ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
தமிழ் மக்களால் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் முக்கிய நாளேடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. அக்கருத்துக்களின் தொகுப்பு வருமாறு: ‘த கார்டியன்’ இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினையை வட அயர்லாந்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளி ஒப்பந்தத்தை போல நிறைவு செய்ய சிறிலங்கா அரசு முயலவில்லை. மாறாக எறிகணைகள் மூலம் அங்கு வாழும் மக்களை படுகொலை செய்து அதனை முடிக்க அது முயற்சித்து வருகின்றது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 8 சதுர கி.மீ பரப்பளவுள்ள கடற்கரை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதனை சிறிலங்கா அரசு பாதுகாப்பு பிரதேசம் எனக்கூறினாலும் அது உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதி என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்…
-
- 0 replies
- 1k views
-
-
பதவி மோகத்திற்காகவே துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார்- யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டு by : Yuganthini பதவி மோகத்திற்காகவே யாழ்.பல்கலைத் துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் யோகேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனித்ததன் பிற்பாடு தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்பட்ட நிலையில், எங்கள் தமிழ் உயர் அதிகாரிகளும் பதவிமோகம் மற்றும் பதவியை தக்கவைக்கவேண்டும் என்பதற்காக தமிழர்கள் இதுவரைப்பட்ட …
-
- 0 replies
- 472 views
-
-
உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் தலைமறைவாகியுள்ளதாக முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையின் செய்திப் பிரிவொன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்துள்ள அசாத் சாலி, என்னை கைதுசெய்வதற்கு முயற்சிக்கின்றனர். குறுந்தகவல் அனுப்பியதாக குற்றஞ்சுமத்துகின்றனர். பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றனர். அல்கைதா என என்னைக் கூறுகின்றனர். பல பெயர்களில் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். பல வழிகளிலும் என்னைக் கைதுசெய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. சரியானதைத் தான் எப்போதும் அரசாங்கத்திற்குக் கூறுகிறதும். நீங்களே வாக்குறுதி வழங்கிய 13 + அதிகாரத…
-
- 0 replies
- 432 views
-
-
சிவானந்தன் உடலுக்கு புலிகள் கொடி போர்த்தி அஞ்சலி!! புதன்கிழமை, ஏப்ரல் 22, 2009, 15:36 [iST] கரூர்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறு…
-
- 1 reply
- 2.3k views
-
-
எங்கள் மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல வேண்டும் இதற்காக சர்வதேச நீதிமன்றம் வரை செல்வோம். அதற்குரிய நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற காணி சுவீகரிப்பைத் தடுப்பது தொடர்பான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: ஒவ்வொரு பிரதேச சபைக்கும் தமது பிரதேசத்திலுள்ள மக்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். காணி சுவீகரிப்புக்கு எதிரான வாழ்வுரிமைக்கான எமது போராட்டம் தொடர்பில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் எங்கள் போராட்டங…
-
- 4 replies
- 383 views
-
-
சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்த…
-
- 38 replies
- 3.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 496 views
-
-
வடக்கு தேர்தல் சூடுபிடிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்யும் கே.பி [Wednesday, 2013-05-08 10:05:53] வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார். ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் தான் நெருக்குவேன் என்று தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டம் வெளியிட்ட கே.பி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்…
-
- 1 reply
- 457 views
-
-
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணைந்து 'இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு' என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial College இல் 2017 ஜனவரி மாதம் 15ஆம் 16ஆம், 17ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மூன்…
-
- 1 reply
- 273 views
-
-
“பௌத்த விகாரை”யை தீர்மானத்தில் சேர்க்க அங்கயன் மறுப்பு; பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமளி.! யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட புத்த விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக முன்வைத்துள்ள கோரிக்கையால் தெல்லிப்பழை அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேசத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த காணி ஒன்றில் கட்டப்பட்ட புத்தவிகாரையை தொல்லியல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 329 views
-
-
இராணுவம் மேற்கொள்ளும் பாரிய தாக்கியழிக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஆபத்தான நிலைமையிலுள்ள மக்கள் போர்ப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு வசதியாக உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 499 views
-
-
ஜெனிவாவில் அளிக்கப்பட்ட வாக்கை சிறிலங்காவுக்கு எதிரான வாக்காக கருதக் கூடாது என்று சிறிலங்காவில் இருந்து வெளியேறும் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “2009 இற்குப் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியா மகிழ்ச்சியடைகிறது. சிறிலங்காவின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. ஜெனிவாவில் அளிக்கப்பட்ட வாக்கு சிறிலங்காவுக்கு எதிரானது அல்ல. சிறிலங்காவினதும் இந்தியாவினதும் அடிப்படையான நலன்களுக்கு இடையில் தொடர்பு உள்ளது. இந்த நலன்களின் எந்த முரண்பாடும் கிடையாது. ஜெனிவாவில் சிறிலங்காவைத் தனிமைப்படுத்தும் வகையில், இந்தியா வாக்களி…
-
- 2 replies
- 299 views
-
-
நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செயய்க் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும், இந்த வழக்கை தாக்கல் செய்த வேலுச்சாமிக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு விளக்கம் கேட்டு சிபிஐ, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. சிபிஐ, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட பின்னர் அதுகுறித்து எந்த கோர்ட்டிலும் வழக்கு தொடர முடியாது, இந்த மனு விசாணைக்கு உகந்தததல்ல என்று கூறியிருந்தன. இதையடுத்து நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.ச…
-
- 0 replies
- 889 views
-
-
அமெரிக்க தூதரக அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற இரணவில பூமியை மீண்டும் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மனித்துள்ளது. இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில், இரணவில பிரதேசத்தில் அமைந்துள்ள 166.038 ஹெக்டேயர் இடப்பகுதியை, Voice of America thndhyp வானொலி ஒலிபரப்பு நிலையத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்காக வேண்டி 1991ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகத்திற்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தத்தின் காலம் முடிவடைவதற்கு முன்னர் குறித்த ஒலிபரப்பு நிலையத்தை மூடிவிட்டு குறித்த இடம் மற்றும் சொத்துக்கள…
-
- 3 replies
- 360 views
-
-
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஐந்தாவது மரணம் பதிவானது! வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த க…
-
- 0 replies
- 274 views
-
-
தலைவர்களின் தவறான தீர்மானங்களுக்காக மக்களுக்கான உதவியை ஏன் குறைக்க வேண்டும்?-செய்தியாளர் மாநாட்டில் யசூசி அகாஷி வீரகேசரி வாரவெளியீடு 5/3/2009 8:39:59 AM - சமாதானத்தை அடைய முடியாமைக்கு தலைவர்களின் தவறான மதிப்பீடுகள், தவறான தீர்மானங்கள் என்பன காரணமாக இருக்கலாம். இதற்காக பொதுமக்களின் நல்வாழ்வுக்கான உதவித் தொகைகளை குøறப்பதன் மூலம் பொதுமக்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்? என்பதுதான் ஜப்பானிய அரசின் நிலைப்பாடு'' என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இச்செய்தியாளர் மாநாட்டில் தனது இலங்கை விஜயம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில் இம்முறை எனது விஜயத்தில் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர்,…
-
- 2 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் கிராமமான பெரியபுல்லுமலையிலும் முஸ்லிம் கிராமமான உறுகாமத்திலும் இது தொடர்பான வைபவங்கள் நடைபெற்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 520 views
-
-
மேற்குலகுக்குப் புதிய பாடம் புகட்ட எத்தனிக்கும் கொழும்பு.. இலங்கை விவகாரத்தில் மேற்குலகுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த" கதைக்கு ஒப்பானதுதான். "படகு ஏறும்போது அண்ணன், தம்பி. ஆற்றைக் கடந் ததும் நீ யாரோ நான் யாரோ" என்பது போல மேற்குலகத்தை இப்போது தூக்கி எறிந்து நடக்கின்றது கொழும்பு.இலங்கையில் 2002 ஆம் ஆண்டை ஒட்டிய காலப் பகுதியில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியில் அதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் மேற்குலகு நடந்து கொண்டது. அச்சமயம் அம்முயற்சியில் ஈடுபட்ட இரு பக்கத்தினருமே அதில் "சமதரப்பு" என்ற அந்தஸ்துடனேயே பங்குபற்றினர். அதில் ஒரு தரப்பை "பயங்கரவாதிகள்" …
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்! [Monday, 2013-05-27 19:56:07] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவியும், மகளும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது. கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சென்று தங்கள் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டதாகவும், தலைவர் பிரபாகரனால் பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை மாற்ற வேண்டியிருப்பதாக திருமதி தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் தாங்கள் நான்கு வருடங்களாக இருண்ட யுகத்திற்குள் இருப்பதாகவும், தனது பிள்ளைகள் நான்கு வருடங்களாகப் பாடசாலையைக் காணவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்ததாக சம்பவத…
-
- 0 replies
- 615 views
-
-
வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைப் பீடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக படைத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது: வன்னி களமுனையில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த அனுராதபுரம் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 59 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரசன்னா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டளையின் கீழ் இயங்கிவந்த 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் சாகி கலகே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக ந…
-
- 0 replies
- 813 views
-
-
மட்டக்களப்பு, கல்முனை, குருக்கல்மடம் பிரதான வீதியிலுள்ள களுவாஞ்சிக்குடி ஸ்ரீ செல்லக் கதிர்காமம் ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று (01) இரவு 10 மணியின் பின்னதாக கோயிலின் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆலய பூசகர் தெரிவித்தார். இதன்போது ஆலயத்திலிருந்து பெரும்பாலான விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 19 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு சுமார் பத்து மணிக்கு மேல் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கூறும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://www.adaderana.lk/tamil/
-
- 2 replies
- 826 views
-
-
இன்னும் எதுவரை எம்மவரின் உயிர்விலையை அனுமதிக்கபோகிறோம்.
-
- 1 reply
- 1.2k views
-
-
கேப்பாப்புலவு மக்களுக்கான நீர்கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம் இராணுவம் கையகப்படுத்தியுள்ள கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த எட்டுநாட்களாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாளை நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்க்கான நடவடிக்கைகளை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/16349
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் உலகின் முக்கிய நாடுகள் இலங்கை மீது பல்வேறு பொருளாதார அழுத்தங்களை பிரயோகிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரியவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மற்றும் வர்த்தக சலுகைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம், சர்வதேச நாணய நிதியக் கடன் உள்ளிட்ட முக்கிய பொருளாதார சலுகைகளை முடக்குவதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் முயற்சித்து வருவத…
-
- 2 replies
- 1.6k views
-
-
மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களை பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டடங்களுக்கான திட்டங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு அனுமதி அளித்தல், எரிபொருள் நிலையங்கள், மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை கட்டுதல்…
-
- 0 replies
- 379 views
-