Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கலைஞரின் குடுமி சும்மா ஆடாது!உதயன் ஆசிரியர் தலையங்கம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட் டல் விட்டிருக்கின்றார் அவர். இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விவகாரம்தான். இனிமேல் இதையும் விட மேலும் தீவிரமாக அவர் எகிறிக் குதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடூர யுத்தம் கட்டவிழ்ந்து, பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதே அதைத் தடுக்க வக்கற்றவராக இருந்துகொண்டு பல் வேறு அரசியல…

  2. நா.உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுசன ஐக்கிய முன்னணியில்.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். சனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஊடாகத்தான் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் மக்களுடைய தேவைகளையும் நிவர்த்தி செய்ய முடியும், எனவேதான் ஆளும் கட்சியில் இணைந்துதான் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறினார். இன்று செவ்வாய் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான புதியவகுப்பறைகளை தொடங்கிவைக்கும் வைபவத்திலும் திரு கனகரட்ணம் கலந்து கொண்டார். இந்த வைபவத்தின் பின்னர…

    • 1 reply
    • 1.3k views
  3. கோல்டன் வைஸ் இன் கூற்று ஐ.நா வின் கூற்றல்ல. வதிவிடப் பிரதிநிதி. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோல்டன் வைஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது 40000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இக்கருத்துத் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹனே, கோல்டன் வைஸ் இன் கருத்து ஐக்கிய நாடுகள் சபையினை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஐ.நா வின் பொதுச் செயலாளர் அல்லது சிரேஸ்ட அதிகாரிகளினாலேயே அறிக்கைகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள அவர், இலங்கையில் யுத்தத்தின் இ…

    • 2 replies
    • 759 views
  4. . சிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி முன்னணி முடிவு வீரகேசரி இணையம் 2/16/2010 11:47:36 AM - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாகg கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சிய…

  5. நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மாணவர்களிடம் நன்கொடை அறவிடப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வவுனியா நகரப்பாடசாலைகளில் கற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த வேளையில் பெற்றோரிடம் இருந்து பாடசாலை நன்கொடையாக குறிப்பிட்ட தொகைப்பணம் சம்பந்தப்பட்ட அதிபர்களால் அறவிடப்பட்டிருந்தது. எனினும் கடந்த மாதத்தில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளரினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகளால் அறவிடப்பட்ட நிதியும் பெற்றோரிடம் மீண்டு…

    • 0 replies
    • 680 views
  6. மட்டக்களப்பு திகிலிவெட்டை பகுதியில் சிறுமி மீது ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய்கள் பாலியல் வன்முறை (செவ்வாய், பிப்ரவரி 16, 2010 12:40 | தமிழ்மணி. மட்டக்களப்பு) மட்டக்களபபில் நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் சிறுமி மீது ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய்கள் பாலியல் வன்முறை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிக்கு அருகில் உள்ள திகிலிவெட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் குறிப்பிட்ட சிறுமியை வழிமறித்த படையினர் அந்த சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர். படையினரின் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிறுமி சித்தாண்டி வைத்திய சாலையில…

    • 3 replies
    • 1k views
  7. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/node/1005

  8. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் செவ்வி http://www.yarl.com/articles/node/1008

  9. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுரபரனின் செல்வி http://www.yarl.com/articles/node/1009

  10. மகிந்தவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் கே.பி திகதி: 16.02.2010 // தமிழீழம் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈட்டுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர…

  11. சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது திகதி: 16.02.2010 // தமிழீழம் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த விடயத்தில் சிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தற்காலிகமானது என்றும் மனித உரிமை குறித்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் திருப்திகரமான விதத்தில் செயற்படும் பட்சத்தில் தமது நிலை மீளாய்வு செய்யப்ப…

    • 7 replies
    • 1.1k views
  12. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது! முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் எல்லமே தலைகீழாக மாறி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுத கட்டுமானம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான போராளிகளும், தளபதிகளும் பலி கொள்ளப்பட்ட பின்னர், அங்கிருந்து தப்பிய விடுதலைப் புலிகள் கல்லெறிந்து கலைக்கப்பட்ட குளவிகள் போல மீண்டும் ஒரு கூடு தேடி உலகெங்கும் பறந்து திரிகின்றனர். தமக்கான ஆயுத பலத்தையும், தம் பாதுகாவலர்களையும் இழந்த ஈழத் தமிழர்கள் வாய்திறந்து பேச முடியாத நிலையில் மீண்டும் ஆயுத முனையில் அடிமைப்படுதத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் தமிழீழ மக்களுக்கான நியாயங்களுக்காகப் போராடவேண்டிய தமிழீழ மக்களின் அரசியல் சக்தியாகச் செயற்படவேண்…

  13. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வின் மூலம் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். ராஜாஜி ஞாபகார்த்த மாநாட்டில் விசேட உரை நிகழ்த்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா பதின்மூன்றாவது அரசியலமைப்புத்திருத்ததத்தின்படி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை இந்தியா ஆதரிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதே நேரம் ஆரம்பத்தில் வடக்கு கிழக்கை இணைக்க தாம் அழுத்தம் கொடுப்போம் என கூட்டமைப்பிற்கு இந்தியா உறுதி மொழி வழங்கியது ஆனால் இப்போ அது பற்றி எதுவும் கூறுவதில்லை. ht…

    • 5 replies
    • 998 views
  14. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிஸியின் ஒலிபரப்பு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வொலிபரப்பு தொடர்பாக இன்றுகாலை இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவும் பிபிஸி சார்பாக அதன் தெற்காசிய பணிப்பாளர் மிஷைல் ரோபலும் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிபிஸியின் ஒலிபரப்பு நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பரிவர்த்தனை ஒலிபரப்பு செய்யப்பட்டபோதும் கடந்தகால உள்நாட்டு மோதல்களின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக அது இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆயினும் தற்போது உள்நாட்டு மோதல்…

  15. சிறீலங்காவில் தமிழீழத்தை உருவாக்கும் சாத்தியங்கள் தற்போதும் காணப்படுவதால் இராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். மாதுருஓயா பகுதியில் உள்ள சிறப்பு படையினரின் பயிற்சி கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற சிறப்பு படையினரின் 40 ஆவது அணியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழத்தை தமிழ் மக்கள் அமைப்பதற்கான சாத்தியங்கள் தற்போதும் உள்ளன. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. எனவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான படையினரை …

    • 5 replies
    • 1.2k views
  16. இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தின் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்ப தற்கு மறுத்துவிட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு: ஜெனரல் பொன்சேகாவின் சுருக்கமான சாட்சியத்தைப் பெறுமாறு பணிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரியின் முன்னிலை யில் தோன்றுவதற்கு ஜெனரல் சரத் பொன் சேகா மறுத்துவிட்டார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்ண நாயக்காவைப் பணித்திருந்தார். அரசைக் கவிழ்க்க முயன்றமை, ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்ட மிட்டமை மற்றும் ஆயுத ஊழல்கள் தொடர்பாக எழுத்து மூலமான சுர…

    • 5 replies
    • 843 views
  17. Feb 15 2010 அதிரடி ஆட்டநாயகன் சனத் அரசியலில் குதிக்கின்றார்.! Author: editor இலங்கையின் கிரிக்கட்துறையில் அதிரடி ஆட்டநாயகனாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ள சனத் ஜெயசூரியா அரசியலினுள் நுழைகின்றார். அவர் எதிர்வரும் பொது தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் என தெரியவருகின்றது. இவ்விடயத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளதாகவும், அது தொடர்பாக இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இலக்கு .கொம்

  18. . ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன் வீரகேசரி நாளேடு 2/15/2010 9:11:45 AM - அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் ம…

  19. தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது குறித்து ஆராய்வு! .தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் உட்படதமிழ் பேசும் பிரதேசங்களில் முஸ்லிம் கங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களாக இருந்த 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிதாக உள்ளதாகத் தெரியவருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்த…

  20. ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மறுக்கின்றார் நளினி. நீதிமன்றுன்கு தந்தி த‌னியா‌ர் ஊடக‌ம் ந‌‌ளி‌னி‌யிட‌ம் பே‌ட்டி எடு‌க்க அனும‌தி கே‌ட்டு தா‌க்க‌ல் செ‌ய்‌ய‌ப்ப‌ட்டிரு‌ந்த மனு‌வி‌‌ற்கு, மு‌ன்னா‌ள் இந்தியப் ‌‌‌‌பிரதமர் ராஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்ட வழ‌க்‌கி‌ல் ‌ஆயு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌னி, செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். த‌னியா‌ர் ஊடக‌ம் ந‌‌ளி‌னி‌யிட‌ம் பே‌ட்டி எடு‌க்க அனும‌தி கே‌ட்டு தா‌க்க‌ல் செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்கு செ‌ன்னை உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ப‌திவாளரு‌க்கு ந‌‌ளி‌னி அனு‌ப்‌‌பி இரு‌ந்த த‌ந்‌தி சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டது. அ‌தி‌ல், தா‌ன் எ‌ந்த ஊடகங்களு‌க்கு‌ம் பே‌ட்டி அ‌ளி‌க்க …

    • 0 replies
    • 766 views
  21. சரத் பொன்ஸேகாவின் மைத்துனர் குடும்பம் அரை மில்லியன் டொலர் காசு கட்டுடன் கைது. மேலதிக தவலுக்கு...

  22. சரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ்வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன். ஆனால், எனது கணவருக்கும் ஏனையோருக்கும் செய்த பாவத்தையும் பழியையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார். எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத…

  23. திங்கட்கிழமை, 15, பிப்ரவரி 2010 (19:43 IST) பொன்சேகா மருமகனுக்கு அரெஸ்ட் வாரண்ட் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்திருப்பதாக, இலங்கை முன்னாள் தளபதி பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னாவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட் அளித்துள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மேலும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளதாவது, தனுனா திலகரத்ன இலங்கை இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை வாங்கியதில் பல மில்லியன் டாலர்கள் ஊழல் புரிந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த கைதாணையை பிறப்பித்தது. பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது ஆயுதப் பரிவர்த்தனையில் ஈடுபட …

  24. பதினான்கு வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன், 7 வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையாகிய இரத்தினசிங்கம் சிவநாதன் என்பவரே நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அவரது மகளாகிய சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நஷ்டஈடாக வழங்குவதுடன், தண்டப் பணமாக 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தேசிய சிறுவர் பாதுகா…

  25. உங்களுக்கும் ராஜபக்சக்களுக்குமிடையில் என்ன தான் நடந்தது தவறாக? :‐ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம். போர் முடிவடைந்த பின்னர் அதனை நான் சிறிது உணர்ந்தேன். சில் இடங்களில் புரிந்துணர்வின்மை இருந்தது. போர் முடிவடைந்தவுடன் சில இடங்களில் சரியாக நடாத்தப்படவில்லை. சரத் இராணுவ அதிகாரியாகத் தொடர்ந்திருக்கவே விரும்பினார். தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக அவர் இருக்க விரும்பவில்லை. போர் வீரர்களின் நலன்கள் தொடர்பில் அவர் பணியாற்ற விரும்பினார். ஆவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர் கோட்டபாயவைச் சந்தித்து தான் தொடர்ந்து இராணுவத் தளபதியாகவே இருக்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அது தான் பிரதான பிரச்சினையாக இருந்தது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.