Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தனது அரசிலும் தவறுகள் நடந்துள்ளதாம்! - ஒப்புக்கொள்கிறார் மகிந்த [Tuesday 2015-03-24 19:00] அன்று 'அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றம்சுமத்திய மக்கள் இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் அதிகரித்து விட்டனர்' என்று குற்றம் சுமத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று மஹாநாயக்க தேரர்களையும், சிங்கள திரைப்பட கலைஞர்களையும் சந்தித்த அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பு, அவருடைய அரசியல் பிரவேசம், குறித்து ஊடகவியலாகர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிதத அவர், இன்றைய பேச்சுவார்த்தையானது சுமூகமான முறையில் நடைபெற்றது. இதன்போது நான் மீண்…

  2. சாவ­கச்­சேரி பொதுச் சந்­தை­யின் கட­லு­ணவு விற்­ப­னைப் பிரி­வில் குளி­ரூட்­டப்­பட்ட நிலை­யில் பழு­த­டைந்த மீன்­கள் மற்றும் கட­லு­ண­வு­கள் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­க­ரால் நேற்று கைப்­பற்­றப்­பட்டு அவை அழிக்­கப்­பட்­டன. குறித்த கட­லு­ணவு விற்­ப­னைப் பிரி­வில் பழு­த­டைந்த மீன்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது என்று பொது­மக்­கள் கொடுத்த முறைப்­பாட்டை அடுத்து அங்கு சென்ற நக­ர­ச­பை­யின் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் பி.தளிர்­ராஜ், பெட்­டி­க­ளில் வைக்­கப்­பட்­டி­ருந்த மீன்­க­ளைப் பரி­சோ­தித்­த­போது 5 பெட்­டி­க­ளில் பழு­த­டைந்த நிலை­யில் இருந்த மீன்­க­ளைக் கைப்­பற்றி உரி­மை­யா­ளர்­க­ளின் சம்­ம­தத்­து­டன் அவற்றை அழித்­தார். …

  3. சிங்கள அரசியல்வாதியும் அமைச்சருமான ரஞ்சன் நாமநாயக்க விரைவில் ஜனதிபதி சிறிசேனா உதயசிறியை விடுவிக்கும் பொது மன்னிப்பை வழங்குவார் எனச் சொல்லியுள்ளார். இதற்குப் பெரிதும் உதவிய நீதி அமைச்சர் ராஜபக்சேவுக்கும் நன்றி கூறியுள்ளார் ராமநாயக்க. http://www.asianmirror.lk/news/item/7964-president-pardons-batticaloa-girl-who-scribbled-on-mirror-wall

    • 7 replies
    • 1.1k views
  4. யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் APR 08, 2015 | 14:18by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் யாழ்ப்பாணத்தில், தூய குடிநீருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி, நேற்று முதல் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து, 8 பேர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்…

    • 3 replies
    • 953 views
  5. தார்மீக உரிமையை இழந்து விட்டது கூட்டமைப்பு – டலஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து விட்டது என்று, மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததன் மூலம், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை கூட்டமைப்பு இழந்து விட்டது. இந்த நாடாளுமன்றம் தொடருமானால், எதிர்க்கட்சி என்ற பதவியில் இருந்து கூட்டமைப்பு விலக வேண்டும். அதேவேளை தற்போதைய அரசியல் நெருக்கடியை நிறைவேற்று அதிகாரமே, நீதித்துறையோ, நாடாளுமன்றமோ தீர்க்க முடியாது. பொதுத்தே…

  6. இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன்: மோகன்ராஜ் _ வீரகேசரி இணையம் 8/21/2011 11:32:41 AM இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளராக செயற்பட்ட முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். குமுதம் இணையத்தளத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வுத்துறையின் செயற்பாட்டினையும் அவ்விசாரணையின் தலைவராக இருந்த அதிகாரி கார்த்திகேயனின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். …

  7. யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுப் பிரிவு இதற்கு உரிமை கோரியுள்ளது. போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/16/புலிச்சின்னத்துடன்-சுவரொட்டி.html

  8. மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது: வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்க கவலை [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 15:09 ஈழம்] [செ.விசுவநாதன்] ஊழலும் பயங்கரவாதமும் உள்ள சிறிலங்காவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துபோனதால் மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது என்று வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்கவும் அனுராதபுர அதமஸ்தனாதிபதியுமான பல்லேகம சிறினிவாச தேரர் கவலை தெரிவித்துள்ளார். பல்லேகம சிறினிவாச தேரரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார் நிலைமைகள் விவாதிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியினருடனான சந்திப்பு குறித்து …

    • 6 replies
    • 1.5k views
  9. கண்டி கிதுல்கல பகுதியில் அடையாளம் தெரியாத விமானம்: மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு. கண்டி அங்கும்புரவிலுள்ள கிதுல்கல பகுதியில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று நேற்று இரவு 7 மணியளவில் வானில் பறந்துசென்றதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விளக்குகளை அணைத்துப் பறந்த இந்த விமானம் ஹெலிகொப்டரை ஒத்ததாக இருந்ததாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத விமானம் பறந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் 119 ஊடாக அவசரப் பொலிஸ் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, இவ்விடயம் அங்கும்புர பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் தலைமையகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த அங்கும்புர பொலிஸார் கிதுல்கல பி…

  10. சீன உளவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு உளவுபார்த்தது:- 01 செப்டம்பர் 2011 சீன உளவுக் கப்பல் ஒன்று கொழும்புத்துறைமுகத்தில் நங்கூரமிட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை குறித்த உளவுக் கப்பல் கண்காணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த சீன உளவுக் கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராடார்களுக்கு சிறிய ரக மீன்பிடிப் படகினைப் போன்று தோற்றமளிக்கக் கூடிய வகையில் இந்த கப்பல் அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. அந்தமான் தீவுப் பகுதியிலிருந்து இந்து சமுத்திரத்தின் வரைபடங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான பல …

  11. வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தொடர்ந்தும் வடமாகாணத்திற்கே கடமையில் அமர்த்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. வட.மாகாண சுகாதார தொண்டர்கள், வட.மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம், கிளிநாச்சி புகையிரத நிலையம் வரை சென்றது. கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு ஜனாதிபதி வருகை தரக்கூடும் எனக்கருதி குறித்த…

  12. அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பொருத்தப்பட்டு வெற்றி கரமாக செயல்படுத்தபடுகின்றது. https://thinakkural.lk/article/283958

  13. இலங்கை மோதல்-அகதிகள் வருகை அதிகரிப்பு இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மீண்டும் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. புலிகளை தாக்குவதாகக் கூறி தலைமன்னார், திரிகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர். வவுனியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 பேர் பைபர் கிளாஸ் படகு மூலம் தனுஷ்கோடியில் உள்ள நம்பிப்பாடு கடற்கரை வந்தனர். மேலும் 3 ஆண்கள் அகதிகளாக கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸார் விசாரித்த பின் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அகதிகள் கூறுகையில், எங்கள் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வருகி…

  14. இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம் முனைவர் சுரேன் ராகவன் இலங்கையின் வட மாகாணத்திற்கான ஆளுநராக, தமிழரொருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது. ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்? பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்த அவர், "இனத்…

  15. யேர்மன் தூதுவரை வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சர் ஜெயராஜ் தகவல். சிறிலங்காவுக்கான யேர்மன் தூதுவர் ஜூர்ஜென் வீர்த்தை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது: கொழும்பு ஹில்டன் நட்சத்திர விடுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை யேர்மன் தூதுவர் அண்மையில் இரவு நேரத்தில் சந்தித்துள்ளார். அச்சந்திப்பின் போது சிறிலங்கா அரசாங்கத்துக்கான நிதி உதவியை யேர்மன் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அதேபோல் சிறிலங்காவின் உள்விவகாரங்க…

  16. [Tuesday, 2011-09-13 11:26:25] பாகிஸ்தானில் டெங்கு நோயினை ஒழிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக பதினொரு நிபுணர்களை கொண்ட இலங்கை குழுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் செல்லவுள்ளது. சுமார் 10 தொடக்கம் 15 நாட்கள் பாகிஸ்தானில் தங்கவுள்ள இக்குழுவினர், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பிலான பயிற்சிகளை வழங்கவுள்ளனர். அத்துடன் இதற்கு மேலதிகமாக டெங்கு நோய் ஒழிப்புக்கான இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிராலயத்தின் ஊடாக பாகிஸ்தான் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே இத்தூக்குழு பாகிஸ்தான் செல்கின்றது. இத்தூதுக்குழுவினரின் விஜயம் தொடர்பில் கொழும்பிலு…

  17. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு ஆயர் அழைப்பு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்குக்கொள்ளுமாறு இந்திய பக்தர்களுக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா இடம்பெறுகின்றது. இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு யாழ்பானம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை திருவிழா குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலான முதல் கட்ட ஆய்வு கூட்டம் யாழ்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை கு…

  18. இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்! (புதியவன்) இலங்கை நாயகி கில்மிஷா பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார். இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது https://newuthayan.com/article/இலங்கை_நாயகி_கில்மிஷா_வந்தடைந்தார்!

  19. Posted on : 2007-07-22 தாம் முன்னர் ஏற்றுக்கொண்டதை இப்போது மறந்துவிட்டார் மஹிந்தர் தென்னிலங்கையில் இப்போது கிளப்பப்படும் பெரும் அரசியல் சித்தாந்த சர்ச்சை என்ன தெரியுமா? "பயங்கரவாதிகளான' விடுதலைப் புலிகளுக்கு இலங் கைத் தீவில் சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் இருக்கின் றது என ஒப்புக்கொண்டு, அந்தப் பகுதிகளைப் புலிகளுக் குத் தாரைவார்த்த தென்னிலங்கை அரசியல் தலைமை எது என்பதுதான் அந்தச் சர்ச்சை. இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இவ்விடயத்தில் மாறி, மாறி ஒன்றின் மீது மற்றது குற்றம் சுமத்துகின்றன. ""பயங்கரவாதத்துக்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் ஒன்று இருக்கின்றது என்பதை ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற…

  20. அம்பாறையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரச மற்றும் தனியார் காணிகள் 39 ஏக்கரை விடுவித்திருப்பதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பிற்கு அமைவாகவே விடுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்தில், இராணுவ முகாங்கள் அமைப்பதற்காகவே இந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தற்போது மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையின் கிழக்கு தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் கண்காணிப்பில், அம்பாறை மாவட்ட செயலகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. …

  21. நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, குறித்த 10 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், அரச மருந்தாளர்கள் சங்கம், மருத்துவ ஆய்வக தொழில் வல்லுநர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சேவை மற்றும்…

  22. மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 29 யூலை 2007இ 09:01 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும். மணலாற்றுப்பகுதியில…

  23. செப்டம்பரில் வெளியாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கைiயை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளோம், என கனடாவின் லிபரல் கட்சியின் தலைவர் டுரூடியு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைகூறும் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் யுத்தம் ஆறு வருடங்களுக்க முன்னர் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,சமாதானம் என்பது இன்பது இன்னமும் சாத்தியமாகவில்லை. பலர் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்கின்றனர், குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை இராணுவத்திடம் பறிகொடுத்துள்ளன. பொதுமக்கள் சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுகள் சுமத்;தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இலங்…

    • 5 replies
    • 485 views
  24. ‘ஆட்சியைத் தக்க வைப்பதில் வன்னி மக்கள் தாக்கம்’ Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:59 Comments - 0 அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும், தொடரச் செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்று (24) வழங்கப்பட்ட வரவேற்பு விழாவின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாள்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான போராட்ட நாள்களாகவுமே இருந்…

  25. சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவரும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையர் என்ற ரீதியில் ஓரணியிலிரந்து அவற்றை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவுடன் தேசிய அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அநேகமாக அழைப்பு விடுக்கக் கூடும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்தார். தேசிய ரீதியாக அதிவிசேடமான பொது விடயமொன்றை மையப்படுத்திக்கொண்டு குறித்த ஒரு காலப்பகுதிக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.