ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
வவுனியாவில் உள்ள மெனிக் பாம் முகாமில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டதாக அரசினால் தெரிவிக்கப்பட்ட 10 ஆயிரம் பேரில் அரைப் பகுதியினர் தமது சொந்த மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்தும் இடைத் தங்கல் முகாம்களிலேயே வைக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 422 views
-
-
மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : வர்த்தக, கைத்தொழில் அமைச்சு நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வகை ஒன்று தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் வெளியாகியதையடுத்து இது பரவலாக பேச்பட்டு வருகின்றது. பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று ந…
-
- 1 reply
- 591 views
-
-
கனடாவில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' வார ஏடு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு 733 பேர்ச்மவுண் வீதி, ஸ்காபறோவில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (25.09.09) பிற்பகல் 5:30 நிமிடமளவில் நடைபெறவுள்ளது. மங்கள விளக்கேற்றலுடன் தொடங்கும் நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்புரை என்பவற்றையடுத்து சட்டவாளர் பாபரா ஜக்மன் மற்றும் பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரால் வார ஏடு வெளியிடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆய்வுரை, கருத்துரை என்பனவும் இடம்பெறும். நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வார ஏட்டின் ஆசிரியர் குழு சார்பாக ச.றெஜி அழைப்பு விடுத்திருக்கின்றார். தொலைபேசி இலக்கம்: (01) 416 826 8661 …
-
- 0 replies
- 593 views
-
-
நாடளாவிய ரீதியில்... ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு! நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர் தெரிவித்துள்ளார். கொரோனா விசேட கொடுப்பனவான 7 ஆயிரத்து 500 ரூபாயை மீள வழங்க வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2021/1240560
-
- 0 replies
- 182 views
-
-
கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதுவரை உடனடியாக வெளியேற்றுமாறு அரசை கோரியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் செயலாளர் விமல் வீரவன்ச, நோர்வேயுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் சிறிலங்கா துண்டித்துக்கொள்வதுடன், நோர்வேயின் தூதரகத்தையும் மூடிவிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே ஆதரவளித்தது என்பதும், சீனாவில் இருந்து எரித்திரியா ஊடாக சொல்ஹெய்மின் ஆதரவுடன் ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்த அவர், தொடக்கம் முதலே சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சம்மதத்தையிட்டு தான் சந்தேகித்ததாகவும் சுட்டிக்காட்டினார். விமல் வீரவன்ச நேற்று புதன்கிழமை நட…
-
- 0 replies
- 679 views
-
-
கூட்டுப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், அதனை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியி
-
- 6 replies
- 2.4k views
-
-
காணொளி : புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கே.பத்மநாதனின் நேர்காணல் ... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9485:2013-10-05-17-38-43&catid=1:latest-news&Itemid=18
-
- 2 replies
- 579 views
-
-
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்தியா- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு கட்டமாகவே, இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது. இந்தியக் கடற்படையின் டோனியர் ரக ஆழ்கடல் கண்காணிப்பு விமானம், சிறிலங்கா கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் பயிற்சிகளை அளிக்கவுள்ளது. இந்திய கடற்படை விமானம் ஒன்று சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக, கட்டுநாயக்கவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். http://www.puthinappalakai.net/2017/06/20/news/24046
-
- 5 replies
- 461 views
-
-
காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை – தமிழிசை செளந்தர்ராஜன் காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா்.பன்னெடுங்காலத்துக்கு முன்பு காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைமுறையில் இருந்து, பின்னர் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில், அதை மீண்டும் செயற்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். காரைக்காலில் இருந்து இலங்…
-
- 0 replies
- 321 views
-
-
ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் மற்றும்,போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளுக்கான இயக்குனர் ராதிகா குமாரசுவாமி அவர்கள், வரும் மாதம் நவம்பர் 8ம் திகதியில் தனது விசேட பிரதி நிதியாக மேஜர் ஜெனெரல் கமோட் அவர்களை இலங்கை அனுப்பவுள்ளார். தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பான நலன்களை பார்வையிடுவதற்காகவே இவர் செல்கின்றாராம். கடந்த மாதம் கோத்தபாய, ரோகித போகொல்லாம,ரட்னசிறி ஆகியோரை சந்தித்த குமாரசுவாமி இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துறையாடியதாகவும் அதன் பின்னரான இன்னெர் சிற்றி பிரெஸ் இன் கேள்விக்கு பதிலளிக்கையில் தாம் ஒரு பிரதினிதியினை அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மே 17 2009 இற்கு முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்த போது சிறுவர்கள் அ…
-
- 1 reply
- 606 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக பிளவுபடாமல் ஒன்றுமையாக செயல்பட்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்களின் வெற்றியைக் குழப்புவதற்கும், சிதறடிப்பதற்கும் சில தரப்பினர் முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு இடமளிக்கப்படக்கூடாது எனவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார். அத்துடன், என்ன இலட்சியத்திற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டோ அதனை வெற்றிகரமாக செய்துமுடிக்க வேண்டும் எனவும் மன்னார் ஆயர் கோரியுள்ளார். இதுகுறித்து மன்னார் ஆயர் எமது செய்திப் பிரிவிற்கு வழங்கிய செவ்வியில், http://tamilworldtoday.com/home
-
- 16 replies
- 890 views
-
-
13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழ…
-
- 0 replies
- 265 views
-
-
சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது? ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம் புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின் ‘பாதுகாவலன்’ வாரஏடு ஆசியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. ‘சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மகாநாயக்க தேரர்களிடமே நாட்டை ஒப்படைத்து விடுங்கள் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது. சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது 1920இல் இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் பௌத்தகுருமாரின் ஆதிக…
-
- 0 replies
- 467 views
-
-
கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் சுவாசிலாந்து அரச குழுவை வரவேற்க அந்த நாட்டு வழக்கப்படி, பாடசாலை மாணவிகளை மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடனமாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தி வருவது, பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா கல்வி அமைச்சு குளியாப்பிட்டியில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கே, இந்த நடனத்துக்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இதில் பல நடனங்கள், சுவாசிலாந்து கலாசாரப்படி – அரைநிர்வாணமாக ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடனங்களுக்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கல்வி அமைச்சுக்கு உரிமையில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போன்ற நாடுகளில் இது ஏற்…
-
- 49 replies
- 3.6k views
-
-
மன்னார் இலங்கைத்தீவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது வழமை; இலங்கைக்கு வருகை தந்த சிங்களவர்களும், தமிழர்களும், அராபியர்களும் ஒல்லாந்தர், போர்த்துகீசர், ஆங்கிலேயர் எனப் பலரும் மன்னார் மார்க்கமாகவே இலங்கைக்குள் நுழைந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மாந்தை என்றும் குறித்த பிரதேசம் அழைக்கப்படுகின்றது. மன்னார் தீவுப்பிரதேச நிலப்பரப்பில் எருக்கலம்பிட்டி தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு பிரதேசமே கரிசல் என்றும் வழங்கப்படுகின்றது, இங்கு பெரிய கரிசல், சின்னக் கரிசல் என்று இரண்டு கிராமங்கள் இருக்கின்றன, இங்கு கிஸிற்த்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக பல நூற்றாண்டு கா…
-
- 0 replies
- 605 views
-
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் பெவன் தெரிவித்துள்ளார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்ற ரீதியில் இந்தியா அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ளதாகவும் எனவே அமர்வுகளில் பங்கேற்கபது முக்கியமானது என பிரித்தானியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா எனத் தீர்மானிக்கும் உரிமை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.…
-
- 1 reply
- 439 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைதல் குறித்து இலங்கையில் கண்காணிக்கப்படுகின்றது – அமெரிக்கா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் முழு அளவில் வழிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் ; குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்க…
-
- 0 replies
- 422 views
-
-
மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு! மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனை உள்படுத்தவேண்டுமாயின் மேல் நீதிமன்றை நாடுமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் அறிவுறுத்தினார். கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதியளித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியது. முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல…
-
- 0 replies
- 276 views
-
-
சிறீலங்கா அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்தபோது மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த விசாரணைகளின் போது பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை குழுக்கள் மற்றும் சாட்சிகள் சமூகமளித்து தமது கருத்துக்களை கூறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசினாலும், அதன் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 14 மற்றும் 15 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் சிறீலங்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன…
-
- 5 replies
- 1.1k views
-
-
சபையில் எம்.பிக்களுக்கு சீனாவின் மடிக்கணினிகள் இந்த வாரம் பொருத்தப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற அவையில், இந்த வாரத்தில் இருந்து இணைய வசதிகளுடன் இந்த மடிக் கணினிகளைப் பயன்படுத்த முடியும் என்று, நாடாளுமன்ற நிதிப் பணிப்பாளர் ஜெயசாந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவையில் உள்ள உறுப்பினர்களின் ஆசனங்களில் இந்த மடிக்கணினிகள் பொருத்தப்படும். இதற்காகச் சீனா அன்பளிப்புச் செய்த 265 கணினிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந…
-
- 3 replies
- 373 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தை பிணையில் விடுவிப்பதில் தமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று சிறிலங்கா சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து திசநாயகம் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில் திசநாயகத்திற்கு பிணை வழங்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2006 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 2007 ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கில் மாத ஏடு ஒன்றை வெளியிட்டது, அச்சிட்டது, கட்டுரைகளைச் செப்பனிட்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டு…
-
- 0 replies
- 355 views
-
-
மகிந்தவை ஆதரிக்க ஆதாவுல்லா கோரிக்கை சிறிலங்காவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைப்பவர்கள் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என நீர் விநியோக மற்றும் நீரியல் வள அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலைகொண்டிருந்த தீவிரவாததை ஒழிப்பதற்கு முனைந்த அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு இந்நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்கும் காலம் தற்போது உருவாகியுள்ளதாக அதாவுல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றிலே இதனை அவர் தெரிவித்துள்ளார். தமிழ் ஆயுததாரிகளுடன் திரைமறைவில் உறவுகளை வைத்துக்கொண்டு அராஜக அரசியல் நடாத்திவரும் அதாவுல்லா அவர்கள் முஸ்லிம் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை கருத்தில் கொள்ளா…
-
- 0 replies
- 523 views
-
-
'ரோகிஞ்சா' முஸ்லிம்களுக்கு விடுதலை ( காணொளி இணைப்பு) இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததைத் தெடர்ந்தே நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்த ரோகிஞ்சா முஸ்லிம் குழந்தைகள…
-
- 0 replies
- 182 views
-
-
அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். நேற்று (13.12.13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும…
-
- 16 replies
- 1.2k views
-
-
எம்.ஜி.ஆரும் ஈழமும் – கவிஞர் புலமைப்பித்தனின் செவ்வி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாபெரும் உதவிகளை செய்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்ததினமான இன்று மீனகம் வலைத்தளத்துடன் கவிஞர் புலமைப்பித்தன் பகிர்ந்து கொண்ட நினைவலைகள். ஆடியோ கேட்க: http://meenakam.com/?p=3432'>http://meenakam.com/?p=3432 விரைவில் எழுத்து வடிவில்... http://meenakam.com/
-
- 1 reply
- 1k views
-