சார பணி­களை சத்­தியம் என்ற…

  11. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் ! 25 JAN, 2023 | 09:15 PM தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். இன்று (ஜனவரி 25) முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/146699

  12. பூம்புகாரில் நேற்று மீழ் குடியேற்ற நிகழ்வு நடந்தது. உண்மையில் பூம்புகாரில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மக்கள் ஆங்காங்கே சென்று விட்டனர். ஆனால் எல்லா மக்களும் சென்ற பின்னர் ஒரு விழா எடுப்போம் என்ற திட்டத்திற்கு அமையவே நேற்று மீழ் குடியேற்ற விழா நடந்தது. மீழ் குடியேறிய மக்கள் தமக்கு நல்ல வரவேற்பளிப்பார்கள் என்ற நினைப்பில் டக்ளஸ் அங்கு சென்றிருந்தார். ஆனால் மக்கள் அங்கு உரத்த தொனியில் எல்லோரும் சேர்ந்து தகரத்துடன் எப்பிடி மீழ் குடியேற முடியும். எமக்கு உதவிகள் எதுவும் தரப்படவிலை. உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சத்தம் எழுப்பினர். இதனால் அதிர்ந்து போன டக்ளஸ் தனது சக்காக்களை விட்டு எல்லாம் ஆறுதலாக கதைப்போம், தனிப்பட்ட ரீதியில் உங்கள் குறைகளை தாருங்கள் என கூற…

  13. போராட்டம் நடத்த வந்த இடத்தில் மோதிக் கொண்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!! கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் இன்று (08.06.2018) முற்றுகையிடப்பட்டது. அதில் ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொந்தளித்தனர். கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சப…

  14. உல்லாசப்பயணத்துறையில் சிறி லங்காவுக்கு பெரும் வீழ்ச்சி. சிறி லங்காவில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகள், அதன் உல்லாசப் பயணத்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆழிப்பேரலைப் பேரனர்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் இந்த வருடம் சிறி லங்காவின் விடுதிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என கணிக்கப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறை விடுதிகள் சபையைச் சேர்ந்த கூரே தெரிவிக்கையில், வழமையாக 80 வீதம் பயணிகளைக் கொண்டிருக்கும் விடுதிகள் தற்போது 20 வீதப் பயணிகளையே கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டுடன் ஒப…

  15. -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு, ஏறாவூர்- சவுக்கடி கடலில் கே.எல் ஜவாஹிர் என்பவரது கரை வலையில், பெரும் எண்ணிக்கையிலான கருக்குப் பாரை ரக மீன்கள், வெள்ளிக்கிழமை (31) பிடிபட்டுள்ளன. சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மீனும் தலா 7 கிலோகிராம் நிறையுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://tamil.dailymirror.lk/--main/131598-2014-11-01-05-12-21.html

  16. அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!- வடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்தித்துப் பரஸ்பர பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இது விடிய விடிய இராமாயணம் விடிந்தபின் சீதைக்கு இராமன் என்ன முறை என்று கேட்ட புத்திசாலியின் கதையாக இருக்கிறது. நெருப்புச் சுடும் என்பதை முட்டாள் கையை வைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி நெருப்…

  17. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக குற்றம்சாட்டிய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வத்தளை மின்மாற்றியை குண்டு வைத்து தகர்த்தவர்கள் யாரென்பதும் தமக்குத் தெரியுமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அரசாங்கத்தின் கௌரவம், சமாதானம் இன்று வீதிகளில் பஸ்களில் குண்டுகளாக வெடிக்கின்றது. நாட்டில் இடம்பெறும் சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமேயுள்ளது. இவ்வாறான குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் ஓர் யுத்த சூழல் ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர். நாட்டின் பொரு…

  18. "அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிப்போம்" ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்­கான அழுத்­தங்­களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் எடுத்துரைத்துள்ளார். வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை நேற்று முன்­தினம் மாலை அமெ­ரிக்கத் தூதுவர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்­பின்­போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது அதுல் கெசாப் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐ.நா.மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­ய…

  19. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசைய்யா இளந்திரையன், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், 70-களில் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த போது கழுத்தில் மாட்டிய சயனைட்டை இன…

    • 0 replies
    • 821 views
  20. தமிழர் பூமியில் சிங்களவர்கள் தாராளமாகக் குடியேறட்டும்: தடுப்போர் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன். மீள்குடியேற்றப் பிரதியமைசச்ர் கூறுகிறார் [Friday, 2011-04-01 02:15:38] சிங்களவர்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்கக் கூடாது என்றும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயககமூர்தி முரளிதரன், அவ்வாறு தடுப்ப முயங்சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடபடும் எனவும் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெவிளியாமடு பகுதியில் கால்நடை மேச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்களவர்கள் அத்துமீறி காணிகளை அபகரித்து அதில் விவசாயம் செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துஅத…

  21. இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆயினும், இந்த நடவடிக்கை மாகாணசபை உறுப்பினர்களிடையே குழப்ப நிலையை உருவாக்கும் என்றும், அவ்வாறு வழங்குவதாக இருந்தால் எல்லா உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வழங்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், எட்டு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படுமானால், அவற்றை உறுப்பினர்கள் யாரும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி சபை உறுப்பினர்களுக்கு மொட்டைக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வடமாகாணசபை உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்று, பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது, சபையின் 38 உறுப்பினர்…

  22. பெரும் நிதியில் அமைக்கப்பட்ட -வன்னேரிக்குளம் சுற்றுலா மையம்- கவனிப்பாரற்று!! வன்னேரிக்குளத்தில் பெரும் நிதிச் செயலவில் கட்டப்பட்ட சுற்றுலா மையம் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ளது. இயற்கை அழகுடன் கூடிய குறித்த பகுதியில் பல அரிய பறவைகள் தங்கி வாழ்ந்தன. தற்போது அவை இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனவே உரியவர்கள் குறித்த சுற்றுலா மையத்தை மீள்சீரமைப்புச் செய்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் குறித்த தளத்தை மாற்றியமைக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்…

  23. தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட…

  24. எத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக எடுத்த தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­ற­முமில்லை. திட்­ட­மிட்­ட­படி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். பொலன்­ந­று­வையில் சீன-­இ­லங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், நாட்டில் அ…

  25. இராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி! -விதுரன்- புதிதாக வந்துள்ள அதி நவீன ஆயுதங்களுடன் அடுத்த கட்ட தாக்குதலுக்கு அரசு திட்டம் நாட்டில் ஸ்திரமற்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் போரில் அரசு குதித்துள்ள நிலையில் பெரும் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கட்சிகளைப் பிரித்து ஆட்களை இழுத்து அரசைப் பலப்படுத்த ஜனாதிபதி மகிந்த முயல்கையில் அவரது கட்சிக்குள் பெரும் பிளவு தோன்றியுள்ளது. இந்த அரசு மிகவும் ஸ்திரமாயிருப்பது போன்றதொரு தோற்றப்பாடிருந்தாலும் இது உண்மையிலேயே ஸ்திரமற்றதொரு அரசாகவேயுள்ளது. ஒவ்வொரு கட்சியையும் பிளவுபடுத்தி அமைச்சுப் பதவி ஆசை காட்டி ஆட்களைத் தன்வசப்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளே இல்லையென்றதொரு நிலையை ஜனாதிபதி மகிந்த உருவ…

    • 0 replies
    • 550 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.