ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதிகாரத்தைப் பகிருமாறு கோரவில்லை என்றும், அதிகாரத்தைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியாகியுள்ள சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில், அதிகாரத்தைப் பகிர்வதாக கூறி வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்தினால், மீண்டும் பறித்தெடுத்துக்கொள்ள முடியும் என்பதால் தாங்கள் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கலை கோரவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆகவே அதிகாரத்தைப் பகிராமல் அதிகாரத்தை தங்களிடமே தந்துவிடுமாறே கோருவதாகவும், அதன்போது அதிகாரம் தங்களிடமே நிரந்தரமாக இருக்கும் என்றும், …
-
- 0 replies
- 409 views
-
-
-
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்க செய்தியாளர் மாநாடு
-
- 0 replies
- 263 views
-
-
அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் சம்பந்தனுக்கு அக்கறை அதிகார பகிர்வு தொடர்பாக சிங்கள, தமிழ் மக்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.எனினும் அதிகார பகிர்வு விடயத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தனும் தானும் அக்கறையுடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி சவால்கள் குறித்த விசேட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் அதிகார பகிர்வு விடயத்தில் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனும் தானும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த அவர், மத்திய அரசிற்கும் மாகாணங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும் இடையிலா…
-
- 0 replies
- 246 views
-
-
வடமாகாண சபையில் நேற்று இடம் பெற்ற விவாதத்தின் போது வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தவராசா வட மாகாண சபையில் செயற்பாடுகள் குறித்து தனது எதிர்ப்பு கருத்தினை வெளியிட்டார். வடமாகாண சபை தனது அதிகாரங்களை முறையாக பயன்படுத்துவதில்லை, வெறும் பிரேரனைகள் கொண்டு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்வதற்கு வட மாகாண தொழிற்பட வேண்டும் எனவும் தவராசா விவாதித்தார். http://www.tamilwin.com/politics/01/131483?ref=home
-
- 0 replies
- 348 views
-
-
அதிகாரத்தை, அரச கட்டிடங்களை கைப்பற்ற வன்முறை, ஜனநாயகவிரோத வழிமுறைகளை பயன்படுத்தும் கட்சிகள், குழுக்கள் தடை செய்யப்படலாம் - அரச அதிகாரி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அல்லது அரச கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு வன்முறை ஜனநாயகவிரோத வழிமுறைகளை பின்பற்றும் எந்த குழுவும் அரசியல் கட்சியும் அமைப்;பும் தடை செய்யப்படலாம் என சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மீண்டுமொரு முறை 9 ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு சில குழுக்கள் திட்டமிட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே தடை குறித்து தீவிரமாக ஆராயப்படுகின்றது. அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு ஆக்கிரமிப்பதற்கான சேதப்படுத்துவதற்கான முயற்சிகள் பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்…
-
- 0 replies
- 184 views
-
-
அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய த.தே.கூட்டமைப்பும் நல்லாட்சி அரசும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளது!- பிள்ளையான் By கிருசாயிதன் அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றஞ்சாட்டினார். அதேவேளை, பெரும்பான்மையின மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். களுதாவள…
-
- 0 replies
- 277 views
-
-
அதிகாரத்தைப் பகிர மறுப்போர் இன்று வாக்குக் கேட்டு வந்துள்ளனர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஆறுதல் கூறுவதற்கு மறுப்பவர்கள், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்பவர்கள் இன்று வாக்குக் கேட்டு வந்துநிற்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிந்து 2 வருடம் பூர்த்தியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட பரப்புரையால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஏனை…
-
- 0 replies
- 244 views
-
-
அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றனர் – சந்திரிக்கா அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நிறுவனமொன்றின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் 23 வீதமான சிங்களவர்களே அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் பின்னர் அந்த எண்ணிக்கை 68 வீதமாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெண்த…
-
- 0 replies
- 521 views
-
-
[size="5"]அதிகாரத்தைப் பகிர்ந்தால் பாரிய நெருக்கடிக்கு [/size] [size="5"]முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்: அரசாங்கம்[/size] இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய அரசாங்கம் ௭டுத்துள்ள நடவடிக்கையைப் பாராட்டுகின்றோம். அதிகாரம் பகிரப்பட்டிருப்பதால் மத்திய அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி தமிழகத்தில் இலங்கை பிரஜைகளின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் தீர்வின் போது அதிகாரத்தை பகிர்ந்தால் நாமும் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் ௭ன்பதை தமிழக சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன ௭ன அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்துக்கு ௭திராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ௭திர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக…
-
- 1 reply
- 566 views
-
-
வடக்கில் தேர்தல் நடத்தப்படாவிடின் அந்தப் பிரதேசம் தனிநாடாகவே கருதப்படும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=16646
-
- 0 replies
- 631 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை பரவலாக்க தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் மிகவும் நம்பிக்கையுடன் யுத்தத்தை மேற்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிதி சட்டத்திட்டங்கள், கேள்வி பத்திர நடைமுறை, கணக்காய்வு சட்டங்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி கடன்களை பெற்று யுத்தத்திற்காக அதிகளவான பணத்தை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் http://eelampress.com/index.php?subaction=...t_from=&ucat=2&
-
- 0 replies
- 1k views
-
-
யுத்தத்தால் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த வடபகுதி தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பரவலாக்கலுடன் அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்காததன் பின்னணியிலேயே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டு மென்றும்,யுத்தக் குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் தமிழக சட்ட சபையில், ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெவித்தார். விடுதலைப் புலிகள், கேட்டதை தமிழ் அரசியல் கட்சிகள் கேட்கவில்லையென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கருத்து தெவிக்கையில், அன்றைய தமிழக தி.மு.க. அரசின் மறைமுக ஒத்துழைப்புடனும், இந்திய மத்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளை பெற்றுக் கொண்டே இலங்கை அர…
-
- 1 reply
- 514 views
-
-
தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக முன்மவைக்கப்படும் அதிகாரபரவலாக்கலை பெருபான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பதாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் முன்னெடுத்து வரும் பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பரவலாக்கலை சிங்களவர்கள் எதிர்க்கின்றனர் என கூறுவது யார்?. நான் ஜனாதிபதியாக இருந்த போது, எம்லிப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றின் போது, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன். அப்போது மேடையில் இருந்த எமது கட்சியை சேர்ந்தவர்கள் இது குறித்து அதிகம் பேசவேண்டாம் …
-
- 4 replies
- 918 views
-
-
[size=4]மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களைச் சேரித்து வருகின்றனர். இந்தநிலையில், சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளதாக அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது. கைத்தொலைபேசி இணைப்பு வழங்குனரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை தாம் கொரியுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். அதேவேளை உதவி கண்காணிப்பாளர் சோமரத்ன தலைமையிலான மூன்று காவல்துறை குழுக்கள்,…
-
- 0 replies
- 510 views
-
-
அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே இன்னமும் இருக்கிறார் கோத்தா JAN 11, 2015 | 1:46by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, செய்திகள் வெளியாகிய போதிலும், அவர் தொடர்ந்தும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து, கோத்தாபய ராஜபக்ச தனது மனைவியுடன் மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், அவர், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், இன்னமும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே …
-
- 0 replies
- 948 views
-
-
அதிகாரபூர்வமற்ற முகாம்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு எதிரான சித்திரவதைகளும் கொலைகளும் அதிகரிப்பதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துகின்றது என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 517 views
-
-
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் தொடர்ந்தும் அதிகாரபூர்வமற்ற வகையில் ஆராயப்பட்டு, ஊடகங்களுக்கும் அது தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 805 views
-
-
அதிகாரபூர்வமாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை: ஒரு வகையில் இலங்கை அரசுக்கான எச்சரிக்கை தான் "................................அமெரிக்கா இப்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகம் கருத்து வெளியிடுவதைக் காணமுடியவில்லை. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது என்று நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். அதேவேளை, அரசாங்கமும் இந்த விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. இந்தநிலையில் அடுத்துவரும் மூன்று மாதங்களும் அரசுக்கு சிக்கல் நிறைந்தவையாகவே இருக்கும். அமெரிக்கா விரும்புவது போன்று அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் தமது கடமைப் பொறுப்பை நிறைவேற்ற எந்த முயற்சிகளும் எடுக்கப்படாது போனால் அமெ…
-
- 0 replies
- 1k views
-
-
அதிகாரப் பகிர்வின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னரான சூழ்நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி இலங்கைத் தமிழகர்களின் உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளா…
-
- 5 replies
- 433 views
-
-
அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா : 27 ஜூலை 2011 "வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம் http://bcove.me/knq597e0 முதலாம் இணைப்பு 25-07-2011 - 01:58 பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றில் இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணத் திரைப்படத்தை பார்த்து விட்டு என்னுடன் தொலைல பேசியில் தொடர்பு கொண்ட 28 வயதான எனது மகன் விம்மி அழுதவாறு தான் ஒரு இலங்கை சிங்களவர் எனக் கூறிக் கொள்வதில் வெட்கப்படுவதாக குறிப்பிட்டார். அதே விடயத்தை எனது மகளும் ஆச்சயத்துடன் கூறினார். ஏனையவர்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள எனது மகன் மற்றும் மகள் தொடர்பில் நான் பெரு…
-
- 1 reply
- 580 views
-
-
அதிகாரப் பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்ருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்தும் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்…
-
- 1 reply
- 544 views
-
-
அதிகாரப் பகிர்வில் ஆகக்கூடிய அதிகாரங்களை பெற முயல வேண்டும் -கிழக்கு முதலமைச்சர் புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்யப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும் உறுதியாக உள்ளார்கள் எனவும் இரு சமூகங்களும் மனப்பூர்வமாக இணைந்தால், அரசாங்கத்திடமிருந்து ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ‘இரண்டு சமூகங்களுக்குமிடையில் அதிக வ…
-
- 0 replies
- 331 views
-
-
அதிகாரப் பகிர்வில்லாத அரசியல் தீர்வு உப்பில்லாத பண்டத்தைப் போலாகும் – கிழக்கு முதலமைச்சர் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள காணிகளையாவது பாதுகாக்க முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார். சிறுபான்மையினர் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள காணிகளில் பேரினவாதிகள் அத்துமீறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர்இதனைக் கூறின…
-
- 0 replies
- 283 views
-
-
அதிகாரப் பகிர்வு ஊடான அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியும் - இந்திய செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து சகல சமூகத்தினரிற்குமான நம்பகத்தன்மை மிக்க அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அதிகாரப் பகிர்வு ஊடான அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே நிரந்தர சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் கருத்துத் தெரிவித்துள்ளார். கேரளாவின் குருவாயூர் ஐயப்பன் கோவிலுக்கு விசேட வழிபாட்டுக்காகச் சென்ற பின்னர் புதுடில்லிக்குத் திரும்பும் சமயம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர்இ எனினும் மஹிந்த ராஜபக்ஷ அரசினால் இவ்வ…
-
- 1 reply
- 634 views
-