ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த இராணுவ அணிவகுப்பை புறக்கணிப்பது என்ற தெளிவான நிலைப்பாட்டை, கூட்டமைப்பு எடுத்திருக்கிறது. ஆனால், இரா.சம்பந்தனின் சார்பிலோ, சுமந்திரனின் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், வெற்றி விழா நிழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே தெளிவான நிலைப…
-
- 31 replies
- 1.9k views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தில் போலிச் சான்றிதழை பயன்படுத்தி தலைமை விமானியாக பணியாற்றி வந்த ஜேர்மன் வாசியொருவா விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யபட்டு;ளளா. கடந்த பத்து மாதங்களாக விமானியாகப் பணியாற்றி வந்த இவர், ஒரு இணை விமானியே எனவும் பெரிய விமானங்களுக்கான கப்டன் அல்ல என்பதும் உள்ளக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் விமான நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அவரது சுய விபரச் கோவையிலிருக்கும் அனைத்து தஸ்தோவேஜூக்களும் விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்தாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின், ஏ-340 ரக மிகப்பெரிய விமானத்தில்; பயிற்சிக்காக வந்த கனிஷ்ட தர விமானியொருவர், இந்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
வாங்கோ வாங்கோ... அனைவருக்கும் இனிய வணக்கங்கள் அல்ல இழவுகள்! இஞ்ச பாருங்கோ. கீழ ரெண்டு படங்கள் இருக்கிது. சும்மா ஒருக்கால் கனகாலத்துக்கு பிறகு தமிழ்நெட் பக்கம் போனன். அப்படியே அதிர்ந்துபோனன். இவர்களப் பார்க்க உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? எம்மை மாதிரி இரண்டு கண்கள், இரண்டு காதுகள், வாய், மூக்கு, தலை, கால்கள் உள்ள மனிதர்கள் தானே இவர்கள்? எங்கட வீடுகளில இப்பிடி ஒண்டு நடந்தால் நாங்கள் பேசாமல் இருப்பமா? இவர்களை இவ்வளவு குரூரமான முறையில் கொன்று இருக்கின்றார்களே! இவற்றை பார்க்க உங்களுக்கு ஒன்றுமே தோன்ற இல்லையா? ஈராக்கில அமெரிக்காகாரன் ஒருத்தன அங்க இருக்கிற கொலைகாரங்கள் கத்தியால கோழிய வெட்டிற மாதிரி கழுத்த வெட்டி இணையத்தில அந்த வீடியோவ போட நாங…
-
- 8 replies
- 1.9k views
-
-
இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி ஆகியோரை மீட்க, மீன் துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர். கச்சதீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன் துறையில் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர். தொடர்ந்து கச்சதீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்…
-
- 3 replies
- 1.9k views
-
-
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற மோதல்களில் 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் உட்பட மன்னாரில் நடைபெற்ற மோதல்களிலேயே 127 படையினர் கொல்லப்பட்டும் 363 படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். மன்னாரில் பாலைக்குழி, திருக்கேதீஸ்வரம், அடம்பன்வீதி, கட்டுக்கரை, பரப்பாங்கண்டல், பண்டிவிரிச்சான், தம்பனை, முள்ளிக்:குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலிலும் விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதல், மிதிவெடிகள் மற்றும பொறி வெ…
-
- 0 replies
- 1.9k views
-
-
இனி... அவ்வளவுதான்! விடுதலைப் புலிகளால் ஒன்றும் செய்யமுடியாது' என்று பேசப்பட்டு வந்த நிலையில் கொழும்பு நகரின் மீது விமானத் தாக்குதல் நடத்தித் தங்களுடைய போர் வலிமையைப் புலிகள் நிரூபித்திருக்கிறார்கள். இது அவர்கள் நடத்திய ஒன்பதாவது விமானத் தாக்குதல். 2007-ம் ஆண்டில் நான்கு முறையும், 2008-ம் ஆண்டில் நான்கு முறையும் விமானங்களின் மூலம் சிங்கள ராணுவ கேந்திரங்களைத் தாக்கி, தங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் திரும்பிய விடுதலைப்புலிகளின் வான்படை, இந்த முறை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு இரண்டு விமானங்களையும், இரண்டு விமானிகளையும் இழந் திருக்கிறது. ''புலிகளின் விமான ஓடுபாதைகள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம். அவர்களின் விமானம் ஒன்றை ஏற்கெனவே சுட்டு வீழ்த்திவிட்டோம். …
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
-
-
- 25 replies
- 1.9k views
- 2 followers
-
-
இந்தியா எந்த படையையும் அனுப்ப வேணாம்... நாங்களே பாத்துக்குறோம்... ராஜபக்சே அதிரடி..! தேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தீவிரவாதத்தை நாங்களே சமாளிப்போம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த அதிபயங்கர சம்பவத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்க இலங்கை முயற்சித்து வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க இன்டர்போல் முந்துவந்தது. அதேபோல இலங்கைக்கு உதவ உலக நாடுகள் தயாராக உள்ளது. அந்த வகையில் இலங்கையில் …
-
- 10 replies
- 1.9k views
-
-
http://youtu.be/vDpAG9_UiRo புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்களாம்? மற்றுமொரு காணொளியை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்கள் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றுமொரு காண் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. அஸ்திரேலியாவில் வாழும் மீனா கிருஸ்ண மூர்த்தி அல்லது ஈழநதி என்பவரை மையப்படுத்தி இந்தக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. 12 நிமிட காட்சிகளை கொண்ட இந்தக் காணொளி புலி ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டாளர்களும் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக போலியான பிரச்சாரங்களையும் சதித் திட்டங்களையும் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltam...IN/article.aspx
-
- 3 replies
- 1.9k views
-
-
புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார். 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்…
-
- 6 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 1.9k views
-
-
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம் வீரகேசரி இணையத்தளம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்க்கான ஆனையாளர் லூயிஸ் ஆர்ப்பர் இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.பல்வேறு மனித உரிமைகள் ஆமைப்புக்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.இது தொடர்பான உண்மை நிலைகளை அரியும் பொருட்டு ஆர்பரின் இவ்விஜயம் அமையவுள்ளது. இலங்கை விஜயம் செய்யும் ஆர்ப்பர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்,மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க .ஐக்கிய தேசிய கட்சி, ஜாதிக ஹெல உறுமைய, சிலங்கா முஸ்கிம் காங்கிரஸ், தமிழரசு கட்சி மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைவர்களை சந்திக்கவுள்ளார்.வெள்ளிக்கி
-
- 11 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்து இயங்கும் இலங்கை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் இன்று மதியம் குமுளமுனை கிராமத்தின் ஒரு பகுதியை பிடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.. Troops dominate part of Kumulamunai village - Mullaittivu Troops of 59 Division operating in the Mullaittivu jungle have dominated a part of the Kumulamunai village this afternoon, 11 November, reaching another significant milestone in the Wanni liberation offensive. Security forces dominated a part of the road running between Tannimurippu-Kulam and Kumulamunai earlier and continued their military thrust to enter the strategically important township, Kumulamunai, located 13 Km south o…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 15 replies
- 1.9k views
-
-
[Wednesday, 2011-06-22 17:19:01] பார்க்கக்கூடாத திரைப்படமொன்றைப் பார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இரு மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பொதுமக்களுடனான பெரும் போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள மேற்படி இரு மாணவிகளும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.ஜீ.குரே தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நேற்று முன்தினம் பிற்பகல் காத்தான்குடியில…
-
- 19 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.9k views
-
-
http://www.yarl.com/files/110405_thamilaga_kannootam.mp3
-
- 0 replies
- 1.9k views
-
-
[Thursday, 2011-09-01 12:57:13] யாழ் திருநெல்வேலி பாரதிபுரம், கொக்குவில் பிரதேசங்களில் நேற்று இரவு முழுவதும் மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் இடம் பெற்றள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 7 மணிமுதல் குறித்த பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதேவேளை பாரதிபுரம் பகுதியில் பெண் ஒருவரின் மார்பு பகுதியில் மர்ம மனிதர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மர்ம மனிதர்கள் குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண் அவர்களிடமிருந்து விடுபட முயன்றுள்ளாள். இதன் போது மர்ம மனிதர்கள் அப் பெண்ணின் மர்ப்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். சம்பவத்தில…
-
- 1 reply
- 1.9k views
-
-
:arrow: [url=http://www.eelampage.com/?cn=28806]ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சென்னை துணைத் தூதுவர் ஹம்சா சதி: "நக்கீரன்" அம்பலம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 16:08 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மூலம் ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சிறிலங்காவுக்கான சென்னை துணைத் தூதுவராக உள்ள ஹம்சா சதித்திட்டம் தீட்டுவதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. நக்கீரன் வாரமிருறை ஏட்டில் வெளியாகி உள்ள கட்டுரை விவரம்: "இப்போதுள்ள சூழலை அதிபர் ராஜபக்ச பயன்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும்'' என அதிபரிடமே நேரில் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கைக்கு வந்த இந்திய நிதியமைச்சர் ப.…
-
- 7 replies
- 1.9k views
-
-
A Counterfeit Guerrilla: A tale of Lies by SoCalled Tamil Tigress Niromi de Soyza The objective of this research note is not only to uncover the truth or otherwise of the “memoir” by Niromi de Soyza (nom de guerre) titled Tamil Tigress: My story as a child soldier in Sri Lanka’s bloody civil war, but to go beyond and investigate the purpose/s of publication of her “personal story” and reason/s for hiding her real name and identity. This research note is based on the reading of the book under scrutiny in its entirety, promotional blurbs and reviews of the book by journalists in Australia, critical reviews of the book by two persons of Sri Lankan origin living in …
-
- 3 replies
- 1.9k views
-
-
பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையைச் சேர்ந்த கருணா, சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டதாக நேற்று இரவு செய்திகள் பரவின. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
புலிகளை பாதுகாப்பதாக அமையும் நோர்வேயின் புதிய சட்டமூலம் அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் நீதி அமைச்சினால் பயங்கரவாத அமைப்புகளையும் செயற்பாடுகளையும் தடை செய்வதற்காகத் தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (Anti-Terrow Laws) சம்பந்தமாக ஷ்ரீலங்கா அரசும் ஐக்கிய அமெரிக்க அரசும் அவற்றின் எதிர்ப்பை நோர்வே அரசுக்குத் தெரிவித்துள்ளன. இதற்குக் காரணம் நோர்வே நீதி அமைச்சின் மேற்படி சட்டமூலத்தில் கூறப்பட்டிருக்கும் சட்டவிதிகளும் சட்ட நடைமுறைகளும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் அங்கத்தவராக இருந்து செயற்படுவது நோர்வேயில் சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் அவ்வாறே பயங்கரவாத நடவடிக்கையில் குறித்த பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஈடுபட்ட…
-
- 1 reply
- 1.9k views
-
-
கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவும் வேகமாகவும் பறந்து சென்றதாகக் கூறும் இந்த நிருபர், அடர்ந்த வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் கனரக ஆயுதங்களுடன் இன்னமும் உலாவிவருவதாக வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். இவர்களைத் தேடி அளிக்க பல மாதங்கள் ஆகலாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டுவிட்டது என்ற ஒரு செய்தியை புலம்பெயர் மக்களுக்கு பரப்புரையாக மேற்கொள்ள இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஊடகமே இந்த நியூஸ் X ஆகும். இந்த காணொளி முழுவதும் …
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை ஒன்றை நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறியுள்ளார். http://www…
-
- 12 replies
- 1.9k views
-
-
வெள்ளி 01-06-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] ஒட்டுக்குழு உறுப்பினர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி மீது தாக்குதல் - 6 பேர் பலி அம்பாறையில் இருந்து பொத்துவில் நோக்கி கருணா ஒட்டுக் குழுவினரை ஏற்றிச்சென்ற இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது “இன்ஸ்பெக்ரர் ஏற்றம்” பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நேற்றிரவு இம்பெற்ற இந்த தாக்குதலைத் தொடர்ந்து 3 உடலங்களை ஒட்டுக் குழுவினர் இன்று காலை கோமாரிப் பகுதிக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும், ஏனைய 3 உடலங்களும் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நேற்றைய இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், அவர்கள் பொதுமக்களா, அல்லது ஒட்டுக் குழவினரா என்பது தெரிய வரவில்லை. கர…
-
- 2 replies
- 1.9k views
-