ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142628 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் நாளை காலை 8 மணிமுதல் 24 மணித்தியால வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடபடவுள்ளனர். சுகாதாரத்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இரு வாரங்களில் நிவர்த்தி செய்து தருமாரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் தற்போது இரண்டு வாரங்கள் கடந்திருந்தும் அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாகவே நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், எனினும் அவை தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ம…
-
- 1 reply
- 417 views
-
-
பாகிஸ்தானுக்கு ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது பாரியார் சகிதம் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானியின் அழைப்பையேற்றே ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது மனைவி சகிதம் பாகிஸ்தான் சென்றுள்ளார். சுக்லாலாவிலுள்ள பாகிஸ்தான் விமானப் படைத்தளத்தில் வந்திறங்கிய லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் அவரது பாரியார் மஞ்சுலிகா ஜயசூரியவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆறு நாள் விஜயத்தின் போது இலங்கை இராணுவத்தளபதி அந்நாட்டு இராணுவத்தளபதி இராணுவ தலைமை அதிகாரி மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகளைச் சந்திப்பதுடன் படைத்தலைமையகங்கள், கூட்டுப் படைத் தலைமையகங்கள், ஆயுத உற்பத்திச் சாலைகள் மற…
-
- 0 replies
- 343 views
-
-
நயினாதீவை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய முடியாது: – சிவாஜிலிங்கம் [Thursday 2015-11-19 22:00] ஆங்கிலம் மற்றும் தமிழில் நயினா தீவு என அழைக்கப்படும் யாழ் குடா நாட்டில் காணப்படும் தீவின் பெயரை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதேவேளை சிங்கள மக்கள் அத்தீவை நாக தீப என அழைப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். ஆங்கிலம் மற்றும் தமிழில் நயினா தீவு என அழைக்கப்படும் யாழ் குடா நாட்டில் காணப்படும் தீவின் பெயரை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதேவே…
-
- 7 replies
- 3k views
-
-
இலங்கைக்குள் கடற்படைத் தளபம் அமைக்க எந்த ஒரு நாட்டுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமுத்திர மற்றும் கடல் வழி பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் காலி பேச்சுவார்த்தை “ என்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் மாநாடு நேற்று காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானது. “பாரிய சமுத்திரவியல் ஒத்துழைப்பு மூலம் கடல்களை பேணி பாதுகாத்தல்: அதன் சவால்கள் மற்றும் முன்னேற்ற வழி முறைகள்”(Secure Seas through Greater Maritime Cooperation: Challenges and Way Forward) என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற வுள்ள இந்த சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் பிரத…
-
- 0 replies
- 621 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை ஒருங்கிணைந்த வகையில், ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் பங்கேற்புடன் நடத்துவது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும், தமிழ் மக்கள் பேரவையினரும் கூடி ஆராய்ந் துள்ளனர். எழுக தமிழ் எழுச்சிப்பேரணியை முன் எப்போதும் இல்லாத வகையில் உணர்வு பூர்வமாக நடத்துவது தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் இச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் ஊடகப் பிரிவு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://valampurii.lk/valampurii/content.php?id=19379&ctype=news
-
- 10 replies
- 1.4k views
-
-
மட்டு மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளபட்டுள்ள பாதுகபாப்பு கெடுபடி காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருவதாக த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நா.உ எஸ். ஜெயானந்தமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது : கிழக்கை முற்றாக மீட்டு பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அரசு பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால நிலைமை அவ்வறில்லை. கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மட்டு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மட்டு நகரிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு என்ற பெயரில் பலத்த கெடுபிடிகளை இராணுவத்தினர் பொதுமக்கள் மீது பிரயோகித்து வருகின்றனர்.…
-
- 1 reply
- 971 views
-
-
திருகோணமலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 10 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடிவடிக்கையின் போது அண்மையில் தமிழகத்தில் இருந்து திரும்பிய பத்துப் பேரை கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் அண்மையில் உள்ள இராணுவ முகாம்களிலும் காவல்நிலையங்களிலும் சென்று கைதுசெய்யப்பட்ட தமது உறவினர்களது நிலை குறித்து விசாரித்துள்ளனர். உறவினர்களது கேள்விக்கு தமது முகாம்களில் இருந்து எவ்வித சுற்றிவளைப்பும் நடாத்தப்படவில்லை எனவும் நீங்கள் குறிப்பிடுபவர்கள் யாரும் இங்கு இல்லை எனவ…
-
- 1 reply
- 689 views
-
-
2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்தது விடுதலைப் புலிகள் தான் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்ற கருத்தை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தலைவர் இரா.சம்பந்தன் எதற்காக இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்…
-
- 6 replies
- 1k views
-
-
எழுக தமிழுக்காக அல்லும் பகலும் உழைக்கும் பேரவை அன்பர்களை இழிவுபடுத்தாதீர்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள் Sep 11, 20190 தமிழ் மக்கள் பேரவையின் அன்பர்கள் இரவு பகல் பாராது எழுக தமிழ் பேரணிக்காக உழைக்கும் உழைப்பை குறுகிய கட்சி நலனுக்காக அல்லது தனிப்பட்ட நலன்களின் பொருட்டு இழிவுபடுத்தாதீர்கள் என்று தடம் புரண்ட எமது சகோதரர்களிடம் வினையமாக மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். காணொளி மூலம் வெளியிட்டுள்ள கோரிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாகும் என்றும் கட…
-
- 0 replies
- 724 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2024 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழ அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமென உறுதிகொள்ளும் புரட்சிகரநாள். தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து, எமது மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை ஒவ்வொருவரது நெஞ்சத்திலும் நிறுத்தி, தமிழ்த்தேசியம் என்ற உயிர்மைக் கருத்த…
-
-
- 5 replies
- 684 views
-
-
குமரி மீனவர்கள் கடத்தல் - இலங்கை மீண்டும் அட்டகாசம் சனிக்கிழமை, மார்ச் 8, 2008 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளதால், அங்கு பதட்டம் நிலவுகிறது. ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கிறிஸ்டியை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பரபரப்பே இன்னும் விலகாத நிலையில் நேற்று குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடத்திச் சென்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஆண்டு நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொன்றது யார் என்பதில் இன்னும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதுதவிர கடந்த ஆண்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
கோத்தாவின் உத்தரவில் தடுப்பில் கைதிகள் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, பூசா தடுப்பு முகாமில் 4 பேர் கடும் பாதுகாப்புடன் மிகச்சிறிய இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நடராசா சரவணபவன், செல்லத்துரை கிருபாகரன், தங்கவேல் நிமலன், கனகரத்தினம் ஆதித்தன் ஆகியோரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய இவர்கள் 2012ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பூசா முகாமில் 6 அடி நீளமும், 7 அடி அகலமும் கொண்ட அறையினுள்ளே 4 …
-
- 1 reply
- 1k views
-
-
மாவீரர் வாரம் – யாழில் தொடரும் விசாரணைகள் ; நேற்றும் இருவரிடம் விசாரணை! adminDecember 7, 2024 யாழ்ப்பாணத்தில். மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வார கால பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பில் நேற்றைய தினம் இரு இளைஞர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன. மாவீரர் நாள் தொடர்பில் முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்…
-
- 0 replies
- 190 views
-
-
தமிழீழம் அமையக்கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு உறுதியாக உள்ளது - தொல்.திருமாவளவன் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது. ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் அமையக் கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு மிக உறுதியாக உள்ளது. இதனை மக்கள்…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன! மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த …
-
-
- 29 replies
- 1.7k views
-
-
திருக்கேதீஸ்வர ஆலய சூழலில் புத்தர் சிலை எதற்கு? தம்புள்ளையில் மசூதி அகற்றுவது தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையில் இந்துக்களின் முக்கிய கோவிலாகக் கருதப்படும் திருக்கேதீஸ்வரவம் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில். ஒரு புத்த கோவில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கவலைகளை வெளியிட்டுள்ளது. பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலையத்துக்கு அருகில், இலங்கை அரசும், இராணுவமும் பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கில் முயற்சிகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இந்து மாமன்றம், அதற்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையிலும் திருக்கேதீஸ்…
-
- 0 replies
- 459 views
-
-
ராமாயணத்தில் சுமந்திரன் ஒரு சாதாரண பாத்திரம். ராமன் வனவாசம் போகும்போது துக்கத்துடன் தேரோட்டுவார் அந்தச் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரனும் ஒரு தேரோட்டிதான். மகாபாரதத்தில் வருகின்ற தேரோட்டி பார்த்திபனைப்போல, மிகக் கடினமான பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய தரப்பின் வெற்றிக்காக பல காரியங்களைச் செய்யும் பாத்திரம். அதனால்தான் அவருக்கு இப்பொழுது மிகத் தீவிரமான விமர்சனங்கள் வருகின்றன. பொன்வாத்துகள் தமக்காக முட்டையிடும் என்று நம்பும் தரப்புகள்தான் இந்த விமர்சனத்தை ஒரு படையணியைப் போலத் திரண்டு வைக்கின்றன. உண்மையில் இவை விமர்சனங்களே அல்ல. வெறும் குற்றச்சாட்டுகளே. இன்னும் சொல்லப்போனால் வெறும் எதிர்ப்புணர்வு மட்டுமே. காற்றிலே வாளைச் சுழற்றும் வீர வித்தை…
-
- 0 replies
- 685 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி யுள்ளது. அதிலும் குறிப்பாக தென்பகுதி அரசியல் பரப்பில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபற்றி விட்டது. இனி எங்கும் தகதகிப்பாக இருக்கும். இவை ஒருபுறமிருக்க, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதாக இருந்தால் தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்பது மறுதலிக்க முடியாத உண்மை. எனவே தமிழ் மக்கள் தங்கள் வாக்குப்பலத்தை முதன்மைப்படுத்தி தங்களுக்கான தீர்வைப் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். எனினும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தரப்புகள் இன்னமும் ஒரு நிறுதிட்ட மான முடிவுக்கு வரவில்லை. மாறாக ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் அவர்கள் சார்ந்த கட்சியினருடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்…
-
- 4 replies
- 863 views
-
-
சிறீலங்காவின் கொடிய பேரினவாதியும் அந்நாட்டின் பிரதம மந்திரியுமான ரட்னசிறி விக்கிரமநாயக்கா இஸ்ரேலில் படைத்துறை மற்றும் இராணுவ தொழில்நுட்ப உதவிகள் கேட்டல் உட்பட்ட பேச்சுக்கள் நடத்தச் சென்றுள்ளார்..! படத்தில் ரட்னசிறி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Ehud Olmert. இஸ்ரேல் சிறீலங்கா படையினருக்கு நீண்டகாலமாகவே பயிற்சி மற்றும் உளவுத்தகவல்கள் வழங்குவதுடன் அமெரிக்காவின் அனுமதியோடு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் கடற்படைக் கலங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானுடன் சிறீலங்காவின் நெருக்கம் தொடர்பில் அமெரிக்கா அதிர்ப்தி கொண்டிக்கும் நிலையில் இவ்விஜயம் நிகழ்ந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா சிரியாவில் தனது தூதரகத்தை திறந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் தொழில் மையம் அமைத்து தருவதாக கனடா வாக்குறுதி! [Friday 2015-12-18 07:00] யாழ். மாவட்டத்தில் தொழில் மையம் ஒன்ழற அமைத்து தருவதாக ககனேடிய உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை, கனேடிய உயர்ஸ்தானிகர் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். யாழ். மாவட்டத்தில் தொழில் மையம் ஒன்ழற அமைத்து தருவதாக ககனேடிய உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை, …
-
- 0 replies
- 580 views
-
-
(ஆர்.யசி) நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை…
-
- 13 replies
- 1.3k views
-
-
வன்னி கூட்டுப்படைத்தளத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை முற்பகல் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 897 views
-
-
குடாநாட்டில் ஏற்பட்டகடும் மழைகாரணமாக பலகிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானது. இம் மக்கள் இடம்பெயர்ந்து பொதுமண்டபங்களில் தங்கவேண்டியநிலைஏற்பட்டது. இவர்களுக்குதேவையான அத்தியவசிய உலர் உணவுபொருட்கள் தேவைப்பட்டது. இதனைகருத்தில் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் உதவமுன் வந்தனர். இந்தவகையில் வடமராட்சிகிழக்கு, தும்பளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியவசிய உதவிகளை ஜேர்மனியில் இருக்கும் கையல்புறோன் கந்தசாமிகோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். கந்தசஸ்டி தினத்தில் கோவிலுக்குவரும் பத்தர்கள் வழங்கியநிதியினை இம் மக்களின் உணவுதேவைக்காக வழங்கப்பட்டது. கையல்புறோன் கந்தசாமிகோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து தாயகமக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் ச…
-
- 1 reply
- 629 views
-
-
சுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை… October 19, 2019 சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் மாலை சடலமாக மீட்கப்பட்டார். பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 383 views
-
-
அரசாங்கம், இன்னுமொரு பாரிய அதிகூடுதலான வட்டிவீதத்திற்கு வர்த்தக கடன் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்ளை காரணமாக பணவீக்கம் பாரிய விதத்தில் அதிகரித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்ட.............................. தொடர்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_03.html
-
- 1 reply
- 1k views
-