ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
யாழ். கீரிமலையில் கடற்படையினரால் காணி சுவீகரிப்பு!! யாழ். கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தன. இருப்பினும் அங்கு கூடிய காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளனர். அடாத்தாக கடற்படையினர் கைப்பற்றியுள்ள குறித்த காணிகளை மீட்டுத்தருமாறு பலதடவைகள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தபோதும் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும்…
-
- 0 replies
- 221 views
-
-
மட்டு.கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள நிலப்பகுதியினை வேலியிட்டு அடைக்க முயற்சி! மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் நிலப்பகுதியினை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தினை இணைக்கும் வகையில் உள்ள குறித்த வடிச்சல் பகுதியை இன்று சிலர் வேலியடைக்கமுற்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பிரதேச கிராம சேவையாளர் உட்பட கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து குறித்த சம்பவத்தினை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்போது அங்குவந்த பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்படும் பொதுமக்களி…
-
- 0 replies
- 261 views
-
-
முழுமையாக தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க இன்று முதல் அனுமதி! பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அஸ்ட்ரா செனெகா, பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசி வகைகள் செலுத்தப்பட்டமைக்கான சான்றிதழ் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய அளவிலான ப…
-
- 0 replies
- 119 views
-
-
கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாபஸ் குறித்த இரகசிய அறிக்கை இன்று தாக்கல் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமை தொடர்பாக தொகுக்கப்பட்ட அறிக்கைதம்மிடம் உள்ளதாக தெரிவித்த சட்டமா அதிபர் திணைக்களம், அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரியிருந்தது. அதற்கமைவாக குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட அமர்வு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது. வசந்த கரன்னகொடவுக்கு எதிராக, நீதிபதிகள் மூவ…
-
- 0 replies
- 81 views
-
-
“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு! இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான த…
-
- 2 replies
- 263 views
-
-
சுதந்திரத்துக்கு பின் வந்த எந்த அரசாங்கமாவது தவறு செய்யாமல் இருந்ததுண்டா? முதலாவதாக ஆட்சிக்கு வந்த unp அரசாங்கம் கல்லோயா திட்டத்தை கொண்டு வந்து அம்பாரை முஸ்லிம்களை விரட்டியது. அதன் பின் வந்த பண்டாரநாயக்கா தனிச்சிங்களம் சட்டத்தை கொண்டு வந்து நாட்டை சீரழித்தார். அதன்பின் வந்த ஸ்ரீமா அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கல்முனை மாவட்டத்தை பிரித்து அம்பாரை பெரும்பான்மை சிங்கள ஊர்களை இணைத்து அம்பாரை மாவட்டம் ஆக்கினார். புத்தளத்தில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு. பின்னர் வந்த ஜே ஆரின் ஆட்சியில் வரலாறு காணாத துன்பம். முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டு இந்திய இலங்கை …
-
- 7 replies
- 587 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின்... சட்டவரைபில், பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் – ஞானசாரர் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியினால் தயாரிக்கப்படும் சட்டவரைபில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பு எழுப்பிய பிரச்சினைகள் இன்றும் அவதானிக்கப்பட வேண்டியவையாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, பொதுபல சேனா எழுப்பிய மற்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் செயலணியால் விவாதிக்கப்பட்டு க…
-
- 2 replies
- 328 views
-
-
நாம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல தயாராகின்றோமா ? - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் ! (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என…
-
- 0 replies
- 327 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை அறிய முன்வைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, தனது ஒரே மகனை இழந்துள்ள கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா நாகநதன் எனும் தாய் முன்வைத்த தகவல் அறியும் விண்ணப்பமே இவ்வாறு நிராகரிக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில்…
-
- 0 replies
- 353 views
-
-
எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – எஸ்.பி. திஸாநாயக்க நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடை ஏற்றுமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதால் வருமான வழிகள் இழக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளத…
-
- 0 replies
- 327 views
-
-
நாட்டு மக்களுக்கு... இராணுவத் தளபதியின், அறிவிப்பு! இலங்கையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1247761
-
- 0 replies
- 140 views
-
-
கரன்னகொட விவகாரம் – இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை மீளப்பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாக தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரச…
-
- 0 replies
- 125 views
-
-
“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது. -நீதி அமைச்சர் அலி சப்ரி.- ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிப்பது குறித்து குறித்து தன்னிடம் எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த நியமனமானது அனைத்து இனங்களையும் உள்ளடக்கி நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது நீதியமைச்சரின் நிலைப்பாடு எனக் கூறப…
-
- 0 replies
- 217 views
-
-
“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” - ஜனாதிபதி இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் கோப் (COP 26) என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திரு…
-
- 0 replies
- 266 views
-
-
எனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் : பொலிஸ் அதிகாரி இளங்கோவனின் மகன் தெரிவிப்பு கம்பளை வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவித்துள்ளார். பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். பின்னர் குறிந்த நபர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி என கடந்த மாதம் 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கம்…
-
- 0 replies
- 262 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை தெரிந்துகொள்வது எமது உரிமை – கொழும்பு பேராயர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை மாத்திரமே தாம் எதிர்பார்ப்பதாகவும் அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ, ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் என்றோ தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார். நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விசேட ஞாயிறு ஆராதனைகளின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அப்பாவி ம…
-
- 0 replies
- 92 views
-
-
மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் தன்னகப்படுத்துவதை ஏற்க முடியாது – வியாழேந்திரன். மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னக படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக …
-
- 0 replies
- 229 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலுக்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்- மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி. சந்திரகாந்தன். கடந்தகாலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பாற்பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு ள்ளேன். விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி கூறியுள்ளனர் அதிகாரிகளிடம் எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லைப் பிரச்சினைக்காக மட்டும் குரல் கொடுக்காது அரசியல்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவ…
-
- 0 replies
- 170 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். அண்மைக் காலமாக இத்தலைப்பு பொதுத் தலங்களில் பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது. இலங்கையில் வாழக்கூடிய சகல பிரஜைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அமைப்பில், பல நூற்றாண்டுகள் அவரவரது மத விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் பேணி, மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க…
-
- 4 replies
- 340 views
-
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு? ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் ஊடகமொன்றுக்கு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் …
-
- 19 replies
- 997 views
-
-
இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீனக் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளமையை கடல்சார் போக்குவரத்து இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. சேதன உரத் தொகுதியை ஏற்றிய குறித்த கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், கப்பல் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அதிகாரசபையின் அதிகாரி, கடல் மாரக்கமாகப் பயணிக்கும் போது இலங்கை எல்லைக்குள் நுழைவது சட்ட விரோதமாகாது என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மாத்திரமே இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பை கண்காணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீ…
-
- 2 replies
- 436 views
- 1 follower
-
-
இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு ஆர்.ராம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை ‘இலங்கை பௌத்த குடியரசாக’ பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பாணுபிரகாஷ் மற்று…
-
- 5 replies
- 728 views
- 1 follower
-
-
மீண்டும் விக்கி முதல்வராக ஆதரவு இல்லை; சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு October 31, 2021 நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினால் ஆதரவளிக்கப்போவதில்லை என, சி.வி.விக்னேஸ்வரன் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. டான் தமிழ் ஒளியில் நேற்று இரவு ஒளிபரப்பான நெற்றிக்கண் நிகழ்ச்சியில், கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை திட்டவட்டமாகத் தெரிவித்தார். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வடக்கு முதலமைச்சராக களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளமை தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப…
-
- 1 reply
- 407 views
-
-
அமைச்சர் டக்ளஸ் - செந்தில் தொண்டமானிடம் சுமந்திரன் விடுத்துள்ள விசேட கோரிக்கை ஆர்.ராம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குள் தமிழர்களை உள்வாங்கும் செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவும், செந்தில் தொண்டமானும் துணைபோகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களின் அடிப்படைகளையும், நாட்டின் பல்லினத் தன்மையையும் அடியோடு அழிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ள ஞானசாரர் தலைமையிலா…
-
- 2 replies
- 414 views
-
-
ஆர்.ராம் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து நாளை மறுதினம் இறுதி செய்யவுள்ளன. இந்தக் கடிதத்தினை இறுதி செய்யும் ஒருங்கிணைவுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி அதன் அரசியல் பீடத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக பங்கேற்கப்போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், ஏற்கனவே திட்டமிட்டபடி குறித்த ஒருங்கிணைவுக் கூட்டம் நடைபெறும் என்று ஏனைய அரசியல் கட்சிகளான, ரெலோ, புளொட், தமிழ்…
-
- 2 replies
- 396 views
- 1 follower
-