Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது, எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் பிரதான ஆரம்ப நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமரின் விஜயம் ஒரு நாளுக்கு வரையறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=95867&category=TamilNews&la…

  2. ஒரு இலட்சத்து 30 ஆயிரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கு, ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இன்று புதன்காலை விஜயம் செய்தார். தனது மொழிபெயர்ப்பாளர் சகிதம் சென்ற இவர், மக்களுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடினார். தாம் மீளக்குடியேற விரும்பவதாகவும் விரைவில் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னரும் இவர் இந்த இடத்திற்கு விஜயம் செய்தமை குறிப்பிடதக்கது. 2010ம் ஆண்டு சனவரிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் அவர்களுடைய பழைய இருப்பிடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது

  3. http://vakthaa.tv/play.php?vid=4846

  4. பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு! அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர நியமனம் வழங்கப்படுவோருக்கு மாதாந்தம் 41 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1252117

  5. தனது சுயநலத்திற்காக இனப்படுகொலைகளை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவியினை கொடுக்கக்கூடாது. இறுதி நேரத்திலாவது மீள்பரிசீலனை செய்து தலைமைப் பதவியினை தடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் இன்று மனித உரிமை மீறல்களை நாங்கள் தான் செய்கின்றோம் என அரசாங்கம் சர்வதேசங்களுக்கு வெளிப்படையாகவே காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 'சமகி" அமைப்பினால் நேற்று 'மனித உரிமைகளுக்கான போராட்டம்" என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின…

  6. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரேரணையை முன்வைத்தார். நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரேரேணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “காணாமல் போன ஆள்கள்” தொடர்பான விடயம் இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது. அத்தோடு, காணாமல் போன ஆள்களுடைய குடும்பங்கள்…

  7. யாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க! யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்ன…

  8. ஒருமித்த கோரிக்கை தற்காலத்தின் தேவை என்கிறார் சம்பந்தன்! இப்போதைய நிலைமையில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒருமித்த நிலைப்பாட்டுடனும், ஒன்றுமையுடனும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்காகவே தமிழ்க் கட்சிகள் இடையே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அனைவரும் ஒருமித்த கருத்துடன், ஒன்றுமையுடன் இருக்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக நாம் மேலும் கூடி ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடுவோம். இந்த முயற்சிக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று கொழும்பில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே …

  9. ஜனாதிபதி தேர்தல் காலம் முடியும் வரை நாடு பூராக திடீர் வீதி தடுப்புக்கள், சோதனைகள், நேற்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. 40 பொலிஸ் பிரிவுகளிலும் பகல் இரவு ரோந்து பணிகள் ஆகியனவும் இடம்பெறும் எனவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான விசேட பாதுகாப்பு திட்டத்தின் கீழ இந்த பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார் பொலிஸ்மா அதிபர். இதுவரை 76 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் ஒரு கொலை சம்பவமும் அடங்கும் எனவும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. http://www.eelanatham.net/news/important

  10. தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை >> தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே! “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது…” என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடை…

  11. விக்னேஸ்வரன், சம்பந்தன் திடீர் சந்திப்பு : காரணம் இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்குகொள்ளும் அவசர கலந்துரையாடல் இன்று மாலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சித் தலைவர்களும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர். வட மாகாண சபையில் அமைச்சரவை தொடர்பில் நிலவிய சர்ச்சை அதன் பின்…

    • 10 replies
    • 2.9k views
  12. அக்கரப்பத்தனையில் மத முரண்பாட்டை உருவாக்க திட்டமா? January 2, 2022 அக்கரபத்தனை நகரில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் …

  13. இந்தியாவை நாம் தந்திரமாக ஏமாற்றினோம்: சிறீலங்கா திகதி: 04.01.2010 // தமிழீழம் யுத்த காலததில் இந்தியாவுடனான உறவுகளை தந்திரோபாயமான முறையில் முன்னெடுத்த காரணத்தினால் அழுத்தங்களிலிருந்து மீள முடிந்ததாக சிறீலங்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களை விடவும், இந்தியாவினால் யுத்தம் தொடர்பாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மிகவும் அதிகம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், சூட்சுசமான முறையில் முறையில் இந்தியாவுடனான உறவுகளை இராஜதந்திர ரீதியில் அணுகியதனால் சிக்கல்கள் இன்றி யுத்தத்தை முன்னெடுக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு பதக்கம் அணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்…

  14. விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையை முன் வைத்து நாட்டின் பல்வேறு சிறைச் சாலைகளிலும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் நான்கு பேர் மயக்கமடைந்த நிலையில் சனிக்கிழமை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய மகசீன் சிறைச்சாலைக் கைதிகள் இருவரும் யாழ்ப்பாண சிறைச்சாலைக் கைதிகள் இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருப்பின் அது தொடர்பாக விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளில் மிக நீண்டகாலமாக வாடும் 577 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவி…

  15. வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அழைப்புக்களை விடுத்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/93952-2013-12-20-12-42-48.html

  16. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு உணவகங்களுக்குப் பூட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பிரதான உணவகங்கள் இரண்டு இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொதுச்சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக அவை தற்காலிகமாக மூடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு உணவகங்களும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் நேரடியாகச் சென்று உணவகங்களைப் பார்வையிட்டனர். உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது. இரண்டு உணவகங்களுக்கு எதிராக சுகாதாரப் பரிசோதகர்கள் வழக்…

  17. 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி January 30, 2022 ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமாகி கிட்டுப்பூங்காவில் நிறைவடைந்தது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பமானது இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2022/172475

  18. 50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச பொலிஸார் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் 50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கள வாரப்பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. நோர்வேயில் இருப்பதாக கூறப்படும் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன், ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கர்தியன் மாணிக்கவாசகர், ஐரோப்பாவுக்கான புலிகளின் தலைவர் விநாயகம் என்ற சேதீபன்பிள்ளை விநாயகமூர்த்தி, புலிகளின் கப்பல் பிரிவின் பிரதானி பொன்னையா ஆனந்தராஜன், ஆயுத விநியோகப்பிரிவின் இரண்டாம் நிலை தல…

    • 0 replies
    • 322 views
  19. இறந்தோரின் எண்ணிக்கை 225.000 www.tsunamiineelam.com மேலதிக விபரங்கள்...

  20. காணி சுவீகரிப்பு இன்றி பலாலியை பிராந்திய விமான நிலையமாக்கலாம் மேல­தி­க­மா­கக் காணி­க­ளைப் பெறா­ம­லேயே பலாலி விமான நிலை­யத்­தைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்த முடி­யும் என்று இந்­திய ஆய்­வுக் குழு கொழும்பு அர­சுக்­குப் பரிந்­து­ரைத்­துள்­ளது. இது தொடர்­பில் பலா­லிக்கு வந்து நேரில் ஆய்­வு­களை நடத்­திய இந்­தி­யக் குழு­வி­ன­ரின் அறிக்கை இலங்கை அர­சி­டம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பலாலி விமான நிலை­யம் தற்­போது உள்­ளூர் மற்­றும் படைத்­துறை விமான நிலை­ய­மா­க­ வுள்­ளது. அத­னைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்­து­வது தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான ந…

    • 2 replies
    • 292 views
  21. பொன்சேகா கைது: சிறிலங்கா நிலைவரம் குறித்து அமெரிக்கா கவலை .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது. அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை சமூகங்களின் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளத என்று அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்கள பேச்சாளர் பிலிப் க்ரெளலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - "போர் முடிவடைந்துள்ள நிலையில் சிறிலங்காவில் சமூகங்களுக்கு மத்தியில் காணப்படும் பிளவுகளை சீர் செய்து ஒற்றுமையை கட்டி வளர்ப்பது என்பது சிறிலங்காவுக்கு பிரதான சவாலாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், அந்த பிளவுகளை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்பதில் சிறிலங்கா …

    • 6 replies
    • 1.4k views
  22. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/node/1010

  23. சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவாரா ? ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறியுள்ளது மாத்திரமன்றி அவை தொடர்பில் சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள…

  24. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் மக்கள் உரிமைகள் கட்சியின் சார்பில் திருமதி சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் செவ்வி http://www.yarl.com/articles/files/100302_santhi_satchithanantham.mp3

  25. மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடி படகு ஒன்றில், இரண்டாயிரம் கிலோவுக்கு அதிகமான எடையுள்ள சுறா மீன்கள் பிடிபட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று கரை திரும்பிய படகில், அதிகளவான சுறா மீன்கள் சிக்கியிருந்தன. சுறாமீன்களின் பெறுமதி பத்து இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=190533&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.