ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
சில நாடுகளின் தலைவர்களை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்துகின்றனர் – கிறிஸ் நோனீஸ் 17 நவம்பர் 2013 சில நாடுகளின் தலைவர்கள் புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்தி வருவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். சில நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிடுவதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு யுத்த நிறைவிற்கு அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் நல்லவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகக் குறைந்தளவிலான புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதத்தை போஷித்து வந்ததாகத் தெ…
-
- 9 replies
- 657 views
-
-
காணொளி : இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய SUNRISE தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10033:-------sunrise---&catid=1:latest-news&Itemid=18
-
- 6 replies
- 917 views
-
-
மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை: கனடா மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கை அரசாங்கம் போதுமானவற்றைச் செய்துள்ளதாகக்கூறும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என கனடா சாடியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த கனேடிய வெளிவிவகார மற்றும் சர்வதேச மனித உரிமைகள் விவகார செயலாளர் தீபக் ஒப்ராய் கடந்த வாரம் வடபுலத்திற்கு விஜயம் செய்திருந்ததுடன் கடந்த கால மற்றும் தற்கால நிலைவரம் குறித்து அதிருப்தி கொண்டவராகவே கொழும்பு திரும்பினார். கொழும்பில் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தா…
-
- 0 replies
- 391 views
-
-
ஜோன் ஸ்நோ சொல்கிறார் முரளி காமெரனுக்கு சொன்னாராம் வடக்கின் நிலமை நீங்கள் சந்தித்தவர்கள் சொன்னது போலே மோசமாக இல்லை என்று. இதோ ட்விட்டரில் இருந்து Jon Snow @jonsnowC46h Sri Lanka cricket icon Murali tells Cameron he is wrong about the North :Things are not as bad as he's been told அநாகரிகமான முறையில் இடப்பட்ட தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து கமரூன் செயற்படுகின்றார் – ஜனாதிபதி 16 நவம்பர் 2013 பிரித்தானிய தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து பிரதமர் டேவிட் கமரூன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதமர் கமரூன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். டேவிட் கமரூனுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் ஒரு மணித்தியாலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரி;த்தானிய பிரதமர் இலங்கை விஜயத்தை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாக, ராஜப…
-
- 13 replies
- 613 views
-
-
செனல்4 ஊடகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது – சவேந்திர சில்வா 13 நவம்பர் 2013 பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நியூயோர்க்கின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே செனல்4 ஊடகம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே செனல்4 ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்குமாறு செனல்4 ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் கோரியதாகவும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய நாட்டுக்கு விஜயம…
-
- 5 replies
- 761 views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து திருப்தியடைவதாக இந்தியா அறிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருவதன் மூலம் இலங்கை சுயாதீன விசாரணைகளை நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்ஷீத் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் பிரித்தானியாப் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கருத்துரைத்த சல்மன் குர்ஷீத், பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க முடியாது எனத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் இலங்கை …
-
- 1 reply
- 859 views
-
-
சென்னையிலிருந்து ஒருவர் இலங்கைக்குச் சென்றாலே அவரை தமிழ்விரோதியாகப் பார்க்கிறோம்.ஆனால் அங்குள்ள தமிழர் பிரதிநிதிகளோ ராஜபக்சே கரங்களால் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதை பாக்கியமாகக் கருதுகிறார்கள்.இன்னொரு பக்கம் முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது!வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது... அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்திக்கிறார்.அ…
-
- 3 replies
- 2.5k views
-
-
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு கருணாநிதி கோரிக்கை 17 நவம்பர் 2013 இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ ஆதரவு அமைப்பின் அமர்வுகளின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மத்திய அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கருணாநிதி கோரியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் கருத்தை இ;ந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்திய பிராளுமன்றில் மத்திய அரசாங்கம் தீர்மானம் நிற…
-
- 2 replies
- 413 views
-
-
காணொளி : இலங்கை மனித உரிமை விடயத்தில் நியுசிலாந்தின் நிலைப்பாடு பற்றி நியுசிலாந்து தொலைக்காட்சியின் பெட்டகம் காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10046:2013-11-17-22-46-30&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 468 views
-
-
கண்டி –பதுளை வீதியில் ஹாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இதுவரை அறுவர்உயிரிழந்துள்ளனர். பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வான் மற்றுமொரு வானை முந்தி செல்வதற்கு முயற்சித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தலாதுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான வானில் 26 பேர் பயணித்துள்ளனர். இதில் 3 குழந்தைகளும் 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மேலும் 20 பேர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…
-
- 0 replies
- 352 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் கல்விக்கு ஊக்கம் தந்து வடகிழக்கு பகுதிகளை கல்வியில் தலை நிமிரச் செய்ய வேண்டும் 17 நவம்பர் 2013 வடக்கு கிழக்கு பகுதிகளின் கல்வி நிலைமை தற்போது மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது உள்ளது. அதனால் புலம்பெயர் தமிழர்கள் கல்விக்கு ஊக்கம் தந்து வடக்கு கிழக்கு பகுதிகளை கல்வியில் தலைநிமிரச் செய்ய உதவியாகவும், உறுதுணையாகவும் நிற்கவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். சுழிபுரம் பாரதி முன்னிலைப் பள்ளியின் கட்டிடத் திறப்புவிழா நேற்றுமாலை (16.11.13) இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரனும் ப…
-
- 0 replies
- 544 views
-
-
கமலேஷ் சர்மாவின் கருத்துக்கு கனடா கடும் கண்டனம்:- 17 நவம்பர் 2013 பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவின் கருத்துக்கு கனடா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கமலேஷ் சர்மா அண்மையில் தெரிவித்திருந்தார். சர்மாவின் இலங்கை குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என கனடா தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனக் குறிப்பி;ட்டுள்ளது. வடக்கில் மனித உரிமை மீறல்கள் …
-
- 0 replies
- 615 views
-
-
முரளிக்கு அடுத்த படியான இன்னொரு கூலி குரைக்கிறது.. சா.. கருத்துச் சொல்கிறது கேளுங்கள்..!
-
- 7 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டில் இனப்பிளவை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது – ஜனாதிபதி 17 நவம்பர் 2013 வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டில் இனப் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை ஓரம் கட்ட முயற்சி;க்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டுகளாக இலங்கை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புவதாகவும் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு போதியளவு கால அவகாசம் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை 17 நவம்பர் 2013 இலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. சர்வதேச சமூகம் இலங்கை மீதான அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகித்து கொண்டிருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை பொதுச் செயலாளர் ஸ்டீவ் கார்ஸோவ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் அடக்குமுறைகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது அம்பலமாகியது என சர்வதேச மன்னிப்புச…
-
- 0 replies
- 321 views
-
-
போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை தானே ஒரு சுயாதீன விசாரணையை நடத்தும் என்பது குறித்து அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது ஆட்சியின் மீது சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து எச்சரிக்கையும் செய்துள்ளார். ''கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு எவரும் கல் எறியக் கூடாது'' என்று அவர் கூறினார். போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க தான் ஏற்கனவே ஒரு ஆணைக்குழுவை அமைத்துவிட்டதாகவும், அது சுயாதீனமானது என்றும் அவர் கூறினார். ஏற்கனவே காணாமல் போனவர்கள் குறித்து ஒரு விசாரணைக்குழுவை தான் அமைத்திருப்பதாகவும் அவர் கூறினார். ''30 வருட போரில் நடந்தவற்றை விசாரிப்பதற்கு எங்களுக்கு நிறையக் காலம் பிடிக்கும். குற்ற…
-
- 6 replies
- 788 views
-
-
கொழும்பு வந்த 15 இற்கும் மேற்பட்ட கொமன்வெல்த் பிரதிநிதிகளுக்கு சுகவீனம் [ சனிக்கிழமை, 16 நவம்பர் 2013, 01:35 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொமன்வெல்த் மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்துள்ள, 15இற்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். கொமன்வெல்த் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறப்பு அலகு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேற்று வரை 15இற்கும் அதிகமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். பலரும் சிறியளவு பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒருவர், கட்டண விடுத…
-
- 3 replies
- 676 views
-
-
செனல் - 4 ஊடகக் குழுவினர் தமது வாடகை பணத்தை செலுத்தாது சென்றுவிட்டதாக வாடகை வாகனத்தின் சாரதி எஸ். கே. சஞ்ஜீவ டி சில்வா கொம்பனித்தொரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவிக்கையில், நேற்று கொழும்பில் இருந்து ரயிலில் வடக்கு நோக்கி சென்ற செனல் -4 ஊடகக்குழுவினருக்கு எதிராக அனுராதபுர ரயில் நிலையத்தில் ரயிலை வழிமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களது பயணம் தடைப்படவே அவர்கள் அங்கிருந்து கொழும்பிற்கு திரும்பி வரநேரிட்டது. அனுராதபுரத்தில் இருந்து வாடகைக்கு வாகனம் ஒன்றை அமர்த்தி அவர்கள் தம்புள்ளையிலுள்ள விடுதியொன்றில் நேற்றிரவு தங்கியுள்ளனர். இன்று காலை அங்கிருந்து கொழும்புக்கு பயணம் செய்துள்ள…
-
- 7 replies
- 760 views
-
-
இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 நவம்பர், 2013 - 16:53 ஜிஎம்டி மாற்று மீடியா வடிவில் இயக்க http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/11/sambandanonindiachogm_131107_sambandanindiachogm_au_bb.mp3 'காமன்வெல்த் மாநாடு-- இந்தியா வந்தாலும் அது இலங்கையின் செயல்பாட்டை அங்கீகரிப்பதாகாது'- இரா.சம்பந்தன் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மட்டும், அது இலங்கையின் மனித உரிமைச் செயல்பாட்டை அங்கீகரிப்பதாக யாரும் கருத முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ…
-
- 34 replies
- 2k views
-
-
காணாமல்போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடி நீண்டகாலமாக போராடி வருகின்றனர் அரச ஆதரவு போராட்டக்காரர்கள் இலங்கையின் வடக்கே, வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏட்டிக்குப் போட்டியான இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடந்துள்ளன. காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் என்றும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அரசு திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பைக் கைவிட வேண்டும் என்றும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதற்கிடையே, இந்தத் தீப்பந்த ஆர்ப்பாட்டத்திற்குப் போட்டியாக இன்னொரு குழுவொன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியுள்ளது. 'நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதற்காக பிரிவினை கோருபவர…
-
- 1 reply
- 693 views
-
-
பிரிட்டிஷ் இளவரசருக்கு மலையகத் தமிழர்கள் மனு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2013 - 17:34 ஜிஎம்டி மீடியா பிளேயர் http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/11/bcfee0a0_upcountryweb_131117_chogmupcountry_au_bb.mp3 இளவரசர் சார்ல்ஸ் நுவரெலியாவில் தேயிலை தோட்டம் ஒன்றை பார்வையிட்டார் பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட தமது வாழ்க்கையை முன்னேற்ற காமன்வெல்த் அமைப்பு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உறுப்பு நாடுகளில் வறுமையை ஒழிக்கவும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தவும் காமன்வெல்த் அமைப்பு எடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்…
-
- 0 replies
- 427 views
-
-
இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு தேவை: ஜேக்கப் ஜூமா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2013 - 16:46 ஜிஎம்டி தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென் ஆப்ரிக்கா கோரியுள்ளது. போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தென் ஆப்ரிக்கா தயாரகவுள்ளது என்று அதன் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார். தொடர்புடைய விடயங்கள் ஆப்பிரிக்கா, காமன்வெல்த் உச்சிமாநாடு, அதிகாரப் பரவல், மனித உரிமை, பயங்கரவாதம் தமது நாடு மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான மோதல்களை சந்…
-
- 0 replies
- 467 views
-
-
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு இருட்டடிப்புக்களை தாண்டி வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனை பெரும்பாலும் சனல் 4 போன்ற ஊடகங்கள் முன்னணியிலிருந்த வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன. தற்போது இந்தியாவின் நியுஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது. இதில் மே 18ம் திகதி விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னால் அரசியல் துறை பொறுப்பாளர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது தொடக்கம், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மகளிர் போராளிகளுக்கு என்ன நடந்தது போன்ற இதுவரை வெளியே வராத வீடியோக்களும் உள்ளது. கொமன்வெல்த் மாநாடு சிறீலங்காவில் தொடங்கிய அன்று இந்த கானொணி இந்தியாவில் வெளியிடப்பட்டதால், தமிழ்நாடு உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளதோடு ஆளும் கொங்கிரஸ் அரசாங்கத்த…
-
- 1 reply
- 798 views
-
-
Jon Snow asks Commonwealth Secretary-General Kamalesh Sharma to explain why only 28 of the 53 states have attended the Commonwealth Heads of Government Meeting (CHOGM) http://www.channel4.com/news/sri-lanka-commonwealth-kamalesh-sharma-chogm-video
-
- 3 replies
- 804 views
-