ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை... இணைய வழியில், நடத்த தீர்மானம். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இணைய வழியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மெய்நிகர் முறைமை ஊடாக (Zoom) நடைபெறவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை…
-
- 0 replies
- 275 views
-
-
இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்குடன் அனைத்துக் கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பாகத் தனது கருத்துக்கள் எதனையும் தெரிவிக்காமல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நீண்ட காலமாக காலம் தாழ்த்தி வருகின்றார். அவரது பதிலுக்காக இன்னும் தான் காத்திருப்பதாகவும் தீர்வுத் திட்டம் தொடர்பில் அவரது கருத்துக்கள் இதுவரை தெரியவரவில்லை என்றும் அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவரும் அமைச்சருமான திச விதாரன தெரிவித்தார். தீர்வுத் திட்டத்தின் சாரம்சங்கள் அடங்கிய 100 பக்க அறிக்கை ஒரு மாத காலத்திற்கு முன்னரே அரச தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. "முதலில் தீர்வுத் திட்டத்தின் சாராம்சத்தை அரச தலைவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் பின்னரே…
-
- 0 replies
- 454 views
-
-
Posted on : 2008-01-25 அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளா? அரசுத் தரப்புப் பிரதிநிதிகளா? "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' சுமார் ஒன்றரை வருடத்துக்கும் அதிகமான காலத்தை இழுத்தடித்து, ஒவ்வொன்றும் பல மணி நேரம் நீடித்த அறுபதுக்கும் அதிகமான அமர்வுகளை நடத்தி, கடைசியில் ஒரு சிறிய இடைக்கால அறிக்கையை முன்வைத்திருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு. ஆக, 1988இல், இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளை, நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கோரும் ஒரு துண்டு ஆவணத்தோடு வந்திருக்கிறது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு. அரசமைப்புச் சட்டத்தில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டமும் அரங்கேறும் அபத்த நாடகமும் ` "இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எனது அரசு விரைவில் முன்வைக்கும்.'' இப்படி உறுதியளித்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்") மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி, அந்த மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்தில் கலந்து கொண்ட அமெரிக்க நாட்டுப் பிரதிநிதியான அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்க அமைச்சரான ரிச்சர்ட் பௌச்சரிடமே இந்த உறுதி மொழியை நேரில் வழங்கியிருக்கின்றார் எனச் செய்திகள் தெர…
-
- 0 replies
- 803 views
-
-
அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட கெஹலியவின் மகன் : 29 ஆயிரம் ரூபா அபராதம் 2016-10-12 10:16:14 (எம்.எப்.எம்.பஸீர், ரெ.கிறிஷ்ணகாந்) மது போதையில் வாகனம் செலுத்தி, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாமரைத் தடாகம் அருகே மதில் ஒன்றுடன் தான் பயணித்த காரை மோதச் செய்தமையின்மூலம் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனான கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு 29,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. கொழும்பு போக்குவரத்து நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரங்க கலன்சூரிய முன்னிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் ரமித் ரம்புக்வெல்…
-
- 0 replies
- 240 views
-
-
அனைத்துக் கொடுப்பனவுகளையும்... டொலரில் மாத்திரம், செலுத்துமாறு ஆலோசனை! துறைமுக அதிகார சபைக்கு கப்பல் நிறுவனங்களினால் செலுத்தப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னகோனினால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து இவ்வதறு டொலரில் மாத்திரம் அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278752
-
- 0 replies
- 178 views
-
-
அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக... எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட, டலஸ் அழகப்பெரும முடிவு. அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரலாறாக மாறியுள்ள மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது பிரதான இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தானும் களமிறங்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை டலஸ் அழகப்பெருமவை கொண்டு வருவதில் முனைப்பு காட்டினாலும் கட்சியின் பொதுச்செயலாளர் ரணில் விக்ரமசிங்க…
-
- 0 replies
- 225 views
-
-
அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் பிள்ளையான் ஒட்டுக்குழு மேற்குலகை ஏமாற்றுவதற்கென இனப் பிரச்சினைத் தீர்வுக்காக சிறீலங்கா அதிபரால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் பிள்ளையான் ஒட்டுக்குழுவையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்வற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். மட்டக்களப்பின் உள்ளுராட்சி தேர்தலில் தமது குழு வெற்றிபெறும்வரை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தை இடை நிறுத்தி வைக்குமாறு பிள்ளையான் துணைப்படைக் குழுவினால் கடந்த வாரம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு இடம்பெற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஊடக உறவுகளே வணக்கம்! தமிழீழ மக்களினது மாத்திரமன்றி, உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரினதும் பொதுநாளான மாவீரர் நாளை இந்த ஆண்டும் சிறப்பாகவும் உணர்வெழுச்சியுடனும் கடைப்பிடிக்க உலகத் தமிழ் இனம் தயாராகிவிட்டது. இம்முறை, மாவீரர் நாளை சிறப்புற நடத்த பொதுக்கட்டமைப்புக்களை ஏற்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என, அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி, எல்லோருடைய பங்குபற்றுதலுடன், பொதுமையாக அதனை நடாத்துவதென இணக்கம் காணப்பட்டது. அதன் அடிப்படையில், பிரான்சில் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு, மாவீரர்நாளை சிறப்புற நடாத்துவதற்கான வேலைத்திட்டங்களை அது முன்னெடுத்துவருகின்றது. பிரான்சில், தாயகத்தில…
-
- 2 replies
- 1.3k views
-
-
அனைத்துப் பகுதி மக்களையும் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம்: மகிந்த ராஜபக்ச அனைத்துப் பகுதி மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.விபரங்களுக்கு
-
- 3 replies
- 1.4k views
-
-
அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம்! இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம் ஏன் இன்னும் அமைக்காமல் இருக்கின்றது என்று பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதில் அரசாங்கத்திற்கு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாத் தீர்மானங்களையும் நிறைவேற்று…
-
- 0 replies
- 234 views
-
-
[size=2] [size=4]யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழியில் முன்னெடுத்த கவனவீர்புப் போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கலைத்துள்ளனர். இதன்போது மாணவர்களை அவர்கள் விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். [/size][/size] [size=2] [size=4]மேலும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் உள்பட நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளன…
-
- 4 replies
- 881 views
-
-
அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண நீதிமன்றப் பிடியாணை உத்தரவின் பிரகாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28186
-
- 1 reply
- 779 views
-
-
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 03:18 PM அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை எழுப்பினர். அனைத்துப் பல்கலைக்கழக மா…
-
- 1 reply
- 722 views
- 1 follower
-
-
Nov 7, 2010 / பகுதி: செய்தி / அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடை? அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடைசெய்யப்படவுள்ளது. தெற்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி வெடிப்பதற்கான திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். அவ்வாறானதொரு கிளர்ச்சி வெடிக்கும் பட்சத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் அதன் பிரதான பங்காளியாக இருக்கக் கூடிய சாட்சியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடைசெய்யப்படலாம் என்று சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. pathivu
-
- 1 reply
- 550 views
-
-
அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172610/%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.a7OWjgfc.dpuf
-
- 0 replies
- 253 views
-
-
அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் வழமைபோல்; முகக் கவசம் அணிவது கட்டாயம் இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்த நோய் நம்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஹரிதா அலுத்ஜ் கூறுகிறார். பாடசாலைகளின் கல்வியின் இயல்பான தொடக்கமாக சமூக இடைவெளி ஒரு மீற்றருக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்பட …
-
- 0 replies
- 649 views
-
-
கோத்தாபே ராஜபக்ஷ என்றொருவர் இலங்கை அரசியலினுள் இணைந்தது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்தாகும். அவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய பின்னர் ஒன்றரை தசாப்த காலம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வந்தார். அவர் பிரபல அல்லது பலம் பொருந்திய ஒருவராக அறியப்படுவது தனது சகோதரர் ஜனாதிபதியாக ஆகியதன் பின் இந்நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னணியிலாகும். அப்போது அவருக்கு மிகவும் அதிகாரமிக்க பதவியாக கருதப்படக்கூடிய பாதுகாப்புச் செயலாளர் என்ற அந்தஸ்தும், பதவியும் கிடைக்கப் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த நான்காவது ஈழப்போரின் பாதுகாப்பு படைக்கான இணைப்பாளராகவும் அவரே நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தனக்கிருந்த ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் யுத்தத்தை தர்க்கரீதி…
-
- 10 replies
- 1.3k views
-
-
அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன! தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்விட பூமியாக இருந்து வந்துள்ளது. அண்மைக் காலங்களில் …
-
- 1 reply
- 399 views
-
-
அனைத்தும் பொய் நாடகம் சாடுகிறார் கெஹெலிய எம்.பி. (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அனை த்து விடயங்களும் பொய் நாடகங்களேயாகும். இந்த முறைக்கேட்டில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கே முயற்சிக்கப்படுகின்றது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 0 replies
- 315 views
-
-
அனைத்துல நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் அதிகாரிகளை அமெரிக்காவின் வொசிங்ரன் நகரில் சந்தித்து நிதியுதவி தொடர்பாக சிறிலங்கா அரச தலைவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 288 views
-
-
யூன் 20 - அனைத்துலக அகதிகள் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசினது பிரான்சு மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் கருத்தமர்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. - தாயகத்தில் அகதிகளாக வாழும் உறவுகளின் நிலை ! - போர் ஓய்ந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் அகதித் தமிழர்களின் எதிர்காலம் ! - பிரான்சில் அகதித்தஞ்சம் கோருபவர்களின் தற்கால நிலை ! ஆகிய மூன்று விடயங்களை மையப்படுத்தி இக்கருத்தமர்வு ஓழுங்கமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிவஞானம் அவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு தாயக உறவுகளின் நிலை குறித்து நேரடியாக விவரிக்கவுள்ளார். இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அகதித்தஞச்ம் கோரி வாழும் ஈ…
-
- 0 replies
- 557 views
-
-
அனைத்துலக அமைப்புக்கள் இன்னும் 'கும்பகர்ணன் படலத்திலேயே' உள்ளன: ச.வி.கிருபாகரன் "அனைத்துலக அமைப்புக்கள் தமக்கு நிதி வழங்குவோரின் கொள்கைகள், வேண்டுகோள்களை பிரதிபலிப்பவையாகவே என்றும் உள்ளன. ஆகையால் அவர்கள் ஒன்றையும் உருப்படியாக செய்பவர்கள் அல்லர்" என்று தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்' வார எட்டுக்கு பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் செவ்வி வழங்கியுள்ளார். அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழு விவரம்: கேள்வி: தமிழர் மனித உரிமைகள் மையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? பதில்:…
-
- 1 reply
- 886 views
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஜோன் கெரிக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தத் தகவலை வாசித்த கெரி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய நிலவரம் தொடர்பாக மைத்திரியிடம் வினவினார். ஜோன் கெரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் தொடர்பாக வினவுமாறு நிஷா பிஸ்வால் கேட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மைத்திரி சந்தேகம் கொண்டிருந்தால் அது நிய…
-
- 0 replies
- 334 views
-
-
அனைத்துலக அரங்கில் இந்தியாவின் ஆதரவு தேவை – சுஸ்மாவிடம் கோரினார் மைத்திரி MAR 07, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார். நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா வரவேற்றார். அதையடுத்து, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் வதிவிடத்துக்குச் சென்ற சுஸ்மா சுவராஜ், அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று லண்டனுக்குப் புறப்படவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு…
-
- 0 replies
- 960 views
-