ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் முழுவதும் புலிகளே என கோத்தபாய கூறிவருகின்ற வேளை.. அங்கு கொல்லப்பட்டவர்களில் 1400 பேர் பொதுமக்கள் என ரொகான் குணரட்ன கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான நிபுணர் என கூறும் ரொஹான் மேலும் கூறுகையில் இலங்கை அரசாங்கம் மீது போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேசம் அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றது. இதனை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டும் ஆனால் அரசிடம் இதனை எதிர்க்க திட்டம் ஒன்றும் இல்லை. இதற்கென ஓர் வெள்ளை அறிக்கையினை அரசாங்கம் தயாரிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எதனையும் புறக்கணிக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் ஆக கூடியது 1400 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஐக்கிய நாடுகள் 7000 பொதுமக்கள்…
-
- 0 replies
- 735 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் குழுக்களின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. ஈ.பி.டி.பி.சார்பில் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜபெருமாள்,பிள்ளையான் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த பூ.பிரசாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் கே.சிவாஜிலிங்கம், புளோட் சார்பில் உதயன் உட்பட குழுவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனராம். போரில் இறந்தவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இறப்பு பத்திரம் எடுத்துக்கொடுக்கப்படவேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. Eelanatham.net
-
- 0 replies
- 765 views
-
-
புலிகள் இயக்கம் மூலம் தற்கொலைத் தாக்குதல்களை ஆசியாவில் அறிமுகம் செய்தது இந்தியாவே! ஐ.நா சபையில் பாக். குற்றச்சாட்டு! வெள்ளி, 01 அக்டோபர் 2010 19:09 . . தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடாக தற்கொலைக் குண்டு தாக்குதல் கலாசாரத்தை இந்தியாவே தென்னாசியாவில் அறிமுகம் செய்து வைத்தது என்று பாகிஸ்தான் ஐ.நா சபையில் இன்று குற்றஞ்சாட்டி உள்ளது. ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் பிரதித் தூதுவர் Amjad Hussain Sial அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் 65 ஆவது பொதுக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். ஐ.நாவின் 192 அங்கத்துவ நாடுகளின் முன்னிலையில் அவர் அங்கு தொடர்ந்து …
-
- 0 replies
- 826 views
-
-
இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்! அனலை நிதிஸ் ச. குமாரன் கடந்த 1992-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை இந்திய நடுவண் அரசு நீடிப்புச் செய்து வருகின்றது. கடந்த வருடம் மே மாதத்துடன் விடுதலைப் புலிகளை அதன் தலைவர் பிரபாகரனுடன் அழித்துவிட்டதாகவும், சில ஆயிரம் புலிகளை கைது செய்து புனர்வாழ்வு அளிப்பதாகவும் கூறும் சிறிலங்காவின் கூற்றை ஏற்று அரசியல் காய்நகர்த்தும் இந்திய அரசோ, இல்லாததொரு இயக்கத்திற்கு தடையை நீடிக்கும் செயலானது இந்தியாவின் நயவஞ்சகப் போக்கையே காட்டுகின்றது. புலிகள் இந்தியாவுக்கு எந்தவொரு கெடுதலையும் செய்ய மாட்டார்கள் தெரிந்தோ என்னவோ, அவர்கள் மீது தொடர்ந்து தடையை…
-
- 0 replies
- 686 views
-
-
நாடுகடந்த அரசின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பாரிஸ் லண்டன் நியுயோர்க் ஆகிய நகரங்களில் வீடியோ கொன்பிரன்ஸ் இணைப்பின் உதவியோடு நடைபெறற்றது. இன்றைய நிகழ்வுகளில் பாரிசில் கலந்து கொண்ட சில உறுப்பினர்களை வெளியில் இருந்து சிலர் வழிநடத்தியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத இடங்களுக்கு 20 பிரநிதிகளை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நியமனத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது சிலர் வாதிட்டனர். ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடா…
-
- 5 replies
- 1.4k views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 chinese intelligence சீனாவின் உளவு அமைப்பான என்.ஐ. சீ ( சீன தேசிய புலனாய்வு அமைப்பு) கொழும்பு வந்தடைந்துள்ளது. கரடியனாறு வெடிப்பு சம்பவம் பற்றி நாடளாவிய ரீதியில் விசாரணைகளை செய்வதற்கும் கூடவே இலங்கையில் உள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயவும் இந்த புலனாய்வு குழு வந்துள்ளதாக சீன ஊடகம் கூறியுள்ளது. இந்தியா இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஐய்யம் தெரிவித்துள்ளமையினை இந்த ஊடகமான சிங்குவா மேற்கோள்காட்டியுள்ளது. Eelanatham.net
-
- 2 replies
- 762 views
-
-
வன்னியில் இறுதிக்கட்ட கொடூர யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டதும், இலங்கை பாரத நாட்டின் ஆதரவுடன் மக்களின் இழப்புக்களை மூடி மறைத்தமையும் தமிழர்கள் மனவேதனையுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. அதிலும் இலங்கை இராணுவம் பொஸ்பரஸ் குண்டுகளை வீசி மூர்க்கமாக வன்னியில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தபோது, இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்திவிட்டதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததும், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உண்ணாவிரதம், டெல்லிக்கு பஸ் பயணம் என நாடகமாடியதும், இதனைவிட உலகத் தமிழரின் தலைவர் என தனக்குத்தானே குறிப்பிட்டுக்கொள்வதும் தமிழ் மக்கள் நொந்துகொள்ள வேண்டிய ஒன்று. தற்போது பிரச்சினை வேறு விதமாகத் திரும்பியுள்ளது. வன்னி இறுதி…
-
- 1 reply
- 1.6k views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 மஹிந்தரை கொலை செய்ய திட்டம் தீட்டி செயற்பட்டதாக மூன்று தமிழ் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு குற்றம் சாட்டியது. இவர்களை அடைத்து சித்திரவதையும் செய்தனர். இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இன்மையால் இந்த மூவரையும் விடுதலை செய்தது. சிவராசா சுபகிருஸ்ணன், நடரராசசிங்கம் சுபாஸ், லின்டன் வரதராஜா ஆகியோரே விடுதலை செய்யபப்ட்டவராவர். நீதிபதி ரஸ்மி சிங்கப்புலி இவர்கள் விடுதலை பற்றி கூறுகையில். பொலிசாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறினார். Eelanatham.net
-
- 0 replies
- 572 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 mahintha and sarath தன்னிடம் மன்னிப்பு கேட்டால் பொன்சேகாவின் சிறைத்தண்டனையினை குறைப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று மஹிந்த நேற்றுக்கூறினார். மூன்றாம் தரப்பினரின் அழுத்தங்களின் ஊடாகவோ அல்லது போராட்டங்களின் மூலமோ சரத் பொன்சேகாவுக்கு விடுதலைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சரத்பொன்சேகா மன்னிப்பு கேட்கமுடியாது என கூறியுள்ளார். தான் நிரபராதி என்றும் கூடவே தான் ஒரு இராணுவ தளபதி என்பதனை மஹிந்த மறக்க கூடாது எனவும் மஹிந்த கூறியுள்ளார். இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரமாட்டார் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறினார். சர…
-
- 0 replies
- 697 views
-
-
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 1, 2010 solheim mahi நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிலைய மக்கள் தொடர்பில் நோர்வே அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், எரிக் சொல்ஹெய்ம் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பு உறவுகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைச் சந்திப்பின் போது எரிக…
-
- 3 replies
- 981 views
-
-
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடைலான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொந்த நிறுவனம் எனக் கூறப்படும் மிஹின் எயார் நிறுவனத்தின் சேவை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் விமான சேவை மற்றும் அலுவலகங்களில் பணியாற்றிவரும் உள்ளுர் தமிழிச்சிகளையும் சிங்கள பாரம்பரிய உடை அணிய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறான சிங்கள பாரம்பரிய உடைகளை விமான சேவையின் போதோ அல்லது நிறுவனத்திலோ அணியத் தவறும் தமிழிச்சிகளை வேலையிலிருந்து நிறுத்துமாறு நிறுவனத்தின் உயர்மட்டம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. யாழ்பபாணத்திற்கான பொருளாதாரச் சந்தை தற்போது பகிரங்கமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தரப்புகளும் முதலீட்டுக்களையும் தொழில் முயற்சிகள…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்தில் சொந்தகாணிகளை இழந்தநிலையில் 360 குடும்பங்கள் வாழ்ந்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சியின் பரந்தன் பிரதேசத்தில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இவ்வாறு மீள்குடியேறிய மக்களில் 360 குடும்பங்கள் சொந்தக்காணிகள் இல்லாதநிலையில் பொதுக்காணிகள் கட்டடங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட மக்களின் காணிகளில் ஸ்ரீலங்காப்படையினர் நிலைகொண்டுள்ளதால் தாங்கள் தங்களது சொந்த வாழ்விடங்களில் வாழமுடியாமல் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.http://www.tharavu.com/2010/10/360.html
-
- 0 replies
- 636 views
-
-
கிளிநொச்சி பாலியல் வற்புணர்ச்சி சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு சம்பவதினத்தன்று இரவு நான் எனது 40 வயது மகளுடனும் பிள்ளைகளுடனும் குறிப்பிட்ட அயல்வீட்டுப் பெண்ணின் வீட்டில் அவருடைய பிள்ளைகள் மற்றும் தம்பியாருடன் தங்கினோம். தம்பியார் வீட்டின் முகப்பிலும் வீட்டுக்காரப் பெண்மணி வீட்டின் உள்ளே இரு பிள்ளைகளுடனும் உறங்கினார். அன்று நள்ளிரவு வேளையில் 4 பேர் எம்மை தட்டி எழுப்பினர். வந்தோர்களில் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று வீட்டுக்காரப் பெண்மணியைத் தொந்தரவு செய்தார். பின்னர் மூவராக சேர்ந்து வீட்டுக்காரப் பெண்மணியை வெளியே இழுத்துக் கொண்டு சென்றனர். அவ்வேளையில் அவரது குழந்தைகள் (ஒருவர் 10 வயது மற்றையவர் 04 வயது) தமது தாயை விட்டு விடும்படி கதறி அழுதனர். இருப்பினும்…
-
- 1 reply
- 681 views
-
-
http://www.youtube.com/watch?v=XS_sEbZnV6s&feature=player_embedded இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது. மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம் என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை வெளிப்படுத்தி இருந்தது. தற்ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
மீளக் குடியேறிய குடும்பங்களிடையே மிக மோசமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தம் குடும்ப வன்முறையாக பரிணாமம்‐ வன்னிப்பகுதியில் மீளக் குடியேறிய குடும்பங்களிடையே மிக மோசமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தம் தொடர்ச்சியாக குடும்ப வன்முறையாக பரிணாமம் அடைந்திருப்பதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று காலை முள்ளியவளைப்பகுதியில் குடும்பத் தலைவரது கோரத் தாக்குதலில் சிக்கி அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றையவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இன்றிரவு வரை அவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாகவே வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. தாக்குதலை நடத்திய குட…
-
- 0 replies
- 608 views
-
-
பொன்சேகாவுக்கு இரண்டரை வருட சிறை! ஜனாதிபதி மஹிந்தர் தீர்மானம் வியாழன், 30 செப்டம்பர் 2010 05:22 மின்னஞ்சல் அச்சிடுக PDF இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இரண்டரை வருடங்கள் சிறையில் அடைக்கின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அனுமதி வழங்கி உள்ளார். ஜனாதிபதியால்அமைக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையாளர்கள் குழு ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை மூலம் இராணுவ சட்டங்களை மீறி நடந்தார் என்கிற வழக்கில் கடந்த 17 ஆம் திகதி பொன்சேகாவைக் குற்றவாளியாக கண்டு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. முப்படைகளின் தளபதி என்கிற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இத்தீர்ப்பை…
-
- 2 replies
- 677 views
-
-
கொமன்வெல்த்தில் குழந்தை தொழிலாளிகள்
-
- 0 replies
- 724 views
-
-
2016 பிறேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கட்டப்படும் சூரியவெளிச்சத்தினால் இயங்கப்படும் கோபுரங்களின் படங்கள்.
-
- 1 reply
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 1, 2010 சேனபுர இராணுவ முகாமைச்சேர்ந்த இரண்டு இராணுவத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். எப்பாவல மகா இலுப்பன பிரதான வீதியில் லொறி ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் இவர்கள் கொல்லப்பட்டனர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்கள் வேகமாக ஓட்டி சென்றதனால் நிலை குலைந்து லொறியுடன் மோதியதாக கூறப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 0 replies
- 980 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.இது ஈழ ஆதரவாளர்களிடையே வேதனையான விஷயமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஈழப் போராட்ட வரலாற்றை காஷ்மீர் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார் பேராசிரியர் கிலானி. ‘மே 17 இயக்கம்’ சார்பில் ஈழப் போராளி திலீபன் நினைவு நாள் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது.இதில் காஷ்மீர் விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் மனித உரிமைப் போராளி கிலானி கலந்து கொண்டார்.யார் இந்த கிலானி டெல்லி பல்கலைக்கழகத்தின் உருதுப் பேராசிரியரான கிலான…
-
- 13 replies
- 2.5k views
-
-
நியோர்கில் ராஜபக்க்ஷ ஐ, நா வில் பேசவரும்போது தன்னுடைய வாரிசையும் கூட்டிவந்திருக்கின்றார். நாமல் ராஜபக்க்ஷ பல குட்டிகளுடன் நியோர்கில் உள்ள நைட் கிளப் ஒன்றில்
-
- 4 replies
- 3.6k views
-
-
ஆரிய குளம் பகுதியில் விபச்சாரக் கும்பல்... யாழில் உள்ள முன்னணி ஊடகங்கள் மறைப்பு: அரசியல் புள்ளிகள் முதல் கல்வி மான்கள் தாதாக்கள்வரை பிசினசுக்கு உடைந்தை என்கின்றனர் சமூக நோக்கர்கள்! [sunday, 2010-09-26 02:29:59] யுத்தம் முடிவடைந்து தற்போது தமிழர் தாய பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள பேரினவாத அரசின் ஆட்சி கட்டு பாட்டு பகுதியில் சிக்கி இருக்கும் யாழ்பாணம் ஆரிய குள சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபச்சராம் நடைபெறுகின்றது . இந்த விடுதியில் வரும் வாடிக்கையாளர்களை குசிப்படுத்த பல பெண்கள் எந் நேரமும் தயார் நிலையில் உள்ளனராம் . மேற்படி விடுதிக்கு பொறுப்பாக உள்ளவருக்கு யாழ் மாநகர சபை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பேராதரவினை வழங்கி வருகின்றார் என தெரிவிக்கப…
-
- 3 replies
- 2.2k views
-
-
நாடு கடந்த பொறியில் சிக்குமா தமிழ்த் தேசியம்? அமெரிக்காவிலிருந்து ஓர் ‘ஆழமான வட்டம்’ சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிற்கும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையின் பிரதான அதிகாரிகளுக்கும் பல வருடங்களாக ஆலோசனை வழங்கிவருகிறது. இந்த ‘ஆழ்வட்ட’த்திலிருந்து மீளமுடியாத ஒரு பொறிக்குள்ளேயே கே.பி. சிக்கியதாக 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்தேறிய விடயங்களை வரிசைக்கிரமமாக அடுக்கி ஆராயும்போது புலப்படுவதாக தமிழ்த் தேசிய இராணுவ விஞ்ஞான ஆய்வாளர்கள் சிலர் தீர்க்கமாக நம்புகின்றனர். குறிப்பாகஇ புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்போர் வெளிப்படுத்திய தாக்கம் காரணமாக குறித்த ‘ஆழ்வட்டம்’ சலனமடைந்தாலும் ‘பொறி’ சுதாகரிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப…
-
- 7 replies
- 1.3k views
-
-
இடர்நிலத்தில் இன்னும் ஏன் இப்படித் துயரம்? : தீபச்செல்வன் இங்கு நடக்கிற ஒவ்வொன்றுமே போர்தான். துயரமான போர்..... தீராத போர் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஒவ்வொரு இரவும் விடிகிறபோது தங்கள் வாழ்வில் ஒரு விடியல் வந்து விடாதா? என்று விம்மி நிற்கிற மக்களின் கனவுகள் இங்கே நொறுக்கப்பட்டிருக்கின்றன. மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த நிலத்தில் விடப்பட்ட மக்களின் துயரம் சொல்லி மாளாதவை. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோணாவில், யூனியன்குளம், இரத்தினபுரம், திருவையாறு போன்ற 25 கிராமங்களில் உள்ள மக்களுக்கு தகரங்கள் தருகிறோம் என்று முதலில் சொன்னவர்கள் பின்னர் இந்தியா தந்தால் நாங்கள் தருகிறோம் என்றார்கள். மிதிவெடிகளை அகற்றிய பின் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள…
-
- 3 replies
- 807 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம்: ஆயுதமுனையில் நகைகள், பணம் பறிப்பு! திகதி:30.09.2010 வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுத முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மட்டுவில் தெற்கில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் வெளியில் சென்ற வேளை வீட்டினுள் நுளைந்த இனந்தெரியாத இருவர் ஆயுத முனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். நீளக் காட்சட்டை அணிந்திருந்த அவர்கள் மேட்டார் சைக்கிளில் வந்தனர் என்றும் மேலும் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தியே நகைகளைக் கொள்ளையடித்தனர். என்றும் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் படைய…
-
- 3 replies
- 996 views
-