ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
மாணவர்கள் இடைவிலகலை தூண்டுவது வாழ்வாதாரமே! - சபா குகதாஸ் தெரிவிப்பு! மாணவர்களின் வாழ்வாதார வறுமையை ஒழிக்காமல் ஒருபோதும் கல்வியில் உயர்ச்சியை எட்ட முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் கல்வி முறையில் பல குறைபாடுகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடையாக இருப்பது மாணவர்களின் வாழ்வாதார வறுமையே பிரதான இடம் பெறுகின்றது. அண்மைய காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வி இடை விலகலுக்கு காரணம் கொடிய குடும்ப வறுமை இதனால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்விச் செயற்பாட்டில் இருந்து இடை விலகி கூலி வேலைகளுக்கு செல்வதை காணமுடிகின்றது வேறு பல மாணவர்கள் தவறான வழி…
-
- 0 replies
- 81 views
-
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு! மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார். ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இந்த முடிவால் …
-
-
- 10 replies
- 547 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 06:25 PM இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளுக்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை நினைவேந்தல் மற்றும் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், விடுதலை நீர் கையளிப்பு, சிறைக்கூட உணர்வு கண்காட்சி ஆகியன இரு தினங்களாக நடைபெற்று வருவதோடு, தாயகத்தின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து விடுதலை நீர் கையளிக்…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmdj2htun01ngqp4kj6slv95l
-
-
- 10 replies
- 481 views
- 2 followers
-
-
நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்! நாடு முழுவதும் தற்சமயம் குறைந்தது 20 காயமடைந்த யானைகள் சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறும் பெரும்பாலான யானைகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேற்கு வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான…
-
- 2 replies
- 140 views
-
-
பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு! பௌத்த மதம் சார்ந்த மறு அவதாரம் பற்றிய புதிய பார்வை மற்றும் பரிசீலனையை முன்வைக்கும் சர்வதேச புலமை மாநாடு “பௌத்த மதத்தின் மறு அவதாரம் பற்றிய புலமைச் சிந்தனையின் மறு பரிசீலனை” என்ற தலைப்பின் கீழ், 2025 ஜூலை 26ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கலனி பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த புலமை மாநாடு, பௌத்த சகோதரத்துவ அறக்கட்டளை, சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களால் இணைந்து நடாத்தப்படும். பௌத்த மதத்தில் உள்ள முக்கிய இரு பிரிவுகளான பாலி மற்றும் சமஸ்கிருத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மறு அவதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் புலமை …
-
- 0 replies
- 154 views
-
-
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது …
-
- 0 replies
- 102 views
-
-
இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்! இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் …
-
- 0 replies
- 147 views
-
-
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை; பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்திலிருந்தாலும் நடவடிக்கை என்கிறார் பிரதமர் ஹரிணி அமரசூரிய 25 JUL, 2025 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரேமாதிரி யாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு : இதுவரை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! Published By: VISHNU 25 JUL, 2025 | 08:03 PM செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழியில் வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை (25) புதிதாக ஐந்து மனித எலும்ப…
-
- 2 replies
- 180 views
- 1 follower
-
-
ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகள் சிலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னால் என்னிடம் தொலைபேசியில் உரையாடினர்! தமிழ் ஈழத்திற்காகவும், அந்த மண்ணின் விடுதலைக்காகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் களத்தில் நின்று, பெரும்படை திரட்டிப் போராடி, உலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச் சாவிற்கு வரும் ஆகஸ்ட் 2 அன்று, சுவிட்விசர்லாந்தில் மிகப்பெரும் அளவில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றும் கூறினார்கள்! மாவீரர்களுக்கும் மரணம் உண்டு! ஆனால் அது மற்றவர்களின் மரணத்தைப் போன்றதன்று! தன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் த…
-
- 0 replies
- 137 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர் Published By: Vishnu 26 Jul, 2025 | 02:24 AM (எம்.ஆர்.எம்.வசீ்ம்) புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் ம…
-
- 0 replies
- 132 views
-
-
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது செய்திகள் யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்…
-
- 0 replies
- 84 views
-
-
வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள …
-
- 0 replies
- 62 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது. https://adaderanatamil.lk/news/cmdi5df…
-
-
- 2 replies
- 251 views
- 1 follower
-
-
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைத்தார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன. அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்…
-
- 1 reply
- 167 views
- 1 follower
-
-
20 JUL, 2025 | 09:12 AM நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையி, மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. யாழ். மாநகர முதல்வர், யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது. குறித்த தீர்மானங்களின் படி, ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக…
-
- 2 replies
- 164 views
- 1 follower
-
-
வடகிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 25 JUL, 2025 | 01:23 PM நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது. உண்மைக்கும் நீத…
-
- 2 replies
- 167 views
- 1 follower
-
-
கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை,ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்ததுடன்,அங்கு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதிர் தர்பண நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதிர் தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வானது நிறைவு பெறும் தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்…
-
- 1 reply
- 175 views
-
-
வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர். மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது. குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள்…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ”வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம், வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.” – எனவும் …
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை! July 25, 2025 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். கொழும்பு …
-
- 0 replies
- 143 views
-
-
வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும் Published By: VISHNU 25 JUL, 2025 | 04:21 AM வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டி…
-
- 0 replies
- 120 views
-
-
யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன…
-
- 0 replies
- 88 views
-