Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பதிலாக புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைக்கு புதிய கூட்டணியில் சுமார் பத்து அரசியல் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதாக விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் ஊடகத் தொடர்பாளர் முஸம்மில் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய, தினேஷின் மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ கட்சி, டியூ குணசேகர கட்சி, நவ சிஹல உறுமய, திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி, போன்ற கட்சிகளே விமல் வீரவன்சவின் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளன. இவற்றோடு முன்ன…

  2. சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையின் புதிய படையணி ஒன்று பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  3. யாழில் 4 நாளில் 35 பேருக்கு டெங்கு யாழில் கடந்த நான்கு நாட்களில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி 35 சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை வட்டார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்குள்ளாகியிருந்து, அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு 1339 பேர் நோயின் தாக்கத்துக்குள்ளாகியிருந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகமான நோயாளர்கள் (357 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவான நோயாளர்கள் (348 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid…

  4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதால் அரசுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது. என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணித்தல், அரசியல் தீர்வை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட…

  5. ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் விமானிகள் பலர் ஒரே தடவையில் சுகயீன விடுமுறை எடுத்துக் கொண்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படாமையினால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கன் விமான நிலையத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்ற போது விமானிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். எனினும், இதுவரையில் குறித்த எந…

    • 0 replies
    • 1.6k views
  6. மாபெரும் இனப்படுகொலையினை செய்துவிட்டு அது குறித்த எவ்வித குற்ற உணர்வும் இன்றி நடமாடித்திரியும் மனித மிருகம் ராஜபக்சே இரண்டாவது தடவையாக லண்டன் மண்ணிற்கு வந்தபோது நேரிடையாக நின்று துரத்தியடித்த பிரித்தானிய ஐரோப்பியவாழ் ஈழத்தமிழர்களின் வீரத்தை சிரம்தாழ்த்தி வணங்கிநிற்கின்றது ஈழதேசம் இணையம். ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த கொலைவெறியன் மகிந்தவை குறுகிய கால அவகாசத்தில் துரிதமாக செயற்பட்டு விரட்டியடித்து போர்பரணி பாடிநின்ற பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் இம்முறை அதனிலும் பலபடி சென்று சாதனை படைத்துள்ளார்கள். கடந்த முறை ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொலைவெறியனின் பேச்சை நிறுத்திய உங்களது போராட்டம் இம்முறை பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டையே நிறுத்திவைக்கும…

  7. இந்த வருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும் என கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மன்னாருக்கு இன்று வருகை தந்த கடற்தொழில் அமைச்சர், மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும் மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் கலந்துரையாடினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மன்னார் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பலர் இங்கு என்னிடம் முறையிட்டுள்ளனர். எனவே தடை செய்யப…

  8. எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் ஜனநாயக வீரம் புரிகிறது. இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது. காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது. இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது. இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை. தமிழ் அரசியல் தரப்புகளைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்கின்ற அளவிலேயே முகநூல் பதிவுகள் உள்ளன. இந்த உண்மைகளைக்கூட எங்கள் தமிழ…

    • 6 replies
    • 1.4k views
  9. 20 FEB, 2025 | 03:56 PM இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது. இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இனொவேசன் ஐலண்ட் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முதலாவதாக இலங்கை ஒரு பெரும்மாற்றத்தின் தருணத்தில் உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் புதிய விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் பெருந்தொற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும், பல தசாப்தங்களாக இலங்கையர்கள் எதிர்பார்த்த மாற்றங்களிற்கான தேவைகளை வெளிப்படு…

  10. இலங்கை அரசினால் பஸ்களிலும் கிராமங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படும் தாக்குதல்களுக்கான பதில் நடவடிக்கையாகவே கடந்த வருடம் மேற்கொண்ட பல தாக்குதல்கள் அமைதிருக்கின்றன எனத் தெரிகின்றது என்று அமெ. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை அச்சுறுத்தவதற்காகா இலங்கை அரசு ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்துகிறது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. உலக நாடுகளின் பயங்கரவாத நிலைமை குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமெரிக்காப் பிரஜைகளையோ சொத்துகளையோ இலக்கு வைக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப…

  11. சம்பிக்க ரணவக்க ஆவேசம்! அமெரிக்கா தனது ஆணவத்தை இலங்கை விவகாரங்களில் காட்ட முற்பட்டால் அதனை வேடிக்கை பார்க்கப்போவதில்லை - சம்பிக்க ரணவக்க ஆவேசம்! இந்தியாவின் முட்டாள் தனத்திற்கும் அமெரிக்காவின் ஆணவத்திற்கும் இலங்கை ஒரு போதும் அடிபணியாது. வட மாகாண சபை தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கட்டளையிட வேண்டியதில்லை என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்குலக நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்ற போது அங்கு புலிகள் செயற்பட்ட விதமும் அதற்கு ஏற்றாற் போல் அந்த நாடுகளின் பாதுகாப்பு ஒழுங்குகளின் குறைகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் என்றும…

  12. வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்சை வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்சை செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இளம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகளில் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் தொல்லைகளை கொடுத்து வருவதாக கொழும்பில் தகவலகள்; வெளியாகி உள்ளன. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளை அடிக்கடி தொட்டு வாழ்த்து தெரிவிப்பது, மேனி அழகை ஆபாசமான முறையில் வர்ணித்தல் போன்ற பல்வேறு வழிகளில் மூத்த பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அசௌகரியத்தில் ஆழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …

  13. இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறியிருப்பதால், இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கப் படைகள் தொடர்ச்சியான படுகொலைகள், கைதுகள், காணாமல்போதல்கள் போன்ற ம…

    • 0 replies
    • 717 views
  14. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அதன் பின்னர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணபிள்ளை அமலதாஸ் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே இந்த கருத்தை நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதனையும் அரசாங்க தரப்பு இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார். ஆனால், யுத்தம் நடைபெற்றபோது அரசபடைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியதாக 3 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் சுமத்துவதாக அரச சட…

    • 0 replies
    • 615 views
  15. Posted on : 2008-05-14 விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா? கிழக்கிலங்கையைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது "ஜனநாயக மீட்பு' என்று கொழும்பு ஆரவார மாக அறிவித்தபோது அதை வரவேற்ற மேற்குலகு, இப் போது ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான தேர்தலும், வாக்களிப்பும், ஜனநாயகத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றது. நிர்வாக ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டு, துண்டாடப் பட்ட வடக்கு, கிழக்குக்கு பதின்மூன்றாவது அரசமைப் புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற புருடா நாடகத்தை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக்கச் செய்தபோது, அத்திட்டத்தின் பின் னணியி…

  16. “எமது நிலம் எமக்கு வேண்டும்!!!” என்று ஜூன் 19ஆம் திகதி தெல்லிப்பளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் ஆரம்பித்த தமிழீழ மக்களின் போராட்டத்தில் ஜூன் 26ஆம் திகதி திருமுருகண்டியில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. “எமது நிலம் எமக்கு வேண்டும்!!!” திருமுருகண்டியில் தமிழர்களின் நிலங்கள் ராணுவத்தால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் விடுத்த அழைப்பை ஆதரித்தும், புலம் பெயர் மக்கள் தாயகத்தில் மக்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டியது மிக முக்கியம். 1967 இஸ்ரேல் பாலஸ்தீன் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற பின் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆரம்பித்த நில ஆக்கரமிப்பு பல லட்ச மக்களை அகதிகளாக்கி லெபனான் நாட்டில் அகதி முகாமில் வாழும் மக்களாக…

    • 0 replies
    • 438 views
  17. இறுதி மோதல்களின் போது யுத்த சூனியப் பிரதேசம் என்ற எந்தப் பகுதிகளும் காணப்படவில்லை என்று காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. “இறுதி மோதல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை. எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை” என்று பரணகம ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, இறுதி மோதல்களின் போது, பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என்றும் அந்த ஆணைக்குழு …

  18. டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு – யாழ். நகரில் தனியார் கல்வி நிலையங்களை மூட உத்தரவு யாழ்ப்பாணத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், தனியார் கல்வி நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.உடனடியாக அமுலுக்குவரும் வகையில், மாநகர எல்லைக்குள் இயங்கிவரும் சகல தனியார்க் கல்வி நிலையங்களையும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறும், அவர் கேட்டுக்கொண்டார். டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியப்பாடுகள் தனியார்க் கல்வி நிலையங்களில் அதிகம் காணப்படுவதால், இரண்டு வாரங்களுக்கு சகல தனியார் கல்வி நிலையங்களையும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாற…

  19. பி.கெளரிஸ சிறிலங்கா கடற்படைத் தளபதிஇ தனது தனிப்பட்ட நலன்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளே திருகோணமலை துறைமுகத்தில் "இன்வின்சிபிள்" விநியோகக் கப்பல் மூழ்கிப் போவதற்கு காரணம் என்று "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த முக்கிய பகுதிகள் வருமாறு: நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் சோனார் கருவிகளை (SLPA sonar system) துறைமுக அதிகார சபை கொள்வனவு செய்த போதும் அது நிறுவப்படாது தற்போதும் பெட்டியில் தான் உறங்கி கிடக்கின்றது. இந்நிலையில் கடற்படை எம்வி இன்வின்சிபிள் என்ற விநியோகக் கப்பலை இழந்துள்ளது. எக்ஸ்- ரைப் ('X-Type' diver detection sonar system) எனப்படும் நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் ச…

    • 1 reply
    • 1.1k views
  20. பாதுகாப்பற்ற கடவைகளின் வீதிகளை நீக்குவதற்கு மக்கள் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கடவைகள் உள்ள வீதிகளை நீக்குவதற்கு புகையிரதத் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை (03) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இதனால், வீதிகளை நீக்குவதற்காக அநுராபுரத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். வடக்கின் புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுமார் 240 புகையிரதக் கடவைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 10 சதவீதமானவை புகையிரதக் கடவைகள் மாத்திரமே பாதுகாப்பான கடவைகள் என்பதுடன் ஏனையவை பாதுகாப்பற்ற கடவைகளாக இருந்தன. …

  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  22. இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளுக்கு தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மீண்டும் இலங்கைக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறி விட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில், சிறைக்காவலர்களை மீட்கின்ற நடவடிக்கையின் போதும் அதன் பின்னரும் தாக்குதலுக்குள்ளாகிய, அரசியல் கைதி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தகவல் பரவிய நிலையில் தான், தாம்பரத்தில் இலங்கை விமானப்படையினர் பயிற்சி பெறும் தகவல் பரவியது. சிறை நிரப்பும் போராட்டத்தை பெரியளவில் நடத்தி, திமுக தனது பலத்தைக் காட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்தார். தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்கு இலங்கை விம…

    • 2 replies
    • 4.5k views
  23. 03 APR, 2025 | 08:07 PM (இராஜதுரை ஹஷான்) வழக்குத் தாக்கல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது. ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் வெகுவிரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுநிலை) அபேவிக்ரம திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை வாசித்து விளங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். ஆணைக்குழுவின் சுயாதீனத்தை மலினப்படுத்தும…

  24. ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌‌மீது து‌ப்பா‌க்‌கி சூடு - படகு, வலைக‌ளை சேத‌ப்படு‌த்‌தின‌ர் இல‌ங்கை கட‌ற்படை ஞாயிறு, 15 ஜூலை 2012( 09:19 IST ) [size=4]க‌ச்ச‌த்‌‌தீவு அருகே ‌மீ‌‌ன் ‌‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌விர‌ட்டியடி‌த்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌மீனவ‌ர்க‌ளி‌ன் படகுகளை உடை‌த்ததோடு, வலைகளை அ‌று‌‌த்து எ‌ரி‌ந்தன‌ர். ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ராமே‌ஸ்வர‌‌த்தை சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் 697 படகுக‌ளி‌ல் நே‌ற்‌றிரவு கடலு‌க்கு ‌‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். ந‌ள்‌ளிரவு க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, 10 படகுக‌ளி‌ல் வ‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீனவ‌ர்களை நோ‌க்‌கி …

  25. தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்" குறுவட்டு வெளியீடு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:13 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது. புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார். லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்ம…

    • 0 replies
    • 725 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.