Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் முற்றமும் முக்காடு நீங்கிய தமிழின வெறுப்பும் - பெ.மணியரசன் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் பற்றி சில திறனாய்வுகள் வந்து கொண்டுள்ளன. அவை பற்றி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாட்டைத் தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழினத்தின் பொதுச் செல்வம். - கல்லில் செதுக்கப்பட்ட தமிழினத்தின் தழும்புகள். - கால காலத்திற்கும் காக்கப்படவேண்டிய இனக் கருவூலம். இக்கலைப் படைப்பை நிறுவித் தந்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்களுக்குத் தமிழினம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. அதே வேளை முற்றம் குறித்தும் முற்றத் திறப்புவிழா குறித்தும் செய்யப்படும் சில திறனாய்வுகள் குறித்தும் பேசவேண்டும். முற்றத்தின் திறப்பு விழாவிற்க…

    • 0 replies
    • 426 views
  2. இலங்கையில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டில் 100 ஆண்களுக்கு, 94 பெண்கள் என்ற நிலையில் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டீ.சீ.ஏ. குணவர்தன தெரிவித்தார். குடிசன மதிப்பீட்டின் தரவுகளுக்கு அமையவே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக டீ.சீ.ஏ.குணவர்தன மேலும் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=98253&category=TamilNews&language=tamil

    • 9 replies
    • 927 views
  3. ஆலயங்களில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துதல், ஆலயத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாத்தல், மற்றும் மக்களின் வாழ்வு உயர்வடையச் செய்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூலப் பரம்பொருளான சிவனை ஆராதிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை தேவஸ்தானத்தில் இடம் பெறவுள்ளது. சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த ஆராதனை நிகழ்வில் சிவாச்சாரியார்கள், திருமுறையாளர்கள், நாதஸ்வர, தவில் வித்துவான்கள், இசை ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆலய பரிபாலன சபையினர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து மாமன்றப் பிரதிநிதிகள், சாயிசமித்து மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட சகலரையும் கலந்துகொள்ளுமாறு…

  4. இலங்கையில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்துள்ளதாகவும் அதனைக் கட்டுப்படுத்தத் தவறினால் எதிர்கால விளைவுகள் மிகவும் மோசமாகிப்போய் விடும் என்றும் எய்ட்ஸ் நோய்த் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மையத்தின் தலைவரான டாக்டர் சிசிர லியனகே கருத்துத் தெரிவிக்கையில், ஆயிரத்து 808 இலங்கையர்கள் இந்த ஆட்கொல்லி நோய்க்கு இதுவரை இலக்காகியுள்ளதாகவும் அவர்களுள் 451 பேர் நோய் முற்றிய நிலையில் காணப்படுவதாகவும் கூறினார். எய்ட்ஸ் நோய்க்கு இலக்கானவர்களில் 95 சதவீதமானோர்க்குப் பாதுகாப்பற்ற உடலுறவு மூலமே நோய் தொற்றியுள்ளது எனவும், நான்கு சதவீதமான பிள்ளைகளுக்குக் கர்ப்பிணித் தாய்மார்கள் மூலமாகவும், ஒரு சதவீதமானவர்களுக்கு இரத்த மாற்றீடு மூலமாகவும் இந்த நோய் தொற்றியுள்ளது …

  5. தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை என அமைச்சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு - செல­வுத்­திட்­டத்தில் சட்­டமும் ஒழுங்கும் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி ஆகிய இரு அமைச்­சுக்­க­ளுக்­கான நிதி யொதுக்­கீட்டு முன்­மொ­ழிவு தொடர்­பான குழு­நி­லையின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து பேசு­கை­யி­லேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகம், சுயா­தீ­ன­மான தேர்தல், புனர்­வாழ்வு மற்றும் மனித உ ரிமைகள் குறித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இந்த சபையில் உரை­நி­கழ்த்­தி­யி­ருந்தார். …

  6. பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றாத நிலையில் கனடாவின் சார்பில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராய் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது இலங்கை பயணம் பற்றிய விடயத்தில் அதிருப்தியை வெளியிட்டார். இச்சந்திப்பின் பின்னர் தமிழ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல், இனங்களுக்கான ஒருமைப்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டார். அண்மையில் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் ஒபராய் இதனை வெளியிட்டார். பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்த தீபக் ஒபராய் மக்கள் பிரதிநிதிகள்,மனித உரிமை ஆர்வலர்கள்,யாழ் கத்தோலிக்க ஆயர்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு சந்திப்பு…

  7. பலம் பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளால் சர்வதேசத்தின் முன்னிலையில் எம்மை மண்டியிட வைக்கவே முடியாது. அவற்றின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். ஏனெனில் அவற்றுக்கு எதிரான சக்திகளுடன் கை கோர்த்தே நாம் பயணிக்கிறோம் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: பலமிக்க நாடுகளுக்கு அடிபணியாது துணிவுடன் செயற்படுவதன் காரணமாகவே எமது ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்புகள் தலைதூக்குகின்றன. இவற்றை எம்மால் தோல்வியடையச் செய்ய முடியும். ஏனெனில் ஏகாதிபதியவாதிகளுக்கு எதிரான சக்திகளுடனேயே நாம் கைகோர்த்த…

  8. இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சிகளை அதிகரிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள் அதிகரிக்கப்படவில்லை என இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி தெரிவித்துள்ளார். எனினும், அண்டை நாடான இலங்கை போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு துறைசார் பயிற்சிகளை வழங்குவது இந்தியாவிற்கே நன்மையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மட்டுமன்றி பிராந்திய வலயத்தின் அண்டை நாடுகளுடனான பாதுகாப்புத்துறை சார் பயிற்சிகளை அதிகரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். புதிதாக பயிற்சி நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடன் மட்டும் விசேட பாதுகாப்பு உறவுகள் …

  9. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து நடத்தப்பட்ட குழு விவாதத்தில் பங்கெடுக்க விடுக்கப்பட்ட அழைப்பை பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் நிராகரித்து விட்டார். புரொன்ட்லைன் கிளப்பில் நடந்த இந்த குழு நிலை விவாதத்தில், சிறிலங்காவின் முடிவுறாப் போர் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் பிரான்செஸ் ஹரிசன், சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளர் கலும் மக்ரே, சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனை முகாமையாளர் சோனியா ஸ்கீற்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு கருத்து வெளியிட்ட கலும் மக்ரே, “சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நம்பகத்தன்மை இல்லை. சிறிலங்காவுக்கு விசாரணை ஆணைக்குழுக்களை நியமிக்கும் நீண்ட முடிவற்ற …

  10. "சீனாவில் புலம்பெயர் தமிழர்கள் கிடையாது சீனாவும் அழுத்தம் கொடுக்கிறது" யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்த நிறைவின் போது ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட தரப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் நட்பு நாடான சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சீனாவில் புலம்பெயர் தமிழர்கள் கிடையாது எனவும், சீனாவின் மீது புலம்பெயர் தமிழர்கள் அழுத்தம் செலுத்தினர் என எவராலும் குறிப்பிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டி…

  11. நிவாரணம் இல்லாத வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத்திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு - செலவுத்திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயதை 60 இல் இருந்து 63 ஆக அதிகரித்தமையை உடனடியாக இரத்துச் செய்", ' விவசாயிகளின் நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு" போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. P…

  12. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க …

    • 11 replies
    • 1.5k views
  13. 2013ம் ஆண்டில் சிறிலங்காவின் மிகப்பெரிய நேரடி முதலீட்டாளராக சீனா மாறியுள்ளது. சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து இது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டில் 2 பில்லியன் வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இலக்கு நிர்ணயித்திருந்தது. எனினும், நொவம்பர் மாதம் வரை, 1.2 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளையே சிறிலங்காவினால் ஈர்க்க முடிந்துள்ளது. இதில் சீன நிறுவனங்கள் 24 சதவீத முதலீட்டை செய்துள்ளன. அடுத்து, 12 சதவீதம் ஹொங்கொங் முதலீடு செய்துள்ளது. 10 சதவீத முதலீடுகளுடன் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மலேசியாவும், நெதர்லாந்தும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன…

  14. போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான நிஷா தேசாய் பிஸ்வால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கை அரசிடம் சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை குறைந்து விடும். குறிப்பாக, பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தனது சொந்தமான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். …

  15. சிங்கள மக்கள் தமிழ் மொழியைப் படிக்காது தமிழர்கள் சிங்கள மொழியைப் படிக்க வேண்டும். பெளத்த நாட்டில் சிங்கள பெளத்த மதத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த வர்­க­ளையும் மத்­திய கிழக்கு கிறிஸ்­த­வர்­க­ளையும் பாது­காத்து அடைக்­கலம் கொடுக்க இலங்கை அநாதை மட­மல்ல. தீவி­ர­வா­தி­க­ளுக்கு அடைக்­கலம் கொடுத்து நாட்டை சீர­ழிக்க நாம் விரும்­ப­வில்லை எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது. பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்­பி­னரால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ்­வ­மைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்­தனர்.இது தொடர்­பாக பொது­பல சேனா அமை ப்பின் பொதுச்­செ­ய­லாளர் க…

  16. சிறிலங்காவினால் மன்னார்க்குடாவின் கடலடித்தளத்தில் விற்பனை செய்யப்படவுள்ள 13 எண்ணெய்த் தொகுதிகளில் M4,M5 மற்றும் M6 ஆகிய மூன்று தொகுதிகளையும் வாங்குவதற்கான ஏலத்தில் இந்திய அரசின் அனைத்துலக பெற்றோலிய மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனமான ONGC Videsh Ltd [OVL] வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் எண்ணெய்த் தொகுதிகள் இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களில் செல்வாக்குச் செலுத்துகின்றன. Exxon Mobil Corp, Royal Dutch Shell பிரான்சின் Total, இத்தாலியின் Eni, சீனாவின் Sinopec, CNPC போன்ற பிரபலமான பெற்றோலிய நிறுவனங்கள் சிறிலங்காவின் எண்ணெய்த் தொகுதிகளைக் கொள்வனவு செய்வதில் தமது விருப்பத்தைத் தெரிவித்திருந்தன. சிறிலங்காவின் எண்ணெய்த் தொகுதிகளை ஏலம் கூற…

    • 2 replies
    • 513 views
  17. ஊழல் குறித்த பட்டியலில் இலங்கை 91வது இடத்தில்! [Wednesday, 2013-12-04 09:31:59] ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் ஊழல் தொடர்பான குறிகாட்டியில் இலங்கை 91 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.37 புள்ளிகளைப் பெற்று இலங்கை 91 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 177 நாடுகள் இந்த தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.ஆப்கானிஸ்தான், வடகொரியா, சோமாலியா பங்களாதேஸ் ஆகிய நாடுகள் மிகவும் மோசமான ஊழல்களை கொண்ட நாடுகளாக தரப்படுத்தப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=98261&category=TamilNews&language=tamil

  18. வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது. "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது. இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத்…

    • 6 replies
    • 2.7k views
  19. சபையில் குழப்­பம்; சுமந்­திரன் ஆவேசம் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சு மீதான விவாதம் நேற்று இரண்டாம் நாள் குழு­நி­லையில் விவா­திக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மங்­கள சம­ர­வீர எம்.பி.க்கு தொடர்ந்தும் ஆளும் கட்­சி­யினர் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்த சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷ உங்­க­ளது (ஆளும் கட்­சி­யி­னரைப் பார்த்து) நட­வ­டிக்­கை­களை பார்க்­கையில் மங்­கள சம­ர­வீர எம்.பி.யின் கருத்­து­களில் உண்மை இருக்­கி­றது என்றே எண்ணத் தோன்­று­கின்­றது எனத் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு- செலவுத் திட்­டத்தின் இரண்டாம் நாள் குழு நிலை விவா­தத்தை ஐக்­கிய தேசியக் கட்…

    • 2 replies
    • 647 views
  20. அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் நோக்கில் புலிகளுடன் இணைந்து செயற்பட விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்…

  21. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு கோவணத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற போராட்டத்தை அகில இலங்கை கமநல சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகளுக்கு சரியான மானியங்களை வழங்காமை மற்றும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை மற்றும் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் “விவசாயிகளுக்கு ஒய்வூதியம் வழங்கும் வயதை அறுபதிலிருந்து அறுபத்துமூன்றாக உயர்த்தியமை“ உள்ளிட்டவற்று…

  22. -சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் வடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சலோகா பெயானி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது வாசஸ்தலத்திலும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ். மாவட்டச் செயலகத்திலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்திலும் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் …

    • 3 replies
    • 449 views
  23. தமிழ்மொழியை அரசகரும மொழியாக மாற்றுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. சிங்கள பௌத்த நாட்டிற்கென்ற தனித்துவத்தினை அரசாங்கம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இலவசக் கல்வியினை இல்லாதொழிக்கும் வகையில் அண்மைக்காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. நாட்டில் தனியார் கல்வியினைப் பரப்பி அப்பாவி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்க நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/?q=node/359631

  24. மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம் கிராம பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளதாக முசலி பிரதேச சபை உறுப்பினர் மார்க்கஸ் நீக்கிலாஸ் பெனான்டோ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம் கிராமத்தை அண்டிய காட்டுப்பகுதியில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட யானைகள் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடமும்,அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். யார் இந்த யானைகளை கொண்டு வந்தது என்ற விடையம் தெரியவில்லை.தற்போத…

  25. முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது. எனினும் உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைப்பதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதனை மட்டும் அனுமதிக்க முடியாது என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். முதன் முறையாக இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரியிருந்தனர். எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அதற்கு அனுமதி மற…

    • 32 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.