ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By VISHNU 08 DEC, 2022 | 06:38 PM தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார். தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்…
-
- 11 replies
- 938 views
- 1 follower
-
-
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் 6 ஆவது நாடாக இலங்கை இருப்பதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச பொலிஸாருடன் தொடர்புடைய NARC தனது சமீபத்திய அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இலங்கையில் குற்றச் சுட்டெண் உயர்ந்து 4.64 சத வீதமாக அதிகரித்துள்ளது. மேலும், இலங்கையில் 30 பாதாள உலகக் குழுக்கள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கொழும்பு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, வட கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த பாதாள உலகக் குழுக்கள் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசியாவின் 8 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் 6 ஆவது நாடாக இலங்கை! | Virakesari.lk
-
- 0 replies
- 589 views
-
-
கோட்டடாபய ராஜபக்ஷ சில காலம் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு தனது நாடு அனுமதியளித்ததன் மூலம் இலங்கையில் அமைதியான ஆட்சிமாற்றத்திற்கு உதவியுள்ளது என கருதுவதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கத்திற்கான அவசியம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, கேள்வி ; நல்லாட்சியும் ஊழல்இன்மையும்,இலங்கைக்கு மிகமுக்கியமான சொற்பதங்கள் முக்கியமான அபிலாசைகள். நானும் நீங்களும் பலதடவை இலங்கை குறித்தும் அதற்குள்ள ஆற்றல் குறித்தும் பேசியுள்ளோம். அமைச்சர் அவர்களே நாங்கள் மீண்டும் இந்த வருட ஆரம்பத்திற்கு திரும்பி செல்வோம் என்ற…
-
- 0 replies
- 291 views
-
-
சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை எதிர்த்து கடற்றொழிலாளர்களை பாதுகாப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற சட்ட விரோதமான கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக, ஜனநாயக வழியில் போராடி கொண்டிருக்கின்ற அப்பாவி மீனவ குடும்பங்களுக்கு எதிராக, பொலிசார் வழக்கு தாக்கல் செய்து இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தார்கள். இந்த வழக்கிற்கு மீனவர்கள் சார்பில் ஆஜராகிய பின்னரே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இவ் விடயம் தொடர்பில் தெரிவிக்கையில், இன்று (08) நாங்கள் நீதிமன்றத்திலே, பொலிசாருடைய வழக்கை எதிர்த்து குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின்…
-
- 0 replies
- 631 views
-
-
12-12-22 முதல் வாரம் 4 தடவை அலையன்ஸ் நிறுவனம் பலாலி-சென்னை விமான சேவையை ஆரம்பிக்கிறது என செய்தி வெளியிட்டுள்ளது கொழும்பு டெயிலி மிரர். ஆனால் அலையன்ஸ் இணையதளத்தில் யாழ் விமானநிலையம் என்பதை செலக்ட் பண்ண முடிந்தாலும் - 12, 13 ம் திகதிகளில் எந்த சேவையும் இல்லை என்றே வருகிறது. https://www.dailymirror.lk/breaking_news/Chennai-Jaffna-flights-to-resume-on-Monday/108-250044
-
- 52 replies
- 2.7k views
-
-
யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்! யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விள…
-
- 34 replies
- 2.1k views
- 1 follower
-
-
சிறுநீரக விற்பனை விவகாரம் - குற்றம்சாட்டப்படும் வைத்தியசாலை தெரிவிப்பது என்ன? By RAJEEBAN 08 DEC, 2022 | 04:04 PM சிறுநீரக மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொரளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை மனித உடற்பாகங்கள் கடத்தல் விற்பனை தொடர்பில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. மனித உடற்பாகங்களை கடத்தும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடவில்லை ஒருபோதும் அதில் ஈடுபடமாட்டோம் என அந்த வைத்தியசாலைதெரிவித்துள்ளது. முக்கிய சூத்திரதாரி தற்போது கைதுசெய்யபபட்டுள்ளார் என்பதையும் வைத்தியசாலை சுட்டிக்காட்டியுள்ளது. விசாரைணையின் போது ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி By T. SARANYA 08 DEC, 2022 | 04:46 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக மாலைவேளை வரையும் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான மழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகின்றது. பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல இடங்களிலும், மரங்கள் முறிந்துள்ளதையும், மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது, நேற்று புதன்கிழமை(07) இரவு 11.30 மணியளவில் சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளது. அச்சூறாவளிப் புயலுக்கு “மாண்டஸ்” என பெய…
-
- 42 replies
- 2.2k views
- 1 follower
-
-
முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் - வடக்கு மாகாண ஆளுநர் அறிவிப்பு By T. SARANYA 08 DEC, 2022 | 03:20 PM வெளியில் செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறுகோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/142542
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் - சித்தார்த்தன் By DIGITAL DESK 2 08 DEC, 2022 | 01:34 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் தரப்பினர் அரசியல் கட்சி பேதங்களை விடுத்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி, பொர…
-
- 0 replies
- 195 views
-
-
கள்ளன் – காவல்துறை விளையாட்டை விளையாடும் ரணில் – ராஜபக்சாக்கள் மக்கள் தொடர்பில் பசில் ராஜபக்ச மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாகத் தெரிவிக்கும் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ரணில் – ராஜபக்ச ‘திருடன் -காவல்துறை’ விளையாட்டையே விளையாடி கொண்டிருப்பதாகவும் கேலி செய்தார். ராஜபக்சாக்களும் ரணில் விக்ரமசிங்கவும் கள்ளன் காவல்துறை விளையாட்டையே விளையாடி வருகிறார்கள். ரணில் – ராஜபக்சர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதும் ராஜபக்சர்கள் ரணிலுக்குப் பொறுப்புகளை வழங்குவதுமே அரசியலில் இத்தனை காலமாக நீடித்திருந்தது. எவ்வாறாயினும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இதனை சவாலுக்கு உட்படுத்தினார்கள். இதன் பின்னர், எதிர் எதிர் திசையிலிருந்து கள்ளன் – …
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை - ஜெய்சங்கர் By Rajeeban 08 Dec, 2022 | 10:55 AM இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் இந்தியா இலங்கை முழுவதற்கும் உதவியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் சிங்களவர்கள் ஏனைய சமூகத்தினர் அடங்கிய இலங்கை முழுவதற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் உள்ள அயல்நாட்டிற்கு …
-
- 1 reply
- 554 views
-
-
தமிழ்,முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது – நசீர் அஹமட் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில் பேச வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ள அவர் அது தொடர்பில் (புதன்கிழமை ) ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது,நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது வரவேற்கத…
-
- 3 replies
- 928 views
-
-
சிவபெருமான் யாருடைய ஆள்? – யாழில் படையினர் விசாரணை! சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டையின் பின் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்…
-
- 50 replies
- 3.7k views
- 1 follower
-
-
மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முழு அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – டக்ளஸ் கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும், ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லையென்றும் சபையில் தெரிவித்த அமைச்சர், அந்த நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஜேவிபி எம்பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச…
-
- 0 replies
- 187 views
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஆட்சியின் போது நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபாய் நட்டம்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது, 5,978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக, இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை உடனடியாக நிறுத்தியதால் இந்த நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 செப்டெம்பர் 21ஆம் திகதி கோட்டாபய ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் இந்த திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு, அது இடைநிறுத்தப்பட்டது. ஜப்பான் சர்வ…
-
- 0 replies
- 377 views
-
-
நூருல் ஹுதா உமர்- சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை கிழக்கின் கேடயம் எதிர்க்கும். அதன் பாதகங்களை மக்கள் மயப்படுத்துவோம். வரவு செலவு வாக்கெடுப்புக்கு பின் வருகின்ற சுதந்திர தினத்துக்கு முன்னர் சிறுபான்மை மக்களில் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருப்பதனை வைத்து தமிழ்த்தரப்பு கட்சிகள் சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இன்று (05) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்களுக்கு தீர்…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் இலங்கை பெண்! 2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர் Sirisha Bandla உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். சந்தியாவின் கணவரான பிரகீத் எக்னெலிகொட, இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு திடீரென காணாமல் ஆக்கப்பட்டார். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரை போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து …
-
- 0 replies
- 204 views
-
-
இந்த ஒளிபதிவு முன்பே இணைக்கபட்டு இருந்தால் நீக்கி விடவும் குகிளில் யாழில் இணைத்து இருக்கா என்று தேடிய பொழுது இல்லை என்று வருகிறது .
-
- 22 replies
- 1.4k views
-
-
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை By DIGITAL DESK 2 07 DEC, 2022 | 04:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (டிச. 08) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார். அதன் பிரகாரம் 2023 ஆம் ஆண்…
-
- 1 reply
- 343 views
- 1 follower
-
-
வரி சலுகையின் பயனை நாட்டு மக்கள் பெறவில்லை : இறக்குமதியாளர்கள் மாத்திரம் திருப்தி - ரோஹினி கவிரத்ன By DIGITAL DESK 2 07 DEC, 2022 | 03:44 PM (இராஜதுரை ஹஷான்) குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல், தவறான தீர்மானங்களினால் இழக்கப்பட்ட வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். 25 சதமாக காணப்படும் சீனிக்கான விசேட வரியை நீக்கி, வரி தொகை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். வரி சலுகையின்பயனை நாட்டு மக்கள்பெறவில்லை, ஒருசில இறக்குமதியாளர்கள்மாத்திரம் திருப்தியடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) ஜப்பானின் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு - மாலம்பே இடையிலான இலகு ரக புகையிரத சேவையை, இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தமையின் காரணமாக 5,978 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான புதிய கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தினைக் கோரி குறித்த ஜப்பான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், அதனை விட பன்மடங்கு தொகையை மீள செலுத்த வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெறிசலைக் குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் …
-
- 0 replies
- 565 views
-
-
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்! By T. SARANYA 07 DEC, 2022 | 01:27 PM கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார். இதன்போது கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில…
-
- 7 replies
- 589 views
- 1 follower
-
-
முஸ்லிம் கட்சிகள் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும்!… ஏ.எல். கால்தீன். ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கமால் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்தித்து முஸ்லிங்களுக்கு உள்ள காணிப்பிரச்சினைகள், முஸ்லிங்களின் இருப்புக்கான பிரச்சினைகள், உரிமைகள், உடமைகளுக்கான பிரச்சினைகள், விவசாயிகள் உட்பட தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பேச முன்வரவேண்டும். முஸ்லிங்களுக்கு இலங்கையில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் ஏ.எல். கால்தீன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் கருத்…
-
- 0 replies
- 623 views
-
-
மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா – சாணக்கியன் கேள்வி! தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 277 views
-