ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்டு, முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஆளுனர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வடமாகாண சபையினால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் தாங்கள் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதலமைச்சரையு…
-
- 2 replies
- 568 views
-
-
புலனாய்வாளர் அடாவடியை உடன் நிறுத்துங்கள்; மன்னார் ஆயர் 23 நவம்பர் 2013 வடக்கில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடாவடியை உடன் நிறுத்தி அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் மன்னார் ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் வேண்டுகோள் விடுத்தார். மனிதாபிமானப் பணியாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்து மன்னாரில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணாமல்போன உறவுகளைத் தேடி அவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டங்களில் முன்னின்று செயற்படும் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு நேற்றுமுன்தினம் அதிகாலை சென்ற இராணுவப் புலனாய…
-
- 1 reply
- 583 views
-
-
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஒரு நாள் செலவுக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆண்டு செலவுகளுக்கு 857 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு சுமார் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதை நிமிடத்தில் கணக்கிட்டால் ஒரு நிமிட செலவுக்காக 16 ஆயிரத்து 303.59 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்திற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் 40 மில்லியன் பவுண்டுகளை அதாவது இலங்கை ரூபாய் மதிப்பில் 850 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் அரச குடும்பத்திற்கு ஒதுக…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டில் பாதீனியச்செடி மிகவும் வேகமாக பரவி வருகின்ற போதிலும் அதனை அழிக்கும் நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. கடந்த பல வருடங்களாக யாழ். குடாநாட்டில் பாதீனியம் பரவி வருகின்றது. குறிப்பாக வலிகாமம் மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்தப் பயிர் ஏனைய பயிர்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் வகையில் நிலத்தின் பசளையை உறிஞ்சுவதாகவும் காணப்படுகின்றது . இன்று பாதீனியம் பொது இடங்கள், பாடசாலை வளாகங்கள், மைதானங்கள், திணைக்கள வளாகங்கள், பொது மக்களுடைய தோட்டங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் பரவிவருகின்றது. பாதீனியச் செடி அழிக்கப்பட வேண்டும் எனக் கூறி அரசினால் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும…
-
- 9 replies
- 2.8k views
-
-
கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸாருக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து, 12 கடைகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கொக்குவில் பிரவுண் வீதியைச் சேர்ந்த ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவரிடம் இருந்து சுமார், 5 இலட்சத்திற்கும் அதிகமான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர் எனவும், கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பத்தினாரி சஞ்சிவ ஜெயக்கொடி தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 12 வியாபர நிலையங்கள், இரவு வேளைகளில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பெறுமதியான …
-
- 0 replies
- 578 views
-
-
University of Central Lancashire(UCLAN) பல்கலைக் கழகத்தின் இலங்கை வளாகத்தை ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் பங்கேற்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை மக்களுக்கும், பிரித்தானிய மக்களுக்கும் இடையே உறுதியான கல்வித்தொடர்பை இது தோற்றுவிக்கும். நாட்டின் உறுதித் தன்மையையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கும். பிரித்தானியப் பல்கலைக் கழகம் இலங்கையில் உருவாகும் நிகழ்வு கொண்டாடப்பட வேண்டும். இவ்வாறு கூறுயிருப்பது பிரித்தானிய அரசின் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக்(William Hague). இலங்கையில் பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கான திட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே வில்லியம் ஹேக் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்வித் தரத்தில் பிந்தங்கியுள்ள …
-
- 0 replies
- 724 views
-
-
கேட்பதற்கு நாதியில்லை என்பதுபோல தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக் கிறது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில், சோதனை என்ற பெயரில் காவல் துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப் படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அவற்றில், திருச்சி முகாமில்தான் ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்திபன், சிவக்குமார் உள்ளிட்ட 10 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சங்கர் என்பவரைப் பார்ப்பதற்காக அவரது மனைவி காவியா, (இருவரின் பெயர்களும் மாற்றப் பட்டுள்ளன) கடந்த 20-ம் தேதி, காலை 11.20 மணிக்கு சென்றார…
-
- 2 replies
- 704 views
-
-
ஆதவன் கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரியவிசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என யாழ்.சிவில் சமுகப்பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒரவரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆர்.ஆனந்தராஜாவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். சிவில் சமுகப்பிரதிநிதிகளுடன் நேற்று யாழ்.கிறின் கிராஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மொழி உ…
-
- 3 replies
- 594 views
-
-
தற்போது ரொமேனியாவை அதிரவைக்கும் சனல் 4 இன் காலம் மக் ரே ! நேற்றைய தினம் லண்டனில் இருந்து ரொமேனியா நாட்டுக்குச் சென்ற சனல் 4 இன் ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக் ரே, அங்கே இலங்கை தொடர்பான ஆவணப்படத்தை திரையிட்டுள்ளார். ஐ.நாவின் அனுசரனையோடு சுமார் 200 மாணவர்களுக்கு முன் நிலையில் நோ பயஃர் சூன் காண்பிக்கப்பட்டுள்ளது அன் நாட்டின் தலைநகரில் உள்ள பலகலைக் கழகம் ஒன்றில், அரசியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கு மத்தியிலேயே இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் இதனை பார்த்து அழுதுவிட்டதாகவும், அவர்கள் இலங்கையில் நடப்பதை முதல் முறையாக உணர்ந்துள்ளதாகவும் அங்கிருந்து பேசிய காலம் மக் ரே ரொமேனியா நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே, இலங்கையைப் பற்றிய வி…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயந்திரத் துப்பாக்கிகளும் ஏனைய துப்பாக்கிகளையும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய ஏன் பிரித்தானிய அரசாங்கம் அனுமதியளித்தது என்பது குறிப்பிடப்பட வேண்டுமென ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் சேர் ஜோன் ஸ்டான்லி தெரிவித்துள்ளார். எட்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து ஆயுதங்களும் கடற் கொள்ளை நடவடிக்கைகளை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற வாதத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தியுள்ளன. ஆயுத விற்பனை …
-
- 2 replies
- 478 views
-
-
நடப்பாண்டில் இதுவரை சுமார் 32 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் மூவாயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வாகன சாரதிகள் போக்குவரத்து வீதி ஒழுங்குகளை முறையாக பின்பற்றாமையினாலே விபத்துகள் தற்போது அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சாரதிகள் பல நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற உணர்வுடன் வாகனங்களை செலுத்த வேண்டும்.அத்துடன் வாகனங்களை செலுத்தும்போது பாதையின் தன்மை, காலநிலை மற்றும் வேகம் போன்ற காரணிகள் குறித்து நன்குணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல…
-
- 0 replies
- 347 views
-
-
முத்துஐயன்கட்டு வலதுகரை பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் சிலையைத் திருடிக்கொண்டு தப்பியோட முற்பட்ட தென்பகுதியினர் வசமாக மாட்டியுள்ளனர். தென்பகுதியைச் சொந்த இடமாகக்கொண்ட முஸ்லீம் வர்த்தகர்கள் சிலர், குறித்த பிள்ளையார் சிலையைத்த திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். சிலை காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரிம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அப்பகுதியிலிருந்து இரும்புப் பொருட்களைக் கொள்வனவு செய்து ஏற்றிச் செல்கின்ற முஸ்லீம் வியாபாரிகள், இரும்புகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்டபொழுது பொலிஸார் அவ்வாகனத்தினைச் சோதனையிட்டுள்ளனர், அப்பொழுது குறித்த வினாயகர் சிலையினைக் கண்டுபிடித்துள்ளனர். http://www.radarnews.com
-
- 2 replies
- 747 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தின் மூலம் இராஜதந்திர தவற்றை இழைத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. த இந்து, டெகன் ஹெரால்ட், த ரைம்ஸ் ஒப் இந்தியா போன்ற தமது செய்திகளில் இதுகுறித்த செய்தி ஆய்வுக் கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் எதிர்கால புவியியல் சார் இராஜதந்திர நகர்வுகளில் இது ஒரு புத்தசாலித்தனமான தீர்மானமாக இல்லை எனவும் குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதனால் பிராந்தியத்தில் இந்தியான தனது ஆளுமையை மேலும் இழப்பதற்கு வழி ஏற்படலாம் எனவும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளாமையானது அனைவராலும் அவதானிக்கப்படும் ஒரு முக்கிய விடயம் எ…
-
- 13 replies
- 1.4k views
-
-
2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வரவு - செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் ஆதரிக்கமாட்டோம் என்றும் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்த வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை "உதயன்' வினவியது. இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பொன்.செல்வராஜா இந்த வரவு - செலவுத் திட்டத்தில் எது விசேடம் என்று சொன்னால் அது பாதுகாப்புச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒது…
-
- 1 reply
- 472 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு.. [ சனிக்கிழமை, 23 நவம்பர் 2013, 09:51 GMT ] [ நித்தியபாரதி ] கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாரம் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக நுழைந்த ஆறு இலங்கையர்கள் உட்பட புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 79 இலங்கையர்கள் மீண்டும் அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில்…
-
- 0 replies
- 412 views
-
-
பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாததால் இந்தியா தனது 'செல்வாக்கை' இழந்ததாகக் கருதமுடியாது [ சனிக்கிழமை, 23 நவம்பர் 2013, 09:37 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாமையானது சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவொரு 'எதிர்விளைவையும்' உண்டுபண்ணவில்லை எனவும், இவ்விரு நாடுகளும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து தனியாகச் செயற்பட விரும்பவில்லை எனவும், இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளதாகவும் வியாழனன்று இந்தியா அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் சிறிலங்காவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளாததால் இந்தியா தனது 'செல்வாக்கை' இழந்துவிட்டதாகக் கருத…
-
- 0 replies
- 257 views
-
-
இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக படையினர் வழக்கு? 23 நவம்பர் 2013 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவப் படையைச் சேர்ந்தவர்களே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். யுத்தத்தின் போது உடல் உறுப்புக்களை இழந்த அல்லது ஊனமுற்ற படைவீரர்களினால் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்ட போது ஊனமுற்ற தமக்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நட்டஈடோ அல்லது உதவு தொகையோ இதுவரையில் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து 292 ஊனமுற்ற படையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்…
-
- 0 replies
- 351 views
-
-
கார்த்திகை பூக்களும் படையினருக்கு எதிரிகளாகின:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- 23 நவம்பர் 2013 வன்னியில் கார்த்திகைப் பூமரங்களை அழிக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இலங்கை அரச படையினருக்கு எதிராக போரிட்டு மாய்ந்தவர்களை நினைவுகூறும் மாவீரர் வாரத்தை முன்னிட்டே படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை மலரை தமிழீழத்தின் தேசிய மலராக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். மாவீரர் வாரம் வரும் கார்த்திகை மாதத்திலேயே இந்தப் பூக்கள் அதிகமாக பூக்கின்றன. வன்னிப் பிரதேசம் எங்கும் இந்தப் பூக்கள் பூத்திருப்பதைக் காணமுடியும். இந்தப் பூக்களின் ஊடாகவும் மாவீரர்களை அவர்களது உறவி…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை இலங்கை அரசாங்கம் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் மேலதிக முன்னேற்றத்தை காணத் தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க ஊக்குவிக்கப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் மீள வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரம் சிரேஷ்ட அமைச்சரான பரோனெஸ் வார்ஸி பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொண்டமை சரியானது எனத் தெரிவித்தார். பிரதமர் அவ்வாறு சென்றதன் மூலம் இலங்கையிலுள்ள நிலைமை தொடர்பில் கவனயீர்ப்பொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன் 19…
-
- 0 replies
- 465 views
-
-
இராணுவத்தை வடமாகாணத்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர்காய்வது மடமை:சி.வி இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்த அரச நிர்வாகத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர்காயலாம் என எண்ணுவது மடமை. எனவே மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தத்தமது கடமைகளில் ஈடுபட சகலரும் வழியமைத்துக் கொடுக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் எம்மை இயங்க விடாமல் தடுக்கின்றனர். ஒருவ…
-
- 0 replies
- 496 views
-
-
அரசதுறையினர், விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்கான சில நன்மைகளை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். விவசாயிகளுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டம் ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும், பெண் தொழில் முனைவோர் வட்டியற்ற கடனைப் பெறுமுடியும் என்றும் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுப் படியை 1200 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து 4 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக்கான செலவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 2014ஆம் ஆண்டில் 5.2 வீதமாக குறையும் என்று எதிர்பார்ப்பதாகவ…
-
- 2 replies
- 524 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனையும் சந்திக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த போது, வடக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரித்தானியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, பிரித்தானியப் பிரதமருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பரிமாறிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ம…
-
- 29 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் யுத்தக் குற்றத்தை கையாண்ட முறையை கேள்விக்கு உள்ளாக்கியதுடன் இவ்வாறான முறை தீங்கானது எனவும் இந்தியா கூறியுள்ளது. சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சுயாதீனமான ஒரு செயன்முறையை அமைக்க இலங்கைக்கு 4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கமரூன் கூறியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் 'கண்ணாடி வீட்டிலிருப்போர் கல்லெறியக் கூடாது' என கூறினார். 'இலங்கை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேவையெனக் கருதும் காலத்தை எடுக்கும்' எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார். டெல்லியிலுள்ள அரசாங்க வட்டார…
-
- 4 replies
- 745 views
-
-
Tweets https://twitter.com/francesharris0n/status/383620794250584067 Frances Harrison @francesharris0n27 Sep Reports alleging inherent sexism behind Tamil National Alliance's sidelining of woman who came 2nd in votes in #srilanka provincial election Collapse 8:54 AM - 27 Sep 13 · Details Tweet text Reply to @francesharris0n Dismiss Image will appear as a link Bhahi @sbhahi27 Sep @francesharris0n with only 4 ministers allowed in a coalition gvt, choices are limitted. However, I do agree, sexism and caste exist. Reply Retweet Favorite …
-
- 18 replies
- 1.6k views
-
-
முத்தையா முரளிதரனை எப்போதும் ஒரு தமிழராக பார்த்ததில்லை - பிரபா கணேசன் அண்மையில் முத்தையா முரளிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் தமிழர் என்ற அடையாளத்தை எப்பொழுதும் வெளிப்படுத்தியதில்லை. ஆகவே அவரது கருத்துகளை முன்னிறுத்தி யாரும் அரசியல் செய்வதில் பிரயோஜனம் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும் அவர் தெரிவித்ததாவது, முத்தையா முரளிதரன் புகழின் உச்சகட்டத்தில் இருந்த பொழுது தன்னை ஒரு தமிழன் என்று சொல்லியதும் இல்லை. பொது இடங்களில் தமிழில் உரையாற்றியதும் இல்லை. ஆகவே அவருக்கு தமிழ் …
-
- 1 reply
- 932 views
-