ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
13 JUN, 2024 | 07:12 AM இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/185965
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரியான மக்ஸ்வல் கீகல் லண்டனில் சிறையில் இருக்கும் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் - நிதர்சனம் செய்தியை உறுதிப்படுத்தினார் மக்ஸ்வல் கீகல் ஆனால் மறுத்தார் தூதுவர். ஜ வெள்ளிக்கிழமைஇ 9 நவம்பர் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ நிதாசனம் கருணா பிரித்தானிய உளவுத்துறையின் விசாரனையில் இருப்பதையும் குறித்த விசாரனை நடைபெற்ற இடத்தில் உள்ள வாசலில் இலங்கை தூதுவராலயத்தின் வாகனம் நிண்டதையும் நிதர்சனம் 03ம் திகதி செய்தியில் பகிரங்கபடுத்தியது. ஆனாலும் அதற்கு பதில் தரும் விதத்தில் இலங்கைக்கான தூதுவர் அந்த செய்தியினை ஆசியன்ரிபியுன் இணையம் ஊடாக 08 திகதி மறுத்து எமது செய்தி பொய் எண்று அறிவித்தார். ஆனால் பிரித்தானிய தூதுவரகம் கருணாவை தடுப்பு முகாமில் தொடர்புகொண்டதை …
-
- 3 replies
- 2.7k views
-
-
மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 37 வயதான குறித்த நபர் கடந்த 2012ம் ஆண்டு சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்குள் பிரவேசித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் மலேசியாவில் குறித்த நபர் பணம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளின் போது குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேக நபர்கள் இன்றைய தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/…
-
- 0 replies
- 460 views
-
-
(எம்.மனோசித்ரா) அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/5…
-
- 43 replies
- 4.9k views
-
-
இது சில காலங்களுக்கு முன் ஒன்றாக இருந்த கூலிகள் அடிபடத்தொடங்கி தெருவுக்கு இறங்கி இருக்கும் நிலையில், ஓர் கூலிகளின் இணையத்தளத்திலிருந்து....... உண்மைகள் மெல்ல மெல்ல ..... தமிழர்களை நாசம் செய்ய தமிழர்களையே பயன்படுத்தும் சிங்கள அரசு! November 16,2007 பருத்தி வேந்தன் கருணா புலிகளிடத்திருந்து தப்பித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணடைந்ததும், தனக்கு எதுவித கொள்கையும் இல்லை என்றும் நீங்கள் எதைச் சொல்கீறீர்களோ அதனைநான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணகதியடைந்துள்ளார். திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. அலெக்சாண்டர் (முன்னாள் தமிழக டி.ஜி.பி.) போன்றோரது தூண்டுதலால் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் சென்னையில…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஜிகாதி தீவிரவாதம் உலகத்துக்கான பொது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.சிறிலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை, இந்தியா தனக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே கருதுகிறது என சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/120276
-
- 2 replies
- 592 views
-
-
வெள்ளி 23-11-2007 22:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 19,887 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2007ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களின் எண்ணிக்கை 19,887 என தெரிவித்துள்ளது. மாவீரர்களின் தொகை 19,887 வீரச்சாவடைந்த ஆண் மாவீரர்கள் 15,691 வீரச்சாவடைந்த பெண் மாவீரர்கள் 4,196 மொத்தக் கரும்புலிகள் 343 தரைக் கரும்புலிகள் 102 தரைக் கரும்புலிகள் ஆண் 81 தரைக் கரும்புலிகள் பெண் 21 கடற் கரும்புலிகள் 241 கடற் கரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
Published By: VISHNU 12 JUL, 2024 | 01:51 AM (நா.தனுஜா) காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் அதே வேளை, நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தின் அழைப்பின்பேரில் தூதுவர் ஜுலி சங்குக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (11) மாலை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் அதன் தவிசாளர் சட்டத்தரணி மக…
-
-
- 2 replies
- 382 views
- 1 follower
-
-
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மைத்திரி கொடுத்த விருந்துSEP 02, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபருக்கும், புதிதாகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அதிபர் நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார். சிறிலங்கா இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றிரவு அதிபர் மாளிகையில் இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. இதன்போது, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. இந்த இராப்போசன விருந்தில், மை…
-
- 0 replies
- 435 views
-
-
ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை! முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், சந்தேகத்திற்கிடமான சிலரை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஹோட்டல் ஒன்றிலிருந்து அழைத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்சிகள் தன்னிடம் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தகவலொன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், பாசிகுடா பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, சவுதி நாட்டு பிரஜைகள் சிலரை சந்தித்த சம்பவம் தொடர்பாக சி.சி.…
-
- 0 replies
- 718 views
-
-
அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்நிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்வத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக சபர்களை கைதுசெ…
-
- 0 replies
- 255 views
-
-
'13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்! - இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அறிவிப்பு!! சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கு மேலாக (13+) என்று சொல்வது செனட் சபையைத் தான் என சிறிலங்கா அரசாங்கம் இன்று மீண்டும் தெரிவித்திருக்கின்றது. சிறிலங்கா அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, '13 பிளஸ் எனக் கூறப்படுவது செனட் சபையாகும். இது தொடர்பாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது' எனக் குறிப்பிட்டார். 13 பிளஸ் என்பது தொடர்பாக குழப்பான அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் ரத்து இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணிப்பேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரித்திருந்தார். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எனினும், நேற்று அலரி மாளிகையில் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக நடக்கும் தயார்படுத்தல் கூட்டம் சிறிலங்கா…
-
- 1 reply
- 464 views
-
-
த.தே.கூட்மைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை விடுதலைப் புலிகளே கடத்தி உள்ளனர் என தமக்குத் தகவல் கிடைத்திருப்பாதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சன் கேஹெலிய ரம்புக்வெல கூறினார். நேற்று நடாளுமன்றக் கட்டடத்தில் இடம் பெற்ற செய்தியாளா மாநாட்டிலேயே இவர் இப்படிக் கூறினார். நேற்றுக் காலை த.தே.கூ உறுப்பினாகள் சிலரின் உறவினர்களைப் பிள்iளாயன் குழுவினர் அரச அனுசரணையுடன் கடத்தி உள்ளனர் என நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்து. ஆனால் எமக்குக் கிடைத்த தகவலின் படி கிழக்கு மாகாணத் த.தே.கூ உறுப்பினர்கள் 14ம் திகதி வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பின் போது அரசுக்கு ஆதரவளித்து வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த புலிகள…
-
- 1 reply
- 2.1k views
-
-
Published By: Vishnu 12 Aug, 2024 | 07:01 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவுடன் தமக்கு எந்தவொரு போட்டியும் இல்லை என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவித்திருக்கும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் இந்தியாவுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்திருக்கிறார். இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (12) கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்றது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள…
-
- 0 replies
- 391 views
-
-
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது. நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE
-
- 65 replies
- 5.9k views
-
-
ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), அமெரிக்கா (அமெரிக்கா), கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, உட்பட 35 நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வீசா இன்றி பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தென் கொரியா, மற்றும் ஜப்பான். இந்த புதிய விசா இல்லாத கொள்கை அக்டோபர் 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் இது ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். List of countries to be offered visa-free access to Sri Lanka: 1. United Kingdom 2. Germany 3. Netherlands 4. Belgium 5. Spain 6. Australia 7. Denmark 8. Poland 9. Kazakhstan 10. Saudi Arabia 11. UAE 12. Nepal 13. China 14. India 15. Indonesia 16. Russia 17. Thaila…
-
-
- 13 replies
- 921 views
- 1 follower
-
-
சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் கைது சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கமப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றைப் படம் பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 5 replies
- 1.7k views
-
-
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிஸில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் மிக நெருங்கி சகாக்களில் ஒருவர் சரன்? தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக சரன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை கைது செய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் மிக நெருங்கி சகாக்களில் ஒருவ…
-
- 0 replies
- 541 views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளார் என அறியப்படுகிறது. பல்வேறு நாடுகளின் அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் அதே வேளையில் தமிழ் பேசும் மக்களால் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு எமது மக்கள் அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரம் குறித்து பன்னாட்டு அரச பிரதிந…
-
- 7 replies
- 979 views
-
-
அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே விசாரணைப் பொறிமுறைமை அமையும் - ஜனாதிபதி நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே அனைத்து விசாரணைப் பொறிமுறைமைகளும் அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான அனைத்து நீதிமன்ற விசாரணைகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட வகையிலேயே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நீதிமன்றங்களில் வெளிநாட்டு சட்டத்தரணிகள் கடமையாற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்யாது புதிய சர்வதேச நீதிமன்றமொன்றை அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் ரீதியாகவும் இந்த விடயம் மிகவும் சவால் மிக…
-
- 0 replies
- 449 views
-
-
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகஸ்தர் என விசாரணைகளில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/60063
-
- 2 replies
- 446 views
-
-
இன்று வெளிவந்த சண்டே டைம் பத்திரிகையில் அமரர் மகேஷ்வரனின் கொலையுடன் டக்கிளசும் அரசும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது பற்றி அரசியல் களப் பகுதியில் , "மகேஷ்வரன் கொலை : உரைக்கும் செய்தி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இணைப்பை இணைக்க இன்னும் முயன்று வருகிறேன்.
-
- 0 replies
- 2k views
-
-
Dear Friends, The 19th session of the UN Human Rights Council (UNHRC) taking place in Geneva will shortly be upon us. On Monday 27th February there is a large Tamil demonstration outside their offices. The London-Geneva walkers (http://forjusticeandpeace.org/) will arrive to take part! The session will last for one month so we must do all we can to maintain pressure upon the Council as soon as possible. We recently asked you to send an e-mail to the e-campaign group Avaaz asking them to contact their 13 million subscribers to support an Independent international investigation into war crimes. Thanks to all who did so but we need more e-mails! SEND AVAAZ A…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ்.புனித பொஸ்கோ வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு விழா யாழ். புனித பொஸ்கோ வித்தியாலத்தின் 60ஆவது ஆண்டு நிகழ்வுகள் நேற்று வித்தியாலய அதிபர் மரிய ஜீவந்தினி தலைமையில் நடைபெற்றது. புனித பொஸ்கோ வித்தியாலயம் 60 ஆவது ஆண்டில் காலடிபதித்துள்ள நிலையில் பல சாதனைகளையும் வரலாறுகளையும் படைத்த வித்தியாலயமாக காணப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் குறித்த நிகழ்வின் போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் 60ஆண்டில் காலடிபதித்துள்ள வித்தியாலயத்தின் மலர் வெளியீடும் இடம்பெற்றது.குறித்த மலர் வெளியீட்டை முதலமைச்சர் வெளியீட்டு வைத்தார். குறித்த மலரின் முதற்பிரதியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக…
-
- 0 replies
- 298 views
-