Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த தீடீர் திருமலை விஐயம். சிறீலங்கா ஜனாதிபதி தீடீர் விஐயமாக திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று பகல் ஷிராந்தி ராஜபக்ஷ, தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ, கடற்படைத்தளபதி வசந்த கர்ணணகொட ஆகியோருடன் திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு சென்ற ஜனாதிபதிக்கு கடற்படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா கடற்படையில் இணைந்த ராஜபக்ஷவின் புதல்வல் யோசித்த ராஜபக்ஷ திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. www.pathivu.com

  2. புதையுண்டு போன கொஸ்லாந்தை மக்களின் தியாகம் மலையக மக்களுக்கு நிலத்தையும் வீட்டையும் பெற்றுக் கொடுக்குமா?: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:- மலையக மக்கள் தொடர்பாக இலங்கையின் ஊடகங்களில் வரும் செய்திகளை தொகுக்கும்போது ஏதோ ஓர் நெருக்கத்தை உணர்ந்திருக்கிறேன். அந்த மக்கள் வாழும் லயன்களுக்கும் வன்னியில் எங்கள் மக்கள் வாழ்ந்த முள்வேலி முகாங்களுக்கும் - யுத்தத்தின் பின் இப்போ மக்கள் வாழும வாழ்விடங்களுக்கும்; இடையில் ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது போல் உணர்கிறேன்... மீள்குடியேறிய மக்களின் கூடாரங்களும் மலையக மக்களின் கூடாரங்களும் கூட அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றன. இலங்கையில் மலையக மக்களின் வாழ்வு பற்றி பேசும் தொலைக்காட்சிகளில் மலையகம் தொடர்பில் ஒளிபரப்பாகும் பெரு…

  3. வடக்கு கிழக்கு நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் செவ்வாய் விவாதம்04.01.07 வடக்கு கிழக்கு நிலைமை பற்றி எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று நடைபெற உள்ளது. கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற போது இம்முடிவு எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் வடக்கு கிழக்கு நிலமைகள் தொடர்பாக விவாதம் ஒன்றிற்கு நேரம் ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து செவ்வாய்கிழமை வடக்கு கிழக்கு நிலமை தொடர்பாக விவாதத்தை வைத்துக்கொள்வதென சபாநாயகர் அறிவித்துள்ளார். www.tamilwebradio.com

    • 0 replies
    • 774 views
  4. ( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…

  5. முல்லைத்தீவு கிளைமோர் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது: கைதானவர்கள் இராணுவத்திடம் இரகசியமாக சம்பளம் பெற்றவர்கள்! June 24, 2018 முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் கிளைமோர் குண்டுகள், புலிக்கொடி மற்றும் சில இராணுவ சாதனங்களை கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களிற்கும் இராணுவ புலனாய்வுத்துறைக்குமிடையில் மிகமிக நெருக்கமான தொடர்பிருக்கும் விடயம் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அது பற்றிய முழுமைான அறிக்கை பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் நேற்று முன்தினம் ஒருவர், நேற்று இரவு ஒருவர் என மொத்தம் ஐந்து பேரை இதுவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட…

  6. கருணா குழுவினர் பிடித்துச் சென்ற மகனை மீட்க உதவுங்கள்: ஆணைக்குழுவிடம் விதவைத்தாய் கண்ணீர்விட்டு கோரிக்கை. வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 16:39 கருணா குழுவினைச் சேர்ந்த 4 பேரால் கடந்த 29 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு காலை 5.30 மணியளவில் எனது வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனது மகன் தொடர்பில் ஒருமுறை திருக்கோவிலிலுள்ள கருணாகுழு அலுவலகத்தின் பொறுப்பாளரான பாரதியிடம் நான் கேட்டேன். என்னுடைய மகனை அவர்கள் அழைத்து வந்ததை ஒப்புக் கொண்டார். தயவு செய்து எனது மகனை மீட்டுத் தருவதற்கு உதவுங்கள். இவ்வாறு திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை மரகதமணி என்பவர் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கற்றுக…

  7. ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த போது, குழந்தை தாய்க்கு முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தாயார் அயல் வீடு முழுவதிலும் தேடிய போது குழந்தையை காணவில்லை. பின்னர் கிணற்றிற்குள் பார்த்த போது, குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலையில், பிரேத பரிசோதனை…

  8. சிங்கள மயப்படுத்தல் திட்டத்துக்கு ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது: கஜேந்திரகுமார்! மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ் தேசிய மக்கள்…

  9. ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது – யாழ்ப்பாணத்தில் சம்பவம் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த சிறப்புத் தகவலின் அடிப்படையிலேயே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்துக் சிறுவனை கைது செய்துள்ளனர். இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. …

  10. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை - அரசாங்கம் Published By: VISHNU 14 MAR, 2023 | 03:53 PM (எம்.மனோசித்ரா) அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்கும் துறைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள துறைகளைச் சேர்ந்தோர் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் , மேலும் பல கோரிக்கைகளை முன்வைத…

  11. வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 கிரிக்கெட் தோல்வியின் விரக்தியில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் மூன்றாவது சடலம் கரை ஒதுங்கியது. தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது. காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற்போயிருந்தனர். அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப்பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்…

  12. பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளாவிட்டால் பாடசாலையும் அத்தியாவசிய சேவையாக்கப்படும் – ஜனாதிபதி பாடசாலை சேவையை அத்தியாவசிய சேவையாக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை முன்வைக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் சீருடை மற்றும் பாடசாலை புத்தக விநியோக நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றுகையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திற்கான பிரஜைகளை உருவாக்குவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும். கல்வி என்பது கற்பித்தல் மற்றும் பரீட்சைகளுடன் தொடர்புடையது மட்டுமல்ல. கல்வி என்பது முன்னுதாரணமாகும். அது பாடசாலையில் இருந்து வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அந்த முன்னுதாரணத்தை வழங்க வேண்டும். அதிலிருந்து விலக முடியாது.…

  13. இந்தியத் தூதுவர் தரண்ஜித்சிங் சந்து நல்லூரில் வழிபாடு!! யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் பயணமாக வருகை தந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித்சிங் சந்து இன்று காலை நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். http://newuthayan.com/story/12/இந்தியத்-தூதுவர்-தர்ணாத்-சிங்-நல்லூரில்-வழிபாடு.html

  14. டியோகோ கார்சியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் ருவண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு மூன்றாவது நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் மூன்றாம் நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளமைக்கான ஆவணங்களை பார்வையிட்டுள்ளதாக நியுஹியுமானேட்டேரியன் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் துன்புறுத்தல் குறித்து அச்சமடைந்துள்ளதால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பபோவதில்லை என அந்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவித்துள்ளது. எனினும் மீள்குடியேற்றப்படும் நாடு எது என பிரிட…

  15. திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 வன்னி இறுதிக் கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சுமார் அறுநூறு அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார். இந்தக் கூற்றைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் ஆதரித்துள்ளார். அவ்வாறெனில் இந்த 600; பொதுமக்களையும் விட உயிரிழந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கொன்றது இலங்கை அரச படைகளே என்பதனை இவர்கள் இருவரும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றே அர்த்தப்படுகிறது. மறுபுறம், இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியனும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்ற கருத்தையும் கனகரத்தினம் தெரிவித்த…

    • 0 replies
    • 1.1k views
  16. இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி, வவுனியா செட்டிகுளம் ஆண்டியாபுளியங்குளம் மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளரால், விளையாட்டு மைதானம், ஆரம்ப சுகாதார மையம், ஆரம்ப பாடசாலை என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை மக்கள் நேற்று முன்தினம் துப்பரவு செய்ய முற்பட்ட போது, குறித்த நிலம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துப்பரவு செய்யும் பணியை நிறுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு இராணுவத்தினர் பணித்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் இராணுவத்தினர் ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி வேலி அமைக்க முற்பட்ட வேளை, அப் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து இராணுவ அதி…

  17. அனந்தி சசிதரனின், துப்பாக்கிக்கான கோரிக்கை கடிதம் வெளியானது…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அனந்தி சசிதரன் முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கை… என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியி…

  18. தமிழ் அமைச்சர்களுக்கு யாழ் மைந்தனின் பகிரங்க மடல்! வெள்ளி, 29 ஏப்ரல் 2011 21:14 வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே கிழக்கின் அமைச்சர் கருணா அம்மான் அவர்களே உங்கள் இருவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்! போராட்ட காலத்தில் தமிழினத்துக்கு துரோகம் செய்தீர்கள் அதனால் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமேன்றே திட்டமிட்டு குண்டுகள் வீசி கொலையும் செய்தனர். தாயின் முன்பு தனையனும் தங்கையின் முன்பு அக்காவும் அம்மாவின் முன்பு அப்பாவும் கொலை செய்யப்பட்ட கொடுரத்தைக் கண்ட வன்னி மண் அந்த கொடுமைகளை எண்ணி இன்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணீருக்கே காரணமாவர்களை நீங்…

  19. பிரான்சில் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் துணை அமர்வு, சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மையத்தோடு இணைந்ததாக துணை அமர்வினை சமாந்திரதாக பிரான்சில் மேற்கொண்டிருந்தது. பாரிசின் புறநகர் பகுதியான LE BLANC MESNIL நகரசபையில் துணை அமர்வு இடம்பெற்றிருந்ததோடு ,நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என அரச உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக பிரான்சின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மரி ஜோர்ச் புவே அவர்களும் நேரடியாக கலந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தனது தோழமையினைத் வெளிப்படுத்தியிருந்தார். இந்ந…

  20. வடக்கு வீடமைப்பு விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலை (நமது நிருபர்) அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தீர்­மா­ன­மில்லை வடக்கில் வீடு­களை நிர்­மா­ணிக்கும் விட யம் தொடர்பில் நேற்­றைய அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­திலும் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. இந்த விடயம் தொடர்பில் அடுத்­த­வாரம் மீண்டும் ஆராய்­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­ மையில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்டம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது நல்­லி­ணக்க அமைச்­சினால் வடக்கில் 25 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. பிர­த­ம­ரினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்த அ…

  21. Published By: T. SARANYA 22 APR, 2023 | 10:55 AM (நா.தனுஜா) இலங்கை பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு தீர்ப்பாயத்தின் 17 பேரங்கிய நீதியரசர் குழாம் இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸ்லாந்துக்குத் தப்பிச்செல்வதற்கு முன்னதாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரொருவர் சுமார் ஒருமாதகாலமாக கிரிக்கெட் துடுப்புமட்டையால் தாக்கப்பட்டமை, மின்சாரத்தாக்குதல், வன்புணர்வு என்பன உள்ளடங்கலாகப் பொலிஸாரால் மிகுந்த சித்திரவதைகளுக்க…

  22. வெள்ளிக்கிழமை, மே 6, 2011 தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னான் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது வல்வெட்டித்துறை இராணுவ முகாம் உயரதிகாரிகளும் பங்கெடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர் எமது இணையத்தளத்துக்குத் தகவல் தருகையில், உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் தனக்கு அழைப்புக் கிடைத்தது. இந்த அழைப்பிளை ஏற்று அங்கு சென்ற போது பொலிஸார் மட்டுமல்ல இராணுவத்தினரும் என்னை விசாரணைக்கு உ…

    • 1 reply
    • 1.6k views
  23. மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் எவ்வித தடையுமின்றி தங்களுடைய தேவைக்கேற்ப செயற்படுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் தலை தூக்கியுள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான மீன்பிடி ஆராய்ச்சி திணைக்களம் மன்னார் பிரதேசத்தில் இருக்கின்றது. அதில் தமிழர்களே சேவையாற்றுகின்றனர். ஆனால், அந்தப் பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டுள்…

  24. எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 3…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.