Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ கட்டுப்பாட்டில் 18வருடங்களாக இருந்துவந்த மிருசுவில் கெற்பேலியில் மனித எச்சங்கள் பல சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட கெற்பேலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள் இன்று துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு (பண்ட்) அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் மனித எச்சங்கள் இருப்பதை கண்ணுற்றுள்ளனர். அத்தோடு மனித உடலங்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும் பிரதேச …

    • 0 replies
    • 517 views
  2. பசில் ராஜபக்ஷவின்... இரண்டு பிரேரணைகள், இடைநிறுத்தம் பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது . அந்த வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு. 4,917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4 மில்லியன் ரூபாய். மொத்தம் 19.67 பில்லியன் என்பது இடைநிறுத்தப்படுவதோடு கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது . இதேவேளை பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உ…

  3. இலங்கை நிலவரம்.. நமது நிருபரிடமிருந்து... என்.வி. இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள். யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே எனத் தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் திட்டித் தீர்த்திருக்கின்றார் ராஜபக்ஷே. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்கும் கொழும்பு அரசின் கொடூர ராணுவ நடவடிக்கைத் திட்டத்தின் உச்சக் கட்டம் கடந்த ஆண்டு முற்பகுதியில் உக்கிரமடைந்தபோது, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் வ…

    • 7 replies
    • 1.9k views
  4. காவி உடையில் குற்றம் செய்வோரைத் தண்டிப்பதற்கான நேரம் வந்து விட்டது! - பிரதமர் டி.எம்.ஜயரட்ண [Monday, 2014-04-21 09:40:24] காவி உடை அணிந்து கொண்டு பௌத்த விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கென புதிய சட்டம் ஒன்றைத் தாம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றார் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கிறார். கண்டியில், வித்தியா சாஹர மகா பிரிவேனாவில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். " காவி உடையை விரும்பியவர்கள் யாரும் அணிந்து கொள்ளும் சுதந்திரம் இன்று உள்ளது. எந்தச் சட்டமும் இதைத் தடுக்காது. ஆனால் சிலர் அதனை பௌத்தத்தை அழிப்பதற்காகப் பயன்படுத்த முனைகிறார்கள். அத்தகையோர் தவறு செய்கின்றமை கண்டுபிடிக்கப்பட்ட…

  5. 3 ஆவது முறையாக நிறுத்தப்பட்ட ஞானவைரவா் ஆலய காணி அளவீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை வைரவா் ஆலயத்திற்குச் சொந்தமான ஞானவைரவா் விளையாட்டுக் கழகம் பயன்படுத்தும் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்குடன் நில அளவை மேற்கொள்ளும் முயற்சி மூன்றாவது தடவையாகவும் பொது மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை குறித்த பகுதிக்கு கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோா் நில அளவை செய்வதற்கு சென்றபோது, ஒன்று திண்ட பொது மக்கள் நில அளவை செய்ய விடாது தடுத்து நிறுத்தியதோடு, தங்களின் ஆட்சேபனையும் எழுத்தும் மூலம் அதிகாரிகளிடம் கை…

  6. மட்டக்களப்பில் கன்னபுரம் கிராமவாசிகளை அக்கிராமதில் முருகன் கோவில் ஒன்று அமைக்கப் போவதாக கிரமடத்தில் இருந்தவர்களை இலங்கை அரசு வெலியேற்றியுள்ளது. விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கிராமவாசிகளை ஏமாற்றி வெளியெற்றிய பின்பு, அதே இடத்தில் இப்போது பெளத்த கோவில் ஒன்றை அமைப்பதாகத் தெரிய வருகிறது. முருகன் கோவிலை எதிர்பார்த்திருந்த கிராம வாசிகளைக் கொண்டே பெளத்த விகாரை நிறுவப்படும் இடத்தைச் சுத்திகரித்துள்ளனர் இராணுவத்தினர். கல்லோயா குடியேற்றத்திட்ட காலத்திலிருந்து இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகமாகப் பலியாகிவருவது கிழக்கு மாகாண மக்களே. கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான அரச துணைக் குழுத் தலைவர்களின் துணையோடு கிழக்கு மாகாணம் சூறையாடப்ப்ப…

  7. இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம் கொழும்பின் வழிநடத்தலில் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரது வட,கிழக்குப் பயணத்தை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமே கையாள வேண்டுமெனவும் கேட்டிருக்கிறது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளது உண்மைநிலையைக் கண்டறிய இதுவே சரியான வழியெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதி இலங்கை வரவிருப்பது தொடர்பில் தமிழ்…

  8. இலங்கை அமைச்சர் 24.ம் புலிகேசி தான் ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு வருகை தராத ஓர் அரசாங்க அதிகாரியை, இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் பாணியில் மாமரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இலங்கையின் பெருந்தெருக்கள் துறை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா. உண்மையில், இந்த இம்சையாரின் கீர்த்திப் பட்டியல் ரொம்ப நீளம்...! மேர்வின், சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் அரசியலுக்குள் நுழைந்தவர். அவருக்குப் பின்னால் மகிந்தா ராஜபக்ஷேவையும் காக்கா பிடித்து இன்று அமைச்சராக வலம் வருபவர் என்ற முன்னுரையுடன் அவரை கடுப்புடன் ரசிப்போம்! ஒரு நைட்கிளப்பில் மேர்வினின் மகன் மாலக சில்வா குடித்துவிட்டுத் தகராறு செய்ய... நைட்கிளப்உரிமையாளர்கள் மகனைத் தூ…

  9. குறைந்த வருமானம் பெறும்... குடும்பங்களுக்கு, 10,000 ரூபாய் நிவாரணம் : அரசாங்கம். நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 7,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த தீ…

  10. மைத்திரியுடன் இணைந்தார் சிறியாணி விஜேவிக்கிரம- வலுவிழக்கிறது கூட்டு எதிரணி கூட்டு எதிரணியைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறியானி விஜேவிக்கிரம, ஐதேகவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்ததை அடுத்து. மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். கூட்டு எதிரணியின் மீது அதிருப்தி அடைந்துள்ள அவர் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். …

  11. கே.பியின் பொய்ப் பரப்புரை உண்மையும் பின்னணியும் என்ன? - பழ. நெடுமாறன் ஆக 27, 2010 விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதிதிரட்டுபவராகவும் இருந்த குமரன் பத்மநாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே தன்னை ஒப்புக் கொடுத்தாரா? - என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில் இன்றும் உலவிவருகின்றன. அவர் டி.பி.எஸ். செயராஜ் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பரபரப்பான சில செய்திகளைக் கூறியிருக்கிறார். இச்செய்தி களின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முன்பாக புலிகள் இயக்கத்திலிருந்து இவர் விலக்கப்பட்ட சூழ்நிலையைத் தெரிந்து கொள்வது நல்லது. 2003 ஆம் ஆண்டு சனவரியிலிருந்து இவர் புலிகள் இயக்…

    • 0 replies
    • 810 views
  12. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் விசாரணைக்காக பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவிருந்த நிலையில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி உதயபெரேராவின் பணிப்பின் பேரில் அவர் தீடீர் விசாரணைக்காக பலாலி பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல்கலைக்கழக ஆசிரிய சங்க ஏற்பாட்டில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே யாழ்ப்பாணத்தின் இரு இளம் ஊடகவியலாளர்களதும் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரதும் பெயர்கள் குறிப்பிட்டு மீண்டும் கொலை அ…

  13. வடக்கு முதல்வரையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர் சிறிலங்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா செல்லும் மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது பற்றிய விபரங்கள் அந்தச் செய்திக்குறிப்பில் இடம்பெறவில்லை. http://www.puthinappalakai.net/2017/12/17/news/27999

  14. திரு மனோகரன் அவர்கள் பற்றிய சிறு அறிமுகம் * 1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார். * 1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்த…

  15. இலங்கையில்... அவசரகாலச் சட்டம் அமுல்! பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1291408

  16. “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அழைத்தால் அரசியலுக்கு வருவேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் கொழும்பிலேயே தேர்தலில் போட்டியிடுவேன்” என அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நிழல் அரசருமான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விஜய பத்திரிகை நிறுவனம் 'தேசய' (தேசம்) என்றொரு சிங்கள வார இதழை இவ்வாரம் முதல் வெளியிடுகின்றது. அதன் முதலாவது இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில், “ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்த பணிகளை நான் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அரசியலுக்கு வருமாறு ஜனாதிபதி என்னைப் பணித்தாரானால் நான் அரசியலுக்கு வருவேன். நான் நாட்டுக்கு என்ன செய்துள்ளேன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனக்கு மக்கள் அங்கீகாரமளிப்பார்கள். …

  17. சிறீலங்காவில் இருந்து தமிழ் மக்களை முற்றாக இல்லாது செய்யும் நடவடிக்கைகள் தினமும் மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகின்றன. வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் படையினரின் செறிவாக்கம், அதன் மூலம் அங்கு நகர்த்தப்படும் படையினரின் குடும்பங்கள் என மக்கள் தொகையின் விகிதாசாரம் மிக வேகமாக மாற்றமடைந்து வருகையில், தமிழ் மக்களின் நிலங்களையும் கொள்வனவு செய்வதில் சிங்கள சமூகம் அதிக அக்கறைகள் காண்பித்து வருகின்றது. வட – கிழக்கில் பெருமளவு பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படும் அதேசமயம், மாதகல் தொடக்கம் நாகதீபம் வரை புத்தரின் வழிவந்தவர்கள் நடந்த காலடிகள் தென்படுவதாக புதிய கண்டுபிடிப்புக்களையும் சிங்கள புத்தியீவிகள் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.மறுவளமாக கிழக்கிலங்கையிலும், தென்னிலங்கையிலும்…

  18. ரஷ்யாவில் இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை! மற்றொரு அதிகாரி படுகாயம்! ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகச் நடந்த சம்பவத்தில், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவிளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார். ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள ரொஸ்ரொவ் ஒன் டொன் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரொஸ்ரொவ் நகரில், ரஸ்யாவில் சிறிலங்காவின் நாட்கள் என்ற நிகழ்ச்சிக்காக ரொஸ்ரொவ் நகருக்கு வந்த சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞரே, வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா துதரகத்தில் இரண்டாவது செயலாளர் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனும…

    • 4 replies
    • 957 views
  19. அளுத்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த ஆர். விஜேசேகர இடம்மாற்றப்பட்டு புதிய பொறுப்பதிகாரியாக கே.ஏ. ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர். விஜேசேகர பொறுப்பதிகாரியாக இருந்த போதே அளுத்கம பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் குறித்த அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கும் நிலையிலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://virakesari.lk/articles/2014/06/19/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE…

  20. உக்ரேனிடம் இருந்து மிக்-29 போர் விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் மோசடி செய்யப்பட்ட பணம் ஹொங்கொங் வங்கி ஒன்றில் பதுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்று நடந்த ஐதேகவின் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ”உக்ரேனில் இருந்து முன்னைய அரசாங்கம் மிக் போர் விமானங்களை தலா ஒவ்வொன்றும் 7.2 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்திருந்தது. எனினும், அதிகாரபூர்வ ஆவணங்களில் 14.7 மில்லியன் டொலருக்கு அவை கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 7.5 மில்லியன் டொலரை எடுத்து, ஹொங்கொங் வங்கி ஒன்றில் வைப்பிட்டுள…

    • 1 reply
    • 424 views
  21. கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக துப்புத்துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரகசியப் பொலீசார் தற்கொடையாளியை வழி நடத்தியவர்களை கண்டறிவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்கொடைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது தற்கொடையாளி பயன்படுத்தியதாக நம்பப்படும் செல்போன் சிதைவடைந்த போதும் அதனுடைய சிம்காட்டை தாம் கண்டெடுத்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கிறது. உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்கொடையாளியுடன் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களை கண்டறியும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு வெளிநாட்டு உதவி வேண்டப் படுவதாகவும் சம்மந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். …

    • 2 replies
    • 1.1k views
  22. தாய்லாந்தில், தாய்லாந்து இராணுவத்தினரும்,கனேடியன் இன்ரர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130 ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள், 50 பெண்கள், 7 கர்ப்பிணித் தாய்மார்கள்,13 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும், கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திட…

    • 2 replies
    • 932 views
  23. பிரபலம் தேடுவதற்காக என்னைப் பயன்படுத்துகின்றனர் – வேட்பாளர்கள் மீது விக்கி குற்றச்சாட்டு உள்ளூராட்சித் தேர்தலில் தனது பெயரைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும், அது தன்னை மட்டுமே பாதிக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். பிரபலம் தேடுவதற்காக பல வேட்பாளர்கள் தனது பெயரைப் பயன்படுத்துவதாகவும், அதில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். “அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் கூறியுள்ளேன். தேர்தல் தொடர்பாக எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், எனது பெயரைப் பயன்பட…

  24. யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் எல்லே விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக யூலை 5, 6ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு எல்லே அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறவுள்ளதாக கட்டளைத் தலைமையகத்தின் உயரதிகாரி வீரமன் தெரிவித்தார். எல்லே போட்டி தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று தல்செவன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் தெற்கு எல்லே அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 5ஆம் , 5ஆம் திகதிகளில் யாழ். மாவட்டத்தில் எல்லே போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பலாலி கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் இருந்து 3ஆண்கள் அணியும் 4பெண்கள் அணியும், முப்படைகளில் இருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.