ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப நேர மாற்றம் இடம் பெறலாம் எனவும் CNN அறிவித்துள்ளது.. இலங்கையின் 30 வருட உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் குரலாக இந்த ஆவணப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு அமோக ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பிரிட்டன், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் காணி சுவீகரிப்புக்கு எதிராக சர்வதேச மாநாடு ஒன்றையும் லண்டனில் நடத்தவுள்ளது. பிரிட்டன் சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவும் பிரிட்டன் தமிழர் பேரவையும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூவர் அடங்கிய குழு இன்று லண்டன் ச…
-
- 2 replies
- 439 views
-
-
இந்திய உயர் தூதுவராலயம் கொழும்பு ஊடக அறிக்கை இலங்கை அரசு - தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளை இந்தியா வரவேற்கிறது ! 1. இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், நா.உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை இன்று சந்தித்தார். 2. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மார்ச் 25 சந்திப்புக் குறித்து, த.தே.கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி நிலைமைகள் பற்றி விளக்கினர். அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பாவனை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் முதலீடு உள்ளிட்ட விடயங்க…
-
- 2 replies
- 329 views
-
-
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு றிசாட் பதியுதீனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வீரபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் இந்த அராஜக அமைச்சரின் செயல் குறித்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் குறித்த பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளுக்கு மேல் றிசாத் பதியுதீனின் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இந்தச் செயலுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற பதி…
-
- 10 replies
- 1.4k views
-
-
பேரறிவாளன் - சாந்தன் - முருகன் தூக்கில் இருந்து மீள்வார்களா? உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? டில்லி வழக்கறிஞர் பிரபு இராமசுப்ரமணியம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்றைய விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த கருணை மனு 11 ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தி…
-
- 0 replies
- 571 views
-
-
நாடாளுமன்றுக்கு, ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன இந்த வீர வசனத்தை முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் கூறுங்கள் - எதிர்க்கட்சி! நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்…
-
- 3 replies
- 191 views
-
-
இலங்கைக்கு 16 விமானங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை இலங்கை விமானப்படைக்கு 16 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில், குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் என விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் போர் விமானங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கைக்கு-16-விமானங்களைக்-கொள்வனவு-செய்ய-நடவடிக்கை/150-205136
-
- 1 reply
- 232 views
-
-
பெருந் தோட்டங்களின்... பல்வேறு பகுதிகளிலும், போராட்டங்கள் முன்னெடுப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர். தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேலும் சில இடங்களில் 12 மணிக்க…
-
- 0 replies
- 137 views
-
-
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க முத்துக்குமரன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தற்கு வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதுக்கென்றால் எங்களின் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் அம்மாவும், எங்களின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை இந்த அரசுகள் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், எங்கள் இயக்கத் தோழர் முத்துக்குமரன் மீது 3 வருடத்திற்கு முன் முடிந்து போன வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்து கைது செய்ததை கண்டித்தும் நடத்தப்படுகிறது. மே 18ஆம் தேதி நாம் தமிழர் மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டை முடக…
-
- 0 replies
- 1.1k views
-
-
அநாதரவான படகிலிருந்து 153 கிலோ கஞ்சா மீட்பு 0 SHARES ShareTweet காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து வட கிழக்கில் 8.5 கடல் மைல் தூரத்தில் அநாதரவாக இருந்த படகிலிருந்து 153 கிலோ கிராம் கேரளக் கஞ்சா நேற்றுக் கைப்பற்றப்பட்டது என்று கடற்படையினர் அறிவித்தனர். கடற்படையினர் வழமையான கடல் சுற்றுக் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு படகின் நடமாட்டத்தை அவதானித்தனர். அந்தப் படகை நெருங்கியபோது படகில் எவரும் இருக்கவில்லை. படகை கடற்படையினர் சோதனையிட்டனர…
-
- 0 replies
- 217 views
-
-
இடைக்கால அரசாங்கத்தை... ஆறு மாதங்களிற்கு, ஏற்படுத்துவதற்கான யோசனை – முன்னாள் ஜனாதிபதி முன்வைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஆறு மாதங்களிற்கு ஏற்படுத்துவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். தனது யோசனைகளை கடிதமொன்றில் தெரியப்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர், “நான் பல கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு பின்னர், காலிமுகத்திடலில் உள்ள இளைஞர்கள் பெரியவர்களின் கோரிக்கைகளை-மூத்த அரசியல்…
-
- 0 replies
- 86 views
-
-
ஈழம் – இன்றைய அவலம் : எம்.ரிஷான் ஷெரீப் “கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பது போலவே இன்றைய ஈழ மாணவர்களின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்கள் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பி தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்கவேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும், தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காக குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக…
-
- 0 replies
- 941 views
-
-
சிறிலங்காவின் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களில், சீனாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வடக்கிற்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்தும் பொறுப்பையும் சீனாவே ஏற்றுக் கொண்டுள்ளது. சீன அரசுத்துறை நிறுவனமான மேர்ச்சன்ட் குழுமம், 1 பில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளது. போரினால் பாதிக்கப்பட வடக்கையும், சுற்றுலா நகரான கண்டியையும் கொழும்புடன் இணைக்கும் வகையில் சுமார் 300 கி.மீ தூரத்தைக் கொண்டதாக இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, 48 கி.மீ தூர நெடுஞ்சாலை அமைப்புப் பணிகள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான சாத்திய வள ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், இது தொடர்பான புரிந்த…
-
- 4 replies
- 717 views
-
-
‘உங்களை புரிந்துகொள்கின்றோம், எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ சிங்கள மக்களிடம் தமிழர் தரப்பு! தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியாக ‘உங்களை புரிந்துகொள்கின்றோம் எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ எனும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருமித்த குரலாக கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு தமிழர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து, தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக ஆராய்ந்தனர். இதன்போது, வடக்கு கிழக்கு சார்ந்த சைவ ஆதீன முதல்வர்கள், கத்தோலிக்க குரு…
-
- 1 reply
- 357 views
-
-
''ஒரு வருட காலத்திற்குள் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் எங்கள் பதவிகளைத் துறந்து எமது மக்களது விடுதலைக்காக உலகத் தமிழர்களுடன் இணைந்து போராடங்களை முன்னெடுப்போம்'' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாக இணையத் தளங்களில் வந்த செய்திகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் சற்றுத் தலை நிமிர்த்த வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடத்தை மீது சந்தேகம் தெரிவித்தவர்கள் கூட, இந்தச் செய்தியால் உற்சாகம் கொண்டுள்ளார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் நொருங்கிப்போய், பேச்சு - மூச்சிழந்து முகம் புதைத்…
-
- 12 replies
- 1.6k views
-
-
மகிந்தவை பதவிவிலகுமாறு கோட்டா கோாிக்கை May 6, 2022 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பல அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன . எனினும் சில அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2022/176256 பதவி விலகுமாறு ஜனாதிபதி…
-
- 5 replies
- 524 views
-
-
போர் முடிந்தும் இனஉறவுகள் மேம்படவில்லை இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், அங்கு அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இன்னமும் முகாம்களில் மக்கள் போர் முடிந்து ஓராண்டாகியும் மக்கள் முகாம்களில் உள்ளனர் இந்நிலையில் பல ஆண்டுகளாக சமூகங்களுக்கு இடையே சீர்குலைந்து போயிருந்த இன உறவுகளை சீரமைக்கின்ற பணி இன்னும் இலங்கையில் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்று ஆய்வாளரும் இலங்கை விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான டி பி எஸ் ஜெயராஜ் கூறுகிறார். டி பி எஸ் ஜெயராஜ் பேட்டி போர் ஏற்படுத்திய பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் கூட இன்னமும…
-
- 1 reply
- 503 views
-
-
துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த இ.போ.ச பேரூந்து மீது யாழில் தாக்குதல்! [Monday, 2014-03-17 08:47:36] யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது மடத்தடியில் வைத்து இன்று (17) காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், அதில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்ததுடன், பேரூந்தின் முன்பக்க கண்ணாடிகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேரூந்து - பேரூந்து நிலையத்தில் தரித்து நின்றிருந்த வேளை அங்கு வந்த சிலர் பேரூந்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு முயற்றுள்ளனர். எனினும் அதனை சாரதியும் நடத்துனரும் அதற்கான …
-
- 0 replies
- 340 views
-
-
அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்குள் அரசினால் செல்லவிடாமல் தடுக்கப்பட்டமைக்கு சர்வதேச சமூகம் இன்னமும் கண்டனம் வெளியிடாமை குறித்து கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பாக மேலும் தெரி வித்தவை வருமாறு: அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக எந்த ஒரு சர்வதேச அமைப்பும் இன்னமும் கண்டனம் வெளியிடவே இல்லை. சர்வ தேசத்தின் மௌனம் தமிழ் மக்களை மிகவும் காயப்ப டுத்தி உள்ளது. தமிழ் மக்களுக்கு அரசு எ…
-
- 0 replies
- 623 views
-
-
ஒரு முடியாத போர் admin | March 22, 2014 | 0 Comments நேற்றைய தினம் (21.03.2014) அன்று பிரித்தானியா கனடிய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ‘ஒரு முடியாத போர்” இலங்கையில் சித்திரவதையும் பாலியல் வன்முறையும் என்ற நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்ந நூலை யஸ்மின் சூகா ( The Bar Human Rights Committe,England & Wales,The International Truth and Justice Project-Srilanka) அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் போருக்குப் பின்னர் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களின் உண்மைகள் தொகுக்கப்பட்டுள்ளது. நூலை வாசிக்க கீழ் வரும் இணைப்பில் அழுத்தி வாசியுங்கள் :- http://www.stop-torture.com/ போருக்கு…
-
- 0 replies
- 668 views
-
-
யாழ். கண் சிகிச்சை விவகாரம்: பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் பார்வையிழப்பு சத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமானபோதும், ஒருவர் முழுவதும் பார்வையிழந்தார். கண் புரை பாதிக்கப்பட்ட பத்துப் பேர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்துகொண்டனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐந்து பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கண் மருத்துவ நிபுணரால் மீள கண் சத்திர சிகிச்சை ச…
-
- 1 reply
- 641 views
-
-
இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து புதுடெல்லி , புதன், 9 ஜூன் 2010( 15:51 IST ) தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு, முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீள்குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ராஜபக்சவுடன், பிரதமர் மன்மோகன் சிங் விவாதித்த நிலையில், இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. இலங்கை அதிபராக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நான்கு நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார் ராஜபக்ச.அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜபக்ச, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை முகாம்களில் அடைக்…
-
- 0 replies
- 606 views
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷிய, ஒஸ்ட்ரிய பிரதிநிதிகள் அங்கம் வகிக்க உள்ளனர் 20 June 10 01:50 am (BST) இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷிய மற்றும் ஒஸ்ட்ரிய பிரதிநிதிகள் அங்கம் வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய சர்வதேச முதன்மையாளர் குழுவில் அங்கம் வகித்த இந்தோனேஷியாவின் சட்ட மா அதிபர் மாரூஸ்கீ டாருஸ்மான் இந்த நிபுணர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலைச் சம்ப விசாரணைக்குழுவிலும் டாருஸ்மான் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிபுணர்கள் குழு…
-
- 0 replies
- 799 views
-
-
கைது செய்யப்பட்ட 14 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்கக் கோறி மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள் (படங்கள்:கித்சிறிடிமெல்) http://tamil.dailymirror.lk/--main/105668-2014-04-03-09-51-08.html
-
- 0 replies
- 383 views
-
-
டீசல் விநியோகத்தை... மட்டுப் படுத்தப்படுத்த, தீர்மானம். மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் அடுத்த கப்பல் டீசல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1285466
-
- 0 replies
- 236 views
-