Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இல்லை என சிறிலங்காவின் அரசியலமைப்புக்குட்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். இராணுவப் பின்னணி கொண்ட மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாணத்திற்கான ஆளுநராக தேவையில்லை. அவரை நீக்கி விட்டு, சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், வடக்கு மாகாணசபையின் முதல்நாள் அமர்வில் முதலமைச்சர் உரையாற்றியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜீ.ஏ சந்திரசிறி, "மாகாணத்தின் ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி. எனினும் சிலர் ஆளுநரை நீக்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அது நடக்கப் போவதில்லை. வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் கொள்கைகளை நடைமுறைப்படு…

    • 2 replies
    • 872 views
  2. இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள நூலகங்களுக்கு இடையில் போட்டி நடாத்தப்பட்டது. இதன்படி அகில இலங்கை ரீதியில் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகரசபைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட நூலகப் போட்டியில் யாழ்ப்பாண நூலகம் முதலாம் இடத்தைப்பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=133462405129227999#sthash.oXqTNDQv.dpuf

  3. இலங்கை மீது குற்றஞ்சாட்டும் காமன்வெல்த்தின் அறிக்கை கசிந்தது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 அக்டோபர், 2013 - 14:40 ஜிஎம்டி இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெற உள்ள சூழலில், கடந்த ஆண்டு இலங்கையின் பிரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே மீது நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தி பதவி இறக்கம் செய்த வழிமுறை,( இம்பீச்மெண்ட்), இலங்கையின் அரசியல் சட்டத்துக்கு முரணானது, மற்றும் காமன்வெல்த் விழுமியங்களுக்கும் முரணானது என்று காமன்வெல்த் நாடுகள் அமைப்பால் சட்டக் கருத்து வழங்கிய பிரிட்டிஷ் வழக்கறிஞர், ஜியாப்ரி ஜோவெல், தனது அறிக்கையில் கூறியிருப்பதாக, இணைய தளமொன்றில் செய்தி கசிந்திருக்கிறது. இந்த அறிக்கையை காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அவர்கள் காமன்வெல்…

  4. சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள்மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பெட்ரோல் குண்டுகள் சரமாரியாக வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் ஏற்பட்ட லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மயிலாப்பூர் தபால் நிலையத்தின் உள்ளே 5 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஜன்னல் கதவுகளை திறந்து பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் எந்த…

    • 0 replies
    • 469 views
  5. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியப் பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி வரும், கோத்தாபய ராஜபக்சவிடம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியாவே தனிமைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரிய வசம் தெரிவித்த கருத்துக்கும் இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கவுள்ளது. இந்தத் தகவலை பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் கோத்தாபய ராஜபக்ச எதற்காக புதுடெல்லிக்கு வருகிறார் என்று அவர் கூறவில்லை. http://www.puthinappalakai.com/view.php?20131027109324

    • 16 replies
    • 1.2k views
  6. இதை இங்கு இணைத்துள்ளேன் பிழையாயின் சரியான இடத்துக்கு மாத்துங்கோ. கூட்டமைப்புக்குள் குருவிச்சைகள் இவர்தான் உங்கள் முதலமைச்சர். இவர் தான் வடமாகாணசபையை வழிநடத்திச் செல்லப்போகிறார் என்று விக்னேஸ்வரனைத் தெளிவாக முன்னிறுத்தியே தமது பரப்புரைகளைத் தொடங்கியிருந்தனர். எமது இலட்சியம் பெரிது, எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால்தான் அதனை வென்றெடுக்கலாம் என்ற உணர்வு சாதாரண தமிழ் மக்களுக்கே உண்டு. இந்நிலையில் தமிழர்களைக் காப்பாற்ற உழைக்கப் போகின்றோம் என்று பிதற்றிக் கொண்டு வட மாகாணசபைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்களுக்கு இந்த உணர்வு இல்லாமற் போனது எப்படி என்பதுதான் தமிழ் மக்களிடையே இன்று எழுந்துள்ள கேள்வி. மக்கள் ஒன்றுதிரண்டு வாக்களித்தது வீட்டுச…

  7. இணுவிலில் மதுப் பிரியர்கள் அட்டகாசம் ; பொலிசார் பாராமுகம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் மாலை வேளைகளில் கூடும் மதுப் பிரியர்களினால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்த போதிலும் அது தொடர்பாக அவர்கள் கவனம் எடுப்பதில்லையென பொது மக்கள் கவலைப்படுகின்றனர். இது சம்பந்தமாக கடந்த வாரம் இடம் பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பொலிசார் உரிய முறையில் பதிலளிக்காது தட்டிக் கழித்துள்ளதாகவும் பொது மக்களினால் கவலையுடன் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலரின் வீட்டிற…

  8. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநாட்டை இலக்கு வைத்து எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து போராட்டங்களை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் மெய்யான நிலைமையை உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நவ சமசமாஜ கட்சியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், " சிறிலங்கா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்…

  9. கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் சுவாசிலாந்து அரச குழுவை வரவேற்க அந்த நாட்டு வழக்கப்படி, பாடசாலை மாணவிகளை மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடனமாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தி வருவது, பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா கல்வி அமைச்சு குளியாப்பிட்டியில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கே, இந்த நடனத்துக்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இதில் பல நடனங்கள், சுவாசிலாந்து கலாசாரப்படி – அரைநிர்வாணமாக ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடனங்களுக்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கல்வி அமைச்சுக்கு உரிமையில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போன்ற நாடுகளில் இது ஏற்…

  10. வடக்கு தமிழர்களுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - சல்மான் குர்ஷித் 29 அக்டோபர் 2013 இலங்கையின் வடக்கு தமிழர்களுக்காக இ;ந்தியா குரல் கொடுக்க வேண்டுமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீகப் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் தாமும், வெளிவிவகாரச் செயலாளரும் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பாரா என்பது பற்றி உறுதியாக தற்போதைக்கு கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்கள் இந்தியாவிடமிருந்து அதிகம் எதிர்பார்ப…

  11. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான சனத் ஜெயசூரியவின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சனத்தின் மனைவியான சன்ரா ஜெயசூரியா, கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 23ம் திகதி விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்தார் என்று அவருடைய வழக்கறிஞர் அனோமா குணதிலக்க தெரிவித்தார். மேலும் சனத் ஜெயசூரியாவிற்கு அறிவிப்பு கொடுத்தபின் வழக்கு தொடரும் என்றும் கூறினார். இவரது மனைவியின் விவாகரத்து விண்ணப்பத்தில் தலா 2 கோடி ரூபா வீதம் தனக்கும், தனது மூன்று பிள்ளைகளுக்கும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 2010 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்…

    • 14 replies
    • 1.1k views
  12. திருமுறிகண்டி, பொன்னகர் பகுதியில் யாழ்தேவி ரயிலில் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் பொன்னகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருமுறிகண்டி பொன்னகரைச் சேர்ந்த அன்னிமுத்து கணேஸ் (வயது 65) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%…

  13. 2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமாக 11,500,000,000 ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டது. இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமான 12 பில்லியன் ரூபாவும் மூலதன செலவாக 3 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்கு 148 பில்லியன் ரூபா, 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  14. இலங்கையுடன் சிறந்த உறவுகளைப் பேண வேண்டும் - மணிசங்கர் ஐயர் 29 அக்டோபர் 2013 இலங்கையுடன் சிறந்த உறவுகளைப் பேண வேண்டுமென இந்திய காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வட பகுதியில் இந்தியா புனர்வாழ்வு நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அண்டை நாடான இலங்கையுடன் சிறந்த உறவுகள் பேணப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமாயின் இந்தியா பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள…

  15. நல்லூர் கிட்டு பூங்காவையும் இராணுவமுகாமாக்க அபகரிக்க முயற்சி! 25 அக்டோபர் 2013 யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவையும்இ நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு வழங்குமாறு இராணுவத்தினர் நல்லூர் பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் தளபதிகளின் வீடுகள் நினைவுச் சின்னங்கள் என்பவற்றைக் கையகப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் பருத்தித்துறை வீதியில் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள 8 பரப்பு விஸ்தீரணம் கொண்ட கிட்டு பூங்காவை இராணுவ முகாம் அமைப்பதற்குக் கையளிக்குமாறு காணி மற்றும் காணி அபிவிரு…

  16. பிள்ளைகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிய பெற்றோர் விளக்கமறியலில் 28 அக்டோபர் 2013 அபாயகரமான முறையில் சட்டவிரோதமாக பிள்ளைகள் மூவரையும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்கள். தாய்மார் இருவரும், தந்தையொருவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்;கள். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வழங்கிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது. 12, 15 மற்றும் 16 வயதான மூன்று பிள்ளைகளை படகுமூலம் குறித்த பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பிவைத்து உள்ளனர்…

  17. கிழக்கில் நிலங்கள் ஆக்கிரமிப்பு எதிர்த்துப் போராட்டம் 29 அக்டோபர் 2013 திருக்கோவில், வட்டமடு பிரதேசத்தில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி சட்டவிரோதமாக காடுகளை அழிப்பது மற்றும் மேய்ச்சல் தரைக்கு சொந்தமான நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1976 ஆம் ஆண்டு வர்த்தமானியில் வட்டமடு பிரதேசம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைக்காக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த காலப் போர் காரணமாக இந்தப் பிரதேசத்துக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனைப் பயன்படுத்திய சிலர் சட்டத்துக்கு விரோதமாக மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை சிலர் …

  18. இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை - சரவணபவன் 29 அக்டோபர் 2013 இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் உள்ள பொதுமக்களது வீடுகளை அண்மைக்காலமாக இராணுவத்தினர் இடித்தழித்து வருகின்றனர். எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சில தலையீடுகளினால் நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் கடந்த மூன்று தினங்களாக மீண்டும் இடித்தழிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர். அதனை நேரடியாக பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், உள்ளி…

  19. ஆஸி அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை – ட்ரவர் க்ரான்ட் 29 அக்டோபர் 2013 அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை என அந்நாட்டு புகலிடச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ட்ரவர் க்ரான்ட் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமேன அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியிருந்தது. எனினும், பிரதமர் டோனி அப்போட் தலைமையிலான புதிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுவதன் மூலம் உள மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்ப…

  20. கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கவுள்ள போதும் எந்த ஒரு கனேடிய பிரஜையும் இந்த மாநாட்டை புறக்கணிப்பதை விரும்பவில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி, ஹாப்பரின் முடிவை கண்டித்துள்ளார். இந்தநிலையில் கனேடிய பிரதமரின் இந்த புறக்கணிப்பு முடிவு அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சண்டே ஒப்சேவர் என்ற அரசாங்க வார செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். கனேடிய பிரதமர் இந்த முடிவை எடுக்கும் முன்ன…

    • 2 replies
    • 444 views
  21. இலங்கைக் கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவது வட-இலங்கை மக்களை கடுமையாக பாதிப்பதாக வடக்கு மாகாணசபையின் மீன்பிடித் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் கூறுகிறார். ததேகூ தலைவர் சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் இலங்கைச் சட்டத்தால் தடைசெய்யப்பட்டபொட்டம் ட்ரோலிங் (ஆழ்கடலில் தரையை துளாவி மீன்வளங்களை அள்ளிச் செல்லும் மீன்பிடி முறை) முறையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் வட-இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதால் எதிர்காலத்தில் மீன்வளங்களே இல்லாத பகுதியாக தங்கள் பிரதேசம் மாறிவிடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் தெரிவித்தார். …

  22. ஈழ விடியலுக்காக மரணித்த மாவீர செல்வங்களின் கோவில்களில் ஒளியேற்றுமா கூட்டமைப்பு. [ஆசிரியர் பார்வை] தமிழீழ விடுதலைக்கான போரட்டத்தில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களின் கல்லறைகளும் நினைவுக்கற்களும் அமையப்பெற்ற புனிதபூமியான மாவீரர் துயிலுமில்லங்கள் இன்று உருத்தெரியாதவகையில் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட சிங்களம் தடை விதித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இராணுவத்தின் இரும்புப்பிடிக்குள் சிக்கித்தவித்த மக்கள் தமது பிரதேசங்களின் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தற்பொழுது மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற மனஉணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைப்போ…

    • 40 replies
    • 2.6k views
  23. பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் இலங்கை விஜயத்தின்போது புதிய பல்கலைக்கழகம் ஒன்று திறக்கப்படும் என வெளியான செய்தியை பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது. பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர் பிரித்தானியாவின் லேன்கஷயர் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை இலங்கையில் திறந்து வைப்பார் என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் சார்ள்ஸின் நிகழ்ச்சி நிரலின்படி அவ்வாறானதொரு நிகழ்வு தொடர்பாக குறிப்பிடப்படவில்லை என பிரித்தானிய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=95961&category=TamilNews&language=tamil

  24. சனல்4 தொலைக்காட்சியில் காணாமல் போன சம்பவங்களை அடிப்படையாக கொண்ட வெள்ளை வான் திரைப்படம் [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 06:33.31 AM GMT ] இந்தியாவின் சுயாதீன திரைப்பட நெறியாளரான லீனா மணிமேகலை பிரத்தியேக காட்சிகளுடன் கூடிய "வெள்ளை வான்" என்ற விவரண திரைப்படத்தை தயாரித்துள்ளார். வெள்ளை வான் என்ற இந்த திரைப்படம் இலங்கையில் காணாமல் போக செய்யும் சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விவரணத் திரைப்படம் நவம்பர் மாதம் பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட உள்ளது. இந்த திரைப்படத்தின் 12 நிமிடங்கள் கொண்ட விசேட தொகுப்பு அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஆகிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பட உள்ளது. கொழும்பில் பொதுநலவாய …

  25. கொழும்பு கொமன்வெல்த் வர்த்தகப் பேரவை மாநாட்டில் 11 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 08:21 GMT ] [ தா.அருணாசலம் ] கொமன்வெல்த் மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்கவுள்ள கொமன்வெல்த் வர்த்தகப் பேரவையின் கூட்டத்தில், 11 நாடுகளின் தலைவர்களே கலந்து கொள்ளவுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தியுள்ளனர். கொமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்ற நிலையில், கொமன்வெல்த் மாநாட்டின் பக்க நிகழ்வாக சிறிலங்காவில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள கொமன்வெல்த் வர்த்தகப் பேரவையின் மாநாட்டில் 11 நாடுகளின் தலைவர்களே பங்கேற்கவுள்ளனர். எனினும், தாம் நினைத்த இலக்கை அடைந்து விட்டதாகவும், 1000 பிரதிநிதிகள் இந்த பேரவை மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.