Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை விதித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இரக…

  2. சிங்களவர்களுடன் தமிழ் மாணவர்கள் கிரிக்கெட் போட்டியா? பெரியார் தி.க. கண்டன போராட்ட அறிவிப்பு டெல்லியில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக விளையாட பொள்ளாச்சி கல்லூரி மாணவர்கள் 4 பேர் சென்றுள்ளனர். இதற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். Short URL: http://meenakam.com/?p=31521

  3. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள 20 ஏக்கர் தனியார் காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் காரணமாக காணிகளை அளவீடு செய்ய வந்திருந்த நில அளவையாளர் குழு, தமது நடவடிக் கையைக் கைவிட்டுச் சென்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பிர தேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணியை, இராணுவத்தின ரிடம் கையளிப்பதற்கு நேற்று திட்ட மிடப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலர் இதற்குரிய முயற்சிகளை மேற் கொண்டிருந்தார். இந்த நடவடிக்கை களை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சரும், காணி அமைச்சரு மான க.வி.விக்னேஸ்வரன் …

  4. 08 OCT, 2023 | 11:05 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு செல்கின்றது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசின் முக்கியஸ்தர்களுடன் பெய்ஜிங்கில் பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே சீனா செல்கின்றது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட தடைப்பட்ட திட்டங்களுக்கு நிதி பெறுதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் என்று பரந்துப்பட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகவே இந்த வி…

  5. புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 29 மே 2007, 16:36 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழக…

  6. அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த கார்வண்ணன்Nov 30, 2018 | 2:07 by in செய்திகள் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அவரைப் பார்வையிட்டுள்ளார். இதனை மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலர் றொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார். வெலிக்கடைச் சிறையில், அட்மிரல் விஜேகுணரத்னவை பார்வையிடச் சென்ற மகிந்த ராஜபக்ச, தண்டனைக் கைதிகள…

  7. 18 OCT, 2023 | 05:16 PM (எம்.வை.எம்.சியாம்) நாம் வழங்கிய அதிகாரத்தை கைமாற்றியுள்ளனர். இழந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் போராட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல. முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள். பழைய பகைகளை மறந்து இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக அனைவரும் இணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் உப தலைவர் சட்டத்தரணி எல்.எஸ்.என்.பெரேரா எழுதிய ஈழ மூடநம்பிக்கையின் வெளிக்கொணர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  8. முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: மாவடி ஓடைப் பாலத்திருந்து சிறீலங்காப் படைகள் பின்வாங்கல். மட்டக்களப்பு குடும்பிமலை எல்லையோரக் காட்டுப்புறத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முற்பகல் 11.20 மணியளவில் மாவடிஓடைப் பாலத்திருந்து விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள காட்டுப் பகுதிகள் நோக்கி எறிகணைச் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். ஒரு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமர்களையடுத்து சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடினர். படையினரின் முன்னேற்ற முயற்சியின் பின்னர் படையினர் ஏற்கனவே நிலைகளை அமைத்திருந்த மாவடிஓ…

  9. தமிழர்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும் - மாவை 10 ஆகஸ்ட் 2011 மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழ வேண்டும். தமிழ் மக்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும். எமது மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழவேண்டும். அரசு மேற்கொள்ளும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பதை எமது மக்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். தமிழ் மக்களின் உணர்வுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலம் தீர்ப்பு அளித்துள்ளன. இதனை இந்த அரசு உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். நேற்…

  10. முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சாவு! இருவர் காயம்! : மன்னாரில் சம்பவம் நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் தலைமன்னார் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா என்றும் இடத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது - தலைமன்னார் மேற்கு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், வெளிநாட்டிலிருந்து வந்து மன்னாரில் தங்கியிருந்த தெரிந்தவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வீதியில் உள்ள பள்ள…

  11. யாழில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை – விசாரணைகள் ஆரம்பம் யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரசிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். போதனா வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் அண்மைக்காலங்களில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு பணம் பெற்றுள்ளார். குறித்த நபரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்க…

  12. 27 OCT, 2023 | 03:03 PM விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர். இந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லாவகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியை சேகரித்தாலும் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் க…

  13. சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி தான் தோன்றித்தனமாகச் செயற்படும் ஜனாதிபதி நாட்டை இராணுவமயப்படுத்த முயற்சிக்கிறார்! ஜயலத் ஜயவர்தன. [Tuesday, 2011-08-16 12:35:01] நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டுகிறார் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன. நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட முப்படையினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: அத்துடன், அவர் சர்வாதிகாரத்தை…

  14. தாம் அழைக்கப்பட்ட நிகழ்வுக்கு மஹிந்த ராஜபக்சவையும் அழைத்தமை தொடர்பில் சந்திரிக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமரநாயக்கவுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தமது தந்தையான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் 55வது வருட நாடாளுமன்ற அரசியல் தொடர்பிலான நிகழ்வுக்கே விதுர விக்கிரமநாயக்க, சந்திரிக்காவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வு நாளை 10ஆம் திகதி ஹொரனையில் இடம்பெறவுள்ளது. இதில் சந்திரிக்கா, ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரை அழைக்க விதுர விக்கிரமநாயக்க திட்டமிட்டிருந்தார். இது தொடர்பான அழைப்பு கிடைத்ததும் தொலைபேசியில் விதுரவை தொடர்பு கொண்ட சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்சவுக்கும் முன்வரிசையில் ஆசனமிடப்படுவது ஏற்றுக்கொள்ள …

    • 0 replies
    • 348 views
  15. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்கும் யோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தான் கலந்து கொள்ளவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடியில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிம் தனது கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) சில வாரங்களுக்கு முன்னர் கூடி தீர்ம…

  16. ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது : வரதராஜப் பெருமாள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 1983-87 காலப்பகுதியில் தமிழ் கட்சிகளும் அதன் தலைவர்களும் புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்தியத் தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பு இருந்ததை …

  17. Aug 22, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / நவம்பர் 15 இறுதி அறிக்கை - சனல் 4 காணொளி தொடர்பிலும் விசாரணை! சனல் 4 ஒளிபரப்பிய இரு காணொளிகள் தொடர்பான விசாரணைப் பகுதிகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இணைத்துக் கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நவம்பர் 15 ம் திகதி மஹிந்தவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையில் சனல் 4 வெளியிட்ட காணொளிகள் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என பல்தரப்பினராலும் சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு வலியுறுத்தப்பட…

    • 4 replies
    • 724 views
  18. எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அந்­தக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் வித­மா­கவே கட்­சிக்குள் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய வரு­கி­றது. இது தொடர்­பாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரிய வரு­வ­தா­வது, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்­மன்­பில, பிர­சன்ன ரண­துங்க உட்­ப…

    • 0 replies
    • 388 views
  19. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று காலை இராணுவ புலனாய்வாளர்கள் தற்கொலை குண்டுதாரியொருவரின் வீட்டிற்கு சென்றனர் - முன்னாள் பொலிஸ் அதிகாரி ரவி செனிவிரட்ண ஏபிசிக்கு பரபரப்பு தகவல் Published By: RAJEEBAN 16 NOV, 2023 | 02:55 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் முன்னைய அரசாங்கம் சிதைத்தது என முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரட்ண ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏபிசி தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் முன்னாள் அரசாங்கம் அரசியல் நோக்கங்களிற்காக பயங்கரவாத குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி …

  20. நாடு திரும்பும் வரை சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை மூடுமாறு ஜனாதிபதி உத்தரவு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம் கொழும்பில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. தாய்லாந்திற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு செல்லும் ஜனாதிபதி, அங்கு ஒருவார காலம் தங்கியிருப்பார். இந்நிலையில் அவர் மீண்டும் வரும்வரை சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை மூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோகண லக்ஷ்மன் பியதாச, “கட்சி தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டின் இறுதியில் வழங்கப்படும் விடுமுறை காரணமாகவே இந்நடவடிக்கை இட…

  21. 26.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

    • 1 reply
    • 1.5k views
  22. தமிழர்களின் இறையாண்மை ஏகாதிபத்தியவாதிகளால் பறிக்கப்பட்டது: ஆதித்தன் ஜெயபாலன் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 04:27.02 PM GMT ] தமிழ் இயக்கத்தின் வரலாற்றை சுருக்கமாக விபரிக்க முடியுமா?. 2009 ஆம் ஆண்டில் இருந்து தமிழீழத்தில் உள்ள தமிழ் இயக்கத்தின் தற்போதை நிலைமை என்ன? இலங்கைத் தமிழர்களின் இறையாண்மையானது ஏகாதிபத்தியவாதிகளால் பறிக்கப்பட்டது. முதலில் 1619 ஆம் ஆண்டு போர்த்துகேயரால் தமிழர்களின் இறையாண்மை பறிக்கப்பட்டதுடன் பின்னர் டச்சுகாரர்கள் இறுதியாக பிரிட்டிஷார் தமிழர்களின் இறையாண்மையை பறித்தனர். கிழக்கு குர்திஷ்தான் தொடர்பிலான ரோஜாவா அறிக்கை குறித்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர் ஆதித்தன் ஜெயபாலனிடம் ஊடகம் ஒன்று நேர்காணல் நடத்தியுள்ளது. இந்த நேர்காணலில் தற்…

  23. யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு: ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் ரவீந்திரன் (வயது – 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய அவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். ஆரம்ப கட்டத்தில் அவர் வைத்தியரை நாடவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மயங்கிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற…

  24. 08 DEC, 2023 | 05:43 PM (எம்.மனோசித்ரா) இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா யோசனையொன்றை முன்வைத்துள்ளது. எனினும் இது தொடர்பில் உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் கடந்த ஆண்டு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வரையறுக்கப்பட்டளவில் அனுமதி…

  25. துணை இராணுவக் குழுவினரிடம் உள்ளுராட்சி சபைகளை ஒப்படைப்பதற்காக புதிய சட்டத் திருத்தம். கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைகளை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடம் ஒப்படைக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் ஏற்கெனவே 9 உள்ளுராட்சி சபைகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் இரத்துச் செய்யப்பட உள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது: உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பி…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.