ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
[ வியாழக்கிழமை, 02 யூன் 2011, 01:31.23 AM GMT ] ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான கடந்த திங்களன்று இலங்கை விவகாரம் தான் சூடுபிடித்திருந்தது. கூட்டத்தொடரை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது இலங்கை விவகாரம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஐ.நா நிபுணர்கள் குழு கூறியிருப்பதையும், அதன் அடிப்படையில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
சனல் 4 தொலைக் காட்சியில் ஸ்ரீ லங்காவின் கொலைக் களம் (Sri Lanka's Killing Fields ) என்ற ஒரு மணித்தியால திரைப்படம் ஜூன் 14 காண்பிக்கப் பட உள்ளதாக அறிவித்துள்ளர்கள். அதற்கு முன் ஜெனீவாவில் உள்ள U .N அலுவலகத்தில் இத் திரைப்படம் ஜூன் 3 , 11 .00 மணிக்கு திரையிடப்படும். மேலும் வாசிக்க http://www.channel4.com/info/press/news/un-premiere-for-sri-lanka-war-crimes-film
-
- 14 replies
- 2.4k views
- 1 follower
-
-
ஜோசப்பரராஜசிங்கம் - ரவிராஜ் - கோத்தாபயவின் உத்தரவில் கருணாவின் உதவியாளரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கோத்தாபயவின் உத்தரவில் கருணாவின் உதவியாளரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்? நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும் இந்த இரண்டு கொலைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவு காரணமாகவே இந்த இரண்டு கொலைகளுடன் சம…
-
- 0 replies
- 837 views
-
-
நவீனமயமாகும் யாழ் வீதிகள் June 2nd, 2011 nila யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியிலிருந்து நல்லூர் பாரதியார் சிலை சந்தி வரை செல்லும் அரசடி வீதியின் ஒரு பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டு வருகிறது. யாழ் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியிலிருந்து நல்லூர் பக்கமாக இந்த அரசடி வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கார்ப்பெட் வீதி அமைக்கும் பணி நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாலையளவில் கந்தர்மடம் சந்தி வரையிலான பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுவிட்டதாக யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஏற்கனவே, நல்லூர் சங்கிலியன் தோப்புப் பகுதியிலிருந்து செம்மணி ஊடாகச் செல்லும் செம்மணி வீதியை கார்ப்பெட் வீதியாக்கும் பணி நடைபெற்றுள்ளது. சங்கிலியன் தோப்பு பகுதி…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
[Thursday, 2011-06-02 05:17:10] சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி பொலிஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான முறைப்பாட்டு மனு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார். நடிகை விஜயலட்சுமி முறைப்பாடு கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, …
-
- 7 replies
- 2.3k views
-
-
மூன்றில் இருந்து இரண்டாம் உலக நாடக, ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்.. கிட்டடியில் இலங்கையில் சிங்கள அரசாங்க பென்சன் பிரச்சினையில் சிங்கள ஆர்ப்பாட்க்காறர்களும் சிங்கள பொலிஸாரும் மோதிக்கொண்டனர்.. சிங்கள பொலிசார் கடுமையாக தாக்கப்பட்ட கோபத்தில் சிங்கள பொலிஸ் சிங்கள ஆர்ப்பாட்டக்காறர்களை கடுமையாக தாக்கி விட்டது.. இதனை தொடர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் பாரிய சல சலப்பு ஏற்பட்டது. சிங்கள மீடியாக்கள் இதை தலையில் துக்கிவைத்து ஆடினார்கள்.. இதைத்தொடர்து பல சிங்கள பொலிஸ் காறர்கள் பதவி நீக்கப்பட்டதுடன் சிங்கள அதிகாரிகள் விரும்ப்பத்தகாத மாற்றலுக்கு உள்ளானர்கள்.. இறுதியாக இலங்கை தலமை பொலிஸ் அதிகாரிக்கும் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது.. இப்படியல்லவோ ஒரு இரண்டாம்…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பும் பணி எந்தளவுக்கு உள்ளது என்று இலங்கையில் எத்தனை பேருக்குத் தெரியும்? போரின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், இழப்பீடு போன்றவை எந்தளவில் வழங்கப்பட்டுள்ளன என்ற அறிதல் எத்தனை பேரிடம் உள்ளது? யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களின் பிரச்சினைகளும் தேவைகளும் எந்தளவுக்குத் தீர்க்கப்பட்டுள்ளன? இந்த மாதிரியான கேள்விகள் நிச்சயமாக இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்திருக்க வேண்டும். ஏனெனில், அமைதியை நோக்கியும் அபிவிருத்தியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் அரசியற் தீர்வை நோக்கியும் இலங்கைத் தீவு பயணிக்க வேண்டுமாயின் போர்ப் பிரதேசங்களின் இயல்பு நிலையும் அபிவிருத்தியும் முதலில் சமனிலை அடைய வேண்டும். …
-
- 3 replies
- 826 views
- 1 follower
-
-
02 ஜூன் 2011 தமிழர்கள் அனுபவித்த அந்த வலியை தெற்கு உணர ஆரம்பித்திருக்கிறது - மனோ கணேசன் கட்டுநாயக்க இளைஞர் கொலை குறித்து மனோ கணேசன் வட-கிழக்கிலும், கொழும்பிலும் வாழ்ந்த தமிழர்களை தேடி அழித்த அரச பயங்கரவாதம் இன்று தென்னிலங்கையையும் பதம் பார்க்கின்றது. இதன் அடையாளமே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள இளைஞனின் மரணமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சம்பம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பொலிஸாரின் தாக்குதலினால் படுகாயத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் மரணமடைந்துள்ள ரொஸான் சானக்க என்ற இளைஞனின் படுகொலையை ஜனநாயக மக்கள் முன்ன…
-
- 3 replies
- 807 views
-
-
வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 2, 2011 பொலிசார் உள்ளாடைகளை களைந்து பொலிஸ் நிலையங்களில் கைதிகளை தாக்குவதை நேரில் பார்த்தேன் என உடப்புஸ்ஸலாவ எனும் இடத்தைச்சேர்ந்த மனித உரிமைவாதி எம். தாரிக் கூறியுள்ளார். கொழும்பில் நடந்த மனித உரிமை கூட்டத்தில் மேற்கண்டவாறு பேசினார். இவரது உரை வருமாறு; . “பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் அடாவடித்தனங்களால் மக்களை அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் நெறியான முறையில் நடந்தால்தான் ஏனையவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள். . நான் ஒரு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். எந்தப் பொலிஸ் நிலையம் எனச் சொல்ல மாட்டேன். அங்கு இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
[Thursday, 2011-06-02 10:56:54] ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது வைகோ கூறியத…
-
- 6 replies
- 973 views
-
-
கொழும்பில் நடந்த மனித உரிமை கூட்டத்தில் இந்து குருக்கள் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதாவது நாடளாவிய பஸ்களின் முன் இருக்கை மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் தெரிந்த விடயமாகும். . எனினும் இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் மதகுருமாருக்கு அந்த இருக்கை வழங்கப்படுவதில்லை என்பதே என்னுடைய ஆதங்கம். என ஆதங்கப்பட்டார். . பௌத்த பிக்கு ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது எழுந்து இருக்கை கொடுக்கும் மக்கள் எம்மைப்போன்ற ஏனைய மதத்தவர்களுக்கு இருக்கை கொடுப்பதில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஏனைய மதகுருமார் நின்றுகொண்டு செல்வதை நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும். என்றார். mylink
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று தீடிர் பதிவு வெளிமாவட்ட மக்களையும் வெளியேற உத்தரவு . Thursday, June 2, 2011, 19:35 சிறீலங்கா, தமிழீழம் கிளிநொச்சியிலும், கிளிநொச்சியை அண்டிய கிராமத்தில் உள்ள மக்களிடம் வீடுவீடாகச் சென்று, தமிழில் உரையாடி பதிவை மேற் கொள்ளும் இராணு வத்தினர் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை விட வேறு ஒருவரும் இரவு வேளைகளில் தங்க முடியாது என்றும் அப்படித் தங்கினால் அந்த வீட்டுக்காரர்தான் பதில் சொல்லவேண்டும் என்றும் அவர்களை விசாரணைக்கு உற்படுத்தப்படுவார்கள் என்றுத் முதலாம் திகதியில் இருந்து பத்தாம் திகதி வரை இந்த நடை முறைஅமுலில் இருக்கும் என்றும் கூறிச் சென்றனர் . இதே போன்று கிளிநொச்சி மாவட்டத்தைவிடஏனைய மாவட்டங்களில் உள்ளவர…
-
- 0 replies
- 710 views
-
-
மே பதினேழு இயக்கம் ஐ. நா வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ இனப்படுகொலையில் ஒரு குறைந்தபட்ச ஒரு ஆரம்ப முயற்சியாக வரவேற்கிறது. இந்த அறிக்கை போர் பற்றிய இலங்கை அரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாத ஒன்றாக பார்க்கிறது. தமிழீழத்தில் நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலை அடிப்படையிலான போர் மற்றும் இதன் பின்னனியாக 60 ஆண்டுகால விடுதலை போராட்டம் உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும். போரில் 1,46,000தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமன்றி 1,00,000 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதலை கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர். ஆக 2,50,000க்கும் மேலாக தமிழர்களை படுகொலை செய்த அரசின் …
-
- 0 replies
- 675 views
-
-
02 ஜூன் 2011 ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கோத்தாபயவின் உத்தரவில் கருணாவின் உதவியாளரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்? நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும் இந்த இரண்டு கொலைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவு காரணமாகவே இந்த இரண்டு கொலைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் எவருக்கெதிராகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள்…
-
- 0 replies
- 985 views
-
-
ஜெய் ஆகாஷின் ஆயுத போராட்டம் படப்பிடிப்புக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு June 1st, 2011 nila இலங்கையின் சூழ்நிலையை மையமாகக் கொண்டு ஜெய் ஆகாஷின் நடிப்பில் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுத போராட்டம் என்னும் படத்திற்கு இலங்கையில் படப்பிடிப்பினை மேற்கொள்ள இலங்கை அரசு தொடர்ந்தும் மறுத்து வருகிறது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த படப்பிடிப்பு குழு தற்போது படப்பிடிப்பினை தாய்லாந்தில் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த படத்திற்கான பாடல் வெளியீடு இன்று இடம்பெற்றது. thaynilam.com
-
- 1 reply
- 870 views
-
-
Posted by சங்கீதா on 02/06/2011 in செய்தி சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சா தன்னை காட்டிக் கொடுத்து விட்டதாக சிறீலங்காவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன நேற்று கடும் ஆத்திரத்துடன் நேற்றிரவு கூறியதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் பிரச்சினையில் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த உத்தரவின் பேரில் தான் காவல்துறை உத்தரவு பிறப்பித்தாகவும் எனினும் உத்தரவிட்ட பாதுகாப்புச் செயலாளர் தன்னை காட்டிக் கொடுத்து விட்டதாக காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஏற்பட்டுள்ள மக்களின் எதிர்ப்பு தொட…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிவில் நிர்வாகம் மறுக்கப்பட்டுள்ள வடக்கில் இராணுவ மயமாக்கலுக்குள் வாழ்ந்து வருகின்ற அப்பாவித் தமிழ் மக்கள் அங்கு தமது பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாதவாறு மௌனிகளாகவே இருக்கின்றனர். இதனால் தான் வடக்கு மக்களின் குரலாக ஜே.வி.பி. செயற்பட்டு வருகின்றது என்று தெவித்த அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இது தொடர்பில் அரசாங்கத்தினால் கூறப்படுகின்ற எதனையும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார். ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது வடக்கிற்கு செல்கின்ற ஜே.வி.பி.யானது அங்கு தெரிவிக்கின்ற கருத்துக்கள் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் குழப்பத்தை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது என்று அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 665 views
-
-
சிங்கள அரசின் போர்வெற்றி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு, யுத்தகால கள நிலவரங்களை விளக்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்துமாறு அமெரிக்க ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் கேட்டிருந்தார். பிரதிநிதியொருவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்த சவேந்திர டி சில்வா அவ்வாறு பதில் அளித்தால் அது நாட்டின் இறைமையினை பாதிக்கும் எனவும் கூறியுள்ளார். யுத்த களத்தில் இராணுவத்தின் 58ஆவது படையணியின் தளபதியாக சவேந்திர சில்வா பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றில் வெள்ளைக்கொடி தொடர்பில் வழக்கு நடப்பதனால் தான் அது பற்றி எதுவும் கூற முடியாது என கூறியுள்ளார். htt…
-
- 1 reply
- 538 views
-
-
தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே! ரணில் டெல்லி பயணம் குறித்து சீமான் அறிக்கை! இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயின் டெல்லி பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்துப் பேசியதாகக் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கே, அவர்களுடன் என்ன பேசினார் என்ற விவரம் எதையும் வெளியிடவில்லை. இந்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த ரணில் விக்கிரமசிங்கேயுடன் தாங்கள் …
-
- 1 reply
- 530 views
- 1 follower
-
-
02 ஜூன் 2011 மார்க் சோப்பர் : அரசியல் ரீதியான காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான, ஐக்கிய நாடுகளின் மூவர் அடங்கிய நிபுணர் குழு அறிக்கை மனித உரிமை ஏதுக்களை முன்னிலைப்படுத்தியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிபுணர் குழு அறிக்கையானது 2009ம் ஆண்டு காஸா தொடர்பான கோல்ட்ஸ்டோன் அறிக்கைக்கு நிகரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலியர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு அறிக்கை தயாரித்த நிபுணர் குழுவின் தலைவர் நான்கு மாதங்களின் பின்னர் தரவுகளில் உண்மையில்லை என ஒப்புக் கொண்டிருந்த…
-
- 1 reply
- 967 views
-
-
Posted by சோபிதா on 02/06/2011 in செய்தி கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது கருணா துணைஇராணுவக்குழவின் உதவிகள் பெறப்பட்டிருந்ததாக சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் சிறப்புப்படை அதிகாரியும், போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் நடைபெறும் படைத்துறை மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாகரை மீதான படை நடவடிக்கையின் போது பின்வாங்கும் வழிகள், அதனை தடுத்து நிறுத்துவது அல்லது தாக்குதல் நடத்தும் வழிகள் தொடர்பான உதவிகளை நாம் கருணா குழவிடம் இருந்து பெற்றுக்கொண்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 75,000 இற்கு …
-
- 0 replies
- 765 views
-
-
Thursday, June 2, 2011, 12:24சிறீலங்கா சிறிலங்காவின் தென் பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் ஒரு வாரத்துக்குள் இரு சிறைக்கைதிகள் மரணமடைந்தமை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.நீர்கொழும்புச் சிறைச்சாலையிலேயே இந்த இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இந்தச் சிறைச்சாலையில் தண்டனை பெற்று வரும் ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஸ்மன் என்பவர் கடந்த 23 ஆம் திகதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தும் அவரது உறவினர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். . இதேவேளை,சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த லோரன்ஸ் என்ற சிறைக்கைதி ஒருவரும் மரணமடைந்துள்ளார். வயிற்று வலியினால் தான் அவதிப்படுவதாக நீர்கொழும்புச் சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர…
-
- 0 replies
- 554 views
-
-
Thursday, June 2, 2011, 11:58சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வாவை கைது செய்ய வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஐனாதிபதி மஹிந்த உத்தரவிட்டுள்ளார் . துமிந்த சில்வாவே இலங்கையில் அதிக அளவில் போதைப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களில் முக்கியமானவராக காணப்படுகிறார் இலங்கையில் அதிக போதை பொருள் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா ஆகியோரை கண்காணிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வலானை குற்றுத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார் இதனை அடுத்து கேரளாவில் இருந்து சிலாபத்துக்கு போதைப் பொருட்களை கொண்டு வந்த படகு ஒன்றை குற்றத்தடுப்பு பிரிவின்…
-
- 0 replies
- 599 views
-
-
Thursday, June 2, 2011, 11:55சிறீலங்கா அரசாங்கம் எதிர் பார்த்தது போல், பயங்கரவாத்தை தோற்கடித்தில் இலங்கை அனுபவங்கள் மாநாட்டில் வெளிநாடுகளில் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் கலந்துக்கொள்ளாததால், மாநாட்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த கலந்துக்கொள்ளவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . 5 கோடி ரூபா செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் அமெரிக்க இராணுவத் தளபதி டேவிட் பிலேடினஸை கலந்து கொள்ள செய்ய கடும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க நிராகரித்தது. அதேவேளை, செனகல் நாட்டின் இராணுவ தளபதி இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளதாக அரசாங்கம் ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்…
-
- 0 replies
- 782 views
-
-
Thursday, June 2, 2011, 9:04சிறீலங்கா கட்டுநாயக்கவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த இளைஞன் றாகமை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதே வேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிலாளர் சங்கம் புறக்கோட்டைப் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசுக் கெதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் தனியார் ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி தணிக்கை மோதல்களில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணி…
-
- 0 replies
- 507 views
-