ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142858 topics in this forum
-
மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பு? நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலு…
-
- 1 reply
- 140 views
-
-
யாழில் வாள்வெட்டு குமுவின் பிரதான சந்தேக நபர் கைது! யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் பிரதான சந்தேக நபர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் தேடப்பட்டு வந்தார். அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் …
-
- 1 reply
- 174 views
-
-
செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21 சதவீதத்தால் குறைவு நாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21 சதவீதத்தால் குறைந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருகைத்த தந்துள்ளனர். எனினும், செப்டம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வரவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வலுவான மறுமலர்ச்சிக்கான சுற்றுலா…
-
- 0 replies
- 153 views
-
-
கோட்டாவிற்கு வக்காலத்து வாங்கி தலைமறைவாகிய சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் – உதயகுமார் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவாகிய மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்தார். நேற்று தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பேசிய அவர், விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்பனவற்றால் மக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும் மூன்று வேளை உண்டு வாழ்ந்த மக்கள், தமது உணவு வேளையை சுருக்கியுள்ளனர் என்றும் பிள்ளைகளை பாடசாலைகளில் மயங்கி விழும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களுக்கும் வாழ்க…
-
- 0 replies
- 112 views
-
-
யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய நடவடிக்கை! யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். கோட்டை பகுதியை நேற்றைய தினம் பார்வையிட்ட மாநகர முதல்வர் அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்தார். யாழ். கோட்டை பகுதி சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மற்றும் போதை பொருள் பாவனை மையமாக மாறிவருகின்றதோடு ச…
-
- 1 reply
- 194 views
-
-
யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். தற்போது நாடு வறுமைகோட்டின் கீழ் உள்ளது அனைவரும் அறிந்த விடயமே இதனால் பல்வேறு நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவும் தங்களால் முடிந்த உதவியை இலங்கைக்கு நிவாரணபொதி அனுப்புதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதைனைத்தொடர்ந்து யாழில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை யாழிற்கு வந்து பிரபல பாடசாலையான யாழ். இந்துக்கல்லூரியில் ஹிந்து மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி…
-
- 50 replies
- 3.7k views
- 1 follower
-
-
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச பொறிமுறை உள்ளீர்க்கப்பட வேண்டும் - இணை அனுசரணை நாடுகளை கோருகிறார் சம்பந்தன் By VISHNU 02 OCT, 2022 | 03:41 PM ஆர்.ராம் இலங்கையில் இழைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துடான பொறிமுறையொன்றை புதிய பிரேரணையில் உள்ளீர்க்க வேண்டுமென்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூற…
-
- 2 replies
- 439 views
- 2 followers
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 03:06 PM ( எம்.நியூட்டன்) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது குழப்பத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியான தமிழ்தேசிய மக்கள் முன்னணி எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகர…
-
- 43 replies
- 3k views
- 1 follower
-
-
யாழில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலைக்கழக மாணவன் கைது! By VISHNU 02 OCT, 2022 | 07:48 PM யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் சனிக்கிழமை (1) பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஊவா பல்கலை கழக மாணவனை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவனின் உடைமையில் இருந்து 750 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளதாகவும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரு…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
குருநாகல் வர்த்தகர் கொலை : சந்தேக நபர் கைது By VISHNU 02 OCT, 2022 | 09:57 PM (எம்.வை.எம்.சியாம்) குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28 ஆம் திகதி குருநாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டு அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சீ.…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
பொலிஸாரின் துப்பாக்கி குறி தவறியதில் பஸ்ஸில் பயணித்த பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன ? By VISHNU 02 OCT, 2022 | 09:54 PM (எம்.எப்.எம்.பஸீர்) கம்பஹா - தங்கோவிட்ட பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கொள்ளைக் கோஷ்டியொன்றினை இலக்கு வைத்து பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டின் போது, இலக்குத் தவறிய துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று காரணமாக பாதையில் பயணித்த இ.போ.ச. பயணிகள் பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி மாவட்டம், ஹப்புருகல -வன்னிகஹவத்தையைச் சேர்ந்த இரேஷா சியாமலி எனும் 29 வயது பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தின் போது, பொலிஸாரின் துப்பா…
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது! யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார்…
-
- 14 replies
- 695 views
- 2 followers
-
-
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி By VISHNU 25 SEP, 2022 | 11:25 AM நேர்காணல்: ஆர்.ராம் “நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று அன்ரன் பாலசிங்கம் 2002இல் என்னை சந்தித்தபோது கூறினார்” “ரஜீவ்-மேனன் பாடசாலையின் இராஜதந்திர அணுகுமுறை பின்னடைவுகளைச் சந்தித்துவிட்ட நிலையில் தொப்புள்கொடி உறவு என்ற விடயத்தினை இந்தியா தனது வெளிவிவகார மூலோபாயத்தினுள் உள்ளீர்க்க வேண்டும்” “தமிழ் பேசும் மக்கள் என்ற மாலையில் மூன்று மணிகளான தமிழர்கள், முஸ்லிம்கள், மலைய மக்…
-
- 5 replies
- 637 views
- 1 follower
-
-
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திருகோணமலைக்கு விஜயம்! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த குறைந்த வருமானம் ஈட்டும் 200 குடும்பங்களுக்கான உலர் உணவு உதவி வழங்கும் நீகழ்வில் கலந்துகொண்டு இந்திய உதவித்தொகை மூலம் வழங்கப்பட்ட குறித்த பொருற்களை வழங்கிவைத்தார். குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1302355
-
- 3 replies
- 773 views
- 1 follower
-
-
மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி இரகசியமாக நிறைவேற்றுவார் – வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரகசியமான முறையிலாவது நிறைவேற்றுவார் என வாசுதேவ நாணயக்கார சாடியுள்ளார். ஜெனிவா விவகாரத்தில் அவரது வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்பதனால் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து நாடாளுமன்ற விவாதத்தை கோரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு, அவை நிறைவேற்றப்பட்ட போதும் இதனால் எவ்வித பயனும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள…
-
- 2 replies
- 382 views
-
-
பொலிஸார் துப்பாக்கிச் சூடு – பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு ! கம்பஹா தங்கொவிட்ட பிரதேசத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு நேற்று இரவு பிரவேசித்த சிலர், அங்கு கொள்ளையிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்போது அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்…
-
- 1 reply
- 233 views
-
-
வல்வெட்டித்துறையில் கணவனும் மனைவியும் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று (01-10-2022) அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர். வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின…
-
- 4 replies
- 335 views
-
-
கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது. கோட்டாபய தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்திலேல் அதிகபட்சமாக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை இதில் தெரியவந்துள்ளது. இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளில், ஐந்துஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்காக 254 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆலோசனைகள் மற்று…
-
- 0 replies
- 179 views
-
-
பின்வாங்கினார் ஜனாதிபதி ரணில்: வர்த்தமானி வெளியீடு கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (01) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசியச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ், கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி வெளியிட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடன வர்த்தமானியே இரத்துச் செய்யப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பி…
-
- 1 reply
- 204 views
-
-
ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு வருகிறது ; சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்துமாறு உறுப்புநாடுகளிடம் சுமந்திரன் வலியுறுத்தல் By T. Saranya 01 Oct, 2022 | 08:34 PM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் வலுப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான…
-
- 0 replies
- 153 views
-
-
இலங்கை மலையக தமிழர்கள்: 200 வருடங்களில் "தோட்டக்காட்டான்" பெயரே மிஞ்சியது ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''எங்களுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லை. என்னதான் இருந்தாலும் தோட்டக்காட்டான் என்ற பெயரைத்தான் வாங்கியுள்ளோம். பிள்ளைகள் போறதுக்கு பாடசாலை இல்லை. எங்களுக்கும் படிக்க வசதி இல்லை. சரி பிள்ளைகளை படிக்க வைக்கலாம்னு பார்த்தால், அதுக்கும் வசதி இல்லை" - கவலைப்படும் இலங்கை மலையக தமிழர்களின் குமுறல்கள் இந்த வரிகள். "முன்னேற்றம் ஒன்று இருந்தால் தானே பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் முடியும். யார் போனாலும் தோட்டக்காட்டன்னுதான் அழைக்கிறாங்க. அந்த ப…
-
- 5 replies
- 564 views
- 1 follower
-
-
நீதிமன்றம் சென்ற சரத் பொன்சேகா கொழும்பின் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர். சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரச இரகசிய சட்டமூலத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அந்த சட்டமூலத்தின் கீழ் இவ்வாறான உத்தரவ…
-
- 3 replies
- 503 views
-
-
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இ…
-
- 8 replies
- 470 views
-
-
இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் - நிபந்தனைகளுடன் பிணை! இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (30) கல்முனை நீதிமன்ற நீதிவான் எ…
-
- 2 replies
- 387 views
-
-
மட்டக்களப்பு மக்களை எண்ணி நான் பெருமைகொள்கிறேன் – இந்திய தூதுவர் காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையும் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்தார். காந்தி ஜெயந்தி தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதன் சிறப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது. அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தி தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலையருகில் நடைபெற்றது. காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிக…
-
- 8 replies
- 894 views
- 1 follower
-