Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’ NOV 26, 2014 | 12:21by நித்தியபாரதிin சிறப்பு செய்திகள் டொலருக்கு எதிராக யப்பான் நாணயமான யென் [Yen] வீழ்ச்சியடைந்துள்ளதானது ஆசியாவின் நாணய ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார். யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைவதன் மூலம் சிறிலங்காவால் யென் நாணயப் பெறுமதியில் வழங்கப்பட வேண்டிய கடன்களை மீள வழங்குதல் மற்றும் யப்பானிய உற்பத்திப் பொருட்களை மலிவான விலையில் இறக்குமதி செய்தல் போன்ற குறுகிய கால நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆனால் டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சியேற்பட்டு…

  2. ‘ட்ரயல் அட் பார்’ திங்களன்று உயர்மட்டப் பேச்சு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை ‘ட்ரயல் அட் பார்’ முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உயர்மட்டப் பேச்சு கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என்று அறிய முடிகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதித்துறை சார்ந்த உயர்மட்டத்துக்கும் இடையே இந்தப் பேச்சு இடம்பெறவுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்…

  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆட்கள் இருக்கின்றனர். இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக படையினரும் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குற்றஞ்சாட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்…

    • 0 replies
    • 199 views
  4. ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்’ - எஸ்.நிதர்ஷன் "தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்” எனும் தலைப்பில் கருத்துப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) காலை 9.15 மணிக்கு இடம்பெறவுள்ளது. மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், “இன விடுதலைக்கான அரசியல் பயணத்தில் , தமிழ் மக்கள் முகங்கொடுத்த பல்வேறு விதமான இழப்புக்கள்” எனும் தொனிப்பொருளிலான கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில், கருத்தியல்வாதிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், இளைஞர்கள் ஆகியோரைக் கலந்து கொள் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தடுமாறாத-தமிழர்கள…

  5.  ‘தண்ணீர்மட்டும் குடித்தால் விமலுக்கு பெரும் ஆபத்து’ கைதியான விமல் வீரவன்ச எம்.பி, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியவை குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்து விடும் என்று, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் குத்தித்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், நேற்று (27) சென்று பார்வையிட்டனர். இதன்போதே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அவர் முயற்சித்தால், …

  6. ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கூறுவது சிரிப்பாக உள்ளது’ – மனோ ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது சிரிப்பாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய கூறுவதை கேட்டு சிரிப்பு வருகிறது. ஒரு உதாரணம், பங்களாதேஷிடம் கடன் வாங்கிவிட்டு, தற்போது திருப்பி செலுத்தும் காலத்தை கெஞ்சி நீடித்து விட்டு, கடனே வாங்கவில்லை என்கிறார். இதையும் நாம் ‘கடனே’ என கேட்டு தொலைக்க வேண்டியிருக…

  7. இலங்கை விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்கும் திறனைக்கூட இன்றைக்கு தமிழகத்துத் தமிழர்கள் சிலர் இழந்துவிட்டனரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஹிந்து ராம், துக்ளக் சோ, தங்கபாலு, தினமலர்… கோஷ்டிகளை நினைத்து நாம் இப்படி எழுதவில்லை. இவர்களை முன்னுதாராணம் காட்டிப் பேசும் சில அரைகுறைகளுக்காகவே இதைச் சொல்கிறோம். இவர்கள் திரும்பத் திரும்ப ராஜீவ் கொலைக்கும் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு படுகொலைக்கும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது எதற்காக? புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஒட்டுண்ணிகளின் நோக்கமல்ல… தமிழருக்கென்று ஒரு தனித்த அடையாளமோ, தமிழரின் தனிப்பெரும் ஆட்சியில் ஒரு தேசமோ உருவாகிவிடக் கூடாதென்பதில் இவர்கள் உறுதியோடு உள்ளனர். இந்த விஷயத்தில் மத…

    • 0 replies
    • 1.2k views
  8. ‘தனி நாட்டு கோரிக்கைக்கு தூபமிடுகிறார் சி.வி’ “வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். யாழ். ஊடக அமயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும். பொருளாதார அழிவு ஏற்பட காரணம் மக்கள் மீதான போரே ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினை உட்பட அனைத்து…

  9. ‘தனியார் நீதிமன்றமா, இது கூடத் தெரியாதா?’ -ஜே.ஏ.ஜோர்ஜ் ‘”உலகில் எந்த நாட்டிலும் நீதித்துறையை தனியார் மயப்படுத்தும் முறை இல்லை. இதனைக் கூட அறியாதவர்கள் உள்ளமைதான், மக்கள் விடுதலை முன்னணியின் இன்றைய நிலைக்கு காரணம்” என, சபைமுதல்வரும் உயர்கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அவர் தொடரந்து கூறுகையில், “இலங்கையில் கல்விகற்கும் மருத்துவ மாணவர்கள், பட்டம் பெற்றதும் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுவதால் தான், நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுபாடு நிலவுகின்றது. அதன்காரணமாகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க இடமளிக்க வேண்டியுள்ளது” என்றார். அதன்போது குறுக்கிட்டுக் கேள்வியெழுப்பிய பிமல் …

  10. ‘தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு Jan 2, 2026 - 06:00 PM 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீட்டமைப்பு அ…

  11. ‘தமி­ழன் குண்­டு­கள்’ மீட்டு அழிப்பு!! ‘தமி­ழன் குண்­டு­கள்’ மீட்டு அழிப்பு!! முல்­லைத்­தீவு காட்­டில் சம்­ப­வம் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தயா­ரிக்­கப்­பட்டு போர்க் காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறப்­ப­டும் ‘தமி­ழன்’” கைக்­குண்­டு­கள் 10 நேற்று மீட்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ளன என்று சிறப்பு அதி­ர­டிப்­படை தெரி­வித்­தது. முல்­லைத்­தீவு முள்­ளி­வளை கொண்­டை­மடு காட்­டுப் பகு­தி­யில் ஒரு தொகுதி கைக்­குண்­டு­கள் காணப்­ப­டு­கி­றது என…

  12.  ‘தமிழக முதல்வர்கள் வந்த வரலாறு இல்லை’ அழகன் கனகராஜ் “இந்தியாவைப் போன்றே, தமிழகத்துடனும் நாங்கள் நல்லுறவை வளர்க்கவேண்டும். தமிழக முதலமைச்சர்களில் ஒருவர்கூட இலங்கைக்கு உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட வரலாறு இல்லை” என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “எமது பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்க்கம…

  13. ‘தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்று பெரியார் சொன்னது உண்மைதான்: மன்மோகன்சிங்க்குக்கு தமிழருவி மணியன் கடிதம் பதியப்பட்ட நாள்March 17th, 2012 நேரம்: 14:13 அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு… வணக்கம்! இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன். தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர…

    • 6 replies
    • 1.4k views
  14. ‘தமிழரசுக் கட்சியை புனரமைக்க மாவைக்கு உரிமை இல்லை’ “தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை கூறியிருந்தேன். பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தே பேசி வந்துள்ளேன். ஒ…

  15. ‘தமிழரசுக்கட்சியிலுள்ள பலருக்கு விடுதலைப்புலிகளை பற்றி தெரியாது’: சீ.வீ.கே.சிவஞானம்! January 4, 2019 “விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்கள்“ வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இப்படி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இவ்வாறு தெரிவித்தார். “தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் அல்ல“ என்றும்…

  16. ஏ.எல்.எம்.ஷினாஸ் ஆளுநர் பதவியைத் தான் ஏற்றபோது சகோதரர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் அதனைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அந்த எதிர்ப்பை நியாயமானதாகவே கருதுவதாகவும் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், “கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், இதைவிட மோசமான ஆர்ப்பாட்டங்கள் சிலவேளைகளில் இடம்பெற்றிருக்கும்” என்றார். தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிர்ப்பென்றும், முஸ்லிம்கள், தமிழர்களுக்கு எதிர்ப்பென்றும் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தில் 80 சதவீதமானோர் தமிழ் பேசும் மக்களாவர். ஆளுநருடன், உங்கள் மொ…

  17. ‘தமிழர்களின் கோரிக்கைகளால் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு’ -பா.நிரோஸ் வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென தெரிவித்துள்ள கண்டி அஸ்கிரிய பீடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தெரிவிக்கும் கருத்துகளால், நாட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கண்டி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரரை, நேற்று முன்தினம் (21), ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போ…

  18. -க. அகரன் தமிழர்களுக்கு கல்வி ஒன்று தான் கையில் இருக்கும் இறுதி ஆயுதமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், அதன் மூலம் தான் தமிழர்கள் மீண்டெழ முடியுமெனவும் கூறினார். வவுனியா சைவ பிரகாச ஆரம்பப் பாடசாலையின் கற்றல் வள நிலையத்தை இன்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனத்தின் கல்வியில் தான் கை வைக்க வேண்டுமெனவும் அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக, யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஓர் இனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால், முதலில் தன்னுடைய கலாசாரம், மொழியை பேணிக்காக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், …

  19. ‘தமிழர்களுக்கு... அரசியல் தீர்வு தேவையில்லை என கூறும் ஜனாதிபதி, கூட்டமைப்புடன் எதற்கு பேச்சு நடத்த வேண்டும்?’ தமிழினத்திற்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். இதற்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்து செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்த போதும் எந்த அழைப்பும் ஜனாதிபதி அலுவ…

  20. இலங்கையில் தமிழர்கள் அழிவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.மதுரையில் அவர் விடுத்துள்ள அறிக்கை:”முல்லைத் தீவு அருகே கல்மடு நரிப்பகுதியில் பேரழிவைச் சந்தித்த சிங்கள ராணுவம், அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் பகுதி நோக்கி ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமும் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில், ராணுவத்தின் ஏவுகணை வீச்சு தொடர்ந்து நடைபெறுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமலும் உணவு இல்லாமலும் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர…

  21. ‘தமிழர்கள் என்பதனாலா பாராமுகம்’ -ஜே.ஏ.ஜோர்ஜ் முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பிரதேசத்தில் கடந்த 24 நாட்களாகப் பொதுமக்கள், தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “தமிழ் மக்கள் என்பதன் காரணமாகவா அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கெடுக்க, அரசாங்கம் முன்வரவில்லை. இதே, தெற்கில் உள்ள சிங்கள மக்கள் போராடியிருந்தால், அரசாங்கம் இவ்வாறு பாராமுகமாக இருக்குமா?” என்று கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்…

  22. ‘தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன’ “பல்வேறு பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டன” எனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், காலியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, ஒல்லாந்தர்களால் பொறிக்கப்பட்டதல்ல எனவும் அது ஒரு சீன மாலுமியால் பொறிக்கப்பட்டதாகும் எனவும் தெரிவித்தார். காலி கல்வெட்டு தொடர்பில் தவறான விடயம் பதியப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் (07) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “காலியில் ஒல்லாந்தர்கள…

    • 2 replies
    • 590 views
  23. ‘தமிழின அடக்கு முறைக்கு... எதிராக குரல்கொடுத்த என்னை, ராஜபக்ச அரசாங்கம் பழிவாங்கிவிட்டது” -கணவதிப்பிள்ளை மோகன்.- அரசியல் அதிகாரம். அரசியல் ஊழல் நிலச்சுரண்டல், பணச்சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்த என்னை ராஜபக்ச அரசாங்கம் அவர்களின் அதிகாரம் என்னை மிக பயங்கரமாக பழிவாங்கியுள்ளது. இருந்த போதும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவேன் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு மே மாதம் 3 ம் திகதி இணையத்தளங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏ…

  24. வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் தமிழீழ எல்லாளன் படை என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றிக்கிழமை வீசப்பட்டுள்ளன.நேற்றைய தினம் விடுமுறை என்பதால் சன நடமாட்டம் குறைவாக இருந்ததால் நகரத்தில் உள்ள பேரூந்து நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. ‘நடந்து முடிந்த வன்னி யுத்த அவலத்தின் பின் சிங்கள பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் எம்மினத்தின் மீது மிகப்பெரிய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டுள்ளார்கள். எம் இனத்தின் விடுதலை உணர்வை சிதறடிக்க எதிரியானவன் கலாச்சார சீர்கேடு எனும் ஆயுதத்தை பிரயோகிக்கின்றான் இதற்கு உறுதுணையாக பல இளைஞர் யுவதிகளும் செயற்படுகின்றார்கள். இதற்கு எம்மவர்கள் துணை போவதே வேதனையாக உள்ளது இனிமேலும் எதிர்வரும் காலத…

  25. ‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான ‘சோசலிச தமிழீழம்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கை விளக்கத்திற்கு மாற்றீடாக தமிழீழ சுதந்திர சாசனம் வரைவது தேவைதானா?’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழத்தின் அரசியல் வடிவம், பொருளாதாரப் பொறிமுறை, சமூகக் கட்டமைப்பு, மலையக மக்களின் நிலை, சாதி, சமயம், பெண்ணடிமைத்துவம், வர்க்கம் போன்ற விடயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையை தெளிவுபடுத்தும் அiனைத்து அம்சங்களையும் 1985ஆம் ஆண்டு வெளியாகிய ‘சோசலிச தமிழீழம்’ கொண்டிருப்பதையும் தனது உரையில் சீம…

    • 8 replies
    • 986 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.