ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு. பீற்றர் இளஞ்செழியன், மர்ம குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தார். கடந்த 11.12.2021 அன்று மாலை முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தில் முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தாடை எலும்பு முறிந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இவரது குடும்பத்தினர் முல்லைத்தீவு போலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். https://www.thamizharkural.site/பீற்றர்-இளஞ்செழியன்-மீது/
-
- 25 replies
- 1.9k views
- 1 follower
-
-
”இராணுவ அதிகாரிகள் அரசாங்கப் பதவிகளை வகிப்பது இராணுவமயமாக்கல் அல்ல”: பாதுகாப்பு செயலாளர்! கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார். இதன்போது த…
-
- 0 replies
- 247 views
-
-
எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவிப்பு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த எரிவாயுக் கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதிலுள்ள வாயுவை சம்பந்தப்பட்ட பிரிவினர் பரிசோதித்துள்ளனர். இதனையடுத்து நேற்று (14) இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தொழிநுட்ப குழு கூட்டத்தில் குறித்த கப்பலில் இருந்த எரிவாயு குறிப்பிட்ட தரத்தில் இல்லை என தெரியவந்துள்ளது. எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவ…
-
- 0 replies
- 269 views
-
-
கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்! நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கடந்த சில தினங்களுககு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டி…
-
- 0 replies
- 330 views
-
-
பண்டோர ஆவண விவகாரம்: பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றினார் நடேசன் – வெளியான முக்கிய தகவல் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க நேற்று (திங்கட்கிழமை) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தனது மகனுடன் இந்த மாதம் சிங்கப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருந்து பணத்தை மாற்றுவதற்காக பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் திருக்குமார் நடேசன் சந்திப…
-
- 0 replies
- 250 views
-
-
வடக்கு கிழக்கு முதலமைச்சர் ஆவேன் என்று கூறி சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கஜேந்திரன் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மக்களை ஏமாற்றுவதற்காக இணைந்த வடகிழக்கு முதலமைச்சர் என்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ”தமி…
-
- 0 replies
- 229 views
-
-
டொலர் தட்டுப்பாடை கடக்க, இறக்குமதியை கட்டுப்படுத்துக! தீர்வு கண்டுபிடிப்பு! December 14, 2021 டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13.12.21) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார். டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்த…
-
- 1 reply
- 324 views
-
-
ஒருமித்த கோரிக்கை தற்காலத்தின் தேவை என்கிறார் சம்பந்தன்! இப்போதைய நிலைமையில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒருமித்த நிலைப்பாட்டுடனும், ஒன்றுமையுடனும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்காகவே தமிழ்க் கட்சிகள் இடையே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அனைவரும் ஒருமித்த கருத்துடன், ஒன்றுமையுடன் இருக்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக நாம் மேலும் கூடி ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடுவோம். இந்த முயற்சிக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று கொழும்பில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே …
-
- 4 replies
- 316 views
-
-
யாழ்.மாநகர சபையை கலைப்பது யாழ்.மக்களின் நலனை பாதிக்கும் – க.வி.விக்னேஸ்வரன் December 14, 2021 வெறும் கட்சி சார்பான முரண்பாடுகளால் யாழ். மாநகர சபை பாதீட்டை தோற்கடித்து ஒரு தகுதி வாய்ந்த நகர பிதாவை இழக்க நாங்கள் இடம் அளிக்கக்கூடாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதால் நகரபிதா வி.மணிவண்ணனை வெளியேற்றலாம் என்ற எண்ணத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை நான் அறிவேன். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பதால்த் தான் இவ…
-
- 3 replies
- 367 views
-
-
(இராஜதுரை ஹஷான்) லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு தேசிய மட்டத்திலான தர நிர்ணயத்தை கொண்டிருக்காத காரணத்தினால் எரிவாயு தொகையை மீண்டும் திருப்பியனுப்ப நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. எரிவாயு கசிவு உணர் திறனை தூண்டும் எதில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் எரிவாயுவில் 15 சதவீத அளவில் காணப்பட வேண்டும். நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,700 மெற்றிக்தொன் எரிவாயுவில் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 15 சதவீத அளவிற்கு குறைவான மட்டத்தில் காணப்பட்டமை பரிசோதனை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவற்றை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் நேற்று ஒர…
-
- 0 replies
- 237 views
-
-
சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு! பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை தற்காலிகமாக ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்கவின் சட்டத்தரணி சமர்ப்பித்த பிரேரணையைக் கருத்திற் கொண்டு கடவுச்சீட்டை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தமித் தொட்டவத்த தீர்மானித்துள்ளார். பிரேரணையின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா செல்வதற்கான வீசாவிற்கு விண்ணப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இராஜகிரியவில…
-
- 0 replies
- 194 views
-
-
ஏழு பயிர்களின் விதைகளை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே அடுத்த வருடம் முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஏழு பயிர்களின் விதைகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சிவப்பு வெங்காயம், உழுந்து , சோளம் மற்றும் கடலை போன்றவற்றின் விதைகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டளவில் மிளகாய் இறக்குமதியை நிறுத்தவ…
-
- 0 replies
- 249 views
-
-
ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியின் கூட்டம் அலரிமாளிக்கையில் நடைபெறுகின்றது. அதனை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கின்றார். இதனால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஆளம-கடச-கடடததல-சலசலபப/175-287272
-
- 0 replies
- 206 views
-
-
ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்! ஜனாதிபதியினுடைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம்,…
-
- 0 replies
- 484 views
-
-
வடக்கின் தீவுகள் சீனாவுக்கு இல்லை – இந்தியாவுக்கு வழங்கத் திட்டம் இலங்கையின் வடக்கிலுள்ள தீவுப் பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சீனா குறித்த மின்சக்தி திட்டத்தை கைவிட தீர்மானித்திருந்த பின்னணியிலேயே, அதானி நிறுவனத்திற்கு வடக்கின் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்த…
-
- 0 replies
- 218 views
-
-
2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை December 11, 2021 இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்தி…
-
- 7 replies
- 1.2k views
-
-
சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும் – சுரேஷ் இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்ந்திரன், அவர்களுக்கு தமிழர்களின் இன்றைய யதார்த்தநிலை புரியவேண்டுமென்பதுடன், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் குறித்தும் தெளிவு வேண்டும் என்றும் தனது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். இன்று( திங்கட்கிழமை) அவர் குறித்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் 1987ஆம் ஆண்டு ஏற்படுத்…
-
- 2 replies
- 338 views
-
-
இன்று விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை பாராளுமன்றை ஜனாதிபதி 18/01/2022 வரை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளார் (prorogued). நன்றி @Nathamuni https://www.dailymirror.lk/breaking_news/Parliament-prorogued/108-226724
-
- 13 replies
- 743 views
- 1 follower
-
-
10 நாட்களில் 150 வெடிப்பு சம்பவங்கள் : இரு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானம் (ஆர்.யசி) சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையின் பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சில தினங்களில் வழக்கு தொடர நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன், அதிகாரசபையின் சட்ட ஆலோசனை குழு இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றவருவதாக கூறப்படுகின்றது. நுகர்வோர் அதிகாரசபையின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடமும் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். இலங்கையில் விநியோகிக்கும் சமையல் எரிவாயுக்களின் கலப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து கடந்த சில மாதங்களாக நாட்ட…
-
- 0 replies
- 222 views
-
-
இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்ப தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்! 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இன்று தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களான இரா. சம்பந்தன், ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை …
-
- 3 replies
- 371 views
-
-
வியாழேந்திரனின் தம்பியோடு இணைந்தே எனது மகனை கொன்றனர் ; கதறும் தாய் -திடுக்கிடும் தகவல் பேரினவாத சிங்கள அரசுக்கான இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் பாலசுந்தரத்தின் கொலையை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே செய்ததாக கொலை செய்யப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எனது மகனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மய…
-
- 0 replies
- 350 views
-
-
அம்பாறையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை ஒரே இரவில் அகற்றப்பட்டது! பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதனால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டமையை அடுத்து, பொலிஸார் பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவ…
-
- 5 replies
- 431 views
-
-
ஊழல் மோசடிகள் அம்பலமாவதை தடுக்கவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதா? – எதிர்க்கட்சி நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுக்களில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களை இந்த குழுக்களில் நியமிக்க கூடாது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் முற்றாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மாத்திரம் குறித்த தெரிவுக் கு…
-
- 0 replies
- 262 views
-
-
சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என அறிவிப்பது தவறு – ஆனந்த சங்கரி குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சில கட்சிகள…
-
- 0 replies
- 222 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதா? இல்லையா?: இன்று அரசாங்கம் முடிவெடுக்கும்! நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பல்வேறு தர்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அது தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கல்துகொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட…
-
- 1 reply
- 342 views
-