ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐ.தே.க விற்கு வாக்களிக்கவும் - ஜானக பெரேரா வடக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவும் என மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மாத்திரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 712 views
-
-
வைத்தியத்துறை உட்பட பல்வேறுபட்ட துறைகளில் 30,000பேருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான உடன்படிக்கையொன்று இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளது. அமெரிக்க வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு பதிவு பணியகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகங்களிடையே இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது 5 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தத்தின்போது இலங்கை சார்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஜி.எஸ்.விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர். தாதியர்களாக இணைக்கப்படுபவர்கள் 3வருட கால ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் முதலாவது குழு விரைவில் அ…
-
- 0 replies
- 305 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தே…
-
- 3 replies
- 765 views
-
-
Published By: Vishnu 23 Sep, 2025 | 07:03 PM கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுவன் எப்.எம். அய்னா ஹம்தி பஸ்லிம், வைத்தியர்களின் அலட்சியத்தால் இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக அமைதி போராட்டம் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிறுவனின் உறவினர்கள், சிறுவர் உரிமை அமைப்புகள் மற்றும் பல பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர். (படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்) கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம் | Virakesari.lk
-
- 0 replies
- 77 views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் செல்ல அஞ்சுகின்றனர் - இரா.சம்பந்தன் வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யுத்த முன்னெடுப்புளால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயந்துள்ள நிலையில், மேலும் மூவாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து மரங்களில் கீழ் வாழுகின்றனர். இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தால் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தப்படுவார்கள் என அஞ்சுகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பாதுகாப்பான பிரதேசம் என்பது வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள…
-
- 0 replies
- 531 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய தினம் பான் கீ மூன் மற்றும் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் சந்தித்த பின்னர், பான் கீ மூன் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. இதற்காக சில கேள்விகளை இன்னர் சிட்டி பிரஸ் முன்னதாகவே சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும் பான் கீ மூன் உரையாற்றும் போது, கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பிற்பகல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச்செயலாளரது ஊடக சந்திப்பும் இடைநிறுத்தப்பட்டது. அத்துடன் வழமையாக இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகளின் பேச்சாளர…
-
- 0 replies
- 508 views
-
-
மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்; ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன் இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் தீர்மானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளை, இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனீவாவுக்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அங்கு நடைபெற்ற…
-
- 0 replies
- 98 views
-
-
பிரபாகரனையும் யுத்தத்தையும் காட்டி அரசு மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது -ஐ.தே.க. குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 9/4/2008 9:28:20 AM - காலங்கடந்த இரத்தப் பரிமாற்று சுத்திகரிப்பு உறைகள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைகளை மூடி மறைப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் சுகாதார அமைச்சரும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா முயற்சி செய்து வருகிறார். பிரபாகரனையும், யுத்தத்தையும் காட்டி அரசாங்கம் மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது என்று ஐ.தே. கட்சி குற்றம் சாட்டுகிறது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே. கட்சி எம்.பி டாக்டர் ஜயலத் ஜயவர்தன இக்குற்றச்சாட்டை ச…
-
- 0 replies
- 759 views
-
-
தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்! சிறீலங்கா, விளையாட்டு செய்திகள் | ADMIN | OCTOBER 6, 2012 AT 20:20 இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வினின் அபாரமான பந்துவீசும் திறமையைக் கண்டு, மேலும் மேலும் தமிழன் எனப் பெருமைப்பட்டனர். இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இறுதிப்…
-
- 17 replies
- 1.2k views
-
-
வவுனியா படைத் தலைமையகம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கான தொடக்கப்புள்ளி என, தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். படைத்தளத்திற்குள் நுழைந்த கரும்புலிகள் றாடர் கருவியை தாக்கியழித்த பின்னர், வான் புலிகளின் வானூர்திகளை றாடரில் அவதானித்திருப்பதாக சிறீலங்கா படையினர் கூறிவருவது வேடிக்கையான விடயம் எனவும் அவர் கூறினார். வவுனியாவில் இருந்து வன்னிக்கான சிறீலங்கா படைகளின் தலைமையகம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார் http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=109
-
- 3 replies
- 3.3k views
-
-
சக்கரக்கதிரைகளிலேயே தங்கத்தை கடத்த முயற்சி 10.5 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டுக்குள் கடத்திவர முற்பட்ட பெண்கள் மூவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கப் பிரிவு அதிகாரிகள், நேற்றுத் திங்கட்கிழமை (23) அதிகாலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கடத்திவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து இலங்கை வந்த விமானமொன்றிலேயே, மேற்படி மூன்று பெண்களும் வருகை தந்துள்ளனர். கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த மூவரும் 40-50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அறியமுடிகின்றது. அதிலொருவர், வெளிநாட்டுக்கு முதன்முறையாக சென்று திரும்…
-
- 0 replies
- 280 views
-
-
இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையில் சமாதானம் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒருபுறம் அரசியல் தீர்வின் மூலம் சமாதானம் எட்டப்பட வேண்டும் என்று கூறும் இந்தியா மறுபுறத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அண்iயில் வவுனியா விமானப்படைத்தளம் மீதான தாக்குதல்களின் மூலம் இந்த விடயம் முழு சர்வதேசத்திற்கும் அம்பலமாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் மூலம் இலங்கைப் படையினரின் பலவீனமும், இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடமும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தப்பட்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி அரசியல் தீர்வு முன்வைக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தல் October 17, 2012 10:03 am இலங்கை இனப்பிரச்சினைக்கு துரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இலங்கை மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த போது பான் கீ மூன் இவ்வாறு கூறியுள்ளார். யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்…
-
- 0 replies
- 421 views
-
-
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள 11 அமைப்புக்களும் இணைந்து அரசியல் தீர்வு யோசனையை ஒன்றை உருவாக்கியுள்ளதாக, முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். இதனை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158525&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 241 views
-
-
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு! 06 Nov, 2025 | 05:29 PM புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மை தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இம்மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பினை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (6) உயர்நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட …
-
- 2 replies
- 170 views
-
-
அயர்ந்து தூங்கி அகப்பட்ட திருடன் -செல்வநாயகம் கபிலன் புத்தூர், வீரவாணி நரசிம்ம கோயில் உண்டிலை உடைத்து, அதிலிருந்த பணத்தைத் திருடிய சந்தேகநபர், அயர்ந்து தூங்கியதால் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று புதன்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் சென்று உண்டிலை உடைத்துத் திருடிய மேற்படி நபர், அந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஆள்நடமாற்றம் அற்ற இடத்தில், தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியின் கரையில் நிறுத்திவிட்டு, ஓரமாக நித்திரை கொண்டுள்ளார். வீதி ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளை அவதானித்து தேடுதல் நடத்தினர். இதன்போது, ச…
-
- 2 replies
- 512 views
-
-
ராஜீவ் காந்தி கொலையுடன் வைகோ, கருணாநிதிக்கு தொடர்பு? இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் கட்டளைப்படி தி.மு.க.தலைவர் கருணாநிதி மற்றும் வைகோவிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை என இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரி கே.ரகோத்தமன் குற்றம் சாட்டி உள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முதன்மை விசாரணை அதிகாரி ரகோத்தமன், “ராஜீவ் காந்தி கொலைக்கான கூட்டுச் சதி - சிபிஐ கோப்புகளிலிருந்து´´ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி உள்ளார். விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் புகலிடமான யாழ்ப்பாணத்திற்கு வைகோ சென்று வந்தது தொடர்பான ´இன் டைகர்´ஸ் கேவ்´ உள்ளிட்ட 500 விடியோ கேசட்கள் பறிமுதல் செய்…
-
- 1 reply
- 940 views
-
-
🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை! adminDecember 8, 2025 மன்னார் UCMAS மாணவர்கள் ஜோர்ஜியாவில் பட்டொளி வீசிப் பறந்தனர்! ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்! இந்தச் சாதனைப் பட்டியலில், மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் பங்கேற்று, இலங்கைப் பெயரையும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர். 🥇 வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள் மன்னார் மாவட்டத்தின் சார்பில் வெற்றி கிண்ணங்களைப் பெற்ற மாணவர்களில், வின்சென்ட் செஷான் ஜெத்னியல் (மன். புனித சேவியர் ஆண்கள் தேசி…
-
- 0 replies
- 107 views
-
-
கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 2.5k views
-
-
கலாமுக்கு சிலை -சொர்ணகுமார் சொரூபன் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தையுமாகிய மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து அப்துல் காலமின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்தனர். இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த அழகிய திருவுருவச் சிலை யாழ் பொது நூலகத்திலுள்ள இந்திய கோணர் வளாத்தில்…
-
- 9 replies
- 920 views
-
-
வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் ! Published By: Digital Desk 1 19 Dec, 2025 | 10:19 AM வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸார் மேல…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
தமிழர் விரோத அணியில் கூட்டு இணையும் சக்திகள் [19 ஒக்டோபர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:05 மு.ப இலங்கை]/td> ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரச படையினராலும் கடந்த கால ஆட்சியாளர்களினாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களை நல்லாட்சி அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.சிவமோகன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமது இனத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். எனினும், நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம் தனது கடமைகளை புறந்தள்ளிவிட்டு, குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. …
-
- 0 replies
- 239 views
-
-
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல்! நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது மிகவும் ஆபத்தான கொரோனா தொற்றுநோய் பரவி வருவதனால் உணவகங்களில் உணவு உண்ணும் போது பின்வரும் நடைமுறைகளை அவதானமாகக் கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1) இயலுமானவரை உணவினை வாங்கிச் சென்று உண்ணுங்கள். 2) உணவகத்தின் உள்ளே இருவருக்கு இடையி…
-
- 0 replies
- 298 views
-
-
யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - எண்மர் கைது! 28 Dec, 2025 | 05:23 PM யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/234604
-
- 0 replies
- 297 views
- 1 follower
-