ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணை தேவையாகும். ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அமெரிக்கத் தீர்மானத்தின் அதிகாரங்கள் முழுமையாக இலங்கை மீதான சர்வதேச விசாரணையை ஏற்படுத்தவேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் அமெரிக்கத் தீர்மானத்தில் சில திருத்தங்கள் இருந்தாலும் இது இலங்கை மீதான விசாரணை ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா வந்துள்ள கெலும் மக்ரே ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியிருக்கின்றார். இதேவேளை இறுதியுத்தத்தில் மக்கள் பட்ட அவலங்கள் தொடர்பில் ஆதாரத்துடன் வைத்திய கலாநிதி துரைராஜா வர…
-
- 0 replies
- 178 views
-
-
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாகக் கருத முடியாது. இதன் மூலம் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் உண்டு என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்வர். எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறு;திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற…
-
- 7 replies
- 640 views
-
-
இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை இன்று சந்தித்த போதே ரஸ்ய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை சபையில் நிரந்தர உறுப்புரிமை இல்லாவிட்டாலும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை ரஸ்யா வழங்கும். அத்துடன் மேற்குலக நாடுகளின் அழுத்தம் குறித்து தொடர்ந்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி வருவருகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ரஸ்யா மத்தியஸ்த்தராக செயற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=76496&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 719 views
-
-
அமெரிக்காவின் பிரேரணை தோற்றதாக சரித்திரம் இல்லை - சுமந்திரன் (காணொளி) ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை இலங்கைக்கு எதிரானது அல்ல எனவும் அது இலங்கைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகவே அமையும் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எமது அழைப்பை ஏற்று அத தெரண தமிழிணைய செய்தி அலுவலகத்திற்கு இன்று (08) வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்று தோல்வியடைந்ததாக சரித்திரம் இல்லை என அ…
-
- 1 reply
- 1.7k views
-
-
அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை' நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது. இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் பிரேரணையும் மனித உரிமை பேரவையின் தீர்மானமும், அரசாங்கமானது தற்போதைய நிலையிலிருந்து விலகி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான காத்திரமான முடிவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது. இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு சாதமாகவே செயற்படும் என கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மிகவும் வலுவான, பாரியளவில் தீர்மானமொன்றை அமெரிக்கா நிறைவேற்ற உத்தேசித்துள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. அரசாங்கம் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. போரின் பின்னர் அரசாங்கம் வடக்கில் சில அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள போதிலும், பா…
-
- 1 reply
- 401 views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரரணையின் உள்ளடகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா தற்போது இறங்கியுள்ளது. அமெரிக்காவின் பன்முனை இராஜதந்திர அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலைக்கு பல நாடுகள் தள்ளப்பட்டுள்ள நிலையில் பிரேரணiயின் உள்ளடக்கத்தின் வீச்சினைக் குறைக்குமாறு குறித்த சில நாடுகளை சிறிலங்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்குத் திருத்தம் கொண்டு வரும்படி அமெரிக்கா அழுத்தத்தை பொறுக்க முடியாத சிறிலங்காவக்கு ஆதரவான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார துணை அமைச்சர் நியோமல் பெரேராவின் கூறியுள்ளமை இவ்விவகாரத்தை உறுதிசெய்…
-
- 0 replies
- 879 views
-
-
மனித உரிமைகள் விவகாரம், பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளிட்ட இலங்கை விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் மிசேல் சிசன் வெளியிட்டுள்ள கருத்துகளானது அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இராஜதந்திர மட்டத்திலான உறவில் பனிப்போர் மூண்டுள்ள இவ்வேளையில், புதிதாக நியமனம் பெற்று கொழும்பு வரவுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிவித்துள்ளமையானது அரசுக்கு இனியில்லை யென்றளவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நியமனத்துக்கான உறுதியை அமெரிக்க செனட் கடந்த புதன்கிழமை மிச்செலி சிசனுக்கு வழங்கியது. நியமனத்தை பெற்றப் பின…
-
- 1 reply
- 614 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவு தேடும் ராஜதந்திர சமர் ஆரம்பம்: ஜீ.எல். பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார். ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய காலை உணவு சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா …
-
- 1 reply
- 596 views
-
-
அமெரிக்காவில் புதிய பதில் உதவி சட்டமாஅதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய, ஏ.தர்மரத்தினத்தின் மகளும், இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார். மைதிலி ராமனின் பெற்றோர் யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்தவர்களாவர். அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் மைதிலி ராமன் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Yale பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம்பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன், அமெரிக்கா முழுவதிலும் உள்ள சமஸ்டி குற்றவியல்…
-
- 5 replies
- 498 views
-
-
பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இது ஆடை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2ஆம் திகதி அறிவித்த 10 வீத அடிப்படை வரியை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வித்தியாசமான விகித வரி விதிக்கப…
-
- 0 replies
- 145 views
-
-
அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின - அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் - அலி சப்ரி Published By: Rajeeban 05 Mar, 2023 | 12:37 PM திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன…
-
- 18 replies
- 905 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 12:19 | அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கைகள் சிறீலங்காவில் ஆரம்பம்? கைத்துப்பாக்கியின் பாகங்களுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் சிறீலங்காவில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கான புலனாய்வாளர்களாக இருக்கலாம் என சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த புதன்கிழமை (18) கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பயணப்பையில் கைத்துப்பாக்கியின் பாகங்கள் காணப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கப்பல் மூலம் காலி துறைமுகத்தை வந்தடைந்த அவர்கள் பின்னர் கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலம் டோகா செ…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்த ஐ.நாவிற்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர் தனது அரசாங்கத்தின் பூகோள அரசியல் நலன்களின் மீதே அதிகம் கவனம் செலுத்துவதாகவும், ஆனால் நோர்வே நாடானது தமிழ் மக்களின் துன்பங்களை நன்கு புரிந்துள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவர் ஊடகத்திற்கு மின்னஞ்சல் மூலம் சி.வி.விக்னேஸ்வரன் ந…
-
- 0 replies
- 296 views
-
-
அடுத்த ஆண்டு அமெரிக்கா முன்னெடுக்கவுள்ள பொருளாதாரக் கொள்கையினால், சிறீலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் றிசேவ் சிஸ்டம் அடுத்த ஆண்டு வட்டிவீதங்களை அதிகரிக்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் குறித்த வங்கியானது இதேபோல் வட்டி வீதத்தினை அதிகரித்ததால் சிறீலங்காவிலிருந்து 2400 மில்லியன் டொலர் முதலீடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் வட்டிவீதம் மீண்டும் உயர்த்தப்பட்டால், சிறீலங்காவின் ரூபாவின்மீது அது மீண்டும் அழுத்தத்தைச் செலுத்தும். இதனால் நாம் சிலகாலங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் ச…
-
- 0 replies
- 241 views
-
-
பாறுக் நஜீ- Eliana Apicella எனும் அமெரிக்க பிரஜை அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி இலக்கம் 6 இல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவைசிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் Dr. P. K. Ravindran தலைமையில் வெற்றிகரமா மேற்கொள்ளப்பட்டது. இன்று 11.08. 2020 பூரண சுகத்துடன் அவர் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட…
-
- 2 replies
- 570 views
-
-
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாது போரை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை [Wednesday December 19 2007 06:52:39 PM GMT] [யாழினி] அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அரசாங்கம் அடிபணியக்கூடாது. தமது இலங்கை முகவர்களான விடுதலைப் புலிகள் தோல்வியடைவதனை சகித்துக்கொள்ள முடியாமையினாலேயே இலங்கைக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. எனவே இதற்கெல்லாம் அஞ்சாது அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமெரிக்கா ஆயுதம் வழங்காவிடினும் வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்று அரசாங்கம் வன்னியை கைப்பற்ற வேண்டும். இதனைவிடுத்து அமெரிக்காவின் பேச்சைக் கேட…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் மிரட்டலுக்கு நாம் அடிபணிய போவதில்லை -- சம்பிக்க ரணவத்த
-
- 0 replies
- 821 views
-
-
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதித்திட்டத்திற்கு சிறீலங்கா தகுதியற்றது உலகின் வறிய நாடுகள் தமது சவால்களை வெற்றி கொள்வதற்காக அமெரிக்காவினால் வழங்கப்படும் மிலேனியம் சவால் திட்டதிற்கான நிதியை சிறீலங்கா இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான தகுதியை சிறீலங்கா இழந்துள்ளதாக மிலேனியம் செலேஞ் கோப்பிரேசன் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி இத்தகவல் வெளிவந்துள்ளது. சிறீலங்கா தமது சாவல்களையும் இலக்குகளையும் நிறைவேற்றக்கூடிய தகுதி சிறீலங்காவுக்கு இருக்கிறதா? என அந்நிறுவனம் தனது அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறீலங்காவில் தற்போது நடைபெறும் நிலவரங்களை அடுத்து அமெரிக்கா அரசாங்கத்தினால் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரமான உதவி முகவர் நிறுவனமான மிலேனியம் சவால் நிறுவனம், பூகோள வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஐந்து ஆண்டு காலப்பகுதியில், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பொது போக்குவரத்து முறைகளை நவீனமயப்படுத்துவது, காணி முகாமைத்துவத்தை மே…
-
- 0 replies
- 776 views
-
-
தெற்கு, மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், நாளை மறுநாள் (31) கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 2ம் திகதி வரை சிறிலங்காவிற்கு விஜயம் செய்வார். இவர், சிறிலங்காவில் அதிகாரிகளைச் சந்தித்து, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.…
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவானது, இலங்கை மீது தவறுகளுக்கான திருத்தங்களை முன்வைப்பதாகவும் முன்னரே ஆரம்பத் தீர்மானமொன்றைக் கொண்ட குணத்தையும் இலங்கை மீது வரையறை விதிப்பதாகவும் காணப்படுவதாகவும…
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன. நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்பதாக அப் பிரேரணை அமைந்திருந்தது. அதேவேளை, பெரும் படை பரிவாரங்களோடு ஜெனீவாவில் களமிறங்கிய ஆட்சியாளர்கள், நாடு திரும்பும்போது நிச்சயம் செங்கம்பள வரவேற்பு இருக்காது என நம்பலாம். இப் பிரேரணையானது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் முதலாம் பாகம் மட்டுமே. இனி ஆரம்பமாகப் போகும் இரண்டாம் ப…
-
- 0 replies
- 749 views
-
-
அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மைத்திரியுடன் பேச்சுSEP 08, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இன்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலராக இருந்தவர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ். இந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பேச்சு நடத்திய போது, அதில் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஈடுபாடு காட்டியிருந்தார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீதான அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி அடங்கிய குழுவினர் இலங்கைக்கு !! அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி உட்பட 20 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் நேற்று மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அமெரிக்க தூதுக்குழுவின் வருகையையொட்டி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. https://athavannews.com/2023/1324134
-
- 2 replies
- 477 views
- 1 follower
-