ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சுவிஸில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து வாக்களிக்கின்றனர் சுவிஸ் நாடு தழுவிய வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து பெருவாரியாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 23/24.01.2010 இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. Basel,Bern.zürich மாநிலத்திலும் மக்கள் ஓரளவு கலந்து கொண்டுள்ளார்கள், ஆனால் 24.01.2010 இன்றும் பெருமளவில் மக்கள் வாக்களிக்க வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/5230/54/.aspx
-
- 1 reply
- 533 views
-
-
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அபாய நிலைமையை அமைச்சரவைக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தாமல் அவற்றை வெளிவிவகார அமைச்சர் மூடி மறைக்கின்றார் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக் காட்டினார். ஜெனிவாத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்படும் சவால்கள் மற்றும் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்…
-
- 0 replies
- 447 views
-
-
போர்க்குற்ற விசாரணை: ஜகத் ஜயசூரிய மீது வழக்குத் தாக்கல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சுமத்தி, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது பிரேஸில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஜகத் ஜயசூரிய மீது தென் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனவென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/போர்க்குற்ற-விசாரணை-ஜகத்-ஜயசூரிய-மீது-வழக்குத்-தாக்கல்/150-203002
-
- 4 replies
- 1.4k views
-
-
'எனது தேர்தல் வெற்றி சூறையாடப்பட்டுள்ளது. எனது வாழ்வை, அரசியல் வாழ்வை இல்லாதொழிக்க சிறிலங்கா அரசு திட்டமிடுகின்றது' என அடுக்கடுக்காக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் சரத் பொன்சேகா. சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே இக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எதிர்க்ட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சரத் பொன்சேகா. அத்துடன் சிறிலங்கா நாட்டை விட்டு தான் வெளியேறப் போவதில்லை என்றும் உறுதிபட அவர் தெரிவித்தார். 'நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயார். எனக்கு வாக்களித்தவர்களை ஏமாற்ற நான் தயாரில்லை' என்றும் அவர் தெரிவித்தார். தனது செயலகம் மூடப்பட்டு விட்டதாகவும், 23 உதவிப்…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டனர். http://www.onli…
-
- 0 replies
- 299 views
-
-
சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா? ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவரது ஜெனரல் தரத்தை ரத்துச் செய்து, சாதாரண இராணுவச் சிப்பாய் நிலைக்கு கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேக்கா இராணுவ தளபதியாகவும் கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியாகவும் பணியாற்றிய போது, எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தவிர சரத் பொன்சேக்காவின் பிரஜா உரிம…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார். இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்…
-
- 0 replies
- 181 views
-
-
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இரா…
-
- 6 replies
- 787 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனக்குழுவினருக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில், சீனக் குழுவொன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளது. இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத் தற்காலிகப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன http://newuthayan.com/story/27862.html
-
- 0 replies
- 122 views
-
-
இந்தியா விடுத்துள்ள அறிக்கை மற்றும் தொடர்ச்சியான அழைப்புகளை வரவேற்கின்றோம் – கூட்டமைப்பு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.இந்நிலையில் அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக இந்தியா விடுத்துள்ள அறிக்கை மற்றும் தொடர்ச்சியான அழைப்புகளை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், சமத்துவத்துடனும், நீதியுடனும் வாழ, 13வது திருத்தத்தை அ…
-
- 4 replies
- 660 views
-
-
அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக மஹிந்த தோல்வியடைவதை பார்க்க அப்பா விரும்பவில்லை அவருக்காக பாடுபட்டார்; இருவருக்குமிடையிலான நட்புறவு குலைவதற்கு பஷில் ராஜபக் ஷவே காரணமானார் 'ஜனாதிபதி அப்பா' நூலில் சத்துரிகா சிறிசேன ஆதங்கம் (எம்.எம்.மின்ஹாஜ்) மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அப்பா வுக்கும் இடையிலான நட்புறவை முறியடிக்கும் வகையில் பஷில் ராஜபக் ஷவே செயற் பட்டார். அவர் தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிர மடைந்தது. கட்சியின் உரிமையாளர் போல் எனது அப்பாவை கட்சிக்கு தேவை யற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். அப்பாவின் மீதான பஷில் ராஜபக் ஷ வின் ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலை யிட்டு அதனை தீர்க்க மஹிந்த ராஜபக் ஷ முன்வரவில்ல…
-
- 0 replies
- 582 views
-
-
இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – புதிய விலை விபரம் இதோ! வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 155,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 143,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271928
-
- 1 reply
- 190 views
-
-
புதிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்? நாடாளுமன்றத் தேர்தல் முடிபடைந்த பின்னர் புதிய அரசுடன் உயர்மட்டப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆவலாக உள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இடை நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் இலங்கை அரசுடன் உயர் மட்டப்பேச்சுக்களை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஆவலாக உள்ளது. எனினும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அது மேற்கொள்ளப்படும். வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் ஐரோப் பிய ஒன்றியம் இலங்கைக்கு விதித்த நிபந்தனைகள் தொடர்பில் இந்தப் பேச்சுக்களின் போது ஆராயப்படும். ஐரோப்பிய ஒ…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளை படுகொலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய திட்டம் வகுத்ததோ, அதையொத்த திட்டத்துடன், பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் [balochistan] மாகாணத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலூச் [baloch] செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்வதற்கு பாகிஸ்தான் இாணுவம் பாகிஸ்தான் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளமை தொடர்பில் தனது அதிருப்தியை பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் கலாநிதி நசீர் எஸ் பாற்றி வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பில் இரு வெவ்வேறு திட்ட வரைபுகள், அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையளிக்கப்படவுள்ளதாகவும், மத அமைப்புக்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அயர்லாந்துத் திட்டம் மற்றும் விடுதலைப் புலிகளை அழித்தொ…
-
- 2 replies
- 518 views
-
-
யாழ்ப்பாண மாம்பழத்தைக் காதலித்த சந்திரிகா! ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். தன்னுடன் சந்திரிகா ஒருமுறை பேசியிருந்தபோதே இந்த விடயத்தினைத் தெரிவித்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தக…
-
- 6 replies
- 983 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பை... கூட்டமைப்பு, நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்து! ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காக பேச வேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஜனாதிபதியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்…
-
- 0 replies
- 167 views
-
-
தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது: சிறிலங்கா அமைச்சர் இந்தியா எங்களுக்கு ஆதரவாக உள்ளது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையிலான தமிழகமும் எங்களுடன் உள்ளது, எனவே மனித உரிமை பிரச்சனைகளை காட்டி மேற்குலகம் அளிக்கும் அழுத்தங்களை நாங்கள் சமாளிப்போம் என்று சிறிலங்க சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டிய செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சில மேற்குலக நாடுகள் (மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக) எமக்கு எதிராக செயற்பட்டுவருகின்றன. இவ…
-
- 4 replies
- 471 views
-
-
பண்டிகைக் காலத்தில்... அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு, தட்டுப்பாடு? பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை சந்தைக்கு விநியோகிக்…
-
- 0 replies
- 142 views
-
-
மன்னார் புதைகுழியில் உடல்கள் நீண்ட காலத்திற்கு முன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் : அஜித் ரோஹண மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், இதில் புதைக்கப்பட்டிருப்போர் கொடிய முறையில் இறந்திருக்க வேண்டும். எனினும், இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எனினும், தனிப்பட்ட பலரின் கருத்துகளினால் இவை வேறு விதமான வகையி…
-
- 4 replies
- 750 views
-
-
ஐ.நா. பிரகடனத்திற்கு ஏற்பவே செயற்படுவோம் பொது எதிரணியின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் (எம்.எம்.மின்ஹாஜ்) மிரிஹான பொலிஸுக்கு அருகாமை யில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி யுடன் மியன்மார் அகதிகள் முகாமொன்று நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் முகாமில் உள்ளவர்கள் சட்டவிரோதமாக தனிவீடுகள் அமைத்து இலங்கையர்களாக வாழ்கின்றனர். இவர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது என்று கூட்டு எதிரணியினர் நேற்று சபையில் கேள்வி எழுப்பினர். தஞ்சம் புகுந்துள்ள அகதிகளில் குற்றம் இழைத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.எனினும் மியன்மார் அரசாங்கம் இது தொடர்பில் எ…
-
- 0 replies
- 413 views
-
-
அரசாங்கத்திற்கு... அதிகரிக்கும், நெருக்கடி – சுயாதீனமாக செயற்பட தயார் என அறிவித்தது வாசுதேவ தரப்பு! நாடாளுமன்றில் எதிர்வரும் 5ஆம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இதுதொடர்பாக கொழும்பில் உள்ள மூன்று இடங்களில் பேச்சுவார்த…
-
- 0 replies
- 231 views
-
-
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! [Tuesday, 2014-02-11 17:20:46] கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஜெயக்குமார் முனீஸ்வரகுமார் என்ற குறித்த நபர் கனடாவில் புலிகள் அமைப்புக்கு புலம்பெயர் தமிழர்களிடம் நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபர் தடுத்து வ…
-
- 0 replies
- 480 views
-
-
தென்மராட்சித் தேங்காய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி Share தென்மராட்சி பிரதேச தேங்காய்களுக்கு வெளிநாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகளிலிருந்து வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் இலாபமடைகின்றனர். ஆனால் உள்ளூர் மக்கள் சந்தைகளில் அதிகரித்த விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சந்தைகளில் ஒ…
-
- 4 replies
- 459 views
- 1 follower
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி... மீண்டும், தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்றார். …
-
- 8 replies
- 552 views
-
-
காணாமற்போனவர்கள் தொடர்பாக, சுதந்திரமான, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா சென்று திரும்பியுள்ள அவர், தனது பயணம் குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிடுகையில், ஜெனிவாவில் அனைத்துலக மனிதஉரிமை அமைப்புக்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்களின் நிலைமைகள் குறித்தும், காணாமற்போனவர்கள் தொடர்பாக உள்ளூர் விசாரணை என்ற பெயரில் நடக்கும் கண்துடைப்பு நடவடிக்கை தொடர்பாகவும், விபரமாக எடுத்துக் கூறியுள்ளேன். வடக்கு மாகாணசபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுக்கு அமைய, அதன் பிரதிநிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜெனி…
-
- 0 replies
- 238 views
-